உயிருக்கு ஆபத்தாகும் உடல்பருமன்!
உடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் அதிகமாகி வரும் தீவிரமான ஆரோக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தற்காலத்தில் பெரும்பாலானோர் ஒரே இடத்தில் அமர்ந்தபடி மணிக்கணக்கில் வேலைப்பார்க்கின்றார்கள். அதனால் உடல் உழைப்பு மிகவும் அருகி வருகின்றது. மேலும் போதிய உடற்பயிற்சியின்மை, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு. சமூக வலைத்தளங்களின் பெருக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுகின்றது.
உடலின் எடை அதிகரிப்பதன் காரணமாக நமது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. தற்காலத்தில் அதினரித்து கொண்டே செல்லும் இந்த உடல் பருமன் பிரச்சினைக்கு என்ன காரணம் அதனால் எவ்வாான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது தொடர்பில் முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆய்வறிக்களின் அடிப்படையில் தினசரி உடல் கூட்டியக்க ஒத்திசைவு என்ற சர்கேடியன் இசைவில் தொந்தரவு அல்லது மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் ஹார்மோன்கள் சமச்சீர் குலைவு அடைந்து உடல் பருமன் ஏற்படுகிறது என குறிப்பிடுடப்படுகின்றது.
இது வேறொன்றும் அல்ல, நாம் பயலாஜிக்கல் கிளாக் என்கிறோமே அதுதான் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதாவது உடலின் பயலாஜிக்கல் கிளாக் என்ற உடல் இயக்க இயற்கை கடிகாரம் பழுதடைந்து ஹார்மோன் சமச்சீரைக் குழப்புவதே உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணமாக அமைகின்றது.
மேலும் உடல் பருமன் என்பது ஆரோக்கியமற்ற உணவு, போதிய தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் தூண்டப்படும் ஒரு வாழ்க்கைமுறைக் குறைபாடாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் இது மரபணு காரணிகள் அல்லது முன்பே இருக்கும் உடல்நலக் பிரச்சினைகள் காரணமாகவும் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள தவறான ஆரோக்கியம் அற்ற உணவு முறையை பின்பற்றுதல் உட்கார்ந்தே இருக்கும், மந்தமான மற்றும் செயல்பாடற்ற வாழ்க்கைமுறை.
போதுமான அளவு தூங்காமல் இருப்பது ஹார்மோன் மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம். இது தொடர்ந்து பசி உணர்வுகளைத் தூண்டி, சர்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் கலோரி அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிட தூண்டும்.
மரபியல் ரீதியில் உடலின் ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் உடல் பருமன் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையைக் குறைப்பது கடினமாக இருக்கலாம். இது இறுதியில் உடல் பருமன் பிரச்சினையை தோற்றுவிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அதிகரித்த மன அழுத்தத்தை சரிசெய்ய பெரும்பாலானவர்கள் விரும்பிய உணவுகளை அதிகமாக உண்ணுவதை வழக்கமாக வைத்திருப்பதும் உடல் பருமன் பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.
உடல் எடை மிக அதிகமாக அதிகரிக்க துவங்குகிறது என்பதைக் கண்டறிவதற்கு வேறு எந்த வித்தியாசமான அறிகுறிகளும் இருக்காது.
நமது உடல் எடையால் மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூட்டு வலி, முதுகு வலி பேற்ற அறிகுறிகள் இருக்கலாம்.ஆனால் இது உடல் பருமனால் தான் தோன்றுகிறது என்று மட்டும் கருத முடியாது. வேறு நோய் அறிகுறியாகவும் இருக்கலாம்.
பொதுவாக பதின்பருவத்தில் அல்லது பெரியவரான பின்னர் அல்லது குழந்தை பருவத்தில் உடல் உறுப்புகளிலும் திசுக்களிலும் மிக அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால், அவர்கள் உடல் பருமன் உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.
ஒரு நபரின் உடல் பருமனின் அளவைக் கண்டறிவதற்கு BMI (பாடி மாஸ் இண்டெக்ஸ்) எனப்படும் மெட்ரிக்கை உடல்நல பராமரிப்பு வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர்.
அதன் பிரகாரம் BMI என்பது தனிநபரின் எடையை கிலோகிராமில் எடுத்து, தனிநபரின் உயரத்தை மீட்டர் ஸ்கொயர்டால் வகுப்பதன் மூலம் அதனை கணிக்கின்றார்கள்.
அதாவது ஒருவரின் BMI 18.5க்குக் குறைவாக இருந்தால், அந்த நபர் எடை குறைவாக இருப்பார். ஆரோக்கியமான உடல் எடைக்கும் உயரத்திற்குமான விகிதம் 18.5 முதல் 22.9 வரை BMI-ஐக் கொண்டிருப்பதாகும்.
23 முதல் 24.9 வரம்பில் உள்ள BMI அதிக உடல் எடையைக் குறிக்கின்றது. மேலும், 25 மற்றும் அதற்கு மேல் இருந்தால், அந்த நபர் உடல் பருமன் பிரச்சினையை கொண்டுள்ளார் என கண்டறியலாம்.
உடல் பருமன் மிகவும் கடுமையானதாக இருந்தால், BMI 30 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், எடை இழப்பைத் தூண்டுவதற்கு சில மருந்துகளை மருத்துவ ஆலோசனையுடன் பெற்றுக்கொள்ளலாம்.
அதிப்ப்படியான பருமனான நபரின் உடலில் இருந்து கொழுப்பை அகற்ற, எண்டோஸ்கோபிக் செயல்முறை அல்லது பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலமும் உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கப்படுகின்றது.
ஆனால் உடல் பருமன் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டுவர முக்கியமாக உணவு முறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்.
துரித உணவுகளின் நுகர்வு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளின் நுகர்வை தவிர்ப்பது உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும்.
முறையான உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் யோகா கலை பயிற்சி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை முறையாக பின்பற்றுவதும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க துணைப்புரியும்.
முக்கியமாக சரியான நேரத்திற்கு தூங்க வேண்டியது இன்றியடையாதது. உடல் கூட்டியக்க ஒத்திசைவு என்ற சர்கேடியன் இசைவு பாதிக்கப்டுவது போதியளவு தூக்கமின்மை காரணமாகவே நிகழ்கின்றது.
இது போன்ற நடிவடிக்கைகளை முறையாக பின்பற்றுவது உடல் பருமன் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.