இந்தியா

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி – பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு!

Quick Share

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நடைபெற்று வருவதாக சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கனவு காண்கிறது என்றும், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நடைபெற்று வருவதாக சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கனவு காண்கிறது என்றும், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து விளையாட்டு வீரர்களையும் பிரதமர் மோடி வாழ்த்தினார், மேலும் வரவிருக்கும் பாராலிம்பிக்ஸுக்கு பயணிப்பவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாடு போன்ற பெரிய நிகழ்வை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும், 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதே நாட்டின் அடுத்த கனவு என்றும் உரையின் போது பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயர்த்திய இளைஞர்களும் இன்று நம்முடன் இருக்கிறார்கள். 140 கோடி நாட்டு மக்கள் சார்பில் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… இன்னும் சில நாட்களில் இந்தியாவின் மாபெரும் அணி புறப்படும். பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் பாராலிம்பியன்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்… G20 உச்சி மாநாட்டை இந்தியா பெரிய அளவில் நடத்துவது, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்பதை நிரூபித்துள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த, அதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறோம்…’’ என்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களையும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்கள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கத்தையும் இந்தியா தொடரும்.

ஆகஸ்ட் 28 ஆம் திகதி தொடங்கும் பாரிஸ் பாராலிம்பிக்ஸிற்காக இந்தியா தனது மிகப்பெரிய 84 தடகள வீரர்களை களமிறக்கியுள்ளது. 84 தடகள வீரர்கள் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கேனோயிங், சைக்கிள் ஓட்டுதல், பிளைண்ட் ஜூடோ, பவர் லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல் உள்ளிட்ட 12 விளையாட்டுகளில் போட்டியிட உள்ளனர்.

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பிரதமர் மோடி, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து 11வது முறையாக நாட்டு மக்களுக்கு இன்று உரையாடிய போதே இந்த விடயத்தையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.17,843 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசல்: கான்ட்ராக்டருக்கு ரூ.1 கோடி அபரா...

Quick Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ தூரத்தில் அடல் சேது பாலம் என்ற கடல் பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலமானது இந்தியாவின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மேலும், இது மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது.

கடந்த 2018 -ம் ஆண்டு தொடங்கிய பாலத்தின் பணிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் முடிந்தது. ரூ.17,843 கோடி செலவில் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்ட அடல் சேது பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில் அடல் சேது பாலம் திறக்கப்பட்ட ஐந்தே மாதங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சில புகைப்படங்களை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், சேது பாலத்தின் முக்கிய பகுதியில் விரிசல் ஏதும் இல்லை என்று மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்தது.

இந்நிலையில் , கடந்த ஜூன் மாதம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பின்னர் சரிசெய்யபட்டது என்றும், பாலத்தை கட்டிய ஸ்டார்பக் ஒப்பந்ததாரருக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் வழியாக பெறப்பட்டுள்ளது.

வயநாட்டு நிலச்சரிவில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்..

Quick Share

வயநாடு பேரிடர் பகுதியில் தீயணைப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ரூ.4 லட்சம் ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளார்மலை பள்ளிக்கு அருக்கு நடந்த தேடுதல் பணிக்கிடையே பணம் கிடைத்தது. இந்த பணம் முழுவதும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பணம் கண்டெடுக்கப்பட்டது. முழுவதும் சேறு நிறைந்து நனைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பாக காய வைத்து ஒப்படைக்கப்படும்.

‘அகண்ட பாரதத்திற்காக நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும்’ – செங்கோட்டை...

Quick Share

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கானோர் அங்கே பிரதமர் மோடியின் உரை கேட்பதற்காக கூடியுள்ளனர். முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பின்னர் செங்கோட்டை சென்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரம் அங்கு சாரல் மழை பொழிந்தது.

செங்கோட்டை வந்த பிரதமர் மோடி 11 ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முப்படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ‘பாரத் மாதா கி ஜே…. பாரத் மாதா கி ஜே…’ என மூன்று முறை உச்சரித்து விட்டு,பேசத் தொடங்கினார். 

அவரது உரையில், ”நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்த நேரத்தில் போற்றுகிறேன். விவசாயிகளும் ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன் பட்டுள்ளோம். வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகள் வருத்தத்தை அளிக்கிறது. 40 கோடி மக்கள் தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தனர். தற்பொழுது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் நாட்டின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். உத்வேகமாக செயல்பட்டால் 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதமாக நாம் உருவாக முடியும். ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன’ எனத் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

மருமகளை திருமணம் செய்த மாமியார்;சமூக வலைதளங்களில் படு வைரல்..

Quick Share

இந்தியாவில் மாமியார் தன் சொந்த மருமகளை திருமணம் செய்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும் – ஆணும், பெண்ணும் – பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது.

சில நாடுகள் தன்பாலி திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கி இருந்தாலும் இந்தியாவில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் இணையதளங்களில் வெளியாகி விவாதத்தையும் தூண்டி விடுகின்றது.

பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. கடந்த 3 ஆண்டுகளாக மாமியார் சுமனுக்கு மருமகள் சோபா மீது காதல் ஏற்பட்டதுடன் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தனர். இது இவர்களின் கணவர்களுக்கு தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் மாமியார் மருமகள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது மாமியார் சுமன் பேண்ட் சட்டை அணிந்து மணமகன் போல காட்சி அளித்தார். மருமகள் சோபாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோவிலில் இருவரும் மாலை மாற்றினர். பின்னர் மாமியார் சுமன் மருமகள் கழுத்தில் தாலி கட்டினார்.  தமது திருமண தொடர்பில் மாமியார் கூறுகையில், 

நான் எனது மருமகளை வெறித்தனமாக காதலிக்கிறேன். அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதை என்னால் தாங்க முடியவில்லை. உலகம் என்ன நினைக்கும் என்பதை பற்றி கவலைப்படாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள எங்களது மனம் தூண்டியது.

கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எப்போதும் பிரிய மாட்டோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அவர்களின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.   

18 ஆண்டுகளின் பின்னர் வானில் நடக்கவிருக்கும் சனிசந்திர கிரகணம் எப்போது தெரியுமா?

Quick Share

சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் காரணமாக சூரியனின் ஒளி சந்திரனை அடைய முடியாது. இதன் காரணமாக பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இந்த வானியல் நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதமும் சுக்கில பக்ஷத்தின் கடைசி தேதியில் முழு நிலவு ஏற்படுகிறது. ஆனால் சனி சந்திர கிரகணம் என்பது முற்றிலும் வேறுபட்டது. இது எவ்வாறு நிகழும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் சனி சந்திர கிரகணமானது ஏற்கனவே ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. இது தற்போது அக்டோபர் 14 ம் திகதி 2024 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 18 ஆண்டுகளின பின் நடைபெறுகிறதாம்.

இந்த வானியல் நிகழ்விற்கு சனியின் சந்திர மறைவு என்று பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வை மனிதர்கள் அவர்களின் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதை அதாவது அக்டோபர் 14ஆம் தேதி நள்ளிரவில் காணமுடியும்.

இந்த நேரத்தில் சனி சந்திரனுக்கு பின்னால் மறைந்திருக்கும். சனியின் வளையங்கள் சந்திரனின் விளிம்பில் தெரியும். இந்த அரியவகை காட்சி இந்தியாவில் நள்ளிரவில் நடைபெறுவதால் அங்கு இதை காண முடியாது.

இந்தியாவைத் தவிர இலங்கை, மியான்மர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் காண முடிகிறது. ஏற்கனவே நடந்த சனி சந்திர கிரகணத்தை தவற விட்டவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பை கண்டுபிடித்த நாசா.!

Quick Share

செவ்வாய் கிரகத்தின் ஆழத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வசிப்பிடத்தை தீர்மானிக்க நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு முக்கியமான நீரின் தடயங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

நாசாவின் செவ்வாய் இன்சைட் லேண்டர் (NASA’s Mars InSight lander) தரவு, கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே 20 கி.மீ ஆழத்தில் தண்ணீரின் தடயங்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு லேண்டர் அனுப்பப்பட்டது. இது நான்கு ஆண்டுகளாக அங்கு நில அதிர்வு தரவுகளை பதிவு செய்து வருகிறது.

ஆராய்ச்சியாளர்கள் தரவை ஆய்வு செய்தனர். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 11.5 கி.மீ முதல் 20 கி.மீ ஆழத்தில் நீரின் தடயங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

தண்ணீர் மேற்பரப்பில் இருந்து உள்ளே சென்றிருக்கலாம் மற்றும் சிந்தியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சிறந்த கல்லூரிகள் பட்டியல் வெளியீடு: தேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் சாதனை!

Quick Share

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் தரவரிசை கட்டமைப்பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (பெங்களூரு) தேர்வு செய்யப்பட்டு தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2 ஆம் இடமும், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவிலுள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதே போன்று கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியலில் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் தரவரிசைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி 2ஆம் இடமும், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி 3ஆம் இடமும் பெற்றுள்ளன. அந்த வகையில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இதே பிரிவில் சென்னை லயோலா கல்லூரி 8வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி 3வது இடத்தை பிடித்துள்ளது. அதோடு சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: மருத்துவர்கள் அதிரடி முடிவு!

Quick Share

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலில் காயங்களுடன், அரை நிர்வாணமாகக் கிடத்தப் பயிற்சி மருத்துவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்பு போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பயிற்சி மருத்துவர் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடந்த 8 ஆம் தேதி (08.08.2024) இரவு நேர பணியில் இருந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதோடு பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக 4வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சந்தீப் கோஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவின் அழைப்பின் பேரில் இந்திய மருத்துவ சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது மருத்துவர்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து மருத்துவ சங்கத்தினரின் சில கோரிக்கைகளை ஏற்க அரசு தயங்கியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “இந்த வழக்கில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணை மற்றும் குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும். பணியிடங்களில் மருத்துவர்களின் குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நேரில் ஆய்வு!

Quick Share

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி இரவு கடும் மழை பெய்த நிலையில், 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் முண்டக்கை என்ற மலைக்கிராமத்தில் திடீரென நிலச்சரிவும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால் மூன்று கிராமத்தில் வசித்த மக்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது.

மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணுக்குள் புதைந்தும் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலரின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழு, காவல்துறை , இந்திய ராணுவம் என அனைத்து துறைகளும் ஒன்றாக சேர்ந்து மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதனிடையே இதனைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர், எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கேரளா வந்த பிரதமர் மோடி, நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டரில் இருந்தபடியே பார்வையிட்டார். 

அவருடன் முதல்வர் பினராயி விஜயன், பாஜக எம்.பி.சுரேஷ்கோபி மற்றும் ஆளுநர் இருந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட பின், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

இந்த நிலையில் ஆய்வுக்குப் பின் பிரதமர் மோடி கல்பெட்டாவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார், இந்த ஆய்வுக்கூட்டத்தில் கேரள மாநில முதன்மைச் செயலர் வேணு பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடிக்கு எடுத்துக்கூறினர். 

பின்பு பிரதமர் மோடியிடம் இந்த பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரண நிதியாக ரூ.2000 கோடி மத்திய அரசு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கேரள முதல்வர், பாஜக எம்.பி.சுரேஷ் கோபி, பாதிப்புக்குட்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ரூ 100 கோடி சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்… வேலையில் இருந்து தூக்கிய எலோன்...

Quick Share

உலகின் மிகப்பெரிய மென்பொருள் அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக IIT பட்டதாரிகளே உள்ளனர்.

மொத்த மதிப்பு ரூ 100 கோடி

பாம்பே IIT பட்டதாரி ஒருவர் பிரபலமான நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிகப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அவரது சம்பளம் சுமார் 8 கோடி என்றாலும், அவருக்கான சலுகைகள், பங்குகள் என மொத்த மதிப்பு ரூ 100 கோடியை எட்டியது.

ஆனால் ஒரே ஆண்டில் அவர் வேலையில் இருந்து தூக்கப்பட்டார். அஜ்மீரில் நன்கு படித்த குடும்பத்தில் பிறந்தவர் பராக் அகர்வால். அகில இந்திய அளவில் 77 வது இடத்தைப் பெற்ற பிறகு, அகர்வால் 2005ல் ஐஐடி பாம்பேயில் பட்டம் பெற்றார்.

வேலையில் இருந்து நீக்கினார்

பின்னர், அவர் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர அமெரிக்கா சென்றார். 2011ல் டுவிட்டர் நிறுவனத்தில் இணையும் முன்னர் யாகூ மற்றும் மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

அவர் சுமார் ஆறு ஆண்டுகளாக டுவிட்டரில் பணிபுரிந்தார். ஆனால் டுவிட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் வாங்கிய பின்னர் ஒரே ஆண்டில் அகர்வாலை வேலையில் இருந்து நீக்கினார். 

டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அவர் வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேரவில்லை என்றே கூறப்படுகிறது.

மத்திய அரசிடம் ரூ.2 ஆயிரம் கோடி கேட்கும் கேரளா

Quick Share

வயநாட்டில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை அமைச்சர் சசீதரன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்’ என தெரிவித்தனர். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணி விரைவில் தொடங்கும் எனவும் கூறினர்.




You cannot copy content of this Website