இந்தியா

காளான் மூலம் தங்கம் தயாரிக்கும் அதிசயம்: கோவா ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

Quick Share

கோவாவைச் சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள், காட்டு காளான் வகையிலிருந்து தங்க நானோ துகள்களை (Gold Nanoparticles) தொகுப்பு முறையில் தயாரித்திருப்பதாக அறிவித்துள்ளனர். டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr. Sujata Dabolkar) மற்றும் டாக்டர் நந்தகுமார் கமத் (Dr. Nandkumar Kamat) ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கோவாவில் காணப்படும் “ரோன் ஓம்லி” காளான்களை முப்பரிமாண வடிவத்தில் வளர்த்து, அதன் மூலம் தங்க நானோ துகள்களைத் தொகுத்தனர்.

இந்த முறை, பாரம்பரிய முறைகளை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

தங்க நானோ துகள்கள் மருத்துவம், மின்னணுவியல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இவை, புற்றுநோய் சிகிச்சை, மருந்து விநியோகம், சூரிய மின்கலங்கள், மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட காளான் வகை, “ரோன் ஓம்லி” (Roen Olmi) என அழைக்கப்படுகிறது.

இது, டெர்மிடோமைசெஸ் (Termitomyces) என்ற காளான் குடும்பத்தைச் சேர்ந்தது. மழைக்காலங்களில் கிடைக்கும் இந்த காளான் வகை, கோவாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாகவும் விளங்குகிறது.

இந்த ஆய்வின் மூலம், கோவாவில் காணப்படும் காளான் வகைகளின் மருத்துவ மற்றும் தொழில்துறை முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளது.

இது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனந்த அம்பானியின் திருமணம்: மார்க் ஜுக்கர்பெர்க் வியந்த ஆடம்பரத்தின் உச்சம்!

Quick Share

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான் ஆகியோர் சமீபத்திய இந்திய தொழில் அதிபர் ஆனந்த் அம்பானியின் கையில் இருந்த அதிசய கடிகாரத்தைப் பார்த்து வியப்படைந்துள்ளனர். 2024ல் ஜூலை 12-ம் திகதி ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின்(mukesh ambani) இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்(Anant Ambani), தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும்(Radhika Merchant) திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்தின் முந்தைய நிகழ்வாக ஜாம்நகரில் சமீபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில், உலக பணக்காரர்களான மார்க் ஜுக்கர்பெர்க் – மெட்டா நிறுவனர் (Mark Zuckerberg – Meta), முதல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் M.S தோனி(M.S Dhoni) வரை கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவின் மத்தியில், இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் மற்றும் மணமகனான ஆனந்த் அம்பானியின் கையில் கட்டி இருந்த கைக் கடிகாரத்தை மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான் வியந்து பார்த்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

அத்துடன் அந்த வீடியோவில், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான் ஆகியோர் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் உரையாடி கொண்டு இருப்பதும், அப்போது இருவரும் ஆனந்த் அம்பானியின் கையில் கட்டி இருந்த கை கடிகாரத்தை வியந்து பார்த்து விவாதித்ததை பார்க்க முடிகிறது.

ஆனந்த அம்பானி அணிந்து இருந்த இந்த Audemars Piguet Royal Oak Openworked Skeleton கடிகாரம் சுமார் ₹14 கோடி மதிப்புள்ளது என கூறப்படுகிறது.

நீ அம்பானியா அல்லது பிச்சைக்காரனா..!குலுங்கி சிரித்த நீதா-முகேஷ் அம்பானி: ஆனந்த் அம்பான...

Quick Share

இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் வீட்டு திருமண விழாவில் மணமகன் ஆனந்த் அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனந்த் அம்பானி திருமணம்

இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கடந்த 3 நாட்களாக ஜாம்நகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில்  உலகளவில் பிரபலமான பிரபலங்கள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விலையுயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான அலங்காரங்கள் மற்றும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த திருமண கொண்டாட்டம் கண்களை பறிக்கும் நிகழ்வாக இருந்தது. 

உலகிலேயே மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக அம்பானி குடும்பத்தின் நிலையை இது மேலும் உறுதிப்படுத்தியது.

கிண்டல் செய்யப்பட்ட ஆனந்த் அம்பானி

மிகப்பெரிய செல்வத்தை காட்சிப்படுத்திய இந்த திருமண கொண்டாட்டத்தில் பேசிய மணமகன் ஆனந்த் அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு பில்லியனரின் மகனாக இருந்தபோதிலும், தனது தந்தைக்கு சொந்தமான துருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் (Dhirubhai Ambani International School) படித்த போதிலும், தனக்கு வாரந்திரா பாக்கெட் மணியாக(weekly pocket money) வெறும் ரூ.5 மட்டுமே தன்னுடைய பெற்றோர்கள் வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அவரது சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவரை “பிக்‌காரி”(bikhari) என்று கிண்டல் செய்தனர் என்றும் ஆனந்த அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்காரி என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் “பிச்சைக்காரர்” என்று பொருள்.

ஆனந்த அம்பானியின் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட போது தந்தை முகேஷ் அம்பானி மற்றும் தாய் நீதா அம்பானி குலுங்கி குலுங்கி சிரித்ததாக கூறப்படுகிறது.

பழைய பேட்டி

பழைய பேட்டி ஒன்றில், ஆனந்த் அம்பானியின் தாய் நீதா அம்பானி இந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், ஆனந்த, ஈஷா, உட்பட மூன்று குழந்தைகளுக்கும் பணத்தின் மதிப்பை புகட்டுவதற்காக அனைவருக்கும் ரூ.5 என ஒரே மாதிரியான பாக்கெட் மணியை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

40 பில்லியன் டொலர் சொத்துக்கு அதிபதி

பிச்சைக்காரன் என்று சிறுவயதில் கிண்டல் செய்யப்பட்டாலும், படிப்பில் சிறந்து விளங்கிய ஆனந்த அம்பானி பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, வேகமாக தொழில் துறையில் சாதித்தார்.

தற்போது அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கியமான பிரிவான ரிலையன்ஸ் New Energy பிரிவை வழிநடத்துகிறார்.

3 நாட்களுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? மகனுக்காக அம்பானி கொட்டிய பணம்

Quick Share

ஆனந்த் அம்பானி திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்திற்காக முகேஷ் அம்பானி செலவு செய்த பண விவரங்கள் வெளிவந்துள்ளது. 

ஆனந்த் அம்பானி திருமணம்

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் திருமணத்தின் முந்தய கொண்டாட்டம் தொடங்கியது. இதனால், ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக அங்கீகாரம் பெற்றது.

இதனால், ஜாம் நகருக்கு Mark Zuckerberg, Bill Gates, Shah Rukh Khan, Salman Khan, Janhvi Kapoor, Manushi Chillar, Rani Mukerji, Manish Malhotra, Ranveer Singh, Deepika Padukone, Alia Bhatt, Ranbir Kapoor, Atlee, Rajinikanth உள்ளிட்ட 1,000 சிறப்புவிருந்தினர்கள் வருகை புரிந்தனர்

எவ்வளவு செலவானது?

முதல் நாளான மார்ச் 1 -ம் திகதியில் அமெரிக்க பாப் பாடகியான ரிஹானாவின் (Pop Star Rihanna) இசைக் கச்சேரி நடைபெற்றது. இதற்கு மட்டுமே ரூ.75 கோடியை அம்பானி செலவு செய்துள்ளார்.இரண்டாம் நாளில் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை விருந்தினர்கள் சுற்றி பார்த்தனர். மேலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அதேபோல மூன்றாம் நாளில் யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.விருந்தினர்களின் உணவுக்காக இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. கிட்டத்தட்ட உணவுக்கு மட்டுமே ரூ.130 கோடி செலவிடப்பட்டது.அம்பானி திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்திற்காக கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக ரூ.1,250 கோடி செலவிடப்பட்டுள்ளது.     

“நான் இருக்கும்வரை உங்கள் மீது யாரும் கைவைக்க முடியாது” – பிரதமர் மோட...

Quick Share

தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆளும் திமுக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதில் அவர் தமிழக அரசுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்றும், எந்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தாலும் தமிழக அரசு குறை சொல்வதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் திமுகவும், காங்கிரசும் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றன. அவை இரண்டும் அகற்றப்பட வேண்டிய காட்சிகள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, ‘”தேர்தலுக்கு பின் தேடினாலும் திமுக கிடைக்காது. முற்றிலும் அகற்றப்பட வேண்டிய கட்சி திமுக. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டைக் கொள்ளை அடிப்பதற்காகத்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுத்து வருகின்றனர். 

நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது. இந்தியா 100 மடங்கு முன்னேறினால் தமிழ்நாடும் 100 மடங்கு முன்னேற வேண்டும். உங்கள் வரியைத்தான் நாங்கள் உங்களுக்கு திட்டங்களாக வழங்குகிறோம். மோடி இருக்கும்வரை யாரும் உங்கள் மீது கைவைக்க முடியாது.

சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். எனக்கு தமிழ்மொழி தெரியாது, ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்.

நான் பேசுவதை புரிந்துகொண்டு எனக்காக கூடியிருக்கும் மக்கள் என்னை வாழ்ந்த வேண்டும். பாஜக 400 இடங்களில் வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆசீர்வதிக்க வேண்டும். நெல்லை மக்களின் ஆசியோடு பிரதமர் பதவியில் மீண்டும் அமர்வேன்” என கூறினார்.

நீல நிற ஆதார் அட்டை ஏன் தேவை?

Quick Share

இந்தியாவில் ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை. இது UIDAI (Unique Identification Authority of India) ஆல் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது, ஏனென்றால் இந்த ஆதார் அட்டை ஆவணம் இருந்தால் தான் அரசின் பல நலத்திட்டங்களின் பலன்களை பெற முடியும்.

இந்நிலையில் இந்தியாவில் ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்ற வார்த்தை தொடர்ந்து ஒலித்துக் கொண்டு உள்ளது, உடனே அய்யோ..! நம்மிடம் அந்த ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) நம்மிடம் இல்லையே என்று பதற வேண்டாம்.

ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை. இது UIDAI (Unique Identification Authority of India) ஆல் வழங்கப்படுகிறது.

பொதுவாக ஆதார் அட்டைகள் கைரேகை, கண் கருவிழி ஆகியவற்றை ஸ்கேன் செய்து வழங்கப்படுகிறது, ஆனால் இந்த நீல நிற ஆதார் அட்டையானது அப்படி இல்லை. இவை குழந்தைகளுக்கான ஆவணம் என்பதால், இதில் குழந்தையின் பயோமெட்ரிக் தரவுகள் (கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்) பதிவு செய்யப்படாது. இந்த நீல ஆதார் அட்டையில் குழந்தையின் புகைப்படத்துடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், விலாசம், பிறந்த திகதி ஆகியவை மட்டுமே UID எண்(Unique Identification Number) உடன் சேர்த்து வழங்கப்படும்.

ப்ளூ ஆதார் அட்டை ஏன் முக்கியம்?

குழந்தைகளின் பாதுகாப்பு: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், கடத்தல் மற்றும் வேறு எந்த வகையான துஷ்பிரயோகத்திலிருந்தும் அவர்களை பாதுகாக்க உதவுகிறது.

அரசு நலத்திட்டங்கள்: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளுக்கு அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பெற உதவுகிறது.

கல்வி: பள்ளிகளில் சேர்ப்பதற்கு ப்ளூ ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாகும்.

தடுப்பூசிகள்: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க உதவுகிறது.

பயணம்: விமானம் மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து வழிமுறைகளில் பயணம் செய்யும் போது குழந்தைகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த ப்ளூ ஆதார் அட்டை பயன்படுகிறது.

ப்ளூ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேவையான ஆவணங்கள்

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

பெற்றோர்களில் ஒருவரின் ஆதார் அட்டை

முகவரிச் சான்று (ரேஷன் அட்டை, மின்சார கட்டண ரசீது போன்றவை)

குழந்தையின் புகைப்படம்

விண்ணப்பிக்கும் முறை

அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும்.

ப்ளூ ஆதார் அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தைப் (Blue Aadhaar card application)பெற்று நிரப்பவும்.

தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

விண்ணப்பக் கட்டணம் (இருந்தால்) செலுத்தவும்.

படிவத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்ப நிலையை சரிபார்க்கவும்

UIDAI இணையதளத்தில் உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம்.

விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் ப்ளூ ஆதார் அட்டை வழங்கப்படும்.

ப்ளூ ஆதார் அட்டை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு

UIDAI இணையதளத்தை பார்வையிடவும்: https://uidai.gov.in/

UIDAI ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும்: 1947

பல்லுயிர்களுக்கு அச்சுறுத்தலாகும் இந்திய உணவுகள்!

Quick Share

இந்திய உணவுகளான இட்லி, தோசை, ராஜ்மா போன்றவை பல்லுயிர் பெருக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இட்லி, ராஜ்மா (kidney beans curry) மற்றும் சென்னா மசாலா ஆகியவை ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் உணவுகளாக இருக்கும். ஆனால் அவை பல்லுயிர் பெருக்கத்திற்கு உணரப்பட்டதை விட குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துகின்றன என்று ஒரு புதிய ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லூயிஸ் ரோமன் கராஸ்கோ தலைமையிலான ஆய்வு, உலகம் முழுவதும் உள்ள 151 பிரபலமான உணவுகளின் விளைவுகளை ஆய்வு செய்தது. இதில் இட்லி 6வது இடத்திலும், தோசை 103வது இடத்திலும் உள்ளது.

விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் விளைநிலங்களில் உள்ள உயிரினங்களின் மீதான பொருட்களின் சாத்தியமான தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு பல்லுயிர் தடயத்தை குழு ஒதுக்கியது.

மாட்டிறைச்சி அதிக சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர, பல பருப்பு வகை உணவுகள் உயர் பல்லுயிர் தடயத்தைக் கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

‘இந்தியாவில் பருப்பு மற்றும் அரிசியின் பெரும் தாக்கம் ஆச்சரியமளிக்கிறது. ஆனால் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது’ என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் இணைப் பேராசிரியர் லூயிஸ் ரோமன் கராஸ்கோ கூறினார்.

சமீப காலங்களில், கால்நடை வளர்ப்பை அடிப்படையாகக் கொண்ட அசைவ உணவின் எதிர்மறையான சுற்றுச்சூழல் விளைவுகளை பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

நெல் மற்றும் பருப்பு வகைகளின் பாரிய பல்லுயிர் தாக்கம் பெரும்பாலும் விவசாயத்திற்காக நிலத்தை மாற்றுவதால் ஏற்படுகிறது.

இந்தியா பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது மற்றும் பல வகையான பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது, இது ஏழு முதல் எட்டு சதவீத உயிரினங்களைக் கொண்டுள்ளது. பல்லுயிர் வளம் மிகுந்த பல பகுதிகளில் பருப்புகளும் அரிசியும் பயிரிடப்படுகின்றன.

French Fries, baguettes, tomato sauce மற்றும் popcorn ஆகியவை குறைந்த பல்லுயிர் கால்தடங்களைக் கொண்ட பிற உணவுகளில் அடங்கும். ஆய்வின் படி, ஆலு பராத்தா 96-வது, தோசை 103-வது, போண்டா (chickpea paste-coated bonda) 109-வது இடத்திலும் உள்ளன.

“இந்தியர்கள் அதிக இறைச்சி நுகர்வு மற்றும் உற்பத்திக்கு மாறினால், பல்லுயிர் மீதான தாக்கம் மேலும் அதிகரிக்கும்” என்று ஆய்வுக் குழு விளக்குகிறது.

மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

Quick Share

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தங்களது வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார தம்பதிகள் வழங்கிய பிரம்மாண்ட பரிசுகள் குறித்து பார்ப்போம். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின்(Mukesh Ambani) இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்(Anant Ambani ), தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும்(Radhika Merchant ) ஜனவரி 2023ல் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் ஜூலை 12ம் திகதி மும்பையில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது, இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பே இவர்களது திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

சமீபத்தில், குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இருக்கும் அம்பானி பண்ணை வீட்டில் ‘லகன் லக்வான்’ என்ற விழா நடைபெற்று முடிந்தது, மேலும் இது தொடர்பான புகைப்படங்களை மணப்பெண் ராதிகா மெர்ச்சன்ட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். இவர்களது விரிவான திருமண கொண்டாட்டங்கள் மார்ச் 1ம் திகதி முதல் விரிவாக தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி தம்பதி தங்கள் வருங்கால மருமகளுக்கு வழங்கிய பரிசு முகேஷ் அம்பானியும், நிதா அம்பானியும்(Nita Ambani) தங்களது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின்(Akash Ambani) மனைவியும், தங்கள் முதல் மருமகளுமான ஷ்லோகா மேத்தாவுக்கு(Shloka Mehta) ரூ.451 கோடி மதிப்புள்ள Mouawad L’Incomparable என்ற உலகின் விலையுயர்ந்த நெக்லஸை பரிசு அளித்து இருந்தார்.

இந்நிலையில் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் மனைவியும், நிதா அம்பானியின் நெருங்கிய வருங்கால மருமகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு இந்தியாவின் பணக்கார தம்பதிகள் வழங்கிய பரிசு குறித்த ஆர்வம் மக்களை சீண்டியுள்ளது.

ராதிகாவை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்கும் விதமாக இரண்டு வெள்ளி துளசி பானைகள், ஒரு வெள்ளி தூபக் குச்சி மற்றும் ஒரு லட்சுமி-கணேஷ் சிலை ஆகியவற்றை உள்ளடக்கிய வெள்ளி பரிசு பெட்டகத்துடன் நிதா அம்பானி வரவேற்று இருந்தார்.

அத்துடன் நிச்சியதார்த்ததின் அன்று ஆனந்த அம்பானி-ராதிகா மெரச்சன்ட் ஜோடிக்கு சுமார் 4.5 கோடி மதிப்பிலான Bentley Continental GTC சொகுசு காரை பரிசாக அம்பானி தம்பதி வழங்கியது.

மேலும் நிதா அம்பானி தன்னுடைய பல கோடி மதிப்பிலான அழகான முத்து மற்றும் வைர ஆபரண நகையை(beautiful pearl and diamond choker) வருங்கால மருமகள் ராதிகா மெரச்சன்ட்டுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த நெக்லஸை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது நிதா அம்பானி அணிந்து வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சாதனைபடைத்த 4 மாத குழந்தை

Quick Share

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை இந்த வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள் என 120 வகையான பொருட்களை அடையாளம் காணும் திறனை பெற்றுள்ளார். இதுகுறித்த வீடியோவை குழந்தையின் தாய் ஹேமா நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். வீடியோவை கண்ட அந்த குழுவினர், குழந்தை உலக சாதனைக்கு உரியவள் என கூறி சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது. இதனால் பிறந்த 4 மாதத்தில் உலக சாதனை என்ற சிறப்பை அந்த குழந்தை பெற்றுள்ளது.

தினமும் மூன்றரை மணிநேரம் மட்டுமே தூங்கும் பிரதமர் மோடி!

Quick Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தினமும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குகிறார் என்பது போன்ற சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி 8 எம்.பிக்களை அழைத்து மதிய உணவுடன் உரையாடல் நடத்தினார். அவர் அழைத்த 8 எம்.பிக்களில் பாஜக மட்டுமல்லாமல் பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

அதன்படி, மோடியுடன் 8 எம்.பிக்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது மோடியிடம் தங்களை ஏன் அழைத்தீர்கள் என்று எம்.பிக்கள் கேள்வி எழுப்பிய போது, “உங்களை நான் தண்டிக்க போகிறேன், என்னுடன் வாருங்கள்” என்று விளையாட்டாக பதில் அளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் சந்திப்பிற்கு பிறகு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “நாங்கள் மோடியுடன் மதிய உணவு சாப்பிட்டோம். எங்களுக்கு அரிசி, கிச்சடி, பனீர், பருப்பு, ராகி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் மோடியே அதற்கான பில்லை கொடுத்துவிட்டார்.

பிரதமர் மோடி எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் நாடாளுமன்ற கேண்டீனில் எங்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அப்போது அவருடைய தினசரி பழக்கவழக்கங்கள் பற்றியும் பேசினார்.

பிரதமர் மோடி எங்களுடன் 45 நிமிடம் பேசியது எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. அவர் தினமும் வெறும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குவதாகவும், மாலை 6 மணிக்கு மேல் எந்தவொரு உணவையும் எடுத்து கொள்வது இல்லை என்றும் எங்களிடம் கூறினார்” என்றார்.

அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோயில்!இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க...

Quick Share

அபுதாபியில் முதல் இந்து கோயிலை வரும் 14 -ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அபுதாபியில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சுமார் 900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பின் பிரமாண்ட இந்து கோயில் வரும் 14 -ம் திகதி திறக்கப்படவுள்ளது.

இந்த கோயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பின்னர், சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

இந்த கோயிலானது 32.92 மீட்டர் உயரம், 79.86 மீட்டர் நீளம் மற்றும் 54.86 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது .

Dome of Harmony’ என்பது பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகிய பஞ்ச பூதங்களின் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 1500 கைவினை கலைஞர்கள் இந்த கோவிலின் சிலைகளை செதுக்கியுள்ளனர்.

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான கட்டிடத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்.

உயிருக்கு பேராபத்து: கோபி மஞ்சூரியனுக்கு தடை!

Quick Share

சைவ பிரியர்களின் விருப்ப உணவான கோபி மஞ்சூரியன் கோவாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப விருப்ப உணவுகள் இருக்கும். ஒரு மாநிலத்தில் கிடைக்கும் உணவுகள் வேறு மாநிலத்தில் கிடைக்காது.

அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் எந்த அளவு பிடிக்குமோ, சைவ பிரியர்களுக்கு அதே அளவு கோபி மஞ்சூரியன் உணவு பிடிக்கும். காலி பிளவரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கோபி மஞ்சூரியன் சைவ பிரியர்களுக்கு விருப்பமான உணவாகும்.

கோபி மஞ்சூரியன் உணவின் சுகாதாரம் தொடர்பாக பல ஆண்டுகளாகவே சர்ச்சை நிலவி வருகிறது. இதனால், அந்த உணவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோபி மஞ்சூரியன் உணவில் சுவைக்காவும், உணவு நிற ஈர்ப்புக்காகவும் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் மற்றும் அதன் சுகாதார பிரச்னைகள் காரணாமாக கோவாவில் உள்ள மாபுசா நகரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிப்பது முதன்முறையல்ல. கடந்த 2022 -ம் ஆண்டு மர்மகோவா நகராட்சி நிர்வாகம் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website