இந்தியா

சினிமாவில் தோனி !! கிரிக்கெட்-க்கு டாடா..ராணுவ வீரர்களுக்கு மரியாதையை செய்ய முடிவு !!

Quick Share

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் தோனி ராணுவ வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை டிவி சீரிஸ் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சரவெடியான ஆட்டத்தாலும், நிதானமான குழு தலைமையாலும் இந்திய அணிக்கு பல சாதனைகளை பெற்றுத்தந்தவர். பட்டி தொட்டி வரை ரசிகர் பட்டாளங்களை கொண்டவர். தோனி நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இருந்து விடுப்பு எடுத்து ராணுவத்திற்கு பயிற்சிக்காக சென்றார். இந்திய தேர்வு அணியும் இவருக்கு பதில் ரிஷப் பண்ட்-ஐ விக்கெட் கீப்பராக அணியில் சேர்த்தனர். தோனி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது செய்தியாளர்கள், கிரிக்கெட்டிற்கு எப்போது திரும்புவீர்கள் என்று கேட்டதற்கு 2 மாதம் அதை பற்றி பேசாதீர்கள் என திட்டவட்டமாக கூறினார். பின்னர் அவர் மேலும் 2 மாதம் விடுப்பு எடுத்து தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். தோனி மீண்டும் கிரிக்கெட் விளையாட என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது ஒரு சோகமான தகவல் வெளியாகியுள்ளது.

Former cricket captain and honorary Lt Col M S Dhoni speaks to media while being as the chief guest at the final match of Chinar Cricket Primer League at Kunzar in Baramulla district of north Kashmir on Sunday. Express Photo by Shuaib Masoodi. 26.11.2017. *** Local Caption *** Former cricket captain and honorary Lt Col M S Dhoni speaks to media while being as the chief guest at the final match of Chinar Cricket Primer League at Kunzar in Baramulla district of north Kashmir on Sunday. Express Photo by Shuaib Masoodi. 26.11.2017.

தோனி ” பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா” விருதுகளை வென்ற துணிச்சலான ராணுவ அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறுகள் குறித்து டிவி சீரிஸ் ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக “தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்” என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளதாம். இந்த சீரிஸ் ராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிகிறது. ஸ்டுடியோ நெக்ஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிறுவனம், டிவி சீரிஸ் எடுக்க உள்ளதாகவும் இந்த சீரிஸ் சோனி டிவியில் ஒளிபரப்ப விருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதெல்லாம் வைத்து பார்க்கையில் தோனி மீண்டும் கிரிக்கெட் விளையாட வராமல் இருந்துவிடுவாரோ என்ற சோகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

கோவையில் தீவிரவாத பயிற்சி மையங்கள் கண்டுபிடிப்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்!!

Quick Share

சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.அமைப்புக்கான ரகசிய ஆள் சேர்க்கும் மையம் கோவையில் நடத்தப்படுவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.

சமீபத்தில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த பயங்கர குண்டுவெடிப்பில், 290 பேர் கொல்லப்பட்டனர். சர்வதேச அளவிலான தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு உள்ளூர் ஆட்கள் இந்த பயங்கரவாதத்தை நடத்தியது அம்பலமானது. இதனையடுத்து, தமிழகத்தில் கோவை உள்பட 10 மாவட்டங்களில் “தேசிய புலனாய்வு முகமை” எனப்படும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது, சர்வதேச பயங்கரவாத இயக்கங்களான ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான பிரசார மின்னணு ஆவணங்கள், பென் டிரைவ், சிம் கார்டு, லேப்டாப் போன்றவை சிக்கின. மேலும் ஆதரவாளர்களான கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், ஹிதாயதுல்லா ஆகிய இருவர் கைது செய்ய பட்டனர்.

இந்நிலையில் கோவை இளைஞர்கள் தொடர்பான வழக்கில் ஒரு குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். அது குறித்து போலீசார் கூறுகையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் அவர்கள் கொள்கைகளை பரப்புவதற்க்காக பல இளைஞர்களை மூளை சலவை செய்து, அந்த அமைப்பிற்கு ஆள் திரட்டும் ரகசிய பயிற்சி மையங்களை நடத்திவந்துள்ளன. இதை யாரெல்லாம் பங்கேற்றனர் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். இந்த ரகசிய மையங்களில் தயாரிக்கப்படும் நபர்களை கேரளாவின் ஏஜெண்டுகள் உதவியுடன், வெளிநாடுகளில் வேலை என “ஐ .எஸ்” க்கு ஆதரவாக பல நாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சந்தேக படும்படியான நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோவையில் 1998ம் ஆண்டு பா.ஜ.,க மூத்தத்தலைவர் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 50 உயிரிழந்தனர், 250 பேர் காயமடைந்தனர். அப்போதே தமிழக அரசு அதில் ஈடுபட்ட” அல் -உம்மா” எனப்படும் அமைப்பை தடை செய்து, அதை நிறுவியவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

இனி ஆதார் அட்டையுடன் இணைத்த வங்கி கணக்குகளுக்கே விவசாய உதவி தொகை !!

Quick Share

பிரதம மந்திரியின் “கிசான் சம்மான் நிதி” திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு ரூபாய் 6,000 உதவித்தொகையாக வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த உதவித்தொகையை ஆதார் அட்டையுடன் இணைத்த வாங்கி கணக்குகளுக்கு மட்டும் இனி உதவி தொகை அனுப்பப்படும் என தெரிவித்தது.

பிரதமரின் இந்த திட்டத்தின் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் என விவசாயிகளில் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் அனுப்பப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 5 கோடி பயனாளிகள் உள்ளனர். தற்போது “DEC 2019 முதல் மார்ச் 2020 வரையிலான நான்கு மாத தவணை 2,000 ரூபாயை ஆதார் இணைக்கப்பட்ட வாங்கிக்கணக்குகளுக்கு மட்டும் அனுப்பப்படும் என முடிவு செய்துள்ளார். மேலும் பெயர் குளறுபடி முகவரி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி முடிவெடுத்த ஜெகன் மோகன் !! 21 நாட்களில் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை

Quick Share

சைபராபாதில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் என்கவுண்டர்-ல் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை பற்றி பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இந்த வழக்கில் பாலியல் குற்றாவாளிகள் சுட்டுக்கொள்ளப்பட்டதை வரவேற்பதாகவும் மேலும் இது போன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஜெகன் மோகன் ரெட்டி இதற்காக, பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை நிறைவேற்ற சட்டம் கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளார். இதனை பல தரப்பு மக்கள் வரவேற்றுள்ளனர்.

வெங்காயம் கிலோ ரூ 25-க்கு விற்பனை – கூட்டநெரிசலில் அடித்துகொன்டு வாங்கும் மக்கள் !

Quick Share

ஆந்திர மாநில சட்டசபையில், நாட்டில் இருக்கும் முக்கியமான பிரச்சனைகள் பற்றிய விவாதம் நடந்தது இதில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் வெங்காயத்தின் விலையேற்றம் பற்றி பேசப்பட்டது. சட்டசபையில் பேசிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது சில இடங்களில் 1 கிலோ 220 ரூபாய் வரை விற்பனையாகிறது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு மானிய விலையில் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் மானிய விலையில் வெங்காயம் வழங்கும் இடங்களில் மக்கள் போட்டிபோட்டு கூட்ட நெரிசலில் வாங்கிச்செல்கின்றனர். மேலும் இதே சூப்பர் மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்தது 1 கிலோ ரூ 95 வாங்கும் நிலை உள்ளது.

இலவசமாக வெங்காயம் !! “1 அல்ல 2 அல்ல முழுசா ஒன்றரை கிலோ” -நம்ம கடலூரில் !!

Quick Share

கம்ப்யூட்டர் அல்லது லேப்டப் வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என கடலூரில் வினோத விளம்பரம்.

இந்தியாவில் வரத்து குறைவால் அனைத்து மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது 1கிலோ வெங்காயம் ரூ.200க்கு விற்கப்படுகிறது. விலையில் கட்டுக்குள் கொண்டுவர அரசும் ஆலோசனை செய்து வருகிறது. எதிர்க்கட்சிகளும் வெங்காய விலை குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் வெங்காயத்தை திருடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. வெங்காய விலை உயர்வால்  சாமானிய மக்களும் வெங்காயத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

வெங்காய விலை உயர்வை விமர்சித்து, மீம் கிரியேட்டர்களும் ஏராளமான மீம்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றன. நகைச்சுவையான டிக்டாக் வீடியோக்களும் பரவிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடலூரில் கம்பியூட்டர் மற்றும் அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று கம்பியூட்டர் அல்லது லேப்டப் வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசம் என விளம்பர பலகை வைத்துள்ளனர். இதேபோல தஞ்சாவூரிலும் மொபைல் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம் என ஒரு மொபைல் கடையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் வெங்காயத்திற்கு ஏற்படும் மவுசு அதிகரிப்பதால் இது போன்று சிறு வியாபாரிகள் வெங்காயத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்து  வருகின்றனர்.

“குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி” JNU மாணவர்கள் மீது போலீசார் தடியடி!!!

Quick Share

கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியை தொடங்கியபோது போலீசார் தடியடி நடத்தினர்.

விடுதி கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வை குறைக்க வலுயுறுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் கடந்த பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் போராட்டத்தில் குதித்த மாணவர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. இந்த பிரச்னையை 3 பேர் கொண்ட குழுவை வைத்து சரி செய்கிறோம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் எந்தவித முடிவும் எடுக்கப்படாததால் இன்று போராடிய மாணவர்கள், குடியரசு தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென கோரிக்கையை விடுத்தது, குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி அவரிடம் மனு அளிக்க பேரணியை தொடங்கியுள்ளனர். இதனை தடுத்து நிறுத்திய போலிசாரின் தடுப்பை மீறி மாணவர்கள் சென்றதால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. எனவே போராட்டத்தை கலைக்க போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

எனக்காக இந்த உதவி மட்டும் செய்டா! இ றப்பதற்கு முன் இளைஞன் நண்பனிடம் சொன்ன வார்த்தை..

Quick Share

இந்தியாவின் தலைநகர் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இளைஞர் இறப்பதற்கு முன் நான் இனி பிழைக்கமாட்டேன், என் குடும்பத்தை பார்த்து கொள் என்று கண்ணீருடன் தன் நண்பரிடம் கூறியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

டெல்லியில் அனாஜ் மண்டி என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஏராளமான கடைகள், ஆலைகள் உள்ளன. அப்படி அங்கிருக்கும் பை தயாரிக்கும் ஆலை ஒன்றில் பணிபுரிந்து வரும் வருபவர்கள், சில மண்டியிலே தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதே போன்று நேற்று அவர்கள் மண்டியில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால், தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் எழுந்து ஓடுவதற்குள் தீ வேகமாக பரவியதால், தீயினுள் பலர் சிக்கினர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் 43 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில், சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த முகமது முஷாரப் என்ற 34 வயது நபர் தனது நண்பர் மோனு அகர்வாலை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, இங்கு நான் இருக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுவிட்டது.

நான் அந்த விபத்தில் சிக்கிவிட்டேன், இதனால் என்னால் உயிர் பிழைக்க முடியாது, என்னுடைய குடும்பத்தை பார்த்து கொள் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

இது குறித்து நண்பர் மோனு கூறுகையில், அவன் என்னிடம் இப்படி கூறியவுடன் நான் அங்கிருந்து எப்படியாவது வெளியே குதித்துவிடு என்று கூறினேன், அவன் தீயணைப்பு வாகனத்தின் சத்தம் கேட்கிறது என்று கூறினான்.

அது தான் அவன் கடைசியாக பேசியது, நாங்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து பிஜனோரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டோம்.

அது தான் அவனை நான் பார்க்கும் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

ரூ .400 கோடியில் “நேத்ரா” இஸ்ரோவின் புதிய பிளான் !!!

Quick Share

விண்வெளி குப்பைகளிடமிருந்து இந்திய செயற்கைகோள்களை காப்பாற்ற 33 கோடியே 30 லட்சத்து ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது.

பல நாடுகள் தற்போது பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியில் மும்னுரமாக ஈடுபட்டு வருகின்றன.கடந்த 50 வருடங்களாக இது போன்று பல்வேறு நாடுகள் மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சியால், தற்போது புவியின் சுற்றுவட்ட பாதையில் பழைய செயற்கைகோள்களின் பாகங்கள் மற்றும் பல விண்வெளி குப்பைகள் அதிகரித்து காணப்படுகிறது. இவையெல்லாம் சேர்ந்து செயல்பாட்டில் உள்ள செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதுபோன்ற விண்வெளி குப்பைகளிலிருந்தும், விண்கற்கள் போன்ற அபாயத்திலிருந்தும் செயல்பாட்டில் உள்ள இந்திய செயற்கைகோள்களை பாதுகாக்க “நேத்ரா” எனும் திட்டத்தை ரூ 400 கோடி செலவில் இஸ்ரோ செயல்படுத்துகிறது. இத்திட்டத்திற்கு மானியம் வழங்குவதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற்றுள்ளார்.

“வளச்சியை நோக்கி மாருதி சுசூகி” 9 மாதங்களுக்கு பின் உற்பத்தி அதிகரிப்பு !!

Quick Share

கடந்த 8 மாதங்களாக சரிவை சந்தித்து கொண்டிருந்த மாருதி சுசுகி தற்போது வளர்ச்சியைப் பாதையை நோக்கி சென்றுகொண்டிக்கிறது.

இந்தியாவில் கடந்த ஓராண்டாக ஆட்டோமொபைல் துறையில் பெரும் மந்த நிலை நிலவி வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி பெரும் வீழ்ச்சியை கண்டது. தேவை குறைந்ததன் காரணமாக கடந்த 8 மாதங்களாக தொடர்ச்சியாக உற்பத்தியை குறைத்து கொண்டே வந்தது இந்த நிறுவனம். இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் தொடங்கவிருப்பதால், போன நவம்பர் மாதத்தில் 1,41,834 யூனிட்கள் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.33% வளர்ச்சியை எட்டியுள்ளது மாருதி நிறுவனம்.

இதேபோல பயணிகள் வாகனங்கள் உற்பத்தி, கடந்த ஆண்டு 1.34 லட்சமாக இருந்தது, தற்போது இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 1.39 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.67% அதிகமாகும். இதில் வளர்ச்சி ஏற்பட்டாலும் மினி மற்றும் காம்பாக்ட் செக்மென்ட் மாடல்களான ஆல்டோ, வேகன்-ஆர், செலெரியா, இக்னீஸ், ஸ்விப்ட், பலேனோ மற்றும் டிசைர் கார்களின் உற்பத்தி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20.16% குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ் -கிராஸ் போன்ற எஸ்யூவி கார்களின் உற்பத்தி 18% வளர்ச்சியடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

“திருப்பதி லட்டு தயாரிக்கும் அறையில் திடீர் தீ” பக்தர்கள் அச்சம் !!!

Quick Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு  தயாரிக்கும் அறையில் தீடிரென தீ பற்றியுள்ளது.இதனால் பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது. அங்கு  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனர். இங்கு கொடுக்கப்படும் திருப்பதி லட்டுக்காக வரிசையில் நின்று பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். திருப்பதி லட்டு தயாரிப்பதற்காகவே தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு பூந்தி தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு  இன்று காலை வழக்கம் போல பணிகள் தொடங்கின. அப்போது எதிர்பாராத விதமாக பூந்தி தயாரிக்கும் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தீ மளமளவென பரவி அறை முழுவதும் பற்றியுள்ளது. இதனைக்கண்ட பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளார்.

உடனே தகவல் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது .கோவிலுக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

“மாடு வளர்க்க இவர்கள் தான் சரி” ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து!!!

Quick Share

நாடுமுழுவதும் சிறையில் உள்ள கைதிகளுக்கு பசு மாடுகளை வளர்க்கும் வேலை கொடுப்பதால் அவர்களின் குற்ற மனநிலை நன்றாக குறையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள ஜெயிலர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில், கைதிகள் பசுமாடுகளை வளர்ப்பதன் மூலம் அவர்களின் குற்ற மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தம்மால் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், பசு மாடுகள் வளர்ப்பதை கைதிகளிடம் ஊக்கப்படுத்த வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.




You cannot copy content of this Website