மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை சரமாரியாக கத்தியில் குத்திய வாலிபன்

Quick Share

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான பெண் தஞ்சையில் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான அஜித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாள் பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. காதலர்களாக இருவரும் இருந்த நிலையில், அஜித்தின் உண்மை முகம் மாணவிக்குத் தெரியவந்தது.

மதுவிற்கு அடிமையான அஜித் முறையாக வேலைக்குச் செல்லாமல் ஊர்சுற்றிவந்துள்ளார். மேலும் அடிதடி சம்பவங்களிலும் அஜித் ஈடுபட்டு வந்ததால் மாணவி அஜித்தின் காதலை முறித்து கொண்டுள்ளார்.
ஆனால் மாணவியை விடாத அஜித் அவரை தினமும் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளார்.

கடந்த புதன்கிழமை காலை மாணவி வழக்கம் போல் பேருந்தில் கல்லூரிக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பேருந்தில் ஏறிய அஜித் மாணவியிடம் தகறாரில் ஈடுப்பட்டுள்ளார். மாணவி அஜித்திடம் பேசமறுக்கவே அஜித்
தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில்
சரமாரியாக குத்தியுள்ளார்.

கழுத்தில் அழமான வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத்தொடங்கியுள்ளது. இதில் நிலைத்தடுமாறிய மாணவி
பேருந்திலேயே மயங்கி சரிந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அஜித்தைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியைத் தாக்கிய அஜித்தைக் கைதுசெய்த தஞ்சை நகர தெற்கு போலீசார், அவரை விசாரித்து வருகின்றனர்.

காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் கத்தியால் கழுத்தை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி மோசடி.., பெண் மற்றும் சகோதரருக்கு 10 ஆண்டு சிறை

Quick Share

ஈரோடு மாவட்டம் நசியானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது சகோதரர் நந்தக்குமார். கடந்த 2012ம் ஆண்டு இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

அதில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 13 ஆயிரம் ரூபாய் வட்டியும், 3 ஆண்டுகள் முடிவில் அசலையும் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி அப்பகுதி மக்கள் பலரும் அதில் முதலீடு செய்துள்ளனர். விளம்பரம் செய்ததுபோல் முதல் மாதம் வட்டியை கொடுத்துள்ளனர்.

சுமார் 82 லட்சம் ரூபாயுடன் அக்காவும், தம்பியும் திடீரென தலைமறைவானார்கள். அண்மையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கோவை நீதிமன்றம் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

போதையில் 40வயது பெண் !! மொத்த துணிகளை கழட்டி விடுவேன் மிரட்டி அட்டகாசம்

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் திடீரென்று சாலையின் நடுவே கையில் செருப்போடு. நின்று அப்பகுதியில் வரும் பேருந்து லாரி கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்து உள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி காவல் துறையினர் விரைந்து வந்து அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். “அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சித்தனர் ஆனால் அந்த பெண் கிட்டே வந்தால் மொத்த துணிகளையும் கழட்டி விடுவேன் என மிரட்டி ரகளை செய்துள்ளார்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஒரு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். இந்த பெண் எந்த ஊர் எந்த பகுதி என்று தெரியவில்லை மனநிலை பாதிக்கப்பட்டு
உள்ளாரா? அல்லது என்ன பிரச்சனை? என்பது குறித்து தெரியவில்லை இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர ...

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான சசிகுமார். இவருக்கும் அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிரதீப் என்ற 10 வயது மகனும், பிரித்திகா என்ற 8 வயது மகளும் உள்ளனர். குடும்ப வறுமையின் காரணமாக, சசிகுமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது, மனைவி மற்றும் பிள்ளைகளிடம் பேசுவதற்காக, விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் பல ஆண் நண்பர்களுடன் பழகி, கணவன் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் அவர்களுடன் உல்லாசமாக வெளியில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் பிரியா.

இந்த நிலையில், தாயின் இந்த செயல் பற்றி, மகன் பிரதீப் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது தந்தையிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்து, பிரியாவிடம் சண்டையிட்டுள்ளார். 4 மாதங்களாக கணவன் வீட்டில் இருப்பதால், வெளியில் எங்கும் சுற்ற முடியாத சூழலில் சிக்கித்தவித்த பிரியா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 8-ம் தேதி இரவு தூங்கும் போது, கட்டிலில் படுத்து உறங்கிகொண்டிருந்த கணவன் மற்றும் பிள்ளைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சசிகுமார் முழுவதுமாக எரிந்து, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்குப் போராடிய சசிகுமாரிடம், நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார். பின்பு சசிகுமார் உயிரிழக்க, மகனும், மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கணவன் கொலை தொடர்பாக பிரியாவை கைது செய்த போலீசார், அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பெண், கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் அமெரிக்க பொண்ணு..,கிராமத்து இளைஞரை வித்யாசமாக ஏமாற்றிய சம்பவம்

Quick Share

ராமநாதபுரத்தை சேர்ந்த சிவஹரி என்னும் இளைஞர் குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிவஹரிக்கு பேஸ்புக்கில் கிளாரா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் மெசஞ்சரில் தொடர்ந்த நட்பால் கிளாரா, தன் தந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பணம் தந்து உதவுமாறும், அவரை சென்னையில் தான் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய சிவஹரி, ஆன்லைன் மூலம் 4 தவணைகளாக சுமார் 3 1/2 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். பணம் கைக்கு வந்தததும் கிளாரா தனது பேஸ்புக் பக்கத்தை பிளாக் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவஹரி தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என உணர்ந்து, தமிழக டிஜிபிக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியுள்ளார்.

புகாரின் அடிப்படையில், இராமநாதபுரம் எஸ்.பி உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, அமெரிக்க பெண் போல் பழகி மோசடி செய்தவரை தேடி வருகின்றனர்.

2 பேர் லுங்கியை முகத்தில் கட்டிக்கொண்டு செய்த கொள்ளை சம்பவம்.., சிக்கிய வீடியோ

Quick Share

கடந்த சனிக்கிழமை மதுரை சிலைமான் பேருந்து நிலையம் அருகே ராஜா என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையில்வழக்கம்போல பணிகளை முடித்தபின் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.”

அன்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள், பணப்பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து கடையில் செல்போன்கள், பணம் திருடிபோனது பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா, உடனே காவல் நிலையத்தில் புகார்
அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். முகம் தெரியாமல் இருப்பதற்காக தங்களது லுங்கியை முகத்தை மறைத்துக்கொண்டு மர்ம
நபர்கள் திருடியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் செல்போன் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம்..,

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊர் பொது குளத்தில் அதே பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் என்பவரின் 2 மகள்கள் ராகினி (6வயது) ரம்யா (4 வயது) மற்றும் விஜயகுமார் என்பவரின் மகள் சாதனா (5 வயது) ஆகிய மூன்று சிறுமிகளும் புதன்கிழமை வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்து விளையாடச் சென்றுள்ளனர்.

சமீபத்தில் பெய்த கனமழையால் குளம் நிரம்பி காணப் பட்டதால் ஆழமும் பள்ளமும் தெரியாமல் போய் சிக்கியுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் போது குலத்தின் ஆழம் அதிகம் இருக்கும் பகுதி என தெரியாமல் சென்றுள்ளனர். சிறுமிகளுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கும்
போது அலறி உள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள கிராம பொதுமக்கள் இளைஞர்கள் குளத்தில் இறங்கி தேடி குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.”
தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சிறுமிகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

சித்ராவின் தற்கொலையில் எழும் சந்தேகங்கள் ? நிச்சயதார்த்த முறிவு காரணமா ?

Quick Share

கடந்த 2013ம் ஆண்டு தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை மற்றும் VJ சித்ரா நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் உருவாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு இவர் திரும்பியுள்ளார். அவருடன் இவரது வருங்கால கணவர் ஹேமந்த் என்பவரும் இருந்தார், அந்த சமயத்தில் இருவருக்கும் சிறிது நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் சித்ரா அவர்கள் ஹேமந்திடம், தான் குளிக்க செல்கிறேன், அதுவரை வெளியே இருங்கள் என கூறியுள்ளார், அப்போது அதிகாலை 3 மணியளவில் இருக்கும். அதன்படி ஹேமந்தும் வெளியே சென்று காத்திருந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால். சந்தேகித்த ஹேமந்த் ஹோட்டல் ஊழியருடன் சேர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். மேலும் சித்ராவுக்கு வேறு ஏதும் போன் கால் வந்ததா ? இல்லை யாருக்காவது இதை பற்றி தெரிவித்தாரா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் நின்ற பெண்ணிடம் குடிபோதையில் மோசமாக தலைமைக் காவலர்

Quick Share

சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் பெண் ஒருவர் நேற்றிரவு வடபழனி நூறடிச் சாலையில் பணிமுடிந்து வீடு திரும்பிச் செல்ல எண்ணி, வாகனப் போக்குவரத்துக்காக காத்திருந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் வந்த தலைமைக் காவலர் ராஜூ தன்னுடன் வரச்சொல்லி கூறியிருக்கிறார்.

அப்போது பெண் வரமறுத்துள்ளதை அடுத்து ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த பொது மக்கள் அவரை சம்பவ இடத்திலேயே வைத்து தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸார் அந்த காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

காவல் ஆணையர், அந்த காவலரை சஸ்பெண் செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏழை மாணவியின் படிப்புக்காக விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி !!

Quick Share

தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இயற்கை பேரிடர் காலத்தில் வெள்ளம் புயல் போன்ற கஷ்டத்திலிருந்து களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்

வேலூர் ராணிப்பேட்டை தனது கல்வியை தொடர முடியாமல் கஷ்டப்பட்டு வந்த அஸ்வினி என்ற மாணவிக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளனர.

அஸ்வினி என்ற மாணவி தனது குடும்ப வறுமை காரணமாக தனது கல்வி இயல் படிப்பை தொடர முடியாமல் இருந்ததை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்த மாணவிக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து விஜய்க்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்களுக்கும் மாணவி அஸ்வினியும் அவருடைய
பெற்றோர்களும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

சென்னை பேருந்தில் அடாவடி செய்யும் ரூட் தல கும்பல்.., அபாயகரமான செயல் !

Quick Share

சென்னையில் திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ரூட்டு தல என்ற பெயரில் பேருந்தில் ஏறிக்கொண்டு மாணவர்கள் அட்டகாசம் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதோடு, மாணவர்கள் போர்வையில் பேருந்துகளில் கலாட்டா செய்யும் சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்

ஏற்கனவே சென்னை மாநகரில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ரூட்டு தல என்ற பெயரில் அடாவடியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை மாணவியை ஏமாற்றிய apollo கல்லூரி !! வெளிச்சத்துக்கு வந்த மோசடி

Quick Share

சென்னை விருகம்பாக்கத்தில் சரண்யா என்ற மனைவி பட்ட படிப்புக்காக பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே படிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பூந்தமல்லியில் இருப்பதாக கூறப்பட்ட அப்பல்லோ கலை அறிவியல் கல்லூரியில் Bcom-ல் சேருவதற்காக தியாகராயநகரில் உள்ள கல்லூரியின் நிர்வாக அலுவலகத்திற்கு சென்று உள்ளார்.

ஆரம்பத்தில் 6 ஆயிரம் ரூபாய்தான் கல்வி கட்டணம் என கூறியதால் கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வமாக இருந்துள்ளார் பின்னர் விண்ணப்பக் கட்டணம் 150 ரூபாய் சேர்க்கை கட்டணம் 2,650 ரூபாய் பதினைந்தாயிரம் என மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் செலுத்த நிரூபித்துள்ளனர் பூந்தமல்லியில் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டு படித்து வரலாம் என்ற நம்பிக்கையில் தாய் தந்தையர் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் புரட்டி கட்டணமாக மொத்தம் இருபத்தி நான்காயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார் சரண்யா.

இந்த நிலையில் பூந்தமல்லி கீழிறங்கி அவள் நீட்டிய மாணவி சரண்யா வந்தது அவர்கள் கூறியபடி பூந்தமல்லியில் கலை அறிவியல் கல்லூரி இல்லை என்பதும் அங்கு இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மேவலுர்குப்பம் என்ற கிராமத்தில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் அங்கு சென்று வருவதற்கு போதுமான அளவு அரசு பேருந்து வசதி இல்லை என்பதால் அங்கு படிக்கும் திட்டத்தை கைவிட்டு தியாகராயநகரில் உள்ள நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பூந்தமல்லி என்று சொல்லி ஏமாற்றி விட்டீர்களே என்று நியாயம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மேலும் 30 ஆயிரம் ரூபாய் கட்டினால் தங்கள் கல்லூரி பேருந்தில் சென்று வரலாம் என்று கூறுகின்றனர் ஆனால் சரண்யாவும் தனது பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை கல்லூரிக்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் கல்லூரியில் படிக்க விரும்பவில்லை என்றும் தான் செலுத்திய பணத்தை திருப்பித் தரும்படியும் கூறியுள்ளார். பணம் கிடையாது என்று மறுத்துள்ளனர்.

மாணவியை கடந்த இரு மாதங்களாக அலைக்கழித்த நிலையில் நான்காம் தேதி தனது சகோதரருடன் சென்று தனது மாற்று சான்றிதழ் இருந்தால் செலுத்திய பணத்தையும் மாணவி கேட்டுள்ளார் அப்போது அங்கிருந்த கல்லூரி மேலாளர் வெங்கட்ராமன் பணத்தை திருப்பித் தரமுடியாது என்றும் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது செய்ய முடியாமல் கொடுத்த கல்வி கட்டணத்தை திரும்பப் பெற இயலாமல் கடுமையான மன வேதனைக்கு உள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து தனது செர்டிபிகேட்யும் மீட்டுத் தரவேண்டும் என்று மாணவி சரண்யா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மாணவியின் இந்த குற்றச்சாட்டு குறித்து கல்லூரி மேலாளர் வெங்கட்ராமன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்




You cannot copy content of this Website