இந்தியா

பூனையை மீட்க கிணற்றுக்குள் இறங்கிய 5 பேர் உயிரிழப்பு

Quick Share

கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

5 பேர் உயிரிழப்பு

இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் பூனை ஒன்று விழுந்துள்ளது. அப்போது பூனையை காப்பாற்ற ஒரு நபர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். 

அவர், கிணற்றுக்குள் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். அவரை மீட்பதற்காக அடுத்தடுத்து 5 பேர் உள்ளே இறங்கியுள்ளனர்.இதில், 5 பேர் உயிரிழந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டும் கிராமத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் நடைபெற்று பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிணற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

மேலும், கிணற்றுக்குள் சேறு அதிகமாக இருந்ததால் சேறு அகற்றும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், நள்ளிரவு வரை மீட்கும் பணிகள் தொடர்ந்தது.   

பிரச்சாரத்தில் பெண்ணுக்கு முத்தம்: பா.ஜ.க வேட்பாளரால் எழுந்த சர்ச்சை!

Quick Share

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ.க வேட்பாளர் ஒருவர், பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் மால்டா வடக்கு எம்.பி ககென் முர்மு, பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். இதனால், அவர் தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர், அங்கிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். வாக்கு சேகரிக்க சென்ற போது பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி பா.ஜ.கவை கடுமையாக சாடி வருகின்றனர்.

94 வயதிலும் ஜனநாயக கடமையை முடித்து உயிரை விட்ட மூதாட்டி!

Quick Share

வரும் மக்களவை தேர்தலுக்காக தபால் வாக்கு செலுத்திய 94 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ல் தொடங்கி ஜூன் மாதம் 2-ம் திகதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே மக்களவை தேர்தளுக்கு வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியது.

தமிழக மாவட்டமான திருப்பூரில், கடந்த 2 நாட்களாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதியவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கினை அதிகாரிகள் பெற்று வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று முன்தினம் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கங்கவார் வீதியில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் (94 வயது) வீட்டிற்கும் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் கொண்டு வந்த தபால் வாக்கு பெட்டியில் தாயம்மாள் தனது வாக்கினை செலுத்தினார்.

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயம்மாள் இன்று உயிரிழந்தார். 94 வயதிலும் தனது ஜனநாயக கடமையை முடித்து மூதாட்டி உயிரை விட்டது பேசப்பட்டு வருகிறது.

முதல் மாதவிடாய் எதிர்கொண்ட 14 வயது சிறுமி: மன அழுத்தத்தில் எடுத்த விபரீத முடிவு!

Quick Share

மாதவிடாய் குறித்த மன அழுத்தம் காரணமாக மும்பையில் 14 வயது சிறுமி விபரீத முடிவு (உயிரிழப்பு) எடுத்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Makwani பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது முதல் மாதவிடாய் சந்தித்த நிலையில் வியாழக்கிழமை இரவு விபரீத முடிவு (உயிரிழப்பு) எடுத்து கொண்டுள்ளார். உறவினர்கள் விபரீத முடிவு குறித்து அறிந்ததும் விரைவாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் சிறுமி அவளது முதல் மாதவிடாய் உடல் மாற்றத்தின் போது தீவிரமான வலியை அனுபவித்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே சிறுமி விபரீத முடிவு செய்து கொண்டு இருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை அறிக்கைகளின்படி, இந்த சிறுமியின் குடும்பத்தினர், மாதவிடாய் குறித்த அறிவின்மை மற்றும் உடல் உபாதைகள் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தமே இவருடைய மரணத்திற்கு முக்கியக் காரணம் என நம்புகின்றனர்.

இது போன்ற விழிப்புணர்வின்மை, மாதவிடாய் குறித்த திறந்த தொடர்பு மற்றும் வயதுக்கேற்ற கல்வியின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஓன்லைனில் ஓர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு!

Quick Share

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓன்லைனில் ஓர்டர் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட 10 வயது சிறுமி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். தற்போதைய காலத்தில் நாம் எந்தவொரு பொருள் வாங்கினாலும் அதனை ஓன்லைன் (Online) மூலமாகவே ஓர்டர் செய்து வாங்குகிறோம். வீட்டில் இருந்த படியே நமக்கு தேவையான பொருட்களை வாங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால், சில நேரங்களில் நடைபெறும் சம்பவங்கள் சோகத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்திய மாநிலமான பஞ்சாப், பாட்டியாலாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி மான்வி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவருக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக குடும்பத்தினர் ஓன்லைன் மூலமாக கேக்கை வாங்கி இரவு 7 மணிக்கு கொண்டாடினர்.

அப்போது, அன்று இரவு 10 மணிக்கு கேக் சாப்பிட்ட மான்வி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது தாத்தா கூறும்போது, “இரவு 10 மணிக்கு மான்வி மற்றும் அவரது சகோதரிக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. மேலும், அவரது தாய் உலர்வதாக கூறினார்.

காலையில் மான்வியின் உடல் நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்தனர். மான்விக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்” என்றார்.

ஓன்லைன் மூலமாக ஓர்டர் செய்த கேக் கெட்டு போனதால் சிறுமிக்கு இப்படி நடந்துள்ளது என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

மேலும், இது சம்பந்தமாக பேக்கரி உரிமையாளருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமி மான்வியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு பெண்ணிற்காக அமைக்கப்படும் வாக்குச்சாவடி!

Quick Share

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இங்கு, தமிழகம் போன்று முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.

இதையொட்டி, மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 228 மையங்களை தோ்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது. அதிலும் 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களின் ஜனநாயக உரிமையையும் உறுதிபடுத்த தோ்தல் ஆணையம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அந்த வகையில், மாநிலத்தின் மலோகாம் கிராமத்தைச் சோ்ந்த 44 வயதான ‘சோகேலா தயாங்’ எனும் ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக இந்த முறையும் வாக்குப்பதிவு மையம் அவரது கிராமத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதுபோன்று கிழக்கு அருணாச்சல் மக்களவைத் தொகுதியிலுள்ள ஹயுலியாங் சட்டப்பேரவைத் தொகுதி குக்கிராமங்களில் சில குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், ‘சோகேலா தயாங்’ தவிர மற்ற அனைவரும் வேறு வாக்குப்பதிவு மையத்துக்கு தங்கள் வாக்கினை மாற்றிக் கொண்டுவிட்டனர். தொடர்ந்து, சோகேலா தயாங் வாக்காளருக்காக மட்டும் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ‘சோகேலா தயாங்’ வாக்களிப்பதற்கு தோ்தல் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சுமை தூக்கும் தொழிலாளிகள் உள்ளிட்ட குழுவினா் 39 கிலோ மீட்டர் கடும் நிலப்பரப்பில் நடந்து சென்று, மலோகாம் கிராமத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்க இருக்கின்றனா். இதற்கான பயணத்தை வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 18 ஆம் தேதி அதிகாரிகள் தொடங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மகன், மகள் கல்லூரியில் படித்து வருவதன் காரணமாக தற்போது லோஹித் மாவட்டத்தின் வக்ரோ பகுதியில் வசித்து வரும் ‘சோகேலா தயாங்’ மலோகாமுக்கு அரிதாகவே வந்து செல்கிறாா். எனினும், தோ்தலில் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 18 ஆம் தேதி மலோகாம் கிராம வீட்டுக்கு வந்துவிடுவேன் என சோகேலா தயாங் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், சேகோலா தயாங் எப்போது வாக்களிக்க வருவாா் என்பது உறுதியாகத் தெரியாத காரணத்தால் வாக்குப்பதிவு மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முழு நேரமும் செயல்படும் எனத் தோ்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கிழக்கு அருணாச்சல் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் தற்போதைய எம்.பி. தபிா் கௌ மீண்டும் போட்டியிடுகிறாா். காங்கிரஸ் சாா்பில் போசிராம் சிராம் நிறுத்தப்பட்டுள்ளாா். இதையடுத்து பேசிய அம்மாநிலத் தலைமை தோ்தல் அதிகாரி பவன்குமாா் ஜெயின், ”வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பது எண்ணிக்கையைப் பொறுத்து அல்ல. அனைத்து குடிமக்களும் வாக்கு செலுத்தும் உரிமை பெறுவதை உறுதிப்படுத்துவதே நமது நோக்கம். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவத்திற்கான எங்களின் அா்ப்பணிப்புக்கு ‘சோகேலா தயாங்’ அளிக்கும் வாக்கு அத்தாட்சியாக இருக்கும்..” என்றாா். இந்திய நாட்டில் ஒரு பெண்மணிக்கு தேர்தல் அணையம் வாக்குப்பதிவு மையம் அமைப்பது வாக்கு செலுத்தும் அவசியத்தை விளக்குகிறது என குறிப்பிடத்தக்கது.

அருணாசல பிரதேசத்தில் 44 வயது ஒற்றைப் பெண் வாக்காளருக்காக தோ்தல் அதிகாரிகள் குழு 39 கிலோ மீட்டர் கடுமையான நிலப்பரப்பில் நடந்து சென்று, மலோகாம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க உள்ளது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

கேரளாவில் சோகம்: 31 வயதில் உயிரை மாய்த்துக் கொண்ட பேராசிரியை!

Quick Share

கேரளாவில் பேராசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெலிஸ் நசீர் (31). இவர் வயநாடு அருகேயுள்ள மேப்பாடியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஓய்வெடுக்க தனது அறைக்கு சென்ற பெலிஸ் நசீர், மாலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் தட்டியும் திறக்காததால், சன்னல் வழியாக பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெலிஸ் நசீர் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த பொலிசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆலோசனை முதற்கட்ட விசாரணையில், பெலிஸ் நசீர் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான எந்த அறிகுறியையும் சக ஊழியர்களிடம் காட்டவில்லை.

திருமணமாகி விவாகரத்தான பெலிஸ், இறப்புக்கு முன்பு அவரது குழந்தையை தன் தாயிடம் அனுப்பி வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மருத்துவர்களுக்கு இடையே ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கவுன்சிலில் பெலிஸ் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“மோடி என்றால் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்” – பிரதமர் மோடி!

Quick Share

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ‘மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள், மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 7 கட்டங்களாக நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தலைப்புச் செய்திகளுக்காக வேலை செய்யவில்லை, காலக்கெடுவை மனதில் வைத்து வேலை செய்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “மோடி என்றால் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் 2029இல் சிக்கிக்கொண்டீர்கள், ஆனால் நான் 2047க்கு திட்டமிடுகிறேன். இன்று மிகப்பெரிய ஜனநாயக விழாவைக் கொண்டாடும் பணி தொடங்கியுள்ளது. முழு உலகமும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் என்பது நிச்சயம்.

இன்று தேசத்தின் மனநிலை, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பற்றியது. இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்ற வேண்டும் என்ற மனநிலையில் நாடு உள்ளது. இதுபோன்ற மாநாட்டிற்கு நான் வரும்போதெல்லாம், நான் பல தலைப்புச் செய்திகளைத் தருவேன் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கும். ஆனால் நான் தலைப்புச் செய்திகளுக்காக வேலை செய்யவில்லை, காலக்கெடுவை மனதில் வைத்து வேலை செய்கிறேன்.” என்றார்.

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Quick Share

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்பு நுரையீரலுடன் நீண்ட 70 ஆண்டுகள்… விடை பெற்றார் Polio Paul

Quick Share

நீண்ட 70 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்து வந்த Polio Paul என பரவலாக அறியப்பட்ட பால் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட இறந்துவிட்டார்

கடந்த 1952ல் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸில் வசித்து வந்த பால் அலெக்சாண்டர் போலியோவால் தாக்கப்பட்ட நிலையில் முடங்கிப் போனார். தலை, கழுத்து மற்றும் வாயை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது.

அவரை இரும்பு நுரையீரலில் இணைப்பதற்கு முன்பே கிட்டத்தட்ட இறந்துவிட்டார் என்றே கூறப்பட்டது. மருத்துவர்களின் அந்த வித்தியாசமான முடிவால், பால் அலெக்சாண்டார் 70 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார். 

ஆனால் திங்களன்று, மார்ச் 11ம் திகதி அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளிடப்பட்டுள்ளது. போலியோ தாக்குதலால் முடங்கிப்போன பால் அலெக்சாண்டர் நீண்ட 70 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் உயிர் வாழ்ந்த நிலையில், திடீரென்று மரணமடைந்துள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் கல்லூரி படிப்பை முடித்து சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார். மட்டுமின்றி, தமது கதையை அவர் நூலாகவும் வெளியிட்டுள்ளார். அவரது கதை உலகமெங்கும் பரவி பலருக்கு ஊக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் நீடிக்கும் நிலை

பிரித்தானியாவில் இதுபோன்ற ஒரு இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த நபர் 2017ல் மரணமடைந்துள்ளார். 6 வயதேயான பால் அலெக்சாண்டர் 1952 ஜூலை மாதம் குடியிருப்புக்கு வெளியே விளையாடிவிட்டு காய்ச்சல் அறிகுறியுடன் வீடு திரும்பியுள்ளார். 

ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த சிறுவனால் பேசவோ, விழுங்கவோ, இருமவோ அல்லது பேனாவைப் பிடிக்கவோ முடியாமல் போனது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.

மூன்று நாட்களுக்கு பின்னர் கண் விழித்த பால் அலெக்சாண்டர், தாம் ஒரு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டிருந்ததை உணர்ந்தார். அதுவே அவரது ஆயுள் முழுவதும் நீடிக்கும் நிலை ஏற்பட்டது. 

தற்போது தமது 78வது வயதில் பால் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளார். அவருக்கு உலகமெங்கிலும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates… யார் இந்த Paula Hurd., அவரது சொத்து மத...

Quick Share

ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் Bill Gates-உடன் கலந்துகொண்ட அவரது காதலி Paula Hurd யார், அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

Microsot இணை நிறுவனர் பில் கேட்ஸ் இதுவரை பல நிகழ்வுகளில் தனது காதலி Paula Hurd-உடன் கலந்துகொண்டுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டார்.

பில் கேட்ஸுடன் ஒன்றாகத் தோன்றும் Paula Hurd யார்?

உலகின் மிகப்பாரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், 27 வருட திருமணத்திற்குப் பிறகு 2021-இல் தனது மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸை (Melinda French Gates) விவாகரத்து செய்தார்.

அன்றிலிருந்து Paula Hurd பில் கேட்ஸுடன் நெருக்கமாக பழகிவருகிறார்.

அவர்களது உறவை உறுதிப்படுத்தும் முன்பே, இருவரும் பல நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றினர்.

அந்த சமயத்தில் BBC நிகழ்ச்சி ஒன்றில், விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் காதலைத் தேடத் திட்டமிட்டுள்ளதாகவும், ஏனெனில் தான் ஒரு ரோபோ அல்ல என்றும் பில் கேட்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து பிப்ரவரி 2023-இல், அவர்களின் உறவு பரவலாக அறிவிக்கப்பட்டது.

அப்படியானால் Paula Hurd யார்?

Paula Hurd மென்பொருள் நிறுவனமான Oracle-ன் தலைமை நிர்வாக அதிகாரி Mark Hurd-ன் மனைவி ஆவார். இருவருக்கும் திருமணமாகி 30-ஆண்டுகள் ஆன நிலையில், அக்டோபர் 2019-இல் மார்க் காலமானார். 

1984-ஆம் ஆண்டு ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பவுலா ஹர்ட், விற்பனைத் துறையில் பணியாற்றினார். என்சிஆர் (National Cash Register) என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கார்ப்பரேட் நிகழ்வு அனுபவங்களின் டெவலப்பர் மற்றும் அமைப்பாளராக பணியாற்றினார்.பவுலா ஹர்டுக்கு அவரது மறைந்த கணவருடன் கேத்ரின் மற்றும் கெல்லி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

பில் கேட்ஸ் மற்றும் Paula Hurdக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா?

ஜூலை 2023-இல், Paula Hurd மோதிரம் ஒன்றை அணிந்திருந்ததால், அவருக்கும் பில் கேட்ஸுக்கும் நிச்சயதார்த்தம் ஆனதாக வதந்திகள் பரவின.

ஆனால் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், மோதிரம் பவுலாவுக்கு சொந்தமானது என்றும், அது பில் கேட்ஸுடனான அவரது நிச்சயதார்த்தத்தை குறிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

Paula Hurd-ன் சொத்து மதிப்பு என்ன?

அவரது கணவர் மார்க் ஹர்டு இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு 500 மில்லியன் டொலர்கள் ஆகும்.

அதேநேரம் 61 வயதான ஹர்டின் தனிப்பட்ட சொத்து மதிப்பு குறைந்தது 35 மில்லியன் டொலர்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ. 1075 கோடி ஆகும்.

 

2024-ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியல்!

Quick Share

சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் மு.க. ஸ்டாலின், நீதா அம்பானியை அடுத்து நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் சக்தி மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான 100 சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நடிகர் 27வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் முதல் 30 தரவரிசையில் உள்ள ஒரே நடிகர் அல்லது திரைப்பட பிரபலம் ஆவார்.

பல தசாப்தங்களாக, King Khan பொழுதுபோக்குத் துறையில் ஆட்சி செய்து வருகிறார், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அவரது கவர்ந்திழுக்கும் தோற்றம் மற்றும் ஒப்பற்ற திறமையால் மயக்குகிறார்.

ஷாருக்கான் கடந்த ஆண்டு வெளியான பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களின் வெற்றி ஹிந்தித் திரையுலகையும் தனது நட்சத்திர அந்தஸ்துடன் மீட்டெடுத்தார்.

2024-ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 100 இந்தியர்கள் பட்டியலில் 27-வது இடத்தைப் பிடித்திருப்பது ஷாருக்கின் நீண்டகால செல்வாக்கையும், ஈடு இணையற்ற செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு விருதுக்கும், ஷாருக்கான் நாட்டின் மிகவும் போற்றப்படும் நபர்களில் ஒருவராக தனது இடத்தை உறுதிப்படுத்துகிறார். அவரது செல்வாக்கும், புகழும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதையும் கவர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான நீதா அம்பானி 2024-ஆம் ஆண்டுக்கான 100 சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் 26வது இடத்தைப் பிடித்துள்ளார்.

25-வது இடத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website