இந்தியா

படமெடுத்த ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண்! இணையத்தை ஆக்கிரமித்த காட்சி

Quick Share

பெண் ஒருவர் படமெடுத்து நிற்கும் ராஜநாகத்திற்கு மாறி மாறி முத்தம் கொடுத்த காட்சி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.

ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் காணொளியாக அவதானித்து வரும் நிலையில், தற்போது பெண் ஒருவர் செய்த செயல் வைரலாகி வருகின்றது

ஆம் படமெடுத்து நிற்கும் ராட்சத ராஜநாகத்தின் தலையில் மாறி மாறி முத்தம் கொடுத்து சிலிர்க்க வைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றது.

குறித்த காட்சியானது Aulia Khairunisa என்பவரின் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட நிலையில், இக்காட்சியினை ஏராளமான நபர்கள் அவதானித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறித்த பெண் வன விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள நிலையில் பல காணொளிகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இவரது யூடியூப் சேனலுக்கு மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேல் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர்.

ரூ.640 கோடியில் ஆடம்பர சொகுசு வில்லா.., மருமகளுக்கு பரிசளித்த அம்பானி மனைவி

Quick Share

மருமகள் ராதிகா மெர்சண்டிற்கு ரூ.640 கோடி மதிப்பில் விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு வில்லா ஒன்றை நீடா அம்பானி பரிசளித்துள்ளார். 

ஆனந்த் அம்பானி திருமணம்

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது. சிறு வயதில் ஜாம்நகரில் வளர்ந்ததால் திருமண முந்தைய நிகழ்ச்சியை அங்கு வைக்க வேண்டும் என்று ஆனந்த் அம்பானி தெரிவித்திருந்தார்.

இதனால், திருமண முந்தைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜாம் நகருக்கு Mark Zuckerberg, Bill Gates, Shah Rukh Khan, Salman Khan, Janhvi Kapoor, Manushi Chillar, Rani Mukerji, Manish Malhotra, Ranveer Singh, Deepika Padukone, Alia Bhatt, Ranbir Kapoor, Atlee உள்ளிட்டோர் வந்தனர்.

மருமகளுக்கு பரிசு

மே 28 -ம் திகதியில் தொடங்கும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சிக்காக, 800 விருந்தினர்களுடன் இத்தாலியில் இருந்து புறப்பட்டும் கப்பல் ஒன்று பிரான்ஸ் சென்றடைகிறது.

இந்நிலையில், மருமகள் ராதிகா மெர்சண்டிற்கு அம்பானி மனைவி நீடா அம்பானி விலையுயர்ந்த பரிசளித்துள்ளார். அவர் வழங்கிய துபாயில் உள்ள வில்லாவின் மதிப்பு மட்டும் ரூ.640 கோடி ஆகும். 

இந்த வில்லாவில் 10 ஆடம்பர படுக்கையறைகளும், வில்லாவிற்கு வெளியே 70 மீட்டர் தூரத்திற்கு பிரைவேட் கடற்கடையும் உள்ளது.

இந்த வில்லாவின் முக்கிய அம்சம் என்னவென்றால் உட்புறத்தில் இத்தாலிய பளிங்கு கற்களுடன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

HIV பாதிக்கப்பட்ட தாயும் தாய்ப்பால் கொடுக்கலாம்! வைத்தியர்களின் புதிய அறிவுரை

Quick Share

எச்ஐவி நோயால் (HIV Positive) பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (American Academy of Pediatrics) நீக்கியுள்ளது.

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தடையை வாபஸ் பெறுவதற்கான காரணத்தையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் (AIDS) நோய்க்கு வழிவகுக்கும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது தரமான மருத்துவ வசதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய கொலராடோ பல்கலைகழகத்தின் எச்.ஐ.வி நிபுணர் டாக்டர் லிசா அபோகி (Lisa Abuogi), தாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு வைரஸ் பரவும் அபாயத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கிறது என்று கூறியுள்ளார்.

முன்பெல்லாம் தாய்ப்பாலில் இருந்து குழந்தைகளுக்கு வைரஸ் தாக்கும் அபாயம் 30 சதவீதமாக இருந்தது, தற்போது அது ஒரு சதவீதமாக குறைந்துள்ளது.

1990-களின் முற்பகுதியில், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 குழந்தைகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டனர். தற்போது அந்த எண்ணிக்கை 30க்கும் குறைவாக உள்ளது.

அமெரிக்காவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5,000 குழந்தைகள் பிறக்கின்றன.

எச்.ஐ.வி தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்று 1980-களின் முற்பகுதியில் அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் முன்மொழிந்தது.

இப்போது, ​​சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் எச்.ஐ.வி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சிறந்த மருந்துகள் கிடைப்பதன் மூலம், இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

30 வினாடிகளில் தாயை அவமானப்படுத்தினார் பிரதமர் மோடி! சீண்டும் காயத்ரி ரகுராம்

Quick Share

தான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை, நான் கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டேன் என்று பேசி தனது தாயை மோடி 30 வினாடிகளில் அவமானப்படுத்தியுள்ளார் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். 

மோடி பேசியது

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். 

அப்போது அவர் பேசுகையில், “நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார். ஏதாவது ஒரு விடயத்தை செய்து முடிக்க வேண்டும் என்று அனுப்பியுள்ளார்.

நான் பெற்றுள்ள ஆற்றல் சாதாரண மனிதன் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” என்றார்.

காயத்ரி ரகுராம் பதிவு

பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பலரும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “”நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை, ஆனால் நான் கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டேன் என்று நான் நம்புகிறேன்”.

தன்னை ‘கடவுளின் அவதாரம்’ என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்கிறார். அவர் தனது தாயை 30 வினாடிகளில் அவமானப்படுத்தினார். அனைத்தும் அதிகாரத்திற்காக..

காசி விஸ்வநாதரை விட பெரிய ஆண்டவனாக நினைக்கும் மோடி, இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் வாரணாசியில் வெல்லக் கூடாது. மாறாக இமயமலையில் அமர்ந்து தன்னை கற்பனை செய்து கொண்டு தியானம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். 

கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார்! உயிரியல் ரீதியாக நான் பிறக்க வாய்ப்பில்லை &...

Quick Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேர்காணல் ஒன்றில் தன்னை பூமிக்கு அனுப்பியது கடவுள் தான் என்று கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விடயங்களை கூறியுள்ளார். 

அவர் தனது நேர்காணலில், ”என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம் தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். 

இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். 

உயிரியல் ரீதியாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விடயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.   

ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய GST கமிஷனர்! எவ்வளவு ஏக்கர் தெரியுமா?

Quick Share

ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக பணிபுரிந்து வருபவர் ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார்.

வனப்பகுதி கிராமம்

இந்திய மாநிலமான, குஜராத்தில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக பணிபுரிந்து வருபவர் சந்திரகாந்த் வல்வி.

இவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் இருக்கும் கண்டடி பள்ளத்தாக்கில் உள்ள ஜடானி என்ற கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்த கிராமத்தின் பரப்பளவு சுமார் 620 ஏக்கர் பரப்பளவு ஆகும். இந்த கிராமமானது வனப்பகுதியில் இருக்கும் காரணத்தால் அங்கு மரங்கள் வெட்டப்படும் அபாயம் ஏற்படும் என்றும், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுப்பட்டு வருவதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், கிராமத்தில் இருக்கும் மக்களின் வீடுகளை அரசு விரைவில் கையகப்படுத்தும் என்று ஜி.எஸ்.டி. தலைமை ஆணையர் கூறியதாக சமூக ஆர்வலர் சுஷாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.   

மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்: 8 பேர் உயிரிழப்பு!

Quick Share

டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் பல பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் புழுதிப் புயல் காரணமாக ராட்சத பேனர் விழுந்து 35 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் பல பகுதிகளில் இன்று மாலை புழுதிப் புயல் வீசி வருகிறது. இதனால் நகரப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புழுதி புயல் காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வடாலா பகுதியில் வீசிய புழுதிப் புயலில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு குழாய்களால் ஆன சாரம் சரிந்து விழுந்து உள்ளது. பெட்ரோல் பங்க் மீது அந்த இரும்புகள் விழுந்ததில் 35 பேர் காயமடைந்துள்ளனர். 

மேலும் அந்தப் பெட்ரோல் பங்கில் இருந்த 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளே சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. புழுதிப் புயல் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

டெல்லியில் புழுதிப் புயல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Quick Share

டெல்லியில் கடுமையாக புழுதிப் புயல் வீசி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்லி மாநகரின் பகுதியில் பல்வேறு பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் பல அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் கொடுத்திருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகால வெப்பநிலை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதி புயல் வீசி வருகிறது.

பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவோர் இதனால் மிகுந்த சிரமத்தைச் சந்தித்துள்ளனர். பலத்த காற்று வீசியதன் காரணமாக பல இடங்களில் குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் டெல்லி பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல்: விமானப்படை வீரருக்கு நேர்ந்த சோகம்!

Quick Share

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வீரர்கள் ஏற்றிக்கொண்டு விமானப்படைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று நேற்று மாலை (04.05.2024) சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் சூரன்கோட் அருகே சென்று கொண்டிருந்த போது, மலைப்பகுதிகளில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று விமானப்படை வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விமானப்படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்தப் பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த ஐந்து வீரர்களை உயர் சிகிச்சைக்காக விமானம் மூலமாக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மற்ற மூவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் இச்சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் என்ற இடத்தில் நமது ராணுவ வாகனத்தின் மீது கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் நடத்தியது மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும். இந்த செயல் மிகவும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை” – பிரதமர் மோடி பேச்சு!

Quick Share

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்க்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட மாநிலம், பாலமு மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “கடந்த 25 வருடங்களில் முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழலும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை; ஊழல் செய்த ஜே.எம்.எம், காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துக்களைக் குவித்தனர். நான் உயிருடன் இருக்கும் வரை, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசியலமைப்பை மாற்றியமைக்க காங்கிரஸின் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டேன்.

புதிய இந்தியாவுக்கு எதிரி எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தத் தெரியும். இப்போது சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் அதிர்ந்த பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள், காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். 500 ஆண்டுகளாகப் போராடிய தலைமுறைக்குப் பிறகு ராமர் கோயிலைக் கட்டவும், ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை நீக்கியதற்கும் பா.ஜ.க பங்களித்தது. 

உங்களின் ஒரு வாக்கு பலத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370-ன் சுவர் பூமிக்கு அடியில் புதைந்துவிட்டது. ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பசுபதி முதல் திருப்பதி வரை நக்சலிசமும், பயங்கரவாதமும் பரவி, இந்த நிலமே ரத்த வெள்ளத்தில் மூழ்கியது. உங்களின் ஒரு வாக்கு பல தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றி இந்தப் பூமியை நக்சலைட் பயங்கரவாதத்திலிருந்து விடுவித்தது” என்று கூறினார்.

கடற்கரையில் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றி திரியும் சுற்றுலாப்பயணிகள்!

Quick Share

விசித்திரமான முறையில் ஆடை அணிவதற்கு தடை செய்யப்பட்ட சுற்றுலாத்தளங்கள் நிறைய உள்ளன. இங்கு சுற்றுலாப்பயணிகள் நிர்வாணமாக சுற்றி திரிந்து மகிழ்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் எவ்வளவு சுற்றுலா பயணங்கள் சென்றிருந்தாலும் அதில் அதிகமாக இருக்கும் சுற்றுலா தலம் கரைற்கரை ஓரங்கள் தான்.

அந்த வகையில் தான் ஆச்சரியமூட்டும் வகையில் சுற்றுலா பயணிகள் நிர்வாணமாக உலா வரும் கடற்கரைகளும் உள்ளன. இங்கு ஆண் , பெண் பாரபட்சமின்றி அனைவரும் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பார்கள்.

பிரான்சில் உள்ள லூகாட் கடற்கரை மத்தியதரைக் கடலுக்கு அருகில் உள்ள இந்த கடற்கரையில் நிர்வாணத்திற்கு எல்லையே இல்லை. யார் வேண்டுமானாலும் நிர்வாணமாகச் செல்லலாம்.

Valalta கடற்கரை இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இங்கு தங்கத்தில் ஜொலிக்கும் கூழாங்கற்களை பார்வையிடவே பலபேர் வருகை தருகின்றனர்.

இங்கு ஐரோப்பா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆடையின்றி கடலில் வேடிக்கை பார்த்துவிட்டு செல்கின்றனர்.

டென்மார்க்கில் உள்ள பெல்லூவ் பீச் உலகின் பிரபலமான நிர்வாண கடற்கரைகளில் ஒன்றாகும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்படி ஆடை இல்லாமல் கடற்கரையில் ஓய்வெடுப்பதற்கான காரணம் இதை சன் பாத் என கூறுகிறார்கள். சன் பாத் செய்பவர்கள் இந்த நிர்வாண கடற்கரைக்கு சென்று வரலாம்.

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளிகள் மேற்கு வங்கத்தில் கைது!

Quick Share

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 1 ஆம் திகதி பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை, ஆனால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.

குண்டு வைக்கப்பட்ட இடத்தில் குறைந்த கூட்டம் மற்றும் வெடிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்திய பெரிய தூண் அருகில் இருந்த காரணமாகவே உயிரிழப்பு ஏற்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று அறிவித்துள்ளது.

முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாஸெப்(Mussavir Hussain Shazeb) மற்றும் அப்துல் மத்தீன் தாஹா(Abdul Matheen Taha) ஆகியோர் கிழக்கு மித்னாபூர்(Midnapore) மாவட்டத்தின் Kanthi பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை, மத்திய உளவுத்துறை அமைப்புகள் மற்றும் மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா காவல்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது.

NIA விசாரணையில், ஷாஸெப் தான் ராமேஸ்வரம் கஃபேவில் வெடிபொருளை வைத்ததாகவும், தாஹா தாக்குதலை திட்டமிட்டு தப்பி ஓடுவதற்கு உதவியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் இது 2வது மற்றும் மூன்றாவது கைது ஆகும். கடந்த மாதம், இவர்களுக்கு உதவி புரிந்ததாக கூறப்படும் முஸம்மில் ஷரீப் (Muzammil Shareef) கைது செய்யப்பட்டார்.

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 18 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னரே ஷாஸெப்பையும், தாஹாவையும் மேற்கு வங்காளத்தில் NIA அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வரும் நாட்களில் இந்த வழக்கு குறித்து NIA மேலும் விவரங்களை வெளியிட உள்ளது.




You cannot copy content of this Website