கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நென்மேனி பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்து. நென்மேனி பகுதியில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் கூறியதை அடுத்து வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வயநாடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏநபட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டைமலை ஆகிய கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதில் 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
தைவானில் மனைவி ஒருவர் தாம்பத்திய உறவுக்கு மற்றும் உரையாடலுக்கு கட்டணம் வசூலித்த நிலையில் வேதனையில் கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தைவானில் வசித்து வரும் ஹாவ்(Hao) என்பவருக்கும் சுவான்(Xuan) என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
கிட்டத்தட்ட 3 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு மனைவி சுவான் கணவர் ஹாவ் உடல் பருமன் அதிகரித்ததை காரணம் காட்டி அவருடனான தாம்பத்திய உறவு மற்றும் உரையாடலை தவிர்க்க தொடங்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த கணவர் ஹாவ், 2021ம் ஆண்டு திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதற்காக விவாகரத்து செய்ய முன்வந்துள்ளார்.
ஆனால், உறவை மேம்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்து ஹாவ் உடனான திருமண வாழ்க்கையை சுவான் தொடர்ந்துள்ளார்.
இதன் பிறகு சுவான் பெயரில் சொத்துக்களை கூட ஹாவ் எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில், நிலைமை மிகவும் மோசமடையும் விதமாக கணவர் ஹாவ்விடம் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு மற்றும் உரையாடல் நடத்துவதற்கு கண்டனமாக NT$500 (தோராயமாக ரூ. 1200) வசூலிக்க தொடங்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த கணவர் ஹாவ் இந்த ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இறுதியில் ஹாவ்-வுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, தம்பதிகள் கடந்த 2 ஆண்டுகளாக நேருக்கு நேர் பேசிக் கொள்ளவில்லை என்றும், சமூக ஊடகத்தின் வழியாக மட்டுமே உரையாடிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
பொதுவாக தற்போது சமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்கை தாண்டி பணம் சம்பாதிக்கும் தளமாக மாறி வருகிறது.
நளாவின் மாத வருமானம்
இன்று பலரும் தங்கள் வீட்டில் நடக்கும் விடயங்களை காணொளியாக பதிவேற்றி அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் மனிதர்கள் மட்டுமல்லாமல் சில விலங்குகளும் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு £12,000 இந்திய ரூபாயில் 1,200,000 ரூபாய் சம்பாதித்து, 84 மில்லியன் பவுண்டுகள் அதாவது ரூ. 852 கோடியுடன் உலகில் பணக்கார மிருகமாக பூனை மாறியுள்ளது.
இவ்வளவு பெரிய பணக்கார பூனையின் பெயர் நளா. விலங்குகள் காப்பகத்தில் இருந்த நளாவை கடந்த 2012 ஆம் ஆண்டில் பூக்கி என்பவர் வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளார்.
இதன்பின்னர் நளா செய்யும் சேட்டைகளை பூக்கி அவரின் சமூக வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்தார்.
இதன் பின்னரே நளா பிஸியான பூனையாக மாறியுள்ளது.
நளாவின் இன்ஸ்டாகிராம் 4.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். அந்த கணக்கில் 7,267 பதிவுகளும் உள்ளன.
இந்த பூனையிடம் மொத்தமாக £84 மில்லியன் நிகர மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் நளா, இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடர்பவர்களை கொண்ட பூனைக்கான கின்னஸ் உலக சாதனையையும் பெற்றுள்ளார்.
மேலும், நான்கு மனித போட்டியாளர்களை விஞ்சி, ஆண்டின் டிக்டோக்கர் பட்டத்தை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு கொடுக்குமாறு ஓலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குருராஜ் என்பவர் வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே பேட்டரியில் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குருராஜ் இ-மெயில் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் ஓலா நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி பிரச்சனையை சரி செய்து தரும்படி கேட்டுள்ளார். இதற்காக திருச்சியில் உள்ள சர்வீஸ் சென்டர், ஓசூரில் உள்ள ஓலாவின் தலைமை அலுவலகம் ஆகியவற்றை பலமுறை அணுகியுள்ளார். ஆனால் ஓலா நிறுவனம் அதற்கு சரியான பதில் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் மீது குருராஜ் சேவை குறைபாடு காரணத்தை குறிப்பிட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம், சேவையை சரியாக செய்யாமல் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஐம்பதாயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்காக பத்தாயிரம் ரூபாயும் என மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்ப்பளித்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக சந்தைப்படுத்தி வரும் ஓலா நிறுவனம் விற்பனைக்கு பிறகான சேவையில் சுணக்கம் காட்டுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஓலா நிறுவனத்திற்கு எச்சரிக்கையை கொடுத்திருப்பதாக இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
சுனிதா விலியம்ஸ் தொடர்பில் கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி
சுனிதா வில்லியம்ஸும் அவரது சக விண்வெளி வீரருமான Butch Wilmoreம் விண்வெளிக்குச் சென்று இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டன.
இந்நிலையில், அவர்கள் இப்போதைக்கு பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களுடைய விண்கலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில், பூமியிலிருந்தவண்ணம் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய சுனிதாவும் Wilmoreம், அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என நேற்று வெளியான தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
வயநாடு நிலச்சரிவில் வளர்ப்பு கிளி எச்சரிக்கை கொடுத்ததால் குடும்பமே உயிர் தப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாகவே பறவைகள் மற்றும் விலங்குகள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறியும் திறன் உடையவை. அந்தவகையில், இளைஞர் ஒருவர் வளர்த்த கிளி கொடுத்த எச்சரிக்கையால் அவரது குடும்பம் நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பியுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலையைச் சேர்ந்தவர் வினோத். இவர், கிங்கினி என்ற செல்லக்கிளியை வளர்த்து வந்துள்ளார்.
இவர் தனது குடும்பத்தினருடன் காலனி சாலை என்ற பகுதியில் உள்ள தனது சகோதரி நந்தாவின் வீட்டிற்கு நிலச்சரிவுக்கு முந்தைய நாள் சென்றுள்ளார். அப்போது, தனது கிளியையும் அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து, இரண்டாவது நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பாக தனது கூண்டுக்குள் கிளி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்பு, பயங்கர சத்தத்துடன் அலற தொடங்கியுள்ளது.
இந்த சத்தத்தை கேட்டு எழுந்து பார்த்த வினோத் ஏதோ பிரச்னை ஏற்படப்போகிறது என்று உணர்ந்துள்ளார். பின்னர், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜிஜின், பிரசாந்த் மற்றும் அஷ்கர் ஆகியோரை அழைத்துள்ளார்.
அப்போது, வீட்டிற்கு வெளியே சேற்று நீர் வழிந்தோடுவது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதில் நிலச்சரிவில் வினோத் மற்றும் ஜிஜின் ஆகியோரின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. பிரசாந்த் மற்றும் அஷ்கர் ஆகியோரின் வீடுகள் ஓரளவு சேதம் அடைந்துள்ளன. தற்போது, வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர்.
விமான பயணத்தின் போது தேங்காய் எடுத்து செல்ல ஏன் அனுமதியில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். விமானத்தில் நாம் பயணம் செய்யும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிலும், நாம் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு விமான நிறுவனங்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளன. இதில் சில பொருட்கள் விமானத்தில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
அந்த வகையில், கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஆகிய பொருட்களை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதியில்லை.
இதனை தவிர விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இந்த தேங்காய் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் பொருளாகும்.
தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதியில்லை.
இந்நிலையில், அண்மையில் விமான நிலைய விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வழக்கமாக மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விமானங்களில் பயணிகள் எடுத்துச் சென்றனர். ஆனால், புதிய விதிமுறையின்படி சில மருந்துகளை துபாய்க்கு விமானங்களில் எடுத்துச் செல்வதைத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் குறித்த மாற்றங்களை பயணிகள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். புதிய விதிமுறைகளின் படியே பயணிகள் பொருட்களை பேக் செய்ய வேண்டும்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கை, கால் வீக்கத்துடன் புதுவித காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் புதுவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கை, கால்கள் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த காய்ச்சல், சிக்கன் குனியாவை போல இருக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை பரிசோதித்த மருத்துவர்கள், ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.
குண்டூர் மாவட்டத்தில் மச்சர்லா மற்றும் பல்நாடு ஆகிய பகுதிகளில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. வீட்டில் ஒருவருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் வந்தாலும் மற்றவர்களுக்கு பரவி வருவதால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 நாட்களில் காய்ச்சல் குறைந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையவில்லை.
இதில், 2 வாரங்களுக்கு மேல் மூட்டு வலி இருந்தால் ஸ்டீராய்டு மருந்தை கொடுத்தால் நிவாரணம் பெற முடியும் என்று நுரையீரல் நிபுணர் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது மனைவியுடன் தேனிலவு சென்றுள்ள ஹோட்டலின் ஒரு நாள் வாடகை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, கடந்த ஜூலை 12 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. உலகின் மிக விலையுயர்ந்த திருமணத்தை நடத்தி ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்து கொண்டார்.
கோடிக் கணக்கில் செலவழித்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமானது மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
குறித்த திருமணமானது பல தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும் வகையில் நடைபெற்றது.
இந்நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது காதல் மனைவி ராதிகா மெர்ச்சண்ட் தேனிலவு சென்றுள்ள ஹோட்டலின் விலை தெரியவந்துள்ளது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இப்போது கோஸ்டாரிகாவில் தங்கள் தேனிலவை கொண்டாடி வருகின்றனர்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகஸ்ட் 1 அன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.
புதுமணத் தம்பதிகள் Casa Las Olas இல் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவுக்கான விலை 30,000 அமெரிக்க டொலராகும். அதாவது ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமாகும்.
குறித்த திருமணத்தில் இவான்கா டிரம்ப், மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜஸ்டின் பீபர் மற்றும் கர்தாஷியன் சகோதரிகள் உட்பட பல விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர்.
திருமணத்திற்கான சரியான செலவு தெரியவில்லை என்றாலும், முகேஷ் அம்பானி, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புடன், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு 5000 கோடி ரூபாய் செலவிட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு அதிகாரி கைது
இந்திய மாநிலமான ஒடிசாவில் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய பிரதீப் குமார் ராத் என்ற அரசு ஊழியர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளார்.
இவர் கடந்த 1991 -ம் ஆண்டில் ரூ.2000 மாத சம்பளத்துடன் அரசு பணியில் சேர்ந்துள்ளார். இதன் பின்னர் 2011 -ம் ஆண்டில் உதவி பொறியாளராக பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து, 2022 -ம் ஆண்டில் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், இவரிடம் பல கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு பொலிஸாருக்கு புகார்கள் வந்தன.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை என்று தெரியவந்ததால் கட்டாக் நகரில் உள்ள தலைமைக் கட்டுமானப் பொறியாளர் அலுவலகத்தில் பிரதீப் குமார் ராத் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வளவு சொத்துக்கள்?
இந்நிலையில், பிரதீப் குமார் ராத் சேர்த்த சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு பொலிஸார் ஒடிசா முழுவதும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
பின்னர், நீதிமன்ற உத்தரவுபடி பிரதீப் குமார் ராத்தின் வீடு உள்பட 12 வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் இவருக்கு 2 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், 45 பிளாட்டுகள் (3வீடுகள் ரூ.1 கோடி மதிப்பு) போன்ற சட்ட விரோதமான சொத்துக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனை தவிர மருந்துக் கடை, கிரஷர் யூனிட், தோராயமாக 1 கிலோ தங்கம், வங்கியில் டெபாசிட்கள் ரூ.1.62 கோடிக்கு மேல் உள்ளது. மேலும், 2 நான்கு சக்கர வாகனங்கள், 2 ஜேசிபிகள், 1 எக்ஸ்கவேட்டர், 1 ராக் பிரேக்கர் ஆகியவையும் உள்ளன.
தற்போது, பிரதீப் குமார் ராத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொலிஸ் காவலில் வைத்து விசாரித்தால் தான் முழுமையாக எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது தெரியவரும்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உருகுலைந்துள்ளன.
இந்நிலையில் 100 பேருக்கு வீடுகளை கட்டிக்கொள்ள இடத்தை வழங்க முன்வந்துள்ள தொழிலதிபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட இரு பெரும் நிலச்சரிவுகள் நாட்டையே உலுக்கியுள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வந்த முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி உள்ளிட்ட மலை கிராமங்கள் மொத்தமாக மண்ணில் புதைந்தன.
இதில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவுகளை இழந்ததோடு, வாழ்நாள் முழுக்க உழைத்து கட்டிய வீடுகளை இழந்துள்ளனர். இனி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வரும் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை வயநாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதற்கிடையே தனக்கு சொந்தமாக இருக்கும் 1000 ஏக்கர் நிலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் 100 வீடுகளை கட்டி கொள்ள நிலம் வழங்குவதாக கூறியுள்ளார் தொழிலதிபர் பாபி செம்மனூர். காலம் முழுக்க உழைத்து வீட்டை கட்டியவர்கள் இந்த நிலச்சரிவில் அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு என் நிலத்தில் இருந்து 100 வீடுகள் கட்டிக்கொள்ள நிலத்தையும் வழங்க இருக்கிறேன். இது தொடர்பாக அமைச்சர்களிடமும் பேசியுள்ளேன். வீட்டை தொலைத்து விட்டு எங்கு செல்வோம் என்று நினைப்பவர்களுக்கு உதவே இந்த
முயற்சி.
பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தயார் செய்து சரியானவர்களுக்கு நிலம் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கும் உதவ இருக்கிறோம். மீட்பு பணிகள் முடிந்த பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பலருடைய பாராட்டை பெற்றுள்ளது. மேலும், இது குறித்து பேசியுள்ள பாபி செம்மனூர், வீடுகளை கட்ட 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றவர் கூடுதலாக தேவைப்பட்டால் அதனையும் வழங்க தயார் என்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) உடனடி நிவாரணங்களை அறிவித்துள்ளது.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வயநாடு மக்களுக்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை நிவாரணம்
அந்தவகையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) உடனடி நிவாரணங்களை அறிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தின் அதிகாரிகளுடன் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, முகாம்களில் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை அரசுடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மக்களுக்கு நிவாரணம் முதல் மறுகட்டமைப்பு வரை அனைத்துவிதமான உதவிகளையும் இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீடா அம்பானி, கேரளாவில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்து, “வயநாடு மக்களின் துயரம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பெரும் சேதத்தால் நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம்.
எங்கள் ரிலையன்ஸ் அறக்கட்டளை குழுக்கள் மாவட்ட மக்களுக்கு உடனடி பதில், மீட்பு மற்றும் நீண்ட கால தேவைகளை செய்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் கேரள மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம்” என்று கூறியுள்ளார்.
1.பழங்கள், பால், உலர் உணவுகள், சமையலறை பாத்திரங்கள் மற்றும் குடும்பங்களுக்கு அடுப்பு போன்ற பிற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட சத்தான உணவுகளை வழங்குதல்.
2. சுத்தமான தண்ணீர், சுகாதாரமான கழிப்பறைகள், மக்களுக்கு அன்றாடம் தேவையான சோப்பு, பற்பறை உள்ளிட்ட பொருட்கள்.
3. பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள், படுக்கைகள், சூரிய ஒளி விளக்குகள், உடைகள் மற்றும் துப்புரவுப் பொருட்கள்
4. விவசாயிகளுக்கு விதைகள், தீவனம், கருவிகள் மற்றும் விவசாயத்தில் மீண்டும் கவனம் செலுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த பயிற்சிகள்.
5. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியைத் தொடர்வதை உறுதிப்படுத்த புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட கல்வி உதவி
6. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொலைதொடர்பு வசதியில் இருக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ பிரத்யேக டவர்கள்.
7. நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள், குணமடைய தேவையான உதவிகள்.