இந்தியா

இந்தியா – மியான்மர் எல்லை பகுதியில் நிலநடுக்கம், 4.5 ரிக்ட்டர் பதிவானது !

Quick Share

இந்திய – மியான்மர் எல்லை பகுதியில் இன்று காலை 06.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.5 ரிக்ட்டர் அளவு பதிவானது என இந்திய ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தில் எந்த வித உயிர் இழப்பும் சேதாரமமும் ஏற்படவில்ல என தெரியவந்தது. இந்த நிலநடுக்கம் சுமார் 12 கிமீ ஆழத்தில், இந்தியா – மியான்மர் எல்லை பகுதியில் ஏற்பட்டது என இந்திய ஆராய்ச்சி மையம் தந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

https://twitter.com/IMD_Earthquake/status/1201314693928742912

சில தினங்களுக்கு முன் அல்பேனியா நாட்டில் 6.4 என சக்திவாய்த நிலநடுக்கம் ஏற்பட்டு 40 பேர் இறந்தனர். பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஈழதமிழர்களுக்கு சம அதிகாரம் கிடையாதா ? ராஜபக்சேவின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது –...

Quick Share

இலங்கை மக்கள் அனைவரும் சமம் என கூறிவிட்டு, சிங்கள மக்களுக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை என இலங்கை அதிபர் கூறியது அதிச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கை மக்கள் அனைவரும் சமமாக கருதுகிறேன் என நேற்று கூறிவிட்டு, இன்று இந்திய பத்திரிகையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை எனவும், பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை எனவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பேட்டியளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் “பெரும்பான்மை, சிறும்பான்மை என்று பிளவு படுத்தி பிரித்து பேசுவது, அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, ஜனநாயகத்தை போற்றுவதாகாது எனவும் பிரதமர் மோடி அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியலில் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” .எனவும் மு.க ஸ்டாலின் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் புதிய சபாநாயகராக நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு ..

Quick Share

மராட்டிய புதிய சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே எந்தவித போட்டியும் இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிராவில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் முன்னணி ஆட்சியமைத்தது. கடந்த வியாழக்கிழமை சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். புதிய கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மராட்டிய ஆளுநர் கோஷியாரி அறிவித்ததையடுத்து நேற்று உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பதற்க்காக ஆளுநர் பாரதிய ஜனதாவை சேர்ந்த காளிதாஸ் கோலம்கரை தற்காலிக சபாநாயகராக அறிவித்திருந்தார். நேற்றுமுன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்க்காக தேசியவாத காங்கிரசை சேர்ந்த திலீப் வல்சே சபாநாயகராக நியமிக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே 169 எம்.எல்.ஏ.ஆதரவை பெற்று வெற்றிபெற்றறார் .

இந்நிலையில் மராட்டிய சட்டசபை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது. சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் விகாஸ் அகாடி சார்பில் காங்கிரசை சேர்ந்த நானா பட்டோல் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக முர்பாட் தொகுதி கிஷன் கதோரை பாஜக இறக்கியது. சட்டசபையில் பாஜக பலம் குறையவே அவர் இன்று வேட்பு மனுவை வாபஸ் வாங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா படோல் போட்டியின்றி புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவை உறுப்பினர்களை நோக்கி அவர் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார். முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் அவரை வழிநடத்தி சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர் .

ராதாரவியை விடாமல் துரத்தும் சின்மயி !! பாஜக அமைச்சர் ஸ்ம்ரிதி இராணியிடம் ட்விட்டரில் மு...

Quick Share

நடிகர் திரு ராதாரவி சமீபத்தில் நயன்தாரா விவகாரத்தில் சர்ச்சையாக பேசியதற்காக கண்டனம் தெரிவித்து திமுக கட்சி தலைமை அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. பின்பு ராதாரவி அதிமுகவில் இணைந்தார், இன்று அதிமுகவை விட்டுவிட்டு தமிழக பாஜகவில் இணைந்துள்ளார்.

METOO விவகாரத்தில் சின்மயி பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சமூக அநீதிகளை METOO வழியாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். தற்போது பாஜகவில் இணைந்துள்ள ராதாரவியை கடுமையாக ட்விட்டரில் விமர்சித்துள்ளார். தனது டீவீட்டில் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணியிடம், தமிழக பாஜகவில் இணைத்த ராதாரவி பற்றி முறையிட்டுள்ளார். அதில் ராதாரவி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் தலைவராக உள்ளார், அவரிடம் சினிமா துறையில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைப்பவர்களை யூனியனை விட்டு விலக்கி வைக்கிறார் என் முறையிட்டார். மேலும் இது போன்ற ஆட்களை பாஜகவில் சேர்த்துக்கொண்டு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என ட்விட்டரில் முறையிட்டார்.

“ஆதார் அட்டையை அடமானம் வைத்து வெங்காயம் வாங்கலாம்” காங்கிரஸ் , சமாஜ்வாதி கட...

Quick Share

வெங்காயத்தின் விலையை குறைக்ககோரி உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விளைச்சல் குறைந்ததால், வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரலாறு காணாத விலையை எட்டியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது வெங்காயத்தின் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலையை குறைக்க வேண்டி மக்களும். அரசியல் கட்சியினரும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் வினோத போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் பிரிவை சேர்ந்தவர் நேற்று வாரணாசியில், மக்கள் தங்களது ஆதார் அட்டையை பாதுகாப்பாக அடமானம் வைத்து விட்டு வெங்காயத்தை வாங்கி செல்லலாம் என கூறி, வெங்காயத்தை கடனுக்கு கொடுத்துள்ளார். வெங்காயவிலையேற்றத்தை குறைக்கவே இவ்வாறு செய்தோம் என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் கட்சியினை சேர்ந்தவர்களும் வெங்காயவிலையை கண்டித்து லக்னோவில் மாநில சட்டப்பேரவைக்கு வெளிய ரூ.40க்கு வெங்காயத்தை விற்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் வெங்காய விலையேற்றம் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கிறது, இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியே, வெங்காயத்தை வாங்கி நாங்கள் நியாயமான விலைக்கு விற்று போராட்டம் நடத்துகிறோம் என கூறினார்.

“சொகுசு காருக்கு ரூ.9,80,000 அபராதம்” உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒட்டிய உரிமையா...

Quick Share

உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் நகருக்குள் சொகுசு காரில் சுற்றி வந்த கார் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அகமதாபாத்தில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது நம்பர் பிளேட் இல்லாமல் வந்த போர்ஸ்செ 911 என்னும் சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். சந்தை மதிப்பில் சுமார் 2 கோடி மதிப்பு உள்ள போர்ஸ்செ 911 என்ற சொகுசுகாரில் வந்த அந்த நபரிடம் அந்த வாகனத்திற்க்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

https://twitter.com/AhmedabadPolice/status/1200410927427989504

இது தொடர்பாக தகவல் தெரிவித்த போக்குவரத்து காவல்துறை ஆணையர் அஜித் ரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உரிய ஆவணங்களும், நம்பர் பிளேட்டும் இல்லாமல் சுற்றிவந்த போர்ஸ் 911 என்ற சொகுசுகார் பறிமுதல் செய்யப்பட்டு, போக்குவரத்து வட்டாட்சியருக்கு அனுப்பிவைத்தோம் அவர் மேற்கொண்ட ஆய்வில், காருக்கு இன்சூரன்ஸ் எதுவும் செய்யவில்லை மற்றும் சாலை வரியும் காட்டவில்லை என்று கூறியதாக தெரிவித்தார். இதனால் கார் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் உரிமையாளர் அபராத தொகையை கட்டியதும் கார் அவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் !

Quick Share

திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம். குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், சென்னை மட்டும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே !!..

Quick Share

மஹாராஷ்டிரா தேர்தலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், இன்று பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார் உத்தவ் தாக்கரே.

மஹாராஷ்டிராவில் தேர்தல் பரபரப்பு முடிந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் 18 வது முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர். மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதனால் முதல்வர் உத்தவ் தாக்ரே சார்பில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அம்மாநில சட்டசபை தற்காலிக சபாநாயகராக என்.சி.பி எம்.எல்.ஏ திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்தான் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளார். முன்னாள் பாஜக கட்சியின் சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கருக்கு பதில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே நாங்கள் தயாராக உள்ளோம். எங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் இருந்தனர், தற்போது மொத்தம் 170 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்று கூறினார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு சாதாரணமாக நடந்து முடிந்து விடும் என நம்பப்படுகிறது. இருப்பினும் கடைசிநேரத்தில் எதுவும் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதில் சிவசேனா கட்சி உறுதியாக உள்ளது. இதனால் சிவசேனா கூட்டணி எம்.எல்.ஏக்கள் இன்று அம்மாநில தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர். நாளையும் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற்று நாளையே நிரந்தர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் தன்னுடைய பெரும்பான்மையை அவையில் நிரூபிப்பார். அதன்பின் அவையில் புதிய அமைச்சர்களும், புதிய எதிர்க்கட்சி தலைவரும் தேர்ந்தெடுக்க படவுள்ளனர்.

ஜார்கண்ட் தேர்தல் நேரத்தில் மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல் பாலம் தகர்ப்பு… ஆதிர...

Quick Share

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை 7-மணி முதல், முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேளையில் இன்று காலை கும்லா தொகுதியில் பாலம் ஒன்றை நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். அந்த பாலத்தின் வழியாக தான் பல பேர் வாக்களிக்க செல்ல வேண்டும். தேர்தலை தடுக்கும் விதமாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. மேலும் அந்த இடத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமானது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிவரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. நக்சல்கள் அதிகம் உள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 37 லட்சத்து 83 ஆயிரத்து 55 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த 13 தொகுதிகளில் மக்கள் வசதியாக வாக்களிக்க 3,906 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட தேர்தலில் 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

“இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்”...

Quick Share

தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் விவாதித்ததாக தெரிவித்த கோத்தபய ராஜபக்சே, இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.

இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் நேரில் அவரை வரவேற்றனர். பொருளாதார வளர்ச்சிக்காகவும் இரு நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும் இரு நாடுகளும் சேர்த்து செயல்பட வேண்டும் என ராஜபக்சே கேட்டுக்கொண்டார்.

பிறகு டெல்லி ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், இந்தியாவும் இலங்கையும் வலுவான உறவை கொண்டிருக்கும் எனவும் , இலங்கை சூரிய சக்தி திட்டத்திற்காக 100 மில்லியன் கடனுதவி தருவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். தமிழர்களுக்கு சமஉரிமை சமத்துவம், நீதி ஆகியவற்றை இலங்கை அரசு தரும் என நம்புவதாகவும் கூறினார்.

மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவித்த அதிபர் ராஜபக்சே, இலங்கை பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்

ஹைதராபாதில் 26 வயது கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை எரித்து கொலை!

Quick Share

தெலங்கான மாநிலம் ஹைதராபாதில் சேர்த்தவர் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி () கொல்லாபுரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பணியாற்றிவந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது பணியை முடித்து வீட்டிற்கு திரும்பிய அவர், உடனடியாக ஒரு டாக்டரை பார்ப்பதற்காக கச்சிபவுலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

ப்ரியங்காவின் வாகனம் தொண்டுப்பள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில் பஞ்சர் ஆனது. அருகே இருந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ப்ரியங்காவிற்கு நான் உதவி செய்கிறேன் என முன்வந்துள்ளனர். அப்போது 9.00 மணிக்கு தங்கைக்கு போன் செய்து “என்னுடைய பைக் டோல் கேட் அருகே பஞ்சர் ஆகிவிட்டது, தொண்டுப்பள்ளி ஓஆர்ஆர் டோல் கேட் அருகில் தான் இருக்கிறேன், எனக்கு பயமாக இருக்கிறது என்னோடு பேசிக்கொண்டிரு” என கூறியுள்ளார்”.

மறுநாள் காலை ஆகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை எனவே குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் பெங்களூர் ஹைதராபாத் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் அருகே உடல் எறிந்த நிலையில் பிணமாக பிரியங்கா கண்டெடுக்கப்பட்டார்.

டோல் கேட் அருகில் உள்ள கட்டிடத்தில் செருப்பும், ஒரு பர்ஸ், உள்ளாடைகள் மற்றும் மது பாட்டிலும் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

“ரூ.139 கோடி வருவாய் தந்த பிளாட்பாரம் டிக்கெட்” அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்!!!

Quick Share

2018-2019ம் நிதியாண்டில் ரூ139 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட், ரயில்வே அமைச்சர் கோயல் அறிவிப்பு.

நேற்று நடைபெற்ற லோக்சபா கூட்டத்தில் கேள்வி நேரத்தில் போது பதிலளித்த ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில் பயணியருக்கும், அவர்களது உடமைகளுக்கும் ரயில்வே பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பு வழங்கப்படும். பெண் பயணிகளுக்கு, பெண் போலீசாரால் பாதுகாப்புவழங்கப்படும். இதற்க்காக 4,078 பெண் கான்ஸ்டபிள்கள், 298 எஸ்.ஐக்களை பணி நியமனம் செய்து, பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன மேலும் , 2,300 பெண் போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் .

ரயில் புறப்படுவது ,வருகை,சென்று கொண்டிருக்கும் இடம்  உள்ளிட்ட தகவலை உடனுக்குடன் அளிக்கும் புதிய கருவியும் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து ,ரயில்வே மையம் தயாரித்துள்ளது. மேலும் 6000 ரயில்களில் இந்த கருவியை  பொறுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ரயில் நிலையங்களில் கடைகள் அமைக்கவும் , விளம்பரங்கள் செய்யவும், 2018-2019ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.230 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் 2018-2019ல், பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை மூலம் ,ரூ.139 கோடி வருமானம் வந்துள்ளது. இதில் செப்டம்பர் வரை ரூ.78.50 கோடி வருமானம் கிடைத்துள்ளதாவும் அவர் தெரிவித்தார். 




You cannot copy content of this Website