லைப்ஸ்டைல்

குழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

Quick Share

குழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தைகளுக்கு தினமும் மாதுளம் பழத்தை சாப்பிடுவதால், பல பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம். தினமும் மாதுளையை குழந்தைகளுக்கு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம் 

இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதை விட, ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் தினமும் ஏதேனும் ஒரு பழத்தை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டு வருவதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

அதில் தினமும் குழந்தைகள் சாப்பிட ஏற்ற ஒரு பழம் மாதுளை. இப்பழத்தை சாப்பிடுவதால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு மாதுளையை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

மாதுளை செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். எனவே உங்கள் குழந்தைக்கு ஏதேனும் செரிமான பிரச்சனை இருப்பின், இப்பழத்தை கொடுங்கள் விரைவில் குணமாகும்.

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்கும். இப்படி வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளை புழுக்கள் உறிஞ்சிவிடும். ஆனால் மாதுளை ஜூஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழித்து வெளியேற்றலாம்.

மாதுளை ஜூஸ் காய்ச்சலைக் குணப்படுத்த உதவும். மேலும் இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவதைத் தடுக்கும்.

மாதுளை குழந்தைகளின் பற்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்க உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் தான் காரணம்.

மாதுளையை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுப்பதனால், கல்லீரல் செயல்பாடு மேம்படும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

மாதுளையில் பாக்டீரியா, நுண்ணுயிரிகள் மற்றும் அழற்சிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களது உடலானது நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும்.

ஒரு_முதியோரின் டைரியில் எழுதி இருந்த ஒரு உண்மை காதல் கதை..

Quick Share

திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார்.

♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே… ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்…

♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது…

♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்… மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்…

வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..

♥ஆமா… ஆமா.. வா உட்காரு உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு காலமாச்சு…

♥அவளும் உட்கார அவள் கையை பற்றி… ஏதோ பேச வந்தவர்… அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார்.. முகங்கள் சுருங்கியது… கண்கள் கலங்கியது.. அம்மு என்னது.. கை பூரா வெட்டுக்காயமா இருக்கே… நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா இருக்கு என்னது.. நீ என்னய திருமணம் செய்துவரும்போது பட்டு மாதிரி இருந்தாயே.. உன் கை பளபளப்பா வழுவழுப்பா இருந்ததே என நிமிர்ந்தார்…

♥அவள் மெல்லிய சிரிப்புடன்
நா எதை என்னவென்று சொல்ல.. 35 வருசதில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்.. காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம்… அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம்… இப்படி எதேதோ நடந்திருக்கும்… என்றால்… மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது…

♥என்னம்மு சொல்றாய் அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம் மாதிரி என்று அதிர்ந்தார்…

♥நீங்க என்னய வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க… நானும் எடுத்துவர போனன் கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு.. அப்பதானே வந்தீங்க… அதான் சூடா இருந்தது என்றாள்…

♥இது என்ன குழந்தையாட்டம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே.. அம்மு…

♥நா சொல்லலதாங்க… எந்த காயத்தையும் நா சொல்லலங்க… அப்ப நா சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவீங்க பொறுப்பிள்ளையா … பார்த்து நடக்கமாட்டியா… என.. என்றாள்

♥என் கண்களில் கூட படலயே அம்மு இதெல்லாம்… என்றார் வலி நிறைந்த குரலில்..

♥என்னை நீங்க அருகில சந்திக்கிறதே இரவு இருட்டில தானே அதுகூட சில நிமிடம்தான்
அப்ப எப்படிங்க என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் என்றாள்…

♥அம்மு… அப்படி நினைக்காதே.. நமக்காக தானே நா இப்படி ஓடாய் உழைத்தேன் பசங்கள படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினன்.. உன்னயும் ஒரு குறயும் இல்லாம பார்த்தன்… என்றார்..

♥உடல்காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க…

♥என்னய மன்னிச்சிடு அம்மு… பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன்..
என்று அவளின் கையை மெதுவாக அழுத்தினார்…

♥எனக்கொரு ஆசைங்க… அத இப்பவாவது கேக்கமுடியுமா … என்றாள் குரல் சுருதி குறைவாக…

♥கேளு அம்மு… என்றார்

♥நாம திருமணமான புதிதில சில நாட்கள் நா உங்க மடியிலயும் நீங்க என் மடியிலயும் தலை வைத்து படுத்திருக்கோம்… அப்புறம் 35 வருசமா தலையனிலதான் நாம தலை வைத்து படுத்திருக்கம்… இப்ப உங்க மடியில கொஞ்சம் தலை வைத்து படுத்துக்கவா… என அம்மு கேக்க அவருக்கும் அம்முக்கும் கண்கள் கலங்கியே விட்டது… அவளை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தவர் குழந்தையைப்போல் அவளை பார்த்தார்.

♥மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை அதற்கான நேரம் வரும்வரை….

♥இதே போல்தான் பெரும்பாளும் எல்லா பெண்களின் வாழ்வும்.. திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது…

♥எத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேக்கிறார்கள்.. மனம் விட்டு பேசுகிறார்கள்…

♥ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள் காயங்கள் இருக்கும் என… இவை ஏன் வந்தது என கேளுங்கள்…
அவளின் மனக்காயம் வெளிவரும்.

சிறு வயதிலேயே இளநரை உள்ளவரா நீங்கள் ? கட்டுப்படுத்துவதற்கான வழிகள் !!

Quick Share

காலத்திற்கு ஏற்றார் போல் மனிதனின் உணவு பழக்கங்கள் மாரி வருகின்றன. நமது உடலும் அந்த உணவிற்கு ஏற்றார் போல் செலயல்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இன்று பல பேருக்கு இளநரை பிரச்சனை உள்ளது, மேலும் இதை தடுப்பதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக.

  1. நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.
  2. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.
  3. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும். ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.
  4. நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் “சி” முடியை கருமையடையச் செய்யும்.
  5. மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.
  6. கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.
  7. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.

கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான்!

Quick Share

பெண்களின் அழகிற்கு அரிசி தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அரிசி தண்ணீரில் ஏராளமான ஊட்டச்சத்து அளவுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், போன்றவை அடங்கியுள்ளன.

இந்த பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பிறந்த குழந்தையை தமிழர்கள் இந்த அரிசி தண்ணீர் கொண்டு தான் குளிப்பாட்டுவார்கள்.

முகம் அழகாக தூய்மையாக இருக்க இப்பவும் ஆயிரக்கணக்கான கேரளத்து பெண்கள் இந்த அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் மறந்தது வேதனைக்குறிய விடயமே.

அரிசி கழுவிய தண்ணீருடன் சில பொருட்களையும் கலந்து பயன்படுத்தலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேன்

1 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.

பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.

வாரத்திற்கு என்ற முறையில் இதை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் எல்லாம் மறைந்து மாசு மருவற்ற முகத்தை பெறலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் கற்றாழை ஜெல்

2 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவவும்.

பிறகு 30 நிமிடங்கள் கழித்து சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

இப்படி அரிசி தண்ணீரை பயன்படுத்தும் போது மிருதுவான மென்மையான சருமத்தை பெறலாம்.

வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?

Quick Share

திருமணத்திற்கு அழகான புடவை மற்றும் லெஹங்காவை தேர்ந்தெடுப்பதிலிருந்து, சிறந்த புகைப்படக் கலைஞர், மேக்-அப் பொருட்கள் மற்றும் மேக்-அப் மேன், பெரிய திருமண மண்டபம், அழகான திருமண அட்டை ஆகியவற்றினுடன் உங்கள் திருமண நாளைத் திட்டமிடுவீர்கள். அதை பற்றிய நினைவாகவே நீங்கள் இருப்பீர்கள்.

மேலும், இதை தவிர கல்யாண சாப்பாடு என்று திருமணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய பட்டியல்கள் மற்றும் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டும் கல்யாண வீட்டார்கள், மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான திருமணத்தின் மிக முக்கியமான அம்சத்தை புறக்கணித்துவிடுகிறார்கள். அது மணமகன் மற்றும் மணமகனின் பாலியல் ஆரோக்கியம்தான். இருப்பினும் இதுகுறித்து மணமகனோ அல்லது மணமகளோ கூட தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை.

திருமண வாழ்க்கை
யோசித்துப் பாருங்கள் திருமணம் என்பது உங்களுடைய வாழ்க்கையின் அடுத்தகட்டம். மிகப்பெரிய பொறுப்புகளோடு உங்கள் துணையுடன் சேர்ந்து நீங்கள் உங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கப்போகிறீர்கள். திருமணம் என்றால் சில வழக்கமான விஷயங்களை நீங்கள் பெறப் போகிறீர்கள். தாம்பத்தியம் வாழ்க்கை, குழந்தை மற்றும் குடும்பம் ஆகியவற்றை பற்றி தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.

மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்
உங்கள் பாலியல் வாழ்க்கை பற்றி மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். தாம்பத்திய வாழ்க்கைக்கு உங்கள் உடலும் மனமும் தயாரக இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன்பு நீங்கள் மகளீர் மருத்துவர் ஒருவரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.

உடலுறவின்போது வலி
எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு பயம் முதல்முதலாக உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படும் என்று கூறுவதுதான். நீங்கள் வெரிஜினாக இருந்தால் அல்லது பாலியல் ரீதியாக செயல்படாத ஒருவர் என்றால், முதல் முறையாக உடலுறவு கொள்வதற்கான வாய்ப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம். உடலுறவு பற்றி உங்களுக்கு பல கேள்விகள் இருக்கலாம். அதை மருத்துவரிடம் கேட்டு தெளிவுபெற்றுக்கொள்ளலாம்.

மாதவிடாய் நாட்களை தள்ளிபோடுவது
திருமணமான புதிதில் உங்களின் தாம்பத்திய வாழ்க்கை மிக சந்தோஷமாக அமையும். அல்லது நீங்கள் ஹனிமூனுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்திருப்பீர்கள். இந்த சமயங்களில் உங்களுக்கு மாதவீடாய் என்பது மிகுந்த சிரமத்தையும், வேதனையும் தரும். ஆதலால், உங்கள் மாதவிடாய் காலங்களை தாமதப்படுத்த அல்லது திருமணத்திற்கு முன்பு மாதவிடாய் தூண்டுவதற்கான பாதுகாப்பான வழிமுறைகளைப் புரிந்துகொள்ள மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்யலாம்.

கர்ப்பம் தரிக்க சரியான வயது
பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான சம்பவம். உங்களது 20ஆவது வயதின் ஆரம்பத்தில் அல்லது அதற்கு பிற்பகுதியில் நீங்கள் திருமணம் செய்து கொண்டாலும், நீங்கள் எதிர்காலத்தில் கருத்தரிக்க திட்டமிட்டால், ஒரு மகளிர் மருத்துவ நிபுணரை அணுகுவது மிகமிக அவசியம். 25 வயதுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டாலும் கருத்தரிப்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும். மேலும் கருத்தரிப்பதற்கான உடல் வலு உங்களுக்கு இருக்க வேண்டும். அதற்கு வயது மிக முக்கியம்.

கருதரிக்க இப்போது விருப்பமில்லை
திருமணத்திற்கு பிறகு உடனே கர்ப்பம் தரிப்பதா அல்லது சில காலங்கள் எடுத்துக்கொள்ளலாமா என்று உங்கள் துணையிடம் நீங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டும். பின்னர், கால தாமதம் கழித்து கர்ப்பம் தரித்துக்கொள்ளலாம் என்றால், அதற்கான ஆலோசனைகளை மருத்துவரிடம் இருவரும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எடுக்கக்கூடிய கருத்தடை வகைகள் மற்றும் உங்கள் உடலை எவ்வாறு தயார் படுத்துவது என்பது குறித்து மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.

திருமணத்திற்குப் பிறகு உடலில் மாற்றங்கள் ஏற்படுமா?
திருமணத்திற்கு முன்பு நீங்கள் பாலியல் ரீதியாக எந்ததொடர்பிலும் இல்லாமல் இருந்திருப்பீர்கள். தாம்பத்திய வாழ்க்கை என்பது திருமணத்திற்கு பிறகு நீங்கள் சந்திப்பது. ஆதலால், திருமணத்திற்கு பிறகு உங்கள் உடல் சில மாற்றங்களைச் சந்திக்கும். இது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை மருத்துவரிடம் கேட்டறியலாம்.

திருமணத்திற்கு முன் சோதனை
திருமணத்திற்கு முன்பு நீங்களும், உங்கள் துணையும் சோதனை செய்து கொள்வது நல்லது. திருமணத்திற்கு முன்பு நீங்கள் இருவரும் எடுக்க வேண்டிய சில சோதனைகளை பற்றி மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்பு தகாத உடலுறவினால் நோய் அல்லது வேறு நாள்பட்ட நோய்கள் ஆகியவை உங்கள் துணையின் மூலமாக உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சோதனை செய்துகொள்ளவது மிகமிக அவசியம்.

கருத்தடை மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
திருமணத்திற்கு பிறகு குறிப்பிட்ட காலகட்டங்களில் கர்ப்பம் தரிக்க விரும்பாத பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பய்னபடுத்துகின்றனர். இந்த மாத்திரையால் சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி, எடை அதிகரிப்பு மற்றும் மார்பக பிரச்சனைகளை போன்றவை ஏற்படுத்தக்கூடும். இதனால், கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா? அல்லது அவற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

உடலுறவு கொள்ளும்போது இரத்தம் வருமா?
முதல் முறையாக உடலுறவு கொள்ளும்போது இரத்தப்போக்கு ஏற்படுமா? என்பது பலரின் கேள்வி. இது பதில் அவரவரின் உடல்நிலை பொருத்து முதல்முதலாக உடலுறவு கொள்ளும்போது இரத்தம் வருவதும் வராமல் இருப்பது. முதலிரவின்போது, இரத்தப்போக்கு ஏற்பட்டால் மட்டுமே அப்பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று கூறுவது கட்டுக்கதை.

பாலியல் விழிப்புணர்வு அவசியம்
பெண்களின் உடல் செயல்பாடுகள் பொருத்துதான் இரத்தப்போக்கு வருவதும், வராமல் இருப்பதும். இதுகுறித்த விழிப்புணர்வு நிறைய பெண்கள் மத்தியிலே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய உடலும் வித்தியாசமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக நீங்கள் மருத்துவரிடம் கேட்கும்போது அவர் விளக்கமளிப்பார்.

திருமணத்திற்கு ஜாதக பொருத்ததைவிட பாலியல் ரீதியான விழிப்புணர்வே முக்கியம் என்பதை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே திருமணத்திற்கு முன்பு எல்லா மணமக்களும் மருத்துவரை அணுகி பாலியல் தொடர்பான தகவல்களையும், குழப்பங்களை பற்றியும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

மண்டே( Monday )”டென்ஷன் டே”.?? ஜில்லுனு ஒரு ”ஐஸ் கிரீம்”..அப்பு...

Quick Share

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். உண்மையில், அவசியம் கவனிக்கப்படவேண்டிய பிரச்னைகளில் கோபமும் ஒன்று. கோபத்தை ஆக்கப்பூர்வமாக எப்படி மாற்ற முடியும்… இதை எப்படிக் கையாள்வது… யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? சுலபமான 14 வழிமுறைகள் இங்கே… கோபம் வரும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். இதயத்துடிப்பு அதிகமாவது, நகங்களைக் கடிப்பது, வேகமாக சுவாசிப்பது, பற்களைக் கடிப்பது, கைகளை இறுகப் பிடிப்பது இவற்றில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் செய்துகொண்டிருந்தால், உடனடியாக உங்கள் மனதைச் சாந்தப்படுத்துங்கள். இதுபோன்ற செய்கைகளில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களுக்கு நீங்களே `அமைதியாக இரு… பொறுமையுடன் இரு… சாந்தமாக இரு’ எனத் தொடர்ந்து சொல்லுங்கள். இவை எல்லாம் தற்காலிகமாக உங்கள் கோபத்தைத் தள்ளிப்போட உதவும்.

சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, ஒன்று முதல் ஆறு வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர், அதேபோல ஒன்று முதல் ஏழு வரை எண்ணிக்கொண்டே மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக, மனதில் ஒன்று முதல் எட்டு வரை எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்து பாருங்கள்… கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும்கூடக் குறைந்துவிடும்.
அதிகமாகக் கோபப்படுபவர்கள், வேகமாக நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதோடு, மார்ஷியல் ஆர்ட்ஸ் வகுப்பில் சேர்ந்து அந்தக் கலையை கற்றுக்கொள்வது நல்லது. இதுபோன்ற பயிற்சிகளின்போது நிதானமாக இருப்பது எப்படி என்பதையும் சேர்த்துக் கற்றுத்தருவார்கள். `எதற்கு கோபம் வரணும், வரக்கூடாதே…’ என்ற புரிதல் கிடைக்கும். இந்தக் கலைகளைக் கற்றவர்கள் பொறுமைசாலிகளாகவும் மாறுவார்கள். இதனால், கோபம் வெகுவாகக் குறையும்.

அலுவல்ரீதியாக வரும் கோபத்தையோ, பெரியவர்களிடம் கோபம் வந்தாலோ அதை நம்மால் வெளிகாட்ட முடியாது. அடக்கியும் வைக்கக் கூடாது. இதற்கு எளிய வழி ஒன்று இருக்கிறது. ஒரு பேப்பரில் அவர்களிடம் சொல்ல நினைக்கும் அனைத்து விஷயங்களையும் எழுதுங்கள். எழுதி முடித்ததும் ரிலாக்ஸாக இருப்பதாக உணர்ந்த பிறகு, பேப்பரைக் கிழிந்து எறிந்துவிடுங்கள். இதுபோல மொபைலிலும் டைப் செய்யலாம்; கோபம் அடங்கியதும் அதை அவசியம் டெலிட் செய்துவிடுவது நல்லது. தவறுதலாகக்கூட யாருக்கும் அனுப்பிவிட வேண்டாம்.
சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும். அப்போது, வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தாழிட்டுக்கொண்டு தலையணையிடம் கோபத்தைக் காண்பிக்கலாம். ஆனால், அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் ஓர் அழகான கவிதையை எழுத முயற்சிப்பதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மனம் ஒத்துழைத்தால், ஒரு பூச்செடியைக்கூட வாங்கிப் பராமரிக்கலாம்.
விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களை பார்ப்பதால், உடனடியாக மனம் மாறும். கோபம் ஏற்படும் சூழலில் மனதில் ஒன்று முதல் பத்து வரை எண்ண ஆரம்பியுங்கள். பின்னர், அதையே மீண்டும் பத்தில் இருந்து ஒன்று வரை ரிவர்ஸாக எண்ணவும். இந்தக் கால அவகாசம், உங்கள் மனநிலையைச் சற்று மாறச் செய்யும். கோபம் தணிந்ததும், அதற்கானக் காரணம் என்ன… எப்படி… எதனால்… யார் மீது தவறு என்பதை எல்லாம் நிதானமாக நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால், திருத்திக்கொள்ளுங்கள். பிறர் மீது தவறு இருந்தால், ஒரு வாரம் கழித்து அவர்களிடம் நடந்தது என்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். நீங்கள் காயப்பட்டதையும்கூட பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். இதனால், உறவுகளிடம் சிக்கல் ஏற்படாது.

மிக முக்கியமாக , கோபம் வரும்போது வெளியே போய், சிகரெட் பிடிப்பது, டீ குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கண்களை மூடி உட்காருங்கள். அல்லது தனி இடத்துக்குச் சென்று, குறைந்தது பத்து நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வாருங்கள். ஃபிரெஷ் ஜூஸ், ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவுகள் மனம் அமைதிபெற உதவுபவை.

நூறு மில்லிய அடிச்சா, போதையில்லையே..? நூறத் தாண்டினா.?? நடக்க பாதையில்லையே!

Quick Share

தமிழகம் இன்று போதையால் தத்தளிக்கிறது. இங்குள்ள மக்களில் பலர் மது இல்லாத நாளே இல்லாமல்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் உடலில் உரம் இருக்கும் வரைதான் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. உடலில் பலம் குறைய குறைய மதுவின் பாதிப்புகள் அதிகமாகி விடும்.வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் ,நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் கேள்விகள்.ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை. அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள்.கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும் என்கிற உச்ச நிலை உருவாகும். இது போன்ற தீவிர இறுதிக்கட்ட நிலைக்கு வந்து விடுவார்கள். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் “குடிநோய்” வரலாம்.

குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்து கொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும்.
கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்.

இதயம் சபந்தப்பட்ட நோய்களை தடுக்கும் திராட்சை !

Quick Share

பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற வேதிப்பொருள் உதவுகிறது. ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான் போல்ட்ஸ் தெரிவிக்கிறார். இதய நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.

பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம். காதல் ரசத்தால் பலவீனப்பட்ட இதயத்தை, இனி திராட்சை ரசத்தால் பலப்படுத்தலாம்!

கொழுப்பை அதிகளவில் எரிக்கும் சக்திவாய்ந்த பழம்! தினமும் சாப்பிடுங்க… பேரழகியாக மாறிடுவ...

Quick Share

உணவு என்பது உயிரி வாழ மிகவும் அவசியமானதாகும். பெரும்பாலான ஆரோக்கியமான உணவுகளில் அதன் சுவையும், வடிவமும் வித்தியாசமானதாக இருக்கும்.

இந்த பதிவில் மங்குஸ்தான் எடையை குறைக்க எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்.

மங்குஸ்தான்
மங்குஸ்தான் என்பது ஒரு பழவகையாகும். இதனை நீங்கள் சாதாரண பழக்கடைகளிலோ, மார்க்கெட்டுகளிலோ பார்க்க முடியாது.

இதன் அற்புத பலன்களை மக்கள் உணர்ந்து கொள்ளாததே இதன் காரணமாகும். இது வெளிப்புறத்தில் அடர்த்தியான ஊதா நிற உறை மற்றும் உள்ளே வெள்ளை சதைப்பகுதியைக் கொண்டுள்ள இது வித்தியாசமான அதேசமயம் அனைவருக்கும் பிடித்த சுவையைக் கொண்டுள்ளது.

இது உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பை பெருமளவில் குறைக்கும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

மங்குஸ்தானின் கொழுப்பை அதிகளவில் எரிக்க காரணம் அதில் இருக்கும் சாந்தோன்கள் ஆகும்.

சக்திவாய்ந்த சேர்மங்களை கொண்டிருக்கும் இந்த பழம் இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக புற்றுநோய் மருந்து ஆராய்ச்சியில் பயன்படுத்தபடுகிறது.

தினமும் சாப்பிட்டால் எடை, தொப்பை பிரச்சினை வாழ்நாளில் உங்களை எட்டி கூட பார்க்காது.

ஆஸ்பத்திரி வேண்டாம்…மருந்து, மாத்திரை வேண்டாம்.. இதை ஒரு தடவை தேய்த்தால் இரண்டே நிமிடத்...

Quick Share

ஆஸ்பத்திரிக்கே போகாமல் வீட்டில் இருக்கும் எளிய சில பொருள்களைக் கொண்டே சரிசெய்து விடமுடியும். இப்படி செய்வதால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகிவிடும். நம் ஊரில் கிராமபப்பகுதிகளில் அதிகமாக குப்பைமேனி செடி நிற்கும். இதுபொதுவாக கவனிக்கப்படாமல் இருக்கும். இதில் 4 இலைகளைக் கொண்டே பல் சொத்தையை விரட்டி விடலாம்.

குப்பைமேனி இலையை பறித்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போல் செய்ய வேண்டும். சொத்தைப் பல் வலியை ஏற்படுத்தும்போது அந்த பேஸ்டை வலி இருக்கும் பல்லின் மீது தடவ வேண்டும்.

இதனால் வலி தீர்வதோடு சொத்தைப் பல்லில் இருக்கும் புழுக்களும் அழிந்துவிடும். இதனால் சொத்தைப் பல்பிரச்னையும் சரியாகிவிடும். முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே…

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள் ..

Quick Share

ஏராளமானோர் இருமல், சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழே பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.
இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.

அதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்

கண்கருவளையம்ஆயுர்வேத_வழிகள்

Quick Share

முகத்தின் அழகைக் கெடுப்பதில் கருவளையங்களும் ஒன்று. இத்தகைய கருவளையமானது களைப்பு, தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படும். இத்தகைய கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள் உள்ளன. இத்தகைய ஆயுர்வேத வழிகளைப் பயன்படுத்தினால், கருவளையங்கள் நீங்குவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும்.

ஆயுர்வேத_வழிகள்
ரோஸ்வாட்டர்

கருவளையங்களைப் போக்க ரோஸ்வாட்டர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, கண்களுக்கு மேலே வைத்து சிறிது நேரம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் வருவதைத் தடுக்கலாம்.

ஜாதிக்காய்
ஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது கண்களைச் சுற்றி தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.

தக்காளிமற்றும்எலுமிச்சை
பாதி தக்காளியை அரைத்து, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பயித்தம் பருப்பு மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால், கருவளையங்கள் மறையும்.

பாதாம்
பாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.

வெள்ளரிக்காய்
இது அனைவருக்குமே தெரிந்த செயல் தான். அது வேறொன்றும் இல்லை வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

எலுமிச்சை_சாறு
1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள்_தூள்
2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.

புதினா
புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.




You cannot copy content of this Website