இந்தியா

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராட்டம்!

Quick Share

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு போவதை எதிர்த்து அந்நிருவனத்தின் ஊழியர்கள் வருகின்ற நவம்பர் 28 ஆம் தேதி அன்று வேலை நிறுத்ததில் ஈடுப்டுள்ளன.

இந்தியாவில் கொச்சி மற்றும் மும்பையில் போன்ற இடங்களில் பாரத் பெட்ரோலியம் தலைமை அலுவலகம் உள்ளது. பாரத் பெட்ரோலியத்தை முன்னாள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அரசு நிறுவனமாக மாற்றினார். இந்நிருவனத்தில் சுமார் 12,500-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு விற்க போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசின் செயலை கண்டித்து நிறுவனத்தின் தொழிலாளர்கள் வருகின்ற 28 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய போவதாக தெரிவித்தனர். வேலை நிருத்தம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என தகவல் வெளியானது. இருப்பினும் அரசு தொழிற்லாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டால் தொடர்ந்து போராட்டுவோம் என தெரிவித்தார் கொச்சி பாரத் பெட்ரோலியதின் ஜெனெரல் செக்கரட்ரி பிரவீன் குமார் பி.

வேலை நிறுத்த நாளன்று தாம் அனைவரும் கருப்பு பேட்ட்ஜ் அணிந்தும் அந்நிறுவனம் வழங்கும் மதிய மற்றும் இரவு உணவை மறுத்தும் ஒருநாள் வேலை நிருத்ததில் ஈடுபடப்போவதாக திரு.பிரவீன் குமார் பி தெரிவித்தார். மேலும் வேலை நிறுத்த காரணத்தினால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் உற்பத்தியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என பாரத் பெட்ரோலிய அசோசியேஷன் தலைவர் அணில் மீதே கூறினார்.

தற்போது உயர் நீதி மன்றம் இந்த போராட்டத்திற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே உயர் நீதி மன்றம் பாரத் பெட்ரோலியம் அலுவகங்களுக்கு வருகின்ற 28, 29 ஆகிய இறுதினங்களுக்கு பாதுகாப்பை வழங்க டி.ஜி.பிக்கு உத்தரவு பிறப்பித்தது.

“முப்பது கோடி முகமுடையாள், உயிர்மொய்ம்புற ஒன்றுடையாள்” பாரதி கவிதையில் இந்த...

Quick Share

இந்தியாவின் மொழிகளின் சிறப்பை மகாகவி பாரதியின் கவிதை மூலம் கூறி நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி.

நரேந்திர மோடி பிரதாராக பதவியேற்றபின், 2014 ம் ஆண்டு ஆரம்பமானது (மனதின் குரல்) “மான் கி பாத்” நிகழ்ச்சி ஒவ்வொருமாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழ்மொழி உள்பட 18 மொழிகளில் உள்பட உரை நிகழ்த்துவார். இன்று 59 வது மான் கி பாத் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் பேசிய அவர் அயோத்தி தீர்ப்பில் நாட்டு மக்களிடையே நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒழுக்கங்கள் எல்லாவற்றிற்கும் மேலாது என தெரிவித்தார்.

இந்திய நாட்டின் கலாச்சாரம், மொழிகளின் சிறப்பு குறித்து விரிவாக பேசிய மோடி ரங் சமூகம் எப்படி சமூக ஊடங்கங்களை பயன்படுத்தி தங்களது தாய்மொழியை உயிர்ப்பித்தது என்பதை பற்றி கூறும் போது 19ம் நூற்றாண்டை சேர்ந்த புலவர் மகாகவி பாரதி மொழி குறித்து படியுள்ளதாகவும், பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி “முப்பது கோடி முகமுடையாள்,இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என தமிழில் பாடியது மட்டுமல்லாமல், அதன் பொருளை இந்தியிலும் விளக்கினார்.

இக்கவிதையின் பொருளாவது, “இந்தியாவிற்கு பல முகங்கள் இருந்தாலும், அதற்கு உருவம் ஒன்று எனவும் 18க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று” என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழில் பிரதமர் மோடி காட்டும் ஆர்வத்தை பார்த்தால் அடுத்த தேர்தல் வரும் போது தமிழி பேசி ஓட்டுக்கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

திடீரென சாலையில் வீசப்பட்ட பணக்கட்டுகள் !!! வாரிச்சென்ற பொதுமக்கள்…

Quick Share

வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பயந்து, கட்டுக்கட்டாக பணத்தை சாலையில் வீசிய தனியார் நிறுவனம், பணத்தை கண்ட மக்கள் அள்ளிச்சென்றனர்.

மேற்குவங்கம் :கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ,ஹாக் மெர்கன்டைல் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது . இந்த நிறுவனத்தில் வரி முறைகேடு நடப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கும்போதே ,அதிகாரிகளுக்கு பயந்து பதுக்கிவைக்கப்பட்ட 100, 500,மற்றும் 2000 ரூபாய் தாள்களை 6வது மாடியில் இருந்து சாலையில் தூக்கி வீசியள்ளனர்.

பண்டல் பண்டலாக வீசப்பட்ட பணத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. கட்டுக்கட்டாக சாலையில் விழுந்த பணத்தை கண்ட வியந்த பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு அதனை அள்ளிச்சென்று மாயமாக மறைத்துள்ளார். இதனால் அங்கு எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல் வருமானவரித்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மொபைல் செயலி மூலம் மக்களின் தொடர்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!!

Quick Share

கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “Ak” என்ற செயலியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த செயலியின் மூலம் சுமார் 20,000கும் மேல் ஆர்வலர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பங்கஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டே மாதத்தில் 50,000கும் மேற்பட்டோர் இச்செயலியை தரவிறக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த செயலியின் மூலம் நாங்கள் மக்களுடன் நேரிடையாக தொடர்பில் இருக்கிறோம். அத்துடன் இதன் மூலம் எங்கள் தரப்பின் கருத்துக்களை மக்களுக்கு உடனடியாக கூற முடிகிறது. இதனால் மக்களின் கருத்துகளையும் நாங்கள் எளிதில் அறிய பாலமாக உள்ளது. இச்செயலியில் ஆர்வலர்கள் இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் செலவிட்டாலே போதும்”, என்றார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பரப்பப்படும் கருத்துக்களை ஒழிக்கவே இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் கெஜ்ரிவால் இக்கருத்துகளுக்கு இந்த செயலியின் மூலம் பதிலளிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்ட சபை தேர்தல் இருப்பதால் கெஜ்ரிவால் “AK ” செயலியின் மூலம் மக்களிடம் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியமாக உள்ளது என்று பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்தவித இணையதள தாக்குதலும் நடத்த முடியாது – ஜிதேந்...

Quick Share

புது டெல்லி: சில வாரங்களுக்கு முன்பு கூடங்குளத்தில் உள்ள அணு உலையில் உள்ள கணினிகளில் இணையத்தளம் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளிவந்தது. திமுக வின் தலைவர் திரு முக ஸ்டாலின், இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையா? என மத்திய அரசிடம் விளக்கம் கோரினார். இது போன்று கேள்விகள் எழுந்த நிலையில். பிரதமர் அலுவலக இணைய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.

“இணைய தங்குதல் நடக்கும் போது அணு, உலை பகுதிக்கு செல்ல விடாமல் தடுக்கும் வழிமுறைகள் உள்ளன. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான முறையில் உலை கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் உள்ள அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது” என கூறினார்.

வங்கியில் மோசடியை தடுக்க 3.38 லட்சம் வாங்கிக்கணக்குகள் முடக்கம்: நிர்மலாசீதாராமன் தகவல்

Quick Share

கடந்த 6மாதத்தில் பொதுத்துறை வங்கிகளில்
ரூ.95,760.49 கோடி மோசடி

நவம்பர் 18ம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த 6 மாதகாலத்தில், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி அளவுக்கு மோசடிகள் நடந்ததாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

இது குறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ரிசர்வ் வங்கி தகவலில் படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, 5,743வாங்கி மோசடிகள் நடந்துள்ளன எனவும், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760,49 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுபோன்ற வங்கி மோசடிகளை தடுக்க விரிவான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தார் .இதன் முதற்கட்டமாக, செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.




You cannot copy content of this Website