தூத்துக்குடி

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் அரசு மருத்துவமனை செவிலியர் நீதிமன்றத்தில் சாட்சி!

Quick Share

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் அழைத்து சென்றனர். சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதில் இருவரும் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியாக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி செவிலியர் புகழ்வாசுகி ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம், கைதான போலீசார் தரப்பு வக்கீல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலிய உதவியாளர் அருணாசல பெருமாள் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.
நேற்று புகழ்வாசுகி சாட்சியம் அளித்தபோது, “சம்பவத்தின் போது, போலீஸ் நிலையத்தில் இருந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களின் உடலில் படுகாயங்கள் இருந்தன” என்று கூறியுள்ளார்.
இதுவரை சாட்சியம் அளித்தவர்கள் தந்தை-மகனின் உடல்களில் இடுப்பு பகுதியில் தான் பெரும் காயங்கள் இருந்ததாக கூறியதாகவும், இவர் அளித்த இந்த தகவல், மற்றவர்களின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபட்டதாக கருதப்படுவதாகவும் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல இந்த வழக்கில் கைதாகியுள்ள ஏட்டு முருகன் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவில், தந்தை-மகன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. அவரையும் விசாரணை நடத்தும்படி கூறியிருந்தார்.
இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நேற்றைய விசாரணையின்போது சி.பி.ஐ. போலீசார் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. அடுத்தகட்ட விசாரணையின்போது தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கன் கிரேவி சாப்பிட்டவுடன் குளிர்பானம் குடித்த தாய்-மகள்…பரிதாபமாக பலி.!

Quick Share

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகவல்லி (வயது 34). இவர்களுக்கு தர்ஷினி (7) என்ற மகளும், பாண்டி (8) என்ற மகனும் உள்ளனர்.

இளங்கோவன் நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உறவினர் வீட்டின் மொட்டை அடிக்கும் விசே‌ஷத்திற்கு கற்பகவல்லி தனது 2 குழந்தைகளுடன் சிப்பிப்பாறைக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது ஓட்டலில் இருந்து சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளனர்.

அவர்கள் வீட்டிற்கு வந்ததும் அதனை கற்பகவல்லி மற்றும் தர்ஷினி ஆகியோர் சாப்பிட்டு உள்ளனர். சிறுவன் பாண்டி சாப்பிடவில்லை. இந்நிலையில் சாப்பிட்ட பின்னர் தாய்-மகளுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள பெட்டிக்கடையில் இருந்து ரூ. 10 -க்கு குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் வாயிலிருந்து நுரை தள்ளி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கற்பகவல்லியின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தாய்-மகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது குறித்து கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஓட்டலில் இருந்து வாங்கி சாப்பிட்ட கோழி இறைச்சியினால் அவர்கள் உயிரிழந்தனரா? அல்லது பெட்டிக்கடையில் வாங்கி குடித்த ரூ. 10 மதிப்பிலான குளிர்பானத்தால் உயரிழந்தனரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கற்பகவல்லி-தர்ஷினி ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் அறிக்கை கிடைத்த பின்னரே அவர்கள் எதனால் உயிரிழந்தனர் என்பது தெரியவரும்.

ஸ்மார்ட்சிட்டி பணியின் போது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி!

Quick Share

ஸ்மார்ட்சிட்டி திட்ட பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வட்டக்கோவில் அருகே ஸ்மார்ட்சிட்டி திட்ட பணியில் சுற்றுச்சுவர் இடிந்து 2 பேர் உயிரிழந்தனர்.

பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஜார்கண்டை சேர்ந்த பகிரத் முகலி, மற்றும் அவரது நண்பர் அமித் ஆகியோர் இறந்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி தூத்துக்குடி வருகிறார்.

Quick Share

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பிரசார பயணத்துக்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறார்.

அவர் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் எட்டயபுரம் மெயின் ரோடு, வடக்கு திட்டங்குளத்தில் காலை 8 மணிக்கு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அந்த கூட்டத்தில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் பெற்றுக் கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள், வணிகர்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் இப்படி செய்யக்கூடாது..,

Quick Share

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்ற இளைஞர் கோவை மாவட்டம்ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இணையதள சூதாட்டத்தில் ஆர்வமாக விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார்.

தமிழக அரசு இணையதள சூதாட்டத்தை தடைசெய்த பிறகும் விளையாட்டைத் தொடர்ந்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் திருப்பூர் வந்து திருப்பூர் – வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடையாளம் தெரியாத நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட இவரை ரயில்வே காவல்துறையினர் அவருடைய புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். அடிப்படையில் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் இவரது புகைப்படமும் ஒத்து போனதால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் பணத்தை இழந்து எல்வின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகனைப்போல யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழக்கக் கூடாது என அவரது தந்தை உருக்கமாகக் கூறியிருக்கிறார்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு

Quick Share

தூத்துக்குடியில் விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உட்பட 3பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மீனாட்சிபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் சதீஷ் (30), இவருக்கும் தூத்துக்குடி மூன்றாவது மைல், திருவிக நகரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 6.6.2019ல் திருமணம் நடந்துள்ளது.  திருமணத்தின் போது 30 பவுன் நகையும், ரூ.1லட்சம் ரொக்கமும் பெண் வீட்டார் வரதட்சனையாக கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சதீஷின் மதுபழக்கத்தால் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இதனால் கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் விவாகரத்து கேட்டு சதீஷ் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பினராம். ஆனால் விவாகரத்துக்கு பாக்கியலட்சுமி சம்மதிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், அவரது தந்தை ஜெயக்குமார், தாய் சிரோன் மணி ஆகியோர் பாக்கியலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து பாக்கியலட்சுமி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் கணவர் உட்பட 3பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

14 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய மளிகை கடைக்காரர் கைது.

Quick Share

திருச்செந்தூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய மளிகை கடை உரிமையாளரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பழையகாயல், காந்தி நகரைச் சேர்ந்தவர் நயினார் மகன் பட்டுராஜன் (42), இவர் அந்த ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு வந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் தெரியவரவே அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பட்டுராஜனை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்




You cannot copy content of this Website