லைப்ஸ்டைல்

ஆண்களை குறி வைக்கும் மார்பக புற்றுநோய்!

Quick Share

மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பெண்களை மட்டுமே பாதிக்கும் ஒரு நோயாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு எந்த வயதிலும் ஏற்படலாம் ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட வயதான ஆண்களில் இந்த நோய் மிகவும் பொதுவானது. ஆண்களில் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் இதை சுலபமாக சரி செய்ய முடியும். ஆண்களுககு இந்த நோய் செயல்படாத பால் குழாய்கள், சுரப்பிகள் மற்றும் மார்பக திசுக்களில் மூலம் ஏற்படும் ஒரு வகை புற்றுநோயாகும்.

ஆண்களின் மார்பகங்களில் கொழுப்பு திசுக்கள், மார்பக செல்கள் மற்றும் குழாய்கள் உள்ளன. இது திசுக்கள் பருவமடைவதற்கு முந்தைய பெண்ணின் மார்பகத்தைப் போலவே இருக்கும்.

ஆனால் ஆண்களின் இந்த திசுக்களில் பெண் ஹார்மோன்கள் குறைவாக இருப்பதால் அவை அதிகம் வளராது. ஆரோக்கியமான செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளரும்போது புற்றுநோய் உருவாகிறது, இது கட்டி எனப்படும் செல்களை உருவாக்குகிறது.

இதுவே ஆண்களுக்கான மாற்பக புற்றுநோயாக காணப்படுகின்றது. இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் மழுமையாக பார்க்கலாம்.

ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் பொதுவாக முலைக்காம்புகளுக்கு பால் கொண்டு செல்லும் குழாய்களில் அல்லது தாய்ப்பாலை உருவாக்கும் சுரப்பிகளில் தொடங்குகிறது. இந்த குழாய்கள் மற்றும் சுரப்பிகள் ஆண்களில் உள்ளன ஆனால் அவை ஆண்களுக்கு செயல்படாது.

மார்பக திசுக்களில் வளரும் புற்றுநோய்கள் சர்கோமாக்கள் ஆகும். அதாவது (கொழுப்புகள், தசைகள் மற்றும் ஆழமான தோல் திசுக்கள் போன்ற மென்மையான திசுக்களில் உருவாகும் புற்றுநோய்) மற்றும் லிம்போமாக்கள் (உடலின் நோயெதிர்ப்பு மண்டல செல்களில் உருவாகும் புற்றுநோய்).

இந்த நோய் செல்கள் நிணநீர் மண்டலத்தில் அல்லது மற்ற உடல் பாகங்களுக்கு செல்களை கொண்டு செல்லும் இரத்தம் மூலம் பரவுகிறது. நமது நிணநீர் அமைப்பு நிணநீர் நாளங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த நிணநீர் நாளங்கள் மார்பகத்திலிருந்து நிணநீர் எனப்படும் திரவத்தை எடுத்துச் செல்கின்றன மேலும் நிணநீர் கழிவுப் பொருட்கள் மற்றும் திசு திரவத்தைக் கொண்டுள்ளது.

இதனால் மார்பக புற்றுநோய் செல்கள் நிணநீர் நாளங்களில் நுழைவதன் மூலம் நிணநீர் முனைகளில் வளரத் தொடங்குகின்றன. இதன் காரணமாக நிணநீர் மண்டலங்களுக்கு புற்றுநோய் செல்கள் பரவுவதால் உடலின் மற்ற பகுதிகளுக்கும் புற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

மரபணு மாற்றங்கள் : BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. இதற்கு குடும்ப வரலாறும் ஒரு மரபணு முன்கணிப்பைக் குறிக்கலாம்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் : ஈஸ்ட்ரோஜனின் உயர்ந்த அளவுகள் அல்லது குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் மார்பக புற்றுநோய் அபாயத்திற்கு பங்களிக்கும்.ஆண்கள் கூடுதல் எக்ஸ் குரோமோசோமுடன் பிறக்கிறார்கள். அவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜனின் அதிக அளவு மற்றும் குறைந்த அளவு ஆண்ட்ரோஜன்கள் (ஆண் ஹார்மோன்கள்) உள்ளன. எனவே, அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

கதிர்வீச்சு வெளிப்பாடு : மார்புக்கு முந்தைய கதிர்வீச்சு சிகிச்சை, குறிப்பாக லிம்போமா போன்ற நிலைமைகளுக்கு, ஆபத்தை அதிகரிக்கலாம். இது கதிர்வீச்சு அல்லது புற்றுநோயை உண்டாக்கும். இரசாயனங்கள் டிஎன்ஏ மாற்றங்களுக்கு வழிவகுக்கும். BRCA1 மற்றும் BRCA2 கட்டி அடக்கி மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தால் ஆண்களுக்கு இந்த நோய் உண்டாகும்.

க்லைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் : இந்த மரபணு நிலை, கூடுதல் எக்ஸ் குரோமோசோம் மூலம் வகைப்படுத்தப்படுகிறது, இது மார்பக திசு வளர்ச்சி மற்றும் ஆபத்தை அதிகரிக்கும்.

உடல் பருமன் : அதிக உடல் கொழுப்பு அளவுகள் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுப்பதுடன் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

மது அருந்துதல் : அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களின் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் நோய் : கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் நிலைகள் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும், மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.

ஆண்களில் கல்லீரல் ஈரல் அழற்சி ஈஸ்ட்ரோஜனை அதிகரித்து ஆண் ஹார்மோன்களைக் குறைக்கும். இது ஆண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

வயது: ஆண்களில் மார்பக புற்றுநோய்க்கான மிக முக்கியமான ஆபத்து காரணிகளில் ஒன்று வயதானது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

மார்பக கட்டி: மார்பகத்திலோ அல்லது அக்குளிலோ அல்லது அதற்கு அருகில் ஒரு கட்டி அல்லது நிறை வளரலாம். பொதுவாக, இது கடினமானது மற்றும் வலியற்றது மற்றும் நகராது. ஆண்களில் சிறிய அளவிலான மார்பக திசுக்கள் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் ஒரு சிறிய கட்டியை உணர எளிதாக்குகிறது.

முலைக்காம்பு பிரச்சினைகள்: முலைக்காம்புகள் உள்நோக்கித் திரும்புவது மார்பகப் புற்றுநோயின் மற்றொரு அறிகுறியாக இருக்கலாம். முலைக்காம்புகளில் இருந்து தெளிவான திரவம் அல்லது இரத்தம் சேர்ந்த திரவம் வெளியேறும்.

மார்பகங்களின் தோற்றம்: மார்பகங்களின் வடிவம் அல்லது அளவு மாற்றத்தை நீங்கள் உணரலாம். ஆரஞ்சு தோலைப் போன்ற மார்பகங்களின் தோலில் பள்ளங்கள் தோன்றக்கூடும். மார்பகங்களில் சிவப்பு, வீக்கம் அல்லது செதில் தோலை நீங்கள் காணலாம்.

வலி: உங்களுக்கு மார்பகத்தில் வலியற்ற நிறை அல்லது கட்டி இருக்கலாம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் மென்மை அல்லது வலியை அனுபவிக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் ஆண்கள் உடலில் ஏற்பட்டால் இது மார்பக புற்றுநோயின் அறிகுறியாகும்.

சளி தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தூதுவளை ரசம்!

Quick Share

பொதுவாகவே காலநிலை மாறும் போது குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்ளுக்கும் சரி சளியும் இருமலும் வந்துவிடுகின்றது. சளி இருமல் வந்துவிட்டால் கூடவே தொண்டைவலியும் வந்துவிடும் சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம்.

அப்படி சளி தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை மூலிகையான தூதுவளையில் எவ்வாறு சிறுவர்களும் விரும்பி உண்ணும் வகையில் ரசம் செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

புளி – நெல்லிக்காய் அளவு 

தக்காளி – 2

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – தேவையான அளவு 

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி 

கொத்தமல்லி – சிறிதளவு

பொடி செய்வதற்கு தேவையானவை

சீரகம் – 1 தே.கரண்டி 

மிளகு – 1 தே.கரண்டி

வரமிளகாய் – 1 

மல்லி – 1 மேசைக்கரண்டி 

துவரம் பருப்பு – 1 மேசைக்கரண்டி

பூண்டு – 7-8 பல் 

தூதுவளை இலை – 1 கைப்பிடியளவு 

நெய் – 1 மேசைக்கரண்டி

கடுகு – 1 தே.கரண்டி 

வரமிளகாய் – 2 

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகையளவு 

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து, அதில் புளியை சேர்த்து ஊற வைத்துக் சாறு தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும் 

பின்னர் புளி கரைசலுடன் தக்காளியையும் அரைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அதனையத்து சீரகம், மிளகு, வரமிளகாய், மல்லி, துவரம் பருப்பு, பூண்டு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் தூதுவளை இலையை சேர்த்து நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து, புளிச்சாற்றுடன் அரைத்த கலவையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்ர் அதனுடன் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கரைத்து வைத்துள்ளதை ஊற்றி, நுரைக்கட்ட ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லியை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் தூதுவளை ரசம் தயார்.

உடலில் பல நோய்களுக்கு மருந்தாகும் கம்பு தயிர் சாதம்!

Quick Share

கம்பு சாதம் ஒரு ஆரோக்கியமான உணவாகும். முற்காலத்தில் இருந்த நமது முன்னோர்கள் இந்த உணவுகை போல பல உணவுகளை சாப்பிட்டு தான் இன்றுவரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். இது பலரம் அறியாத ஒரு வித்தியாசமான உணவாகும். கிராமத்து மறையில் செய்யப்படுவது. 100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது. கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் உடலுக்கு இதமாக இருக்க கம்பு சாதத்தில் மாங்காய், இஞ்சி, கேரட் தூவி சாப்பிட இன்னும் இன்னும் சாப்பிட தோன்றும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கம்பு – ஒரு கப்

பால் – ஒன்றரை கப்

தயிர் – அரை கப்

கேரட் – 1 (துருவியது)

கடுகு – கால் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

வர மிளகாய் – 2

இஞ்சி – ஒரு துண்டு (துருவியது)

மாங்காய் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிது

செய்யும் முறை

முதலில் கம்பு-வை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்த கம்பை காய்ந்த மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்துக்கு உடைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவேண்டும். இது 4 முதல் 5 விசில் விட்டு, இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும்.

பின்னர் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அத்துடன் கறிவேப்பிலை, வர மிளகாய், பொடித்த பச்சை மிளகாய், துருவிய இஞ்சி என்பவற்றை சேர்த்து வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவேண்டும் இறுதியில், உப்பு, பொடியாக நறுக்கிய மாங்காய், துருவிய கேரட், தயிர், தேவையான அளவு சூடான தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

தயிர் சாதம் இப்போது குழைவாகத்தான் இருக்கவேண்டும். எனவே நன்றாக கிளறிக்கொள்ளவேண்டும். பின்னர் இதன் மேலால் கொத்தமல்லித்தழை தூவினால் சுவையான கம்பு தயிர் சாதம் தயார்.

தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர்: அற்புதங்கள் நிச்சயம்!

Quick Share

தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தென்னிந்தியா சமையலில் முக்கிய இடம் கறிவேப்பிலைக்கு உண்டு. பல மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையில் பல சத்துக்கள் இருக்கின்றது. கறிவேப்பிலை நமக்கு வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து நல்ல நிவாரணம் அளிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது.

இதில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. கறிவேப்பிலையை பொடி அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம்.

தினமும் காலை கறிவேப்பிலை நீரை குடிப்பதால் என்னென்ன நன்மையினை பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கறிவேப்பிலை நீரை தினமும் குடித்து வந்தால் வயிறு ஆரோக்கியமாக இருப்பதுடன், மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். செரிமான அமைப்பை ஆரோக்கிய வைக்கவும், அஜீரணம் போன்ற பிரச்சனை வராமல் பாதுகாக்கின்றது.

கறிவேப்பிலை நீரானது கொழுப்பை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக செயல்படுகிறது.

கறிவேப்பிலை நீரில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளதால், இவை நமது சருமத்தை பொலிவாகவும், ஈரப்பதமாகவும் வைக்கின்றது. மேலும் சருமத்தில் உள்ள கறைகளைக் குறைக்கவும் செய்கின்றது.

எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் கறிவேப்பிலை நீரை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.

கறிவேப்பிலை நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். கறிவேப்பிலை நீரை குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், திடீரென சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு குறைகின்றது.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு நல்ல பலனை அளிப்பதுடன், முடியையும் வலுவாக வைத்திருக்க உதவுகின்றது. கறிவேப்பிலை நீரை தினமும் குடித்து வந்தால் முடி பளபளப்பாகவும், கருமையாகவும், நீளமாகவும் வளருமாம்.

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா!

Quick Share

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்ககூடிய காளான் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றீடாக இருக்கின்றது. தினசரி உணவில் காளான் சேர்த்துக்கொண்டால், உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளைின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. அதுமட்டுமன்றி பற்கள், நகங்கள், மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை போக்குவதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.

கோதுமையுமன் ஒப்பிடுகையில் காளான்களில் 12 மடங்கு அதிகமாக ஆண்டி-ஆக்சிடெண்டுகள் இருப்பதால், இது இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.இதனால் அது மாரடைப்பை தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. 

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட களானை கொண்டு அசத்தல் சுவையில் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் காளான் மிளகு மசாலா எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வறுத்து அரைப்பதற்கு 

பட்டை – 1 

ஏலக்காய் – 2

கிராம்பு – 4 

மிளகு – 1 1/2 மேசைக்கரண்டி 

சோம்பு – 1 தே.கரண்டி 

சீரகம் – 1 தே.கரண்டி

வரமிளகாய் -3

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி 

சோம்பு – 1 தே.கரண்டி 

கறிவேப்பிலை – 1 கொத்து 

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

உப்பு – சுவைக்கேற்ப

காளான் – 400 கிராம் (பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்) 

தண்ணீர் – 1/2 டம்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூமானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சோம்பு, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி, ஆறவிட வேண்டும். 

பின்னர் வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கி, அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து மஞ்சள் தூள் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி நன்றாக கிளறி விட்டு, அதனுடன் காளானையும் சேர்த்து நன்றாக மூடி வைத்து வேகவிட வேண்டும். 

நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த களான் மசாலா தயார்.

மாதவிடாய் ரத்தப்போக்கு ரெண்டே நாட்களில் நிற்பது ஆரோக்கியமானதா?

Quick Share

மாதவிடாய் இரத்தப்போக்கு பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும். அப்படி இல்லாதவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளது என்று அர்த்தம். சீரற்ற மாதவிடாய் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட பலக் காரணங்கள் உள்ளன. பொதுவாக குறைந்த இரத்தப்போக்கு உடைய மாதவிடாய் ஏற்படுவதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம் மற்றும் உணவு முறை மாற்றங்கள் கூட காரணமாக அமையும். ஏன் இப்படி குறைவான மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

மாதவிடாய் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தால், உங்களின் உடலால் போதுமான ஈஸ்ட்ரோஜனை உருவாக்க முடியாது. ஈஸ்ட்ரோஜன் தான் கருப்பையின் எண்டோமெட்ரியத்தை உருவாக்கத் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜன் குறைபாடு இருந்தால் எண்டோமெட்ரியம் தேவையான தடிமனில் இருக்காது. இதனால் கருப்பையில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்.

சரியான அளவில் ஈஸ்ட்ரோஜன் சுரக்காததால் கருமுட்டை வளர்ச்சி மற்றும் அண்ட விடுப்பில் குறைபாடு ஏற்படும். இதனால் மாதவிடாயும் ஒழுங்கற்று இருக்கும். சிலருக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை சீக்கிரமாக மாதவிடாய் ஏற்படுவது, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

​பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்பட வேண்டும். சில நேரங்களில் சில பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருசில நாள் முன்போ, அல்லது பின்போ மாதவிடாய் ஏற்படலாம்.

அதாவது, 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்படுவது இயல்பான விஷயம் தான். மாதவிடாய் காலம் பெண்ணுக்குப் பெண் மாறுபடும். பொதுவாக ஒரு மாதவிடாய் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். இது தான் சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும். இதில் மாறுபாடு ஏற்படுவதைத் தான் சீரற்ற மாதவிடாய் அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் என்கிறோம்.

ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் அவர்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவான மாதவிடாய் சுழற்சி நாட்கள் என்பது 4 முதல் 8 நாட்கள் வரை இருக்க வேண்டும். அதற்கும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஆகும்.

சிலருக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை சரியாக மாதவிடாய் வந்தாலும், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே இரத்தப்போக்கு ஏற்படும் இதற்கான காரணிகள் என்ன என்று சோதித்து அதனை சரி செய்ய வேண்டும். குறைவான நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும் பொதுவான காரணங்கள் என்ன என்று பார்ப்போம் வாங்க.மன அழுத்தம்
மாதவிடாய் இரத்தப்போக்கு ஒரு நாள் மட்டுமே இருந்து பின் நின்றுவிட்டால் அது மன அழுத்தத்தின் காரணமாகக் கூட இருக்கலாம். மன அழுத்தம் ஏற்படுவது உடலின் ஹார்மோன் சமநிலையை மோசமாக பாதிக்கும். ஹார்மோன் பாதிப்பின் காரணமாகவும் சீரற்ற மாதவிடாய் அல்லது ஓரிரு நாட்கள் மட்டுமே ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை உண்டாகும்.

தீவிர உடற்பயிற்சி
நீங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வோர் எனில் சில நேரங்களில் உங்களுக்கு குறைவான உதிரப்போக்கு இருக்கும். தீவிர உடற்பயிற்சிகள் அண்ட விடுப்பைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் வெளியீட்டைத் தடுக்கும். இதனால் கூட ஓரிரு நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறுகள்
தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் கூட குறைந்த மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படும். ஹைப்பர் தைராய்டிசம் போன்ற கோளாறுகள் உடலின் ஹார்மோன்களில் மாற்றத்தை உண்டாக்கும். தைராய்டு சுரப்பி தான் உடலின் வெப்பநிலை, வளர்சிதை மாற்றம் போன்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சுரப்பி ஆகும்.
சில மருந்துகள்

இரத்தக் கட்டுப்பாட்டு மாத்திரைகள், இரத்தத்தை உறைய செய்யும் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டு உள்ள மருந்துகள் எடுத்துக் கொள்வது கூட குறைந்த நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஸ்டெராய்டு மருந்துகள் மாதவிடாய் சுழற்சி மற்றும் மாதவிடாய் இரத்தப்போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

குறைவான இரத்தப்போக்கு மாதவிடாய் ஏற்படுவது மோசமான அண்டவிடுப்பின் அறிகுறியாகவும் இருக்கும். இதனை அனோவுலேஷன் என்று அழைக்கலாம். இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது சீரற்ற மாதவிடாய் ஏற்படும்.பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி பிரச்சனைகள்
பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி கோளாறுகள் கோளாறுகள் இருந்தாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளால் கருமுட்டை வளர்வது மற்றும் முதிர்ச்சியடைவது தடுக்கப்படும். இதனால் சீரற்ற மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பிற நோய்கள்
கருப்பையில் காசநோய், கருப்பை நார்த் திசுக்கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் இடுப்பு அழற்சி நோய் போன்ற சில மருத்துவ நிலைகளாலும் மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கின்மை ஏற்படும். அதேபோல், குறைந்த இரத்தப்போக்கு மட்டுமே கூட ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளை சரியான சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியும்.

மெனோபாஸ் காலம்
45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பானது தான். ஏனெனில், அவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கின்மை ஏற்படுவது அல்லது குறைந்த இரத்தப்போக்கு ஏற்படுவது மாதவிடாய் நின்று போவது விரைவில் ஏற்படும் என்பதன் மெனோபாஸ் காலத்தின் அறிகுறி தான்.

ஒருசில மாதங்களில் குறைவான இரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பானது தான் என்றாலும், இதுபோன்று அடிக்கடி மாதவிடாய் சுழற்சி ஓரிரு நாட்கள் மட்டுமே ஏற்பட்டு குறைந்த இரத்தப்போக்கு மட்டுமே இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம். அதேபோல், மாதவிடாய் நாட்களில் கடுமையான வயிற்று வலி அல்லது இடுப்பு வலி, அதிக இரத்தப்போக்கு, கடுமையான காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
இறுதியாக,ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் உணவுமுறை, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, ஆழ்ந்த மற்றும் சரியான தூக்கம், உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்வது மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை மனதில் கொள்ளவும். ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகள் வீட்டு வைத்தியம் மூலம் சரியாகவில்லை எனில், நீங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. ஏனெனில், ஒழுங்கற்ற மாதவிடாய் குழந்தையின்மையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்!

Quick Share

ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொள்ளுக்க காணப்படுகின்றது. கடுமையான உடல் உழைப்பிற்க்கு பின்னர் ஏற்படும் உடல் அயர்ச்சியையும், உடல் வலியையும் போக்க பெரிதும் துணைப்புரிகின்றது. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் ஆற்றல் இதில் நிறைந்துள்ளது அதேபோல் உடல் உடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமாகும். மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கொள்ளு முக்கிய பங்காற்றுகின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கொள்ளு வைத்து அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு ரசம் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு – 50 கிராம் 

தக்காளி – 2 

கொத்தமல்லி தண்டு – சிறிதளவு

புளி – சிறிய எலுமிச்சை அளவு

தண்ணீர் – 2 கப் 

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி 

உப்பு – சுவைக்கேற்ப

பச்சை மிளகாய் – 2 

வரமிளகாய் – 1 

கொத்தமல்லி – சிறிதளவு 

கறிவேப்பிலை – சிறிதளவு 

பூண்டு – 10 பல்

பெருங்காயத் தூள் – சிறிதளவு 

தாளிப்பதற்கு தேவையானவை 

நெய் – 1 தே.கரண்டி 

கடுகு – 1/2 தே.கரண்டி

ரசப்பொடி – 1 தே.கரண்டி

செய்முறை

முதலில் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு சேர்த்து 10 நிமிடங்கள் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் வறுத்த கொள்ளுவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்பு அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், அரைத்த கொள்ளு கலவை, மற்றும் தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், வரமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்னர் அதனுடன் ரசப்பொடியை சேர்த்து வதக்கி, கலந்து வைத்துள்ள ரசத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். 

ரசமானது கொதிக்க ஆரம்பிக்கும் போது கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு ரசம் தயார்.

குறிப்பாக மழைக்காலங்களில் இந்த ரசத்தை உணவில் சேர்த்த்துக்கொள்வது தொற்று நோய்களில் இருந்து பெரிதும் பாதுகாப்பு கொடுக்கின்றது.

செவ்வாய் கிழமைகளில் ஏன் வீட்டை சுத்தம் செய்ய கூடாது?

Quick Share

பொதுவாக ஜோதிட மற்றும் இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீடு துடைத்து சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்வதால், வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் வீட்டைவிட்டு வெளியே போய்விடும் என்ற நம்பிக்கை பலரிடமும் காணப்படுகின்றது. இதில் எந்தளவுக்கு உண்மையிருக்கின்றது. நமது முன்னோர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்ய கூடாது என எதற்காக கூறிவைத்தார்கள் என்பது குறித்து முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்தால் லட்சுமி கடாட்சம் இல்லாமல் பொய்விடுமா என்ற சந்தேகம் பலரிடமும் காணப்படுகின்றது. ஆனால் இதில் நிச்சயம் எந்த உண்மையம் இல்லை.

சாஸ்திரங்களின் பிரகாரம் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகள் மிகவும் மங்களகரமான நாட்களாக பார்க்கப்படுகின்றது.

இந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்வது அசும் என்று அர்த்தம் கிடையாது. நமது முன்னோர்கள் இந்த நாட்களை பூஜைக்கு உகந்த நாட்களாக வரையறுத்தார்கள்.

இந்த தினத்தில் வீட்டை முழுமையாக சுத்தம் செய்து பின்னர் பூஜை செய்வதற்கு நேரம் போதாது எனவே தான் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து வேலையை எளிமையாக்கிக்கொண்டால் பூஜை செய்யும் நாட்களில் முழு கவனத்துடன் வழிபாட்டில் ஈடுப்பட முடியும். 

செவ்வாய் வெள்ளி கிழைகளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்வதால் உடல் சோர்வாகிவிடும் இதன் பின்னர் பூஜையில் முழுமையாக ஈடுப்பாடு காட்ட முடியாத நிலை உருவாகும். இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த நாட்களில் சுத்தம் செய்ய கூடாது என கூறப்பட்டது. 

இதனை தற்காலத்தில் பலரும் தவறாக புரிந்துக்கொண்டு இந்த நாட்களில் சுத்தம் செய்வதையே கூடாது என தவிர்த்து வருகின்றனர். 

வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் காலை 6:00 மணிக்கு முன்பாகவே வீட்டை துடைத்து பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொண்மால் எளிமையாக இருக்கும். ஆனால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பூஜை செய்யலாம். 

அப்போதே வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்தால் தான் உங்களுக்கு திருப்தியாக இருக்கும் என்றால் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் கூட சுத்தம் செய்வதில் எந்த பாதக விளைவும் ஏற்படாது.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கோவக்காய் மசாலா குழம்பு!

Quick Share

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளுள் கோவக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. குறிப்பாக நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

கோவைக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது. இவ்வளவு ஊட்டச்சத்துக்களை கொண்ட கோவக்காயை கொண்டு அசத்தல் சுவையில் எவ்வாறு கோவைக்காய் மசாலா குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

கோவக்காய் – 1/4 கிலோ கிராம்

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி 

பட்டை – 2 துண்டு 

கிராம்பு – 3 

ஏலக்காய் – 2 

சீரகம் – 1/2 தே.கரண்டி 

சோம்பு – 1/2 தே.கரண்டி

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் – 2 தே.கரண்டி

மல்லித் தூள் – 1 தே.கரண்டி

சீரகத் தூள் – 1 தே.கரண்டி

உப்பு – 1 தே.கரண்டி

தக்காளி – 4 (அரைத்தது)

தண்ணீர் – 1/2 கப் + 1 கப்

வறுத்த வேர்க்கடலை – 1/4 கப் (பொடித்துக் கொள்ளவும்) 

கரம் மசாலா – 1 தே.கரண்டி

சர்க்கரை – 1/2 தே.கரண்டி

தேவையான பொருட்கள் 

முதலில் கோவக்காயை எடுத்து, அதன் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, நான்கு பகுதிகளாக கீறி விட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கோவக்காயை போட்டு சுருங்கும் வரையில் நன்றாக வதக்கி ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் வதக்கி, அதனுடன் இஞ்சு பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 

பின்னர் அரைத்த தக்காளியை சேர்த்து 5 நிமிடம் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின் 1/2 கப் நீரை ஊற்றி, பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் அதனுடன் வதக்கி வைத்துள்ள கோவக்காயை சேர்த்து கிளறிவிட்டு, மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும். 

இறுதியாக கரம் மசாலா மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கோவக்காய் மசாலா கறி தயார்.

மழைக்கால நோய்களை விரட்டியடிக்கும் பூண்டு பால் குழந்தைகள் குடிக்கலாமா?

Quick Share

பொதவாக மழைக்காலம் வந்தவிட்டால் நோய்க்கு பங்சம் இல்லாமல் வந்து செல்லும்.மழையில் ஏற்படக்கூடிய களஜர்ச்சியால் நமக்கு சளி காய்ச்சல் இருமல் வரும். இதனால் கழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடப்பதற்கு அந்த கால கட்டத்தில் அதற்கேற்ற உணவுகளை கொடுப்பது அவசியம்.அத்தகைய உணவுகளில் ஒன்று தான் பூண்டு. பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும் இதில் நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.

பூண்டு மழைக்கால தொற்றுகளில் இருந்து விரைவில் குணமடைய உதவுகிறது.பஸ்ரீண்டை பாலில் வேகவைத்து குடிப்பதே பூண்டு பால் ஆகும்.இதை குடிப்பதால் என்னென்ன பயன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பூண்டில் ஆன்டிவைரஸ் பண்பு மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஆய்வு ரிதியாக கூறப்பட்டது. எனவே மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் வருவதை தடுக்க பூண்டு பால் கொடுப்பது நல்லது.

குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் பூண்டு பால் கொடுக்கலாம். இந்த பால் அவர்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். பாலில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும்.

இதை குழந்தைகளுக்கு தினமும் ஒரு கப் பூண்டு பால் கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் உடலில் அண்டாமல் பாதுகாக்கலாம். இரவில் குழந்தைகள் தூங்குவதில் சிரமமாக இருக்கும்.

இவர்களுக்கு மலைகாலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வந்தால் குணப்படுத்துவத மிகவும் கடினம். இரவு முழக்க உறங்கவும் மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு பூண்டு பால் கொடுத்தால் அவர்கள் நிம்மதியாக தூங்குவார்கள்.

இதற்கு காரணம் பூண்டில் அல்லிசின், துத்தநாகம் போன்ற கலவைகள் இருப்பதால், அவை அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். பீண்டு பால் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்களுக்கு 1 வயது பூர்த்திஅக வேண்டும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் ஏலக்காய் டி …

Quick Share

தினசரி சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் ஏலக்காய். நறுமணமிக்க இந்த மசாலாப் பொருளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான மருத்துவ பலன்கள் கிடைப்பதாக ஆயுள்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளான அஜீரண கோளாறு, வாயு தொல்லை, வயிற்று உப்புசம், குமட்டல் போன்ற வியாதிகளுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாக பார்க்கப்படுகின்றது.

சில சமயங்களில் ஒரே தடவையில் நிரந்தர நிவாரணமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலில் வரும் வீக்கத்தை எதிர்த்து போராடுகின்றது. அத்துடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. ஏலக்காயில் இருக்கும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் வாய் துர்நாற்றம் நீங்கி, வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.

இவ்வளவு நன்மைகள் கொண்ட ஏலக்காயை தொடர்ந்து வெறும் வயிற்றில் 30 நாட்களுக்கு குடித்து வந்தால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திப்பீர்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

1. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் ஏலக்காய் போட்டு தினமும் டீ அல்லது தண்ணீர் குடிக்கலாம். இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவில் சமநிலையை ஏற்படுத்தும். இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் ஏலக்காய் தண்ணீரை, உணவு சாப்பிட்ட பின்னர் தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் உங்களிடம் கிட்டக் கூட வராது.

2. ஏலக்காய் நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு நாளுக்கு நாள் குறைய ஆரம்பிக்கும். ஏனெனின் ஏலக்காய் நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, மாரடைப்பு அபாயத்தை குறைக்கின்றது.

3. சில தவறான உணவு பழக்கத்தினால் செரிமான பிரச்சினையால் அவஸ்தை அனுபவிப்பார்கள். இப்படியானவர்கள் தினமும் ஏலக்காய் நீர் குடிக்கலாம். இது வயிற்றுக்குள் சென்று வயிற்றுபுண்களை ஆற்றும்.

4. ஏலக்காய் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் என மருத்துவம் கூறுகின்றது. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்ட போது நொதிய ஊக்குவிப்பை அதிகப்படுத்தி புற்றுநோயை எதிர்த்து போராடுகின்றது. எனவே புற்றுநோய் வரக்கூடாது என நினைப்பவர்கள் ஏலக்காய் நீர் அடிக்கடி குடிக்கலாம்.

உருளைக் கிழங்குடன் அவித்த முட்டை சேர்த்து சாப்பிடுவது நல்லதா?

Quick Share

பொதுவாக பலரும் காலையில் அவித்த முட்டை, அதுனுடன் ஏதாவது காய்கறி சாலட் எடுத்து கொள்வார்கள். இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் காலை முதல் வழங்குகின்றது. அவித்த முட்டையில் உடலுக்கு தேவையான புரதம் இருக்கின்றது. உடலுக்கு தேவையான ஆற்றல்களை வழங்கி, சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.

இதற்கு மாறாக சிலர் இரண்டு முட்டைகளை சாப்பிடுகிறார்கள். இதன் விளைவுவாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். முட்டையில் உள்ள சத்துக்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கினாலும் அதிலிருக்கும் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு உள்ளது.

இப்படி இருக்கும் பொழுது ஒரு நாளைக்கு இரண்டு முட்டை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அதே சமயம், முட்டையின் வெள்ளைக்கருவில் “அவிடின்” என்ற புரதம் உள்ளது. இந்த புரதம் பயோட்டின் உறிஞ்சுதலைத் தடுக்கிறது. டயட்டில் இருப்பவர்கள் காலையில் இரண்டிற்கும் மேற்பட்ட முட்டைகளை மஞ்சள் கரு இல்லாமல் சாப்பிடுவார்கள்.

இப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் பயோட்டின் குறைபாட்டு பிரச்சினை வரலாம். நாம் உண்ணும் உணவுகள் ஒரு பக்கம் நமக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுத்தாலும், இன்னொரு பக்கம் நிச்சயம் நமக்கு சில நோய் நிலைமைகளை ஏற்படுத்தும்.




You cannot copy content of this Website