இந்தியா

‘ஹிஜாப்’ அடக்கத்தின் சின்னம், முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது ஒரு பிரச்சனை...

Quick Share

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் தலையிடியாக இருந்தது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதை ஒரு பெரும் பிரச்சினையாக சித்தரிக்க அவர்கள் முற்பட்டனர். அவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களின் மனதில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.தற்போது அவர்கள் ஓரளவு அடங்கிப் போனாலும் அவர்கள் முன்னெடுத்த பிரச்சினைகளை இன்று நம்மவர்கள் தமக்குள்ளேயே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் முகத்தை மூடுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையும் தவறான அணுகுமுறைகளுமாகும். பெண்கள் முகத்தை மூடுவது தொடர்பில் பின்வரும் நிலைப்பாடுகள் சமூகத்தில் நிலவி வருகின்றன.

ஏன் .? எதற்கு ஹிஜாப் .? ஹிஜாப் என்பது பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு வெளியே ஆண்களின் முன்னிலையில் அணியும் ஒரு முக்காடு ஆகும். ஹிஜாப் பொது வாழ்வில் உள்ள ஆண்கள் மத்தியில் பெண்களை பிரித்து பாதுகாக்கிறது. அது ஒரு மனோதத்துவ பரிமாணத்தை அர்த்தப்படுத்துகிறது. ஹிஜாப் என்ற அரபு வார்த்தைக்கு திரை, தடுப்பு, மதில் என்று பல பொருட்கள் உண்டு.
பெரும்பாலும் ஹிஜாப் அடக்கத்தின் சின்னம் ஆகும். இஸ்லாம் மற்றும் முஸ்லிம் உலக கலைக்களஞ்சியம் கூற்றின் படி ஹிஜாப் என்பது ஒரு தடுப்பு அல்லது கட்டுப்பாடு. இஸ்லாத்தில் ஹிஜாப் இருபாலருக்கும் உரியதாகும். ஆடையில் மட்டுமல்லாமல், பார்வை, செயல்கள், எண்ணங்களுக்கும் கட்டுப்பாடு ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது. சில இஸ்லாமிய சட்ட அமைப்புகள் வரையரை படி முகம், முழங்கைகள், மற்றும் முழங்கால் தவிர அனைத்தையும் உள்ளடக்கும் ஆடை ஹிஜாப் ஆகும்

“நேரு குடும்பம் மீது அவதூறு வீடியோ” – கூகுள் தான் நான் இல்லை ட்விட்டர...

Quick Share

நேரு குடும்பம் மீது அவதூறு வீடியோ போட்டதாக பாலிவுட் நடிகை பாயல் ரோகட்கியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத்தை சேர்ந்தவரான பாலிவுட் நடிகை பாயல் ரோகாட்கி ஜவஹர்லால் நேரு குடும்பத்தின் உறுப்பினர்களான மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, கமலா நேரு, இந்திராகாந்தி, பெரோஜ் போன்றவர்களை பற்றி அவதூறாக வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறி இவர் மீது, ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் பொது செயலாளர் சர்மேஷ் சர்மா, புன்டி பகுதி போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து இந்த புகாரின் பேரில் பாலிவுட் நடிகையான பாயலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் நடிகை பாயல் தான் கைது செய்யப்பட்டதாகவும், தன்னுடைய பேச்சு சுதந்திரம் நகைச்சுவையாக்கப்பட்டுள்ளதகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கூகுளில் இருந்து தான் அந்த தகவலை பெற்றேன் என தெரிவித்துள்ளார்.

சாய்பாபா பக்தர்கள் 88 பேர் மாயம் ! உடல் உறுப்பிற்காக கடத்தலா? அதிர்ச்சி தகவலால் விசாரணை...

Quick Share

சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்ற பக்தர்களில் கடந்த 1 ஆண்டில் 88 பேருக்கும் அதிகமானோர் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த பம்பாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரிசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கும் சீரடிக்கு பெயர்போன சாய்பாபா கோவில் மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் உள்பட பல வெளிநாடுகளிலிருந்தும், உள்ளூர்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் வருகைதருகின்றனர். சமீபத்தில் சாய்பாபாவின் தரிசனத்திற்காக இந்தூரில் இருந்து மனோஜ் குமார் என்பவர் சீரடிக்கு தனது மனைவியுடன் வந்துள்ளார். தரிசனம் செய்து கொண்டிஇருக்கும் வேளையில் தனது மனைவி காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் தனது மனைவி மாயமானது தொடர்பாக பாம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் டி.வி.நளவாடே, எஸ்.எம்.கவான்ஹே ஆகியோர் விசாரித்தனர். இந்த விசாரணையில் சீரடிக்கு தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடந்த ஓராண்டில் 88 பேருக்கும் அதிகமானோர் மாயமானது தெரியவந்தது. இவர்கள் உடல் உறுப்புகளுக்காக கடத்த பட்டார்களா என்பது குறித்து விசாரிக்க காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டனர். இந்த விசாரணையில் மாயமானவர்கள் ஒரு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர், மீதம் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகளாக இருப்பதால், இதற்கு பின் ஒரு கடத்தல் கும்பல் இருக்கும் என்ற சந்தேகத்தில், வழக்கை விசாரிக்க சிறப்பு குழு ஒன்றை அமைத்து விசாரிக்கவேண்டுமென காவல்துறைக்கு மீண்டும் பம்பாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அன்று விசாரணை நடத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

“2007-ல் மூடிவைத்த அரசியல் மர்மம்” 2018ல் இளம்பெண் உடலை தோண்டி எடுத்து விசா...

Quick Share

ஆந்திராவில் பாலியல் வன்கொடுமையால் இறந்த இளம்பெண்ணின் சடலத்தை 12 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதபரிசோதனை செய்யும் சிபிஐ, அரசியல் வாதிகளின் தலையீட்டால் மூடிய சம்பவம் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது.

ஆந்திராவில் தெனாலி பகுதியைசேர்ந்த ஆயிஷா மீரா, விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். தீடிரென ஒரு நாள் அவர் தனது விடுதி கழிப்பறையில், உடல் முழுவதும் காயங்களுடன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்றது இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைப்பின் போலீசார் நடத்திய விசாரணையில் சத்யம் பாபு என்பவர், அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா மகிளா நீதிமன்றம் அந்த நபருக்கு 2010ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் அந்த நபரை 2017ல் அம்மாநில உயர்நீதிமன்றம் விடுவித்தது.

இந்த வழக்கில் அரசியல் வாதிகளின் தலையீடு இருப்பதாக எழுந்த புகாரால் இந்த வழக்கை 2018ம் ஆண்டு சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிஐ, தற்போது இறந்த அந்த இளம்பெண்ணின் பெற்றோரின் சம்மதத்தோடும், வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உதவியுடனும், 12 ஆண்டுகளுக்கு பின்னர் அவரின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயிர் பெற்றுள்ள இந்த வழக்கு தீவிரமடைந்துள்ளதால் இதில் பல முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என நம்பப்படுகிறது.

வாகன ஓட்டிகளே !! FASTAG இன்று முதல் கட்டாயம்: ஸ்டிக்கர் இல்லாதவர்களுக்கு இது தான் தண்டன...

Quick Share

இன்று முதல் நாடு முழுவதும் உள்ள சுங்க சேவைகளில் FASTAG எனப்படும் மின்னணு வழி பணம் செலுத்தும் முறை அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுங்க சாவடிகளில் வாகன நெரிசலை தவிக்கவும், போக்குவரத்து விரைவாக மாற்றவும், FASTAG முறையில் சுங்கசாவடி கட்டணம் செலுத்தும் திட்டம் அனைத்து சுங்க சாவடிகளில் டிசம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தது ஆனால் வாகன ஓட்டிகள் இந்த திட்டத்திற்கு மாறுவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி FASTAG கார்டை ஸ்டிக்கர் போல் வாகனங்களின் முன்புற கண்ணாடியில் ஓட்டவேண்டும். FASTAG முறையில் சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கம்பிக்கு மேல் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. வழித்தடத்தில் வாகனம் செல்லும் போது தடுப்புக்கம்பிக்கு மேல் உள்ள ஸ்கேனர், வாகனத்தில் உள்ள ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த சில வினாடிகளிலேயே சுங்க கட்டணத்தை ஆன்லைன் மூலம் எடுத்துக்கொள்ளும்.

இந்த ஸ்டிக்கர் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு இருமடங்காக கட்டணம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த FASTAG முறையை சில வங்கிகளில், வாகனத்தின் பதிவு சான்றிதழ், புகைப்படம் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து ரூ.100 ,ரூ.500 (வங்கிகளை பொறுத்து ) கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து ஸ்டிக்கரை பெற்று, google pay மூலம் FASTAG செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .அதில் 100 ரூபாய் முதல் சுமார் 1லட்சம் ரூபர் வரை ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம். இதன் மூலம் சுங்க சாவடிக்கட்டணம் எடுத்துகொள்ளபப்ட்டும். வசூலிக்கப்பட்ட கட்டணம் sms மூலம் தெரிவிக்கப்படும். இதனால் கட்டண தொகையை கையில் எடுத்து கொண்டு செல்லவேண்டிய அவசியம் இல்லை.

“பழைய ATM கார்டு செல்லாது” புதிய கார்டை டிச.31ம் தேதிக்குள் வாங்க வேண்டும்-...

Quick Share

பழைய ATM கார்டுகள் டிசம்பர் 31ம் தேதிக்கு மேல் செல்லாது என SBI வங்கி அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நாடு உழுவதும் நமது ஷாப்பிங் வேலையை சுலபமாக்குவது ATM கார்டுகள். தற்போது எங்குவேண்டுமானாம் ATM கார்டை பயன்படுத்தி பணம் எடுப்பது சுலபமாகிவிட்டது. எனினும் இந்த ATM கார்டை நாம் உபயோகிக்கும் போது மற்றொரு நபர்கள் அதன் பின்நம்பர்கள், கார்டின் விவரங்களை மறைமுகமாக அறிந்துகொண்டு அதன் மூலம் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. மேலும் நாம் பயன்படுத்தும் தற்போதைய ஏ.டி.எம் கார்டில் மேக்னட்டிக் ஸ்டிரிப் எனப்படும் ஸ்டிரிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை போலவே போலியான ஸ்டிரிப்ட்களை மோசடியில் ஈடுபடுவோர் உருவாக்கி கொள்ளையில் ஈடுபாடுகின்றனர். இது போன்ற ATM திருட்டை ஒழிக்கவும், மேலும் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் புதிய ஏ.டி.எம் கார்டுகளை அறிமுக படுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

புதிதாக அறிமுக படுத்தப்படும் ஏ.டி.எம் கார்டில் EMV எனப்படும் சிப் பொறுத்தப்படவுள்ளதாகவும், இந்த சிப்-களை ஹேக் செய்வது மிகவும் கடினமாகும். எனவே எல்லா வங்கிகளிலும் EMV முறைக்கு மாற்றும் படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் தற்போது ATM கார்டுகளை புதுப்பிக்கும் போதும், புதிதாக கேட்டவர்களுக்கு மட்டும் புதிய ATM கார்டை கொடுத்துவருகிறது. இதனை அடுத்து, பழைய மேக்னட்டிக் ஸ்டிரிப் பொருத்திய ATM கார்டுகள் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என நாட்டின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான SBI அதிரடியாக அறிவித்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் 31ம் தேதிக்குள் வங்கி கிளையை அணுகியோ, ஆன்லைனில் விண்ணப்பித்தோ புதிய ATM கார்டை வாங்கிக்கொள்ளும்படி SBI வங்கி அறிவித்துள்ளது. இதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமெனவும் அறிவித்துள்ளது.

“தடுக்கி விழுந்த மோடி” தாங்கிப்பிடித்த பாதுகாவலர்கள், வைரலாகும் மோடியின் வீ...

Quick Share

பிரதமர் நரேந்திர மோடி கங்கா நதியை பார்க்க சென்ற போது படியில் தடுக்கி விழுந்தார், மோடி விழுந்ததை கண்ட பாதுகாவலர்கள் உடனே அருகில் வந்து உதவி செய்தனர். அவர் விழுந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேசத்தில் கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள திட்டமான “நமாமி கங்கா” திட்டத்தின் கூட்டம் கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. முதல் கூட்டமான இதில் உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரா சிங், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங், பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நமாமி திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின் பிரதமர் உள்பட அனைவரும் படகு சவாரி மேற்கொண்டனர்.

படகு சவாரி முடிந்ததும், படியில் நடந்து சென்ற மோடி தீடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார். இதனை கண்ட பாதுகாப்பு வீரர்கள் சுதாரித்துக்கொண்டு பிரதமரை தாங்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மோடி பத்திரமாக கார் மூலம் அங்கிருந்து கிளம்பிவிட்டார். தடுக்கி விழுந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ICU-வில் பொருளாதாரம் , கொலை செய்யப்பட்ட ஜனநாயகம்,”தேசத்தை காப்போம்” -ராகுலி...

Quick Share

பொருளாதாரம் தீவிர சிகிக்சை பிரிவில் உள்ளது, ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதென பேரணிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ராகுல் காந்தி பாஜகவினரை கடுமையாக சாடி வருகிறார்.

நாட்டின் பொருளாதார நிலை, குடியுரிமை சட்ட திருத்த மசோதா, விவசாயிகளின் துயரநிலை, மக்களின் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு விஷங்கள் தொடர்பாக “தேசத்தை காப்போம்” என்ற தலைப்பில் பேரணி நடத்த காங்கிரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற வரும் “தேசத்தை காப்போம்” எனும் பேரணியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, உத்திரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு செல்வதற்கு முன்னதாகவே ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பேரணியை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக போடப்பட்ட ட்விட்-ல், இந்திய பொருளாதாரம் தீவிர சிகிக்சை பிரிவில் உள்ளதாகவும், புதிய தேசிய குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் ஜனநாயகம் படு கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

பேரணி இன்று தொடங்கிய நிலையில் பேரணியில் பேசிய அவர், நேற்று ராகுல் காந்தி, “ரேப் இன் இந்தியா “என கூறியதற்க்கு பாஜக மன்னிப்பு கேட்க சொன்ன விவகாரம் தொடர்பாக ராகுல் தனது கருத்தை வெளியிட்டார். அதில் நாட்டில் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளநிலையில் நான் உண்மையை கூறியதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். “என் பெயர் ராகுல் சவார்கர் இல்லை, நான் ராகுல் காந்தி, என்னால் ஒரு போதும் மன்னிப்பு கேட்க முடியாது” என கூறினார். மேலும் பேசிய அவர், நாட்டின் பொருளாதாரஉற்பத்தி 4% உள்ளது, அதுவும் ஜிபிடிஐ கண்டறிவது குறித்து கணக்கிடும் முறையை பயன்படுத்தி அறிந்தால் அது வெறும் 2.5% தான் இருக்கும்.

குடியுரிமை சட்டத்தால் காஷ்மீர், வடகிழக்கு பகுதியில் மத பிரிவினையை பாஜக உருவாக்க முயக்கிறது. மோடிஜி நீங்கள் வட மாநிலங்களுக்கு சென்று பாருங்கள் எப்படி பற்றி எரிய வைத்துளீர்கள் என்று என விமர்சித்தார்.

“ராமர் கோவிலுக்காக ரூ.11 நிதி ஒவ்வொரு குடும்பமும் தர வேண்டும்” உ.பி முதல்வர...

Quick Share

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓவ்வொரு குடும்பமும் ஒரு செங்கல்லும், ரூ.11 நிதியையும் அளிக்கவேண்டுமென உத்திரபிரதேச முதல்வர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 81 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத்தேர்தலின் 1, 2 மற்றும் 3ம் கட்ட தேர்தல்கள் முடிவடைந்தன. 4ம் கட்ட தேர்தல் டிசம்பர் 16ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் டிசம்பர் 20ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதியான பகோதர் பகுதியில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தை துவங்கினார். பரப்புரையில் பேசிய அவர், குரியரிமை சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன, அவர்கள் பாகிஸ்தான் போன்று பேசுகின்றனர் என்றார்.

மேலும் பேசிய அவர் 500 ஆண்டுகளாக நிலவிவந்த அயோத்தி பிரச்சனைக்கு பிரதமர் மோடி தனது கடும் முயற்சியால் வெற்றி கொண்டுள்ளார், என மோடியை புகழ்ந்தார். பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி என கூறிய யோகி ஆதித்யாநாத், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ராமர் கோவில் கட்டுவதற்க்காக ரூ.11 நிதியையும், ஒரு செங்கல்லையும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். மேலும் ராமர் ராஜ்ஜியம் எந்தவித பாகுபாடும் இல்லாதது, சமூகத்தின் பங்களிப்பிலேயே ராமர் ராஜ்யம் இயங்குகிறது என தெரிவித்தார்.

கூட்டணி தர்மம்னா அப்படித்தான் மத்தபடி நாங்க ஸ்டெடியா இருக்கோம் ராமதாஸ் திட்டவட்டம் !!

Quick Share

கூட்டணி தர்மத்திற்காகவே குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவர்களிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமானதால் வட மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாட்டிலும் மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்த பாமக நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர்கள், இலங்கை தமிழர்களை அங்கீகரிக்காத இந்த மசோதாவுக்கு பாமக ஆதரவு அளித்துள்ளதை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

NEW DELHI, OCT 10 (UNI):-PMK Founder President S Ramadoss and his son and Rajya Sabha Member Anbumani Ramadoss calling on Prime Minister Narendra Modi, in New Delhi on Thursday. UNI PHOTO CH 2 U

அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி கட்சி என்றால் ஆதரித்து தான் ஆகவேண்டும். கூட்டணி தர்மத்திற்காக தான் ஆதரித்தேன். பாமக நிலைப்பாட்டில் மற்றபடி மாற்றங்கள் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதில் நங்கள் உறுதியாக உள்ளோம். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் நாங்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இருப்பதாக அர்த்தமில்லை என கூறினார்.

சென்னை விமான நிலையத்தின் பெயரை எந்த விமான நிறுவனங்களும் ஏன் குறிப்பிடவில்லை ? -கோபத்தி...

Quick Share

நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில், இந்திய விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிடும் போது, வெறும் “சென்னை விமான நிலையங்கள்” என்று மட்டும் குறிப்பிட்டதால், கோபமடைந்த திமுக எம்.பி தயாநிதிமாறன், சென்னையில் உள்ள விமான நிலையங்களின் பெயர்களை இந்திய விமான நிறுவனங்கள் குறிப்பிடத்தது ஏன் என கேள்வியை எழுப்பினார்.

இன்று சென்னையில் உள்ள காமராஜர் உள்நாட்டு விமான நிலையம், அண்ணா சர்வதேச விமான நிலையம் ஆகிய விமான நிலையங்களின் பெயர்களை இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ், ஜெட், கோ ஏர், ஏர் ஆசியா மற்றும் ஏர் விஸ்தாரா போன்ற நிறுவனங்கள் குறிப்பிடாமல் வெறும் சென்னை விமான நிலையங்கள் என்று மட்டும் ஏன் கூறுகிறீர்கள். அப்படி குறிப்பிடுவதற்கு என்ன காரணம் என கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினார்.

வங்கிகள் சவால்களை சந்திக்க தயாராக வேண்டும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

Quick Share

எதிர்கால சவால்களை சந்திக்க அனைத்து வங்கிகளும் தயாராக இருக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார் .

ஒடிஸா மாநில தலைநகரான புவனேஸ்வரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி தாஸ் தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார் . அதில் பேசிய அவர் , ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதாக ஊடங்களில் , “நாடுமுழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்” என பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது. அதுபோல உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பிக்கவில்லை.

இருந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இனிவரும் அனைத்து புதிய சவால்களையும் சந்திக்க வங்கிகள் தயாராக இருக்கவேண்டுமென ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார் . மேலும் இந்த கூட்டத்தில் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் அம்மாநிலத்தில் உள்ள வங்கிகள் தொடர்பான பிரச்னைகளை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார் .




You cannot copy content of this Website