இந்தியா

“பரம் பிரம்மா சூப்பர் கம்ப்யூட்டர்” பார்வையிட்டார் பிரதமர்…

Quick Share

மஹாராஷ்டிராவில் உள்ள புனேவில் டிஜிபி மாநாட்டில் பங்கேற்ற மோடி பின் புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தை பார்வையிட பிரதமர்  மோடி சென்றுள்ளார் . அங்கு விஞ்ஞானிகள் அவரை வரவேற்றனர் அவர்களுடன் மோடி கலந்துரையாடினார் . அப்போது ஆராய்ச்சி கூடத்தில் உள்ள அனைத்தையும் பார்வையிட தொடங்கினார் அவருக்கு விஞ்ஞானிகள் அதைப்பற்றி விளக்கி வழிகாட்டி வந்தனர் .அங்கு விவசாய உயிரிதொழிநுட்பம் முதல் ,பசுமை எரிசக்தி வரை பல்வேறு பொருட்களை அவர் பார்வையிட்டார் . பரம் பிரம்மா  என பெயர்சூட்டப்  பட்ட சூப்பர் கப்யூட்டரை அப்போது  பிரதமர் மோடி பார்வையிட்டார் . மேலும் அதை பற்றி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார் .

“டெல்லியில் பற்றிய தீ ” இதுவரை 43 பேர் பலி; 21 பேர் படுகாயம்!!! உயிரிழந்தோர...

Quick Share

டெல்லியில் பற்றிய தீடீர் தீயால் 35 பேர் பலியானதாக தகவல் மேலும் 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் .பலியானவர்களுக்கு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார் .

டெல்லியில்  ஜான்சி ராணி சாலையில் உள்ள அனஜ் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று காலை 5:22 மணியளவில் திடீரென தீ பற்றியுள்ளது .தொடர்ந்து தீ அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவத்தொடங்கியது.  தகவல் அறிந்து 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த பயங்கர விபத்தில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர் .மேலும் 50 க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கும்  ,இந்து ராவ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் .

 மேலும் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுக்கிறது .மின்சாரம் தொடர்பான பாதிப்பினால் , தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்க பட்டுள்ளது . தீ விபத்தில் உயிரிழந்தோர் குடுப்பதிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார் . மேலும் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார் . டெல்லியில் ஏற்பட்ட இந்த  சம்பவம் டெல்லி மக்களை  பீதியில் ஆழ்த்தியுள்ளது .

5வது நாளாக முடங்கியது HDFC ஆன்லைன் சேவை!! தொடரும் புகார்கள் !! கண்டுகொள்ளாத நிறுவனம் !!...

Quick Share

இந்தியாவில் உள்ள பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதி 2ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி  கடந்த 5 நாட்களாக தொடந்து முடங்கியுள்ளது. இது குறித்த புகார்கள் தொடந்து சமூக வலைத்தளங்களில் பரவலாக காணப்பட்டது. இதனால் சுமார் 45 மில்லியன்  வாடிக்கையாளர்கள்  ஊதிய நாட்களிலும், பணப்பரிமாற்றம் செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை சந்தித்ததாக பதிவிட்டு வந்துள்ளனர்.

இதனை உடனே  சரிசெய்கிறோம் சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று தெரிவித்த HDFC பேங்க் கடந்த 4 ம் தேதி சேவையை சரிசெய்தது, இருந்தும் சரியாக ஆன்லைன் சேவைகளை சரிவர தொடர முடியவில்லை. மீண்டும் வாடிக்கையாளர்களிடம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது குறித்து HDFC பேங்க் தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் .

இந்தியாவில் பிரபலமான இந்த ஹெச்.டி.எப்.சி பேங்கிற்கு மற்ற தனியார் வங்கிகளை காட்டிலும் வாடிக்கையாளர்கள் அதிகம் .இதனால் இந்த வங்கியின் பங்குகள் வீழ்ச்சியில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாஜக-வின் தோல்வியை ஒப்புக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமி ! பொருளாதாரம் பற்றி பரபரப்பு பேட்டி.

Quick Share

பாஜகவின் மூத்த தலைவரின் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவிடம் சரியான பொருளாதார கொள்கை இல்லாததே, பொருளாதாரத்தை சீர் செய்யும் தோல்விக்கு காரணம் என பகிரங்கமாக விளக்கம் அளித்தார். மேலும் வருமான வரியை முழுமையாக ரத்து செய்தால் தான் பொருளாதார பிரச்சனை சரியாகும் என கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலை மோசமான நிலைமையில் உள்ளதாக பல தலைவர்கள் மற்றும் எதிர் கட்சி தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது இருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பொருளாதாரத்தை சீர்படுத்த எந்த வித திட்டமும் இல்லை என்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வரம் இந்திய நாட்டின் பொருளாதார மந்தநிலை பற்றி மக்களவையில் காரசார விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சியில் உள்ள எம்பி- க்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 7 வருடமாக மந்தமாக இருப்பதாக கூறி மத்திய அரசை திணறடித்தனர். மேலும் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்தன. ஆனந்த் சர்மா பாஜக-வின் பொருளாதார கொள்கையை சரமாரியாக தாக்கியது குறிப்பிடத்தக்கது. சுமார் 2.5 கோடி தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளதை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் மக்கள் போல மற்ற மாநில மக்களும் இருக்க வேண்டும்” பாஜக ஆட்சி தொடர்ந்தா...

Quick Share

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்க வேண்டும், பாஜக ஆட்சியில் 4.5% சரிந்துள்ளது பாஜகவினருக்கெதிரான எதிர்ப்புணர்வு இந்தியாவில் வரவேண்டும், சென்னையில் ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி 106 நாட்கள் சிறைவாசம் பெற்று, தற்போது ஜாமீனில் வெளிவந்த முன்னாள் மத்திய நித்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சுமார் 4 மாதங்களுக்கு பிறகு தமிழகத்திற்கு வந்துள்ளார்.இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை காங்கிரஸ் தொண்டர்களும், சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் ஒன்று கூடி கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், என் மன உறுதியை கலைக்க என்னை சிறையில் அடைத்தார்கள் ஆனால் என்னுடைய மன உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது. பாஜக ஆட்சியில், நாட்டில் சுதந்தரம் இல்லை. நான் சிறைவாசத்திற்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன். ஆனால் காஸ்மீர் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. நமது நாடு சுதந்திரத்தை பறிக்க கூடிய பாசிச ஆட்சியின் பக்கம் நகர்ந்துகொண்டு இருக்கிறது.

தமிழக மக்கள் பாஜக மக்கள் மீது காட்டுகின்ற எதிர்ப்புணர்வை எப்போது இந்திய மாநிலம் அனைத்தும் காட்டுகிறார்களோ அப்போதுதான் இந்தியா சுதந்திர நாடாகும். மேலும் இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 2004 மற்றும் 2010 வரை 8.5% பொருளாதார வளர்ச்சி இருந்தது ஏன் 9% வளர்ச்சியை கூட தொட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 4.5% க்கு பொருளாதார வளர்ச்சி தள்ளப்பட்டுள்ளது. இதுகூட அவர்கள் கூறும் பொய் விவரமாக கூட இருக்கலாம். பொருளாதாரத்தை மீட்க வழி தெரியாமல் மத்திய அரசு திணறுகிறது.

இப்படியே சென்றால் நாட்டை பொருளாதார அழிவில் இருந்து மீட்க முடியாமல் போகும். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதை தடுப்பது பெண்களும், அரசும் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்மகனும் தான் .நிர்பயா நிதியை பயன்படுத்தி பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள் “தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு” உடனே இதை...

Quick Share

ஏர்டெல் வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்டெல் மொபைல் ஆப்-ல் தகவல் திருடப்படுவதாக பெங்களூருவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏர்டெல் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதில், ஏர்டெல் மொபைல் ஆப்-ல் உள்ள அப்ளிகேஷன் ப்ரோக்ராமிங் இன்டர்பேஸ்-ல் சில குறைபாடுகள் இருந்ததால், இவற்றை சமூக விரோத கும்பங்கள் தவறாக உபயோகிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அவர்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணில் வாயிலாக அவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, செல்போனின் ஐஎம்இஐ எண் போன்றவற்றை திருடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த குளறுபடியை தக்க நேரத்தில் பெங்களூருவை சேர்ந்த இராஸ் அகமது என்பவர் கண்டுபிடித்து ஏர்டெல் நிறுவனத்தினம் கூறியதால், இதனை அந்நிறுவனம் துரிதமாக சரிசெய்து விட்டதாக தகவல் தெரிவித்தது. இதனால் 30 கோடி ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படவிருந்த ஆபத்து தடுக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பு :”24 மணிநேரமும் NEFT பண பரிமாற்றம் செய்யலாம்” – ரிசர்...

Quick Share

வரும் 16 ம் தேதி முதல் 24 மணிநேரமும் மின்னணு பணப்பரிமாற்றம் செய்யலாம் என ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது.

NEFT எனப்படும் தேசிய மின்னணு பணபரிமாற்ற முறை டிசம்பர் 16ம் தேதி முதல் 24 மணிநேரமும் செயல்படுமென ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. தற்போது விடுமுறை நாட்களை தவிர்த்து வாராந்திர நாட்களிலும், முதல் மற்றும் ஐந்தாம் சனிக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இந்த மின்னணு பணபரிமாற்ற முறை நடைமுறையில் உள்ளது.

தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆண்டு முழுவதும் இந்த சேவை 24 மணிநேரமும் தொடரவுள்ளது. விடுமுறை நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய செயல்முறைக்காக வங்கி அலுவலக நேரம் முடிந்த பிறகும் 24 மணிநேர தேசிய மின்னணு பணபரிமாற்ற சேவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மறுபடியுமா!! 10% உயரும் ஜி.எஸ்.டி !!! பல பொருட்களின் விலை எகிறுகிறது மத்திய அரசு அதிரடி...

Quick Share

பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பல்வேறு பொருட்களுக்கான ஜி.எஸ் டி வரிவிகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி முறை நடைமுறைக்கு வந்தது .இதன்மூலமாக அரசாங்கத்திற்கு சராசரியாக 14.4% வருவாய் கிடைத்துவந்துள்ளது. அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக 11.6% ஜி.எஸ்.டி வருவாய் குறைத்துள்ளது .இதனால் அரசுக்கு சுமார் 2 லட்சம்கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஜி.எஸ்.டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீசு தொகையை ஈடுகட்டவும், வரிவிதிப்பில் மாற்றம் செய்ய ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் மத்திய அரசு பிரிந்துரைசெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி தற்போது குறைந்தபட்ச வரிவிகிதமான 5 சதவீதத்தை 9 அல்லது 10 சதவீதமாக உயர்த்தலாம் என் கூறப்படுகிறது. 12 சதவீத வரி வரம்பை நீக்கிவிட்டு அதற்குஉட்பட்ட 243 பொருட்களுக்கு 18 சதவீதமாக வரி நிர்ணயம் செய்யலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வரி உயர்த்தப்பட்டால் மாவு வகைகள் ,பன்னீர் ,பருப்புவகைகள் , பாமாயில் , பிசா , உலர் பழங்கள் போன்ற உணவுப்பொருட்களின் விலை உயரும் .அதேபோல் உணவகங்களில் கட்டணம் அதிகமாகும் .மேலும் முதல் வகுப்பு ரயில் கட்டணங்கள் ,பட்டு லினன் துணிகள் ,ஆண்களின் கோட்டு சூட்டுகள், சுற்றுலா சேவைகள், மொபைல் போன்கள் போன்ற பொருட்களின் மீதான வரி உயரும். இதனால் வரிசெலுத்துவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்றாலும் மத்திய அரசுக்கு 1லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். வரிவிலக்கு அளிக்கப்பட்டு வரும் சில பொருட்களுக்கும் வரிவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கும், 1000 ரூபாய்க்குட்பட்டு ஓட்டல்களில் தங்குவது போன்றவற்றிக்கு இனி வரி செலுத்த வேண்டியிருக்கும் என எதிப்பார்க்கபடுகிறது. வரி உயர்த்துவது குறித்து அடுத்தவரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு அதிகார பூர்வமான வெளியீடு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை பெண்… வயது என்ன தெரியுமா?

Quick Share

அமெரிக்காவில் நடைபெற்ற 2020-ஆம் ஆண்டிற்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Las Vagas-ல் இன்று உலக அழகிக்கான போட்டி நடைபெற்றது, இதில் இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட நிலையில், 35 வயதான இலங்கையை சேர்ந்த Caroline Jurie என்ற பெண் 2020-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஐபிஎல்: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஓனர் இனிமே இவர்தானா ? !! விலைக்கு வாங்கும் கெளதம் கம...

Quick Share

பாஜக மக்களவை உறுப்பினரும், இந்திய அணியின் முன்னாள் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பிர், ஐபிஎல் அணியை விலைக்கு வாங்கஉள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், தற்போது பாஜக கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்துவருகிறார். இவர் 2017ம் ஆண்டு வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் கொல்கத்தா கிரிக்கெட் அணியில் இருந்து விலகினார். 2018ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக கேப்டனாக களமிறங்கி விளையாட தொடங்கினர். பின்னர் டெல்லி அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்ததால் தாமாகவே முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

திடீரென அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கவுதம் காம்பிர் அறிவித்தார். ஒரு வருட இடைவெளிக்கு பிறகு, அரசியல் களத்தில் குதித்தார். டெல்லியில் பாஜக கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் மக்களவை உறுப்பினராகவும் தேர்வானார். தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களாக ஜி.எம்.ஆர்.குரூப் ,ஜேஎஸ்டபிள்யூ குரூப் ஆகியவை உள்ளன .இரண்டு குரூப்களும் தலா 50%பங்குகள் வைத்துள்ளன . ஜி.எம்.ஆர்.குரூபிடம் இருக்கும் 50% பங்குகளில் இருந்து 10% பங்குகளை தற்போது கவுதம் காம்பிர் வாங்கப்போவதாக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன. இந்த 10 % பங்குகளின் மதிப்பு சுமார் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஜி.எம்.ஆர்.குரூப் சம்மதித்தால் உடனடியாக அதற்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜார்க்கண்ட் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்கு பதிவு இன்று காலை துவங்கியது.

Quick Share

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு.

கடந்த 2014ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவு, அந்த ஆண்டு, டிசம்பர் 23ம் தேதி வெளியானது. இதில் பாஜக மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்று, ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவின் இவ்வெற்றி. மாநில சட்டசபையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது இது முதல் தடவையாகும்.

ரகுபர் தாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 10 வது முதல்வராக 2014 டிசம்பர் 28 அன்று பதவியேற்றார். இன்று நடைபெறும் தேர்தலில், முதல்வர் ரகுபர்தாஸ், கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியில், போட்டியிடுகின்றார். இரண்டாம் கட்டமாக, 20 தொகுதிகளில், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், மொத்தம், 47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப்பதிவையொட்டி, மத்திய துணை ராணுவப் படை, போலீசார் உட்பட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். அணைத்து கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஜாமீனில் வெளியே வந்த 2 ரேப்பிஸ்ட் அரங்கேற்றிய பதற வைக்கும் செயல்… கத்தியால் குத்த...

Quick Share

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் கடந்தாண்டு டிசம்பரில், சிவம் திரிவேதி, என்ற இரு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் அப்பெண் குடுத்த புகாரின் பேரின் இருவரையும் காவல் துறை கைது செய்தது. நேற்று டாக்டர் பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதனவர்களுக்கு நடந்தது போல் என்கவுண்டர் செய்திருந்தால் அநியாயமாக அப்பெண் உயிர் பறிபோயிருக்காது.

கைதான இருவரும் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். நேற்று முன்தினம் காலை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு இளம்பெண் சென்றபோது, ஜாமீனில் வந்த 2 பேரும், அவர்களின் கூட்டாளிகள் மூவரும் அந்த பெண்ணை வழமறித்து தாக்கி தீ வைத்து விட்டு தப்பினர். அந்த வழியே சென்ற பொது மக்களும் அச்சத்தில் விலகி சென்றுள்ளனர். இதில், அப்பெண் 90 சதவீத தீக்காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்றிரவு 11.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்தார். குற்றவாளிகள் ஐந்து பேரையும் காவல் துறை சுற்றி வளைத்து கைது செய்தது.




You cannot copy content of this Website