இந்தியா

பிரம்மாண்டமாக நடந்த அம்பானி வீட்டு திருமணம்..மணமக்களை வாழ்த்த வருகிறார் பிரதமர் மோடி!

Quick Share

அம்பானி வீட்டு மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இந்திய பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அம்பானி வீட்டு திருமணம்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற ‘சங்கீத்’ விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் நேற்று (ஜூலை 12 -ம் திகதி) ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. 

இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.

இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி, நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

மேலும், அரசியல் தலைவர்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்களுக்கும் திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நேற்று நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் பங்கேற்காத மோடி இன்று கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.29,500 கோடி மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்த நரேந்திர மோடி இன்று மும்பை செல்கிறார். இந்த பயணத்தின் போது மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.   

3 ஜெட் விமானங்கள், 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள்: அம்பானி வீட்டு திருமணத்திற்கு...

Quick Share

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்காக 3 ஜெட் விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது. இவர்களின் ‘சங்கீத்’ விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் வரவுள்ளதால், அவர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உலகம் முழுவதும் இருந்து வரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்காக 3 பால்கன் ஜெட் (Falcon-2000 jets) விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், இந்த பிரம்மாண்டமான திருமணத்திற்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பானி மகன் திருமணம் பொது நிகழ்ச்சி அல்ல: சாலைகளை மூடுவதற்கு கடும் எதிர்ப்பில் மக்கள்!

Quick Share

ஆனந்த் அம்பானியின் திருமணத்தையொட்டி ஜியோ வேல்டு சென்டருக்கு செல்லும் சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் வரவுள்ளனர்.

இதனால், பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் ஜியோ வேல்டு சென்டருக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் ஜூலை 12 -ம் திகதியில் இருந்து மூன்று நாட்கள் மூடப்படும் என்று போக்குவரத்து காவலர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதற்கு, பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மகேஷ் என்ற ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “அம்பானி வீட்டு திருமணம் தனியார் திருமணம் தான், இது ஒன்றும் பொது நிகழ்ச்சி அல்ல. இதற்காக பொதுமக்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்.

சாலைகள் தனியார் சொத்து கிடையாது. அப்படியானால், இதற்கு ஏன் அதிகாரிகள் சாலையை மூட வேண்டும்? இதுபோல வசதி படைத்த யாராவது விவாகரத்து செய்தால் வீட்டில் இருக்க வேண்டும் என்று தடையுத்தரவு போடுவீர்களா?” என்று கூறியுள்ளார்.

அதேபோல மற்றொருவர், “இது அதிகாரத்தின் வெளிப்பாடு. அதிகாரத்திற்கு அரசு பணிந்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார். இதுபோல, பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்” – பரபரப்பை ஏற்படுத...

Quick Share

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய நபராக இருக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணமதிப்பிழப்பு (Demonetization) குறித்து பேசியது பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த இந்திய அரசு, அதற்கு பதிலாக ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் விட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ரூ.2,000 நோட்டுகளையும் பணமதிப்பிழப்பு செய்தது.

இந்நிலையில் தான் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணமதிப்பிழப்பு (Demonetization) குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதியில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான வாங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு இது தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் பெரும் தொகையை சிலர் கொள்ளையடித்துள்ளனர். இதனால் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த சந்திரபாபு நாயுடு அவற்றிற்கு பதிலாக டிஜிட்டல் நோட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதன்பின்னர் தான் பணமதிப்பிழப்பு குறித்த விவாதம் மீண்டும் உருவெடுத்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய நபராக இருக்கும் சந்திரபாபு நாயுடு இந்த மாதிரியான கருத்துக்களை கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

முன்னதாக இவர் கடந்த 2017 -ம் ஆண்டில் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆணாக மாறிய பெண் உயர் அதிகாரி: இந்திய அரசு எடுத்த முக்கிய முடிவு!

Quick Share

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொண்ட அதிகாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய வருமான வரித்துறை (IRS) வரலாற்றில் முதல் முறையாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது பெயர் மற்றும் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள இந்திய மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்களுக்கான நுழைவு வாரியம், மற்றும் வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னதாக கூட்டு ஆணையராக பணியாற்றிய எம். அனுசுயா(M Anusuya) அவர்கள் இனி அதிகாரப்பூர்வமாக எம். அனுகதீர் சூர்யா(M Anukathir Surya) என அடையாளம் காணப்படுவார் என தெரிவித்துள்ளது.

சென்னையில் உதவி ஆணையராக (2013) தனது பணியைத் தொடங்கிய சூர்யா, 2018ம்ப ஆண்டு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் இளங்கலை பட்டமும், சைபர் சட்டம் மற்றும் சைபர் குற்றவியல் துறையில் முதுநிலை டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைத் தொடர்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது.

இத்தீர்ப்பில், ஒரு நபர் மருத்துவ முறைகளுடன் தனது பாலின அடையாளத்தை ஒத்துப்போகும் வகையில் தனது பாலினத்தை மாற்றிக்கொண்டால், அதை அங்கீகரிப்பதில் எந்த சட்டத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்திய நிதி அமைச்சகத்தின் இந்த முடிவு இந்த உணர்வை பிரதிபலிக்கிறது, மேலும் இந்திய சிவில் சேவையில் எதிர்காலத்தில் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது!

Quick Share

இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா பயணத்தின் போது சிறப்பு மரியாதையை பெற்றார். ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான ‘The Order of Saint Andrew the Apostle’ அவருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரதமர் மோடிக்கு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மோடியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு மிக உயர்ந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக புடின் கூறினார்.

இந்நிலையில், ரஷ்ய விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பதிலளித்துள்ளார். ரஷ்ய அரசாங்கத்தால் தி ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் விருது வழங்கப்படுவதை ஒரு கௌரவமாக கருதுவதாக அவர் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர் ரஷ்ய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

ரஷிய பயணத்தின் போது புடினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக மோடி தெரிவித்தார்.

வர்த்தகம், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம், புத்தாக்கம் போன்ற துறைகளில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிவித்த அவர், மக்களிடையே நேரடி உறவுகளை வளர்ப்பதற்கும், இணைப்பை அதிகரிப்பதற்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதிர்ச்சி! ஒரே நபரை 6 முறை கடித்த விஷ பாம்புகள் ..சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே க...

Quick Share

கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகளிடம் இளைஞர் ஒருவர் கடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக மக்களின் மத்தியில் பாம்புகள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவை என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

35 நாட்களில் 6 முறை

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விகாஸ் தூபே (வயது 24). இவரை கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகள் கடித்துள்ளது. 

இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, முதல் முறையாக கடந்த ஜூன் -2 திகதி பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார்.

பின்னர், ஜூன் 2 முதல் ஜூலை 7 -ம் திகதி வரை 6 முறை பாம்பு கடித்துள்ளது. இவர், வீட்டில் இருப்பதால் தான் பாம்பு கடிக்கிறது என்று உறவினர் வீட்டிற்கு விகாஸை அவரது பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர். 

ஆனால், உறவினர் வீட்டில் வைத்தும் 5-வது முறையாக கடித்துள்ளது. அதன்பிறகு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று 6 -வது முறையாக கடித்துள்ளது.

இதுகுறித்து விகாஸ் தூபே கூறுகையில், “என்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. என்னை கடிக்க போவதை முன்கூட்டியே என்னால் உணர முடிகிறது” என்றார். 

பேரன், பேத்திகளுடன் முகேஷ் அம்பானி-நீதா அம்பானி: திருமண வீட்டை கலக்கிய வீடியோ!

Quick Share

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தனது பேரன்களுடன் இருக்கும் இனிமையான வீடியோ காட்சி  ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கான சங்கீத விழாவிற்கு சரியான தொடக்கமாக அமைத்துள்ளது.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.

சினிமா, கிரிக்கெட் உலக பிரபலங்கள் உட்பட பல தலைசிறந்த பிரமுகர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட சங்கீத விழாவை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர்.

இந்த பிரமாண்ட விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அவற்றில், குறிப்பாக ஒரு வீடியோ அனைவரது இதயத்தையும் கவர்ந்துள்ளது.

பாட்டி, தாத்தா, பேரன், பேத்திகள்!

இந்த வீடியோவில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியர் தங்களது நான்கு பேரன், பேத்திகளான பிருத்வி, ஆதியா, கிருஷ்ணா மற்றும் வேதா ஆகியோருடன் இணைந்து இனிமையான இசை காட்சியில் நடித்துள்ளனர்.

ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீடு – திருமணத்திற்காக எப்படி அலங்கரிக்கப்பட்ட...

Quick Share

உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீட்டை திருமணத்திற்கு வெகு விமர்சையாக அலங்கரித்துள்ளனர்.

ஆண்டிலியா வீடு 

இந்த வீடானது பல சிறப்பம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு, மும்பையின் மையத்தில் இந்த ஆடம்பர வீடு காணப்படுகிறது.

இது இந்தியாவின் விலையுயர்ந்த குடியிருப்பு சொத்து ஆகும். குறித்த வீடானது 27 மாடிகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது.4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டு உயர்தர வசதியில் கட்டப்பட்டுள்ளது.  

இந்த வீட்டில் பெரிய தியேட்டர், spa, நீச்சல் குளம், அதிநவீன சுகாதார மையம், swift elevators, பணி அறை, 600 பணியாளர்களுக்கான தங்குமிடம், 160 வாகனங்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர் நிற்கும் வகையில் வாகன தரிப்பிடம் என்பவை காணப்படுகின்றன.இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு வீட்டை பிரமாண்டமாக அலங்கரித்துள்ளனர்.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் பிரமாண்ட ஆண்டிலியா வீடு தற்போது பிரமாண்டமான விளக்குகள் பிரமிக்க வைத்து காணப்படுகிறது.

ஒவ்வொரு தளத்தையும் அலங்கரிக்கும் வகையில் லேசர் விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் பூக்களை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வேப்ப மரத்திலிருந்து கொட்டும் பால்: ஆச்சரியத்தில் மக்கள்

Quick Share

கந்தளாய், டோசர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து பால் திரவம் போன்று வெளியே ஆரம்பித்துள்ளது. கடந்த ஒன்பதாம் திகதி முதல் இந்த திரவம் வெளியேற ஆரம்பித்துள்ளதை பார்வையிட காண ஏராளமானோர் குவித்து வருகின்றர்.

அஜித் பிரேமசிறி என்பவரின் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து வரும் இந்த திரவமானது இனிப்பான சுவை கொண்டதாகவும் அங்கு வரும் அனைவரும் மிகவும் சுவையாக உள்ளதாக பருகி வருகின்றனர்.

புதிய வீடு கட்டுவதற்கான அடித்தளத்தை வெட்டத் தொடங்கிய அன்று, கிளைகளை அகற்றும் போது குறித்த மரத்தில் இருந்து வெள்ளை நிற திரவம் வெளியேறியதாக வீட்டின் உரிமையாளராக அஜித் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த மாற்றம் தனக்கு அதிர்ஷ்டவசமாக நடக்கின்றதா அல்லது துரதிர்ஷ்டவசமாக நடக்கின்றதா என்ற கேள்வி எனக்குள் உள்ளது என அஜித் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

மேலும், விஞ்ஞான ரீதியாக வேப்ப மரத்தில் இவ்வாறான திரவம் வெளியேறுவது இயற்கையான ஒன்றாகும் எனினும் கசப்பு தன்மையை கொண்ட வேப்ப மரத்தில் இனிப்பான திரவம் வெளியேறுவது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த அதிசய நீல நிற வைர நெக்லஸ்: சுவாரஸ்யமான பின்னணி!

Quick Share

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், வைர வியாபாரி ரத்தன் தாஸ் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு முன்னதாக, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒரு பிரமாண்டமான படகு சவாரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

ராதிகா மெர்ச்சன்ட் இந்த நிகழ்ச்சிக்கு, புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஷலீனா நதானி வடிவமைத்த கவர்ச்சியான நீல நிற ஆடையை அணிந்திருந்தார்.

இந்த ஆடை ரொமான்டிக் மற்றும் இளமையான தோற்றத்தை கொண்டிருந்ததாக ராதிகா பூரிப்போடு தெரிவித்தார்.

இந்த நீல நிற ஆடைக்கு பொருத்தமாக, ராதிகா ஒரு அரிய நீல நிற ஓபல் நெக்லஸை அணிந்திருந்தார். இந்த நெக்லஸை லோராய்ன் ஸ்வார்ட்ஸ் வடிவமைத்திருந்தார்.

நீல நிற ஓபல் ராதிகாவின் ஜென்ம ராசி கல் என்பதும், அதில் உள்ள வைரங்கள் ஆனந்த் அம்பானியின் மகிழ்ச்சியை பிரதிபலித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நெக்லஸ், ராதிகாவையும் ஆனந்தையும் பிணைத்திருப்பது போன்ற ஒரு சின்னமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனந்த் அம்பானி இந்த நிகழ்ச்சிக்கு, பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் டோல்ஸ் அண்டு கப்பானா வடிவமைத்த ஒரு தரமான ஆடையை அணிந்திருந்தார்.

இந்த ஆடை அவருக்காகவே தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்தது மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்றபடி மிகவும் ஆடம்பரமாக இருந்தது.

இவங்க கல்யாணம் தான் இந்தியாவின் விலை உயர்ந்த கல்யாணமாம் – எத்தனை கோடி செலவு தெரிய...

Quick Share

பிராமணி மற்றும் ராஜீவ் ரெட்டியின் திருமணம் இந்தியாவின் மிக விலை உயர்ந்த திருமணமாக உள்ளது. திருமணங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்பது அனைவருக்கும் தெரியும். தங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக மாற்ற, பலர் தங்கள் சிறந்த முயற்சிகளை செய்கிறார்கள். பணக்காரர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் தங்களின் செல்வத்தை தாராளமாக செலவிட்டு, மிகவும் பிரமாண்டமான திருமணங்களை நடத்துகிறார்கள்.

இந்தியாவில் நடந்த மிகவும் விலை உயர்ந்த திருமணங்களில் ஒன்று, தொழிலதிபர் விக்ரம் தேவா ரெட்டியின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும், சுரங்க அதிபர் ஜி. ஜனார்தன் ரெட்டியின் மகள் பிராமணி ரெட்டிக்கும் நடந்த திருமணம். இந்த திருமணம் ஆடம்பரம் மற்றும் செலவுகளுக்கு பெயர் பெற்றது.

திருமண அழைப்பிதழ்களே இந்த திருமணத்தின் ஆடம்பரத்திற்கு முதல் சான்றாக இருந்தன.

நீல நிற பெட்டியில் வந்த இந்த அழைப்பிதழ்களில், LCD திரையில் மணமக்களின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இந்த அழைப்பிதழ்களுக்கு மட்டும் 50 லட்சம் ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது.

50,000 விருந்தினர்கள், 5 நாட்கள் கொண்டாட்டம் இந்த திருமண விழா 5 நாட்கள் நடைபெற்றது. 550 ரூபாய் மதிப்புள்ள திருமண விருந்தில், 50,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கான செலவு 100 கோடி முதல் 500 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.




You cannot copy content of this Website