ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் காணப்பட்ட விலை உயர்ந்த பொருட்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டினை திருமணம் செய்துள்ளார்.
இவர்களுடைய திருமணம் தான் தற்போது அனைவரது பேச்சாகவும் இருந்து வருகிறது.
மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் குறித்த திருமணமானது பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணம் பல தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும் வகையில் நடைபெற்றது.
இதற்கு பல தரப்பில் இருந்து பல பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள். அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி போன்ற பல பிரபலங்கள் ஒரே இடத்தில் குவிந்தனர்.
இதற்கு முன்னர் முதலாம் கொண்டாட்ட விழா ஜாம்நகரில் நடைபெற்றது. அதில் ரிஹானாவின் (Rihanna) தனிப்பட்ட இசை நிகழ்ச்சி மற்றும் பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜின் (Diljit Dosanjh) நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
ரூ.500 கோடி நெக்லஸ் முதல் ரூ.67 கோடி கடிகாரம் வரை – ஆனந்த் அம்பானி திருமணத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் | Most Expensive Things At Anant Ambani Wedding
இரண்டாம் கட்ட கொண்டாட்டம் சொகுசு கப்பல் ஒன்றில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் கோடிக் கணக்கில் செலவிழித்து வந்தனர்.
அந்தவகையில் அனைவரது வாயையும் பிழக்க வைத்த அம்பானி வீட்டு திருமணத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அம்பானி திருமணத்திற்கான செலவு இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் செலவை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளுக்கு மட்டுமே 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது.
ஜஸ்டின் பீபர் மற்றும் ரிஹானா ஆகிய இரு வெளிநாட்டு கலைஞர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து நிகழ்ச்சிகளை வழங்கினர்.
அம்பானி குடும்பத்தின் ஆடம்பரமான ஆடைகள் மற்றும் நகைகளை புறக்கணிப்பது கடினம்.
500 கோடி மதிப்பிலான மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் நீதா அம்பானி அணிந்திருந்தார். இந்த நெக்லஸ் உலகின் மிக விலையுயர்ந்த பொருட்களில் ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஆனந்த் அம்பானி ரூ.67.5 கோடி மதிப்பிலான Patek Philippe கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார்.
அம்பானி குடும்பத்தினர் விலையுயர்ந்த நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடைகளை அணிந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் விருந்தினர்களுக்கும் விலையுயர்ந்த பொருட்களை வழங்கியுள்ளனர்.
2 கோடி மதிப்பிலான கடிகாரத்தை, விக்கி கவுஷல் (Vicky Kaushal), ரன்வீர் சிங் (Ranveer Singh), ஷாருக்கான் (Shah Rukh Khan) உள்ளிட்ட திரையுலகில் உள்ள தனது நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் ஆனந்த் அம்பானி வழங்கியுள்ளார்.
தங்கச் சங்கிலிகள், வடிவமைக்கப்பட்ட காலணிகள் மற்றும் Louis Vuitton purses பலரால் வாங்கப்பட்டன. விருந்தினர்களை வரவழைப்பதற்காக தனியாக விமானங்கள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில் முடித்தது மாத்திரமின்றி லண்டனில் செய்யவும் திட்டமிட்டள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் 5000 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்தாலும் அம்பானி குடும்பத்தினர் இன்னும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.