இந்தியா

“புதிய பாஸ்போர்ட்டில் பாஜக சின்னம்” வெளியுறவு துறை அமைச்சகத்தின் “பலே...

Quick Share

புதியதாக கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் போட்டிருப்பது பாதுகாப்பு நோக்கத்தில் தான் என வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் அதிகாரிகளால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட புதிய பாஸ்போர்ட்களில் தாமரை சின்னத்தை பதிவிட்டு வழங்கியுள்ளதாக தகவல் வெளியானதால், இது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மக்களவையில்பேசிய கேரள மாநில காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே ராகவன் என்பவர், அரசியல் லாபங்களுக்காக புதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டில் பாஜக கட்சியின் சின்னமான தாமரை அச்சடிக்கப்பட்டுள்ளதா என விமர்சித்தார்.

இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார், பாதுகாப்பு தீவிரப்படுத்தவும், போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காணவும், தற்போது வழங்கப்படும் புதிய பாஸ்போர்ட்களில் நமது நாட்டின் தேசிய சின்னமான தாமரை அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல பல பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது போன்று மற்ற தேசிய சின்னங்களும் சுழற்சி முறையில் அச்சிடடபடும் என தெரிவித்தார்.

“மோடியின் பேச்சு, காங்கிரசுக்கு கிண்டலாக போச்சு” – நீங்க மறந்துட்டீங்...

Quick Share

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலை பட வேண்டாமென பிரதமர் மோடி பதிவிட்ட ட்விட்டருக்கு, கிண்டலாக பதில் ட்வீட் போட்டது காங்கிரஸ்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வட மாநிலமான அசாமில் வன்முறைகள் வெடித்தன. நேற்று முதல் மக்கள் கடைகளை அடைத்தும், டயர், மரக்கட்டை போன்றவற்றை சாலைகளில் எரித்தும் போராட்டத்தில் குதித்தனர். தடுக்க சென்ற போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் கிளம்பியது. இதனால் 48 மணிநேரத்திற்கு அசாமில் இணைய சேவை முழுவதுமாக முடங்கியது. ரயில் சேவை, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இன்று அசாம் முதல்வர், பாஜக கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் வீட்டிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், அசாம் மாநில சகோதர, சகோதரிகளே குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து ஏதும் கவலை பட வேண்டாம். அசாமியர்களின் உரிமைகளையோ, அவர்களது தனிப்பட்ட அடையாளத்தையே அழகிய கலாசாரத்தையோ யாரும் பறித்து விட முடியாது என உறுதியளிப்பதாகவும், அசாமிய மக்களின் அரசியல், மொழி, பண்பாடு மற்றும் நிலம் சார்ந்த உரிமைகளை அரசியலமைப்பு சட்ட ரீதியாக பாதுகாக்கப்படும் அதற்கு நானும், மத்திய அரசும் உறுதியளிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டரை சுட்டிக்காட்டிய காங்கிரஸ், பதிலுக்கு பிரதமர் மோடியை கிண்டல் அடித்து பதிவிட்டுள்ளது. இதில், அசாமில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள்… நீங்கள் உறுதியளித்துள்ள இந்த செய்தியை பார்க்க முடியாது. மோடி அவர்களே.., அவர்களின் இணைய சேவை முடங்கி இருப்பதை ஒரு வேலை நீங்கள் மறந்திருக்கலாம் என கலாய்த்துள்ளனர்.

தோனி தனது மனைவி சாக்க்ஷியுடன் ராஞ்சியில் வாக்களித்தார் – ஜார்க்கண்ட் தேர்தல் களம்...

Quick Share

தோனி தனது மனைவி சாக்க்ஷியுடன் ராஞ்சியில் வாக்களித்தார்! ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமனற தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற்றது.

நக்சல்கள் தாக்குதல் அதிகம் உள்ள காரணத்தால் பாதுகாப்பு கருதி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் 13 தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட சட்டமன்ற 20 தொகுதிகளுக்கு தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அறிவிக்கப்பட்டபடி மூன்றாம் கட்ட சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தலைநகர் ராஞ்சி, ஹாடியா, ராம்கார்ஹ், கான்கே ஆகிய தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் நக்சல்களால் பாதிக்கப்பட்ட மற்ற தொகுதிகளில் பாதுகாப்புக்கருதி மாலை 3 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மாநில அமைச்சர்கள் சிபி சிங், நீரா யாதவ், ஜார்கண்ட் விகாஸ் மோச்சா தலைவர் பாபு லால் மராண்டி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் போட்டியிடுகிறார்கள். பிரதமர் மோடி பாஜகவுக்கு ஆதரவாகவும், ராகுல் காந்தி காங்கிரசுக்கு ஆதரவாகவும் தீவிர பிரச்சாரத்தில் ஒருபக்கம் வருகிறார்கள். மேலும் நக்சல் தாக்குதல் அதிகம் உள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவப்படை, மாநில போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். 5 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

சர்வரை முடக்கிய நித்தி ஆதரவாளர்கள் 12 லட்சம் பேர் கைலாசாவிற்கு ரெடி !! “நான் பி...

Quick Share

நித்தியோட சொந்தநாடு உருவாக்குற செய்தி வந்தாலும் வந்துச்சி “எஸ்க்குயூஷ் மீ கைலாசவுக்கு எப்படிங்க போகணும்” அப்டின்னு நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிடுகிறார். திரும்பிய இடமெல்லாம் நித்தியின் செய்தி தான் இந்திய ஊடகங்களை கலங்களிடித்து கொண்டும், போலீசாருக்கு தண்ணி காட்டி கொண்டும் ரிலாக்ஸ்-ஆக யூடியூபில் தனது விடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். கைலாச என்ற நாட்டை உருவாக்க போவதாகவும், அதில் குடிஉரிமை வேண்டுமென்றால் விண்ணப்பிக்கலாம் என்றும் சர்சைகளை கிளப்பி வருகிறார். அவரின் கைலாச நாட்டிற்கு போக, சர்வரே கதிகலங்கும் அளவிற்கு இதுவரை 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தால் என்ன வென்று தனது ஆதரவாளர்காக கூல் ஆக சத்சங்கம் நிகழ்ச்சியில், வெள்ளி இருக்கை,நாக உருவ சிலை, சமீபத்தில் புலித்தோல் சிம்மாசனம் என தனது தோரணையிலும் மாஸ் காட்டும் நித்தி பேச்சிலும் குறைவைக்கவில்லை. தான் வந்ததால் தான் கைலாசாவில் பூப்பூக்குது, காய் காய்க்குது என கதை விட்டு கொண்டு இருக்கிறார். மேலும் கைலாசாவிற்கு பெருமாதரவு கிடைத்துள்ளதாகவும், பலரும் நிலங்கள் தர தயாராக உள்ளதாவும் தெரிவித்த அவர் விலங்குகளுக்கும் குடியுரிமை அளிக்கிறேன் என பேசியுள்ளார். நித்தியானந்தாவின் சீடரான லெனின் கருப்பையா என்பவரின் புகாரின் பேரில் நித்தியானந்தாவை 12ம் தேதிக்குள் பிடிக்கவேண்டும் என கர்நாடக காவல் துறைக்கு அம்மாநில நீதிமன்றம் கேடு விதித்திருக்கிறது, அவரை ஒருபுறம் போஸார் தேடி கொண்டிருக்க அவர் யூடியூபில் கலக்கி கொண்டு வருகிறார்.

சமீபத்தில் தீப விழாவிற்கு திருவண்ணாமலைக்கு வருவாரா என திர்பார்த்த நிலையில் தன் ஆசிரமத்திலிருந்தே ஆன்லைனில் சத்சங்கம் நிகழ்வில் பேசிய அவர், இந்துமதம் தொடர்பாகவும், சுய சந்தேகத்தால் ஏற்படும் விளைவுகளையும் விளக்கினார். தான் பிறந்த காரணத்தையும் அவர் பாணியில், பூமியில் தான் இந்து மதத்தை போக்க செய்வதர்காகவே அவதரித்ததாக கூறினார். ஒவ்வொரு முறையும் பழி சுமத்துகிறார்கள் நானும் நல்லவன் என்று நிரூபித்துக்காட்டுகிறேன், என அசத்தலாக கூறும் நித்தி இன்னும் என்னவெல்லாம் சொல்ல போகிறாரோ பார்க்கலாம்.

“முதல்வர் இல்லத்தில் தாக்குதல்” போராட்டக்களமாக மாறிய அசாம் முடிவுக்கு வராத ...

Quick Share

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம், அசாம் மாநில முதல்வரில் இல்லம் மீது கற்கள் வீசி தாக்குதல்.

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்ற படத்தையடுத்து, எதிர்ப்புகள் பெருகியுள்ளன குறிப்பாக வட மாநிலங்களில் எதிர்ப்பு போராட்டமாக உருவெடுத்து தீவிரமடைந்துள்ளது. நேற்று மக்கள் கையில் தீப்பந்தத்தோடு பேரணியாக போராடினர். எந்த அரசியல் கட்சிகளும், தனி அமைப்புகளும் போராட்டத்தை துவங்கவில்லை என்றாலும், தன்னிச்சையாகவே போராட்டங்க வெடித்து வருகின்றன. கடைகளுக்கு தீயிட்டும், வழிகளில் டயர்களை போட்டு எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அசாம் மாநிலத்தில் இன்றும் திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. போராட்டங்களை தடுக்க போன போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் முற்றுகிறதே தவிர போராட்டம் ஓயவில்லை. எனவே அசாம் மாநில அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ராணுவத்திடம் கேட்டுள்ளது. அதனால் ராணுவ கமாண்டர்களும் நிலைமையை தீவிரமாக கண்கணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் ராணுவ வீரர்கள் களம் இறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தீடிரென போராட்டக்காரர்கள் நேற்று இரவு, லக்கி நகர் பகுதியில் உள்ள அசாம் மாநில முதல்வர் இல்லத்தின் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும்பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கல் வீச்சில் முதல்வர் வீட்டின் ஜன்னல் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதேபோல பாஜக எம்.எல்.ஏ பிரசாந்த் புகான் மற்றும் கட்சியின் தலைவர் சுபாஷ் தத்தா ஆகியோரின் இல்லங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதனால் வட மாநிலமே பதற்றமாக காணப்படுகிறது.

குடியுரிமை மசோதா வேண்டாமா ? “ஒரே இரவில் நடந்தது என்ன” நேற்று ஓகே, இன்று ஓகே...

Quick Share

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆரம்பத்தில் மக்களவையில் ஆதரவு அளித்த சிவசேனா கட்சி, நேற்று மாநிலங்களவையில்  தனது எதிர்ப்பை தெரிவித்து ராஜ்ஜியசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

குடியுரிமை சட்ட மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் இன்று கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா  இன்று  சபாவில் 125 எம்.பி.க்களின்  ஆதரவுடனும், 105 எம்.பிக்களின் எதிர்ப்புடனும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் இன்று ராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படும் போது மக்களவையில் ஆதரவு தெரிவித்த சிவா சேனா கட்சி மாநிலங்களவையில் தனது எதிர்ப்பை தெரிவித்தது. இதனால் வாதத்தில் ஈடுபட்ட அமித்ஷா, சிவாசேனா கட்சி நேற்று வரை இந்த மசோதாவை ஆதரித்து விட்டு இன்று எதிர்ப்பு தெரிவிக்கின்றதே ஒரே இரவில் அப்படி என்ன நடந்தது ? மகாராஷ்டிரா மக்களுக்கு தங்களது நிலைப்பாட்டை சரியாக தெளிவு படுத்துங்கள் ? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சிவசேனா கட்சி எம்.பி.சஞ்சய் ராவத், இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்றும், ஆதரவு அளிப்பவர்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்றும் நேற்று வரை கேள்விப்பட்டேன் என்று கூறினார். மேலும் நாங்கள் எங்கள் நாட்டின் மீது வைத்திருக்கும்  நாட்டுப்பற்று குறித்தும், எங்களின் ஹிந்துத்வா கொள்கை குறித்தும் நீங்கள் எங்களுக்கு சான்றளிக்க வேண்டியதில்லை எனவும் கூறினார். இதன் காரணமாக மாநிலங்களவையில் மசோதாவிற்கான ஆதரவு வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னரே சிவசேனா கட்சியில் 3 எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

சிவசேனா- வின் வெளிநடப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத் கூறியதாவது, நாங்கள் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்கவேண்டாம் என சொல்லவில்லை, ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக சதியோ, குற்றச்சாட்டுகளோ எழுந்தால் அவ்வர்களுக்கு 25 ஆண்டுகள் ஓட்டுரிமையளிக்க கூடாது என தெரிவித்தார் மேலும், மசோதா குறித்து கேட்ட எந்த கேள்விகளுக்கும், சரியான பதில் அளிக்காத போது அதனை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ சரியாக இருக்காது. அதேபோல் இந்திய மக்கள் தொகையையும், இயற்க்கை வளங்களையும் வைத்து பார்கையில் நாம் எவ்வளவோ மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். இலங்கையில் வாழும் தமிழர் ஹிந்துக்களை குறித்து இதில் தெளிவுபடுத்தவில்லை. இதுபோன்ற சரியான பல கேள்விகளுக்கு விடையில்லாத மசோதாவாக உள்ளது. இந்த எதிர்ப்பு முடிவு நாங்கள் தன்னிச்சையாக, எடுத்த முடிவு இதனால் மஹாராஷ்டிராவில் எங்களின் கூட்டணி கட்சிக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. நாங்கள் சுதந்திரமான கட்சி என பதிலளித்தார்.

குடியுரிமை மசோதா பார்லிமென்டிற்கு இழைக்கப்பட்ட அவமானம் !! ப சிதம்பரம் ஆவேசம் !!

Quick Share

மத ரிதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என இந்த மசோதாவில் அறிவிக்கப்பட்டது ஏன் ?

நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவருகின்றன. இன்று குடியுரிமை மசோதாவில் இலங்கை மற்றும் பூட்டானை சேர்க்காதது ஏன் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை மசோதா மீதான விவவகரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்த குடியுரிமை மசோதா பார்லிமென்டிற்கு இழைக்கப்பட்ட அவமானம். மேலும் குடியுரிமை மசோதாவிற்குஎதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்போது, இது சட்ட விரோதம் என அறிவிக்கப்படும்.

இந்த மசோதாவை குறித்து அட்டர்னி ஜெனரல் கருத்தை கேடீர்களா ? அவரை இங்கு அழைத்து வந்து பேச விடுவதற்கு மத்திய அரசிற்கு தைரியம் உள்ளதா ? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இந்த அரசின் குடியுரிமை மசோதா ஹிந்துத்வவை முன்னிறுத்துவதாக உள்ளதாக இருக்கிறது. மேலும் நீதிமன்றங்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என ஆணித்தனமாக கூறினார்.

வடமாநிலத்தில் வெடிக்கும் வன்முறை.. குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு !! ரயில், இணை...

Quick Share

வடமாநிலங்களில் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன வன்முறை வெடித்துள்ளது.

குடியுரிமை சட்ட மசோதாவுக்கு நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த மசோதாவில் வடமாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பாரம்பரிய நிலம், அகதிகளுக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது என்பது வடகிழக்கு மக்களின் அச்சம். தங்கள் இனத்தின் அடையாளத்தை பாதுகாப்பதில் தொடர்ந்து போராடுகிறவர்கள் வடகிழக்கு இன மக்கள். இதனால்தான் இம்மாநிலங்களில் இந்திய குடிமக்களாக இருந்தாலும் சிறப்பு அனுமதியோடு தான் உள்ளே நுழைய முடிவும் என்ற நடைமுறை உள்ளது. எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வரப்போகும் செய்தியால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதனால் அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. நேற்று 11 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கையில் தீப்பந்தங்களோடு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் ,வர்த்தக நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது .இதனிடையே போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளன. குறிப்பாக திரிபுராவில் மனுகாட் பகுதியில் போராட்டக்காரர்கள் திறந்திருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறைக்காரணமாக திரிபுராவில் இணைய சேவை முடங்கியுள்ளது. இதனால் ஒருவர் படுகாயமடைந்தார்.செல்போன் குறுஞ்செய்தி சேவை ஆகியவை 48 மணிநேரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் போராடிவருவதால் ரயில் சேவையும் வட மாநிலங்களில் முடங்கியுள்ளது.

பாரதியாரின் பிறந்தநாளான இன்று அவரை போற்றி பிரதமர் மோடி ட்வீட் !

Quick Share

தமிழ் கவிதைகள் மற்றும் நேர்கொண்ட சிந்தனையாலும் மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவர் பாரதியார். இவரின் கவிதையை பாடிய மழலை பருவம் தான் பெரும்பாலானோருக்கு ஞாபகத்தில் வரும். பாரதியாரின் பிறந்தநாளான இன்று அவரின் கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு நினைவு கூர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த பதிவில் பாரதியாரின் தேச பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன என நினைவு கூர்ந்தார்.

மேலும் “தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்னும் எழுச்சியூட்டும் வரிகள் மூலம் பாரதியாரின் பார்வை மற்றும் மக்கள் மீது அவர் கொண்டுள்ள நேசம், அக்கறை போற்றும் விதமாக அமைந்திருக்கும். பாரதியாரின் வரிகளை போற்றி பதிவிட்டுள்ளார்.

ரூ 15.13 கோடிக்கு ஏலம் போன மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் !! அமைச்சர் ப்ரகலாத் பட...

Quick Share

பிரதமர் நரேந்திர மோடிக பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தலைவர்களை சிந்தித்து வருகிறார். மோடி பதவிஏற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ஏராளம்.
மோடிக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களை பற்றி மாநிலங்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் கொடுத்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ப்ரகலாத் படேல். பிரதமர் மோடிக்கு 2014 ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களை இதுவரை மூன்று முறை ஏலம் விடப்பட்டதாக கூறினார். மேலும் இந்த ஏலத்தின் மூலம் 15 கோடியே 13 லட்சம் ரூபாய் பெறப்பட்டது.

இந்தியாவிற்கு வரும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மோடிக்கு கொடுக்கும் பரிசு பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தை நாட்டின் நலத்திட்டத்திற்காக செலவிடுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் தான் இந்த ஏலம் நடப்பதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ப்ரகலாத் படேல் விளக்கம் கொடுத்தார்.

சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் SDPI போராட்டம் !!

Quick Share

போராட்டத்தில் குடியுரிமை சட்டத்தின் நகலை எரித்து தங்களது எதிப்பை தெரிவித்தனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் S.D.P.I கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லோக்சபாவில் குடியுரிமை மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் கிளம்பியுள்ளன. டெலீஜ்\டெல்லியில் ஜந்தர் மந்தர், பெங்களூரு சென்னை போன்ற இடங்களில் போராட்டம் வலுப்பெற்றிருக்கிறது.

இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிப்போம் என பாஜக வாக்குறுதியளித்ததை அடுத்து 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது மக்களவை பணிக்காலம் முடிவடைந்ததால் இந்த மசோதா கலவதியானது, பின்னர் புதிய மசோதா நிறைவேற்றப்படும் என மோடி அரசு அறிவித்திருந்தது. இதன் படி இன்று தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்கவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் அம்சம் என்னவென்றால், “கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிவுற்றவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இப்படி குடியுரிமை வழங்கப்படும் அகதிகளுக்கு அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியதாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து சட்ட பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள், என்பது தான் இந்த மசோதாவாகும்.

இந்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் வாதங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், இந்த மசோதா சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டுவரப்படுவதாகவும், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் மேலும் இந்த மசோதாவில் 6 மதத்தவர்களுடன், இஸ்லாமியர்களை சேர்க்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலளித்த அமித் ஷா, இந்த சட்டம் 000.1 % கூட இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், புத்தர்கள், கிறித்துவர்கள் ஆகியோர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாவதால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவர பட்டுள்ளது என தெரிவித்தார்.

“ACID வீச்சால் பாதிக்கபட்ட பெண்ணின் கதைக்கு, படத்தில் உயிர் கொடுக்கும் தீபிகாR...

Quick Share

2005 ம் ஆண்டு குத்தா எனும் 32 வயது நபர் தனது ஒருதலை காதலை ஏற்று கொள்ளாததால் லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். அந்த தாக்குதலுக்கு உள்ளான லட்சுமி அகர்வால் தனது தன்னபிக்கையால் தனி ஒரு பெண்ணாக போராடி அந்த நபருக்கு சட்டத்திடமிருந்து தகுந்த தண்டனையை பெற்றுத்தந்தார். தற்போது அவர் அலோக் தீட்சித் என்வரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். மேலும் தன்னை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சண்டிகரில் சமூக அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை தழுவிய படமான “சபாக்” படத்தில் லட்சுமி அகர்வாலாக நடித்துள்ளர். இந்த படத்தை பிரபல இயக்குனர் மற்றும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் தயாரித்துள்ளார். தற்போது அந்த படத்தில் ட்ரைலர் வெளியாகி உலக அளவில் 2 வது இடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. சபாக் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வெளிவரவுள்ளது.




You cannot copy content of this Website