தேங்காய் எண்ணெய் – 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர்
கீழாநெல்லிச் சாறு – 0.5 லிட்டர்
அவுரி சாறு – 0.5 லிட்டர்
கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர்
பொடுதலைச் சாறு – 0.5 லிட்டர்
நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர்
சோற்றுக் கற்றாழைச் சாறு – 0.25 லிட்டர்
(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)
இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.
இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.
இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி.
பெண்கள் அழகின் மீதுள்ள அதிக அக்கறையால் பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கின்றனர். இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த க்ரீம்களால் முகத்தில் அலர்ஜியும் ஏற்படுகிறது. அதனால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு என்றும் அழகுடன் எப்படி இருப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர கருவளையங்கள் மறையும்.
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய்விடும்.
தோல் சுருக்கம் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தக்காளி அல்லது ஆப்பிள் பழத்தை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென மாறும்.
மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.
மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்
இந்த அல்சர் (ulcer) நோயால் தினமும் அல்லல்படுபவர்களுக்கு இந்த இயற்கை வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
குறிப்பாக இன்றைய சமுதாயத்தினருக்கு அதிகமாக ஏற்பட கூடிய ஒரு பிரச்சனையாக அல்சர் (ulcer) இருக்கிறது.
அல்சர் வருவதற்கான காரணங்கள்:-
அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் என்னவென்றால் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த அல்சர் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக நம் பாட்டி வைத்தியம் சிறந்து விளங்குகிறது.
மணத்தக்காளி கீரை:
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் வாரத்தில் மூன்று முறையாவது இந்த மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி செய்யும்.
அல்சர் முற்றிலும் குணமாக – பச்சை வாழைப்பழம்:
green bananas isolated on white background with clipping path
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் பச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை (ulcer) சரி செய்ய உதவுகிறது.
அல்சர் முற்றிலும் குணமாக – தேங்காய் பால்:
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது.
தேங்காய் பால் பிடிக்காதவர்கள் தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும், அல்சர் பிரச்சனை சரியாகும்.
அல்சர் முற்றிலும் குணமாக – ஆப்பிள் ஜூஸ்:
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் (ulcer treatment in tamil), வீட்டில் இருந்து தயார் செய்த ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த ஆப்பிள் ஜூஸை கடைகளில் வாங்கி அருந்த கூடாது, வீட்டில் தயார் செய்து மட்டும் அருந்தவும்.
பாகற்காய்:
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம், பழுத்த பாகற்காயை தினமும் சமைத்து உண்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் பித்தத்தையும் தணிக்கிறது.
வேப்பிலை:
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, அல்சரை சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
தண்டு கீரை:
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம், தண்டு கீரையில் இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளதால், இவற்றை தினமும் உணவில் சேர்த்து வர உடலானது குளிர்ச்சி அடைந்து மூல நோய் மற்றும் குடல் புண் சரியாகிறது.
முட்டை கோஸ்:
அல்சர் குணமாக பாட்டி வைத்தியம் தினமும் முட்டை கோஸ் சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.
அகத்திக்கீரை:
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம், அகத்திக்கீரை சிறந்த மருந்தாக விளங்குகிறது.
எனவே தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும். அகத்திக்கீரையை சூப் செய்து கூட குடிக்கலாம்.
புழுங்கல் அரிசி கஞ்சி:
அல்சர் குணமாக பாட்டி வைத்தியம், தினமும் புழுங்கல் அரிசி கஞ்சி ஒரு டம்ளர் அருந்தி வர, அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.
துளசி:
அல்சர் குணமாக வைத்தியம், துளசி இலை சாறுடன் சிறிதளவு மாசிக்காயை சேர்த்து வாரத்தில் இரண்டு முறை அருந்தி வர, குடல் புண், வாய் புண் போன்றவை சரியாகும்.
கால் விரல் சொத்தை விழுவதன் காரணம், சொத்தை நகத்தை குணப்படுத்தும் முறை !!!
நெல்லிக்காய்:
அல்சர் குணமாக பாட்டி வைத்தியம், அல்சரை சரி செய்வதற்கு மற்றொரு சிறந்த மருந்து, நெல்லிக்காய்.
எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வர அல்லது ஜூஸ் செய்து அதனுடன் தயிர் கலந்து அருந்தி வர அல்சர் பிரச்சனையை சரி செய்திட இயலும்.
அத்திமரம் பட்டை:
அல்சர் குணமாக வைத்தியம் அத்திமரம் பட்டை சாறுடன் சம அளவு பசும் பால் மற்றும் சிறிதளவு கல்கண்டு சேர்த்து 100 மில்லி அளவு தினமும் அருந்தி வந்தால் அல்சர் பிரச்சனையை சரி செய்திட முடியும்.
அத்தியிலை:
அல்சர் குணமாக பாட்டி வைத்தியம், அத்தியிலை சாறுடன், சம அளவு வேப்பிலை சாறு சேர்த்து தண்ணீர் கலந்து காய்ச்சி தினமும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
சீரகம்:
அல்சர் பிரச்சனையை சரி செய்வதற்கு சீரகம், அதிமதுரம், தென்னம்பாளை பூ மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பசும்பால் சேர்த்து அரைத்து சிறிய எலுமிச்சை அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.
பின்பு இவற்றை பாலில் கலந்து தினமும் அருந்தி வர அல்சர் பிரச்சனை குணமாகும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.
புற்றுநோய் என்றாலே உயிரணுகளில் ஏற்படும் ஒரு அசாதாரண வளர்ச்சி என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோயும் உள்ளடங்கும் இதன் மூலம் உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது.
இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வரமுடியும். ஆனால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் அதிக அளவில் தாக்குகிறது.
அறிகுறிகள்:
அசாதரண ரத்தப்போக்கு: கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும் உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்பு நிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை: சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும் எனவும் தெரிகிறது.
பொதுவாக சில பெண்கள் உடலுறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும் கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம். எனவே இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகள் அளவை அதிகரித்து சாப்பிடவேண்டும். பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம். தினமும் பழங்கள் சாப்பிடுவது முக்கியம்.
ஆவியில் வேகவத்த உணவுகள் சாப்பிடலாம். அதிகம் புரதம் உள்ள உணவுகளை கூடுமான வரை தவிர்க்கவும். காய்கறிகளில் முட்டைக்கோஸ் காலிபிளவர் முளைகட்டிய பயறு வகை இதில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளவும். இவற்றிலிருக்கும் இன்டோல் திரீ கார்பினால் கேன்சரை உருவாக்கும் கிருமிகளை அழிக்கிறது. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
ஆப்பிள் எலுமிச்சை, தக்காளி, சாத்துக்குடி ஆகியவற்றை எதிர்ப்பு சக்தி உள்ளது. சிவப்பு குடைமிளகாயில் உள்ள பைட்டோகெமிக்கலும் புற்றுநோய் வராமல் தடுக்கும் பாதாம் பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ வகைகளில் மீன் மட்டும் ஆவியில் வேகவைத்து அல்லது குழம்பு செய்தும் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவரிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்து பார்த்துது விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸ்பிட்டல்களின் தனித்திறமை. காலையும், விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி. இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, நண்பருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்பட்ட இடத்தில் விரல் கருப்பாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா். ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவார்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள். முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.
பூலா, வெள்ளை பூலா, இருபூலா என்கிற பெயர்களில் அறியப்படுகின்ற பூலாஞ்சி நெடுங்காலம் ஆறாத புண்களை ஆற்றுவதில் இதற்க்கு நிகர் எதுவுமில்லை. சர்க்கரை நோயினால் ஏற்படுகின்ற குழிப்புண்கள், மற்றும் மற்ற பல காரணங்களினால் ஏற்படும் குழிப்புண்களை ஆற்றுவதில் நவீன மருத்துவத்தில் பெரிய சவாலாக உள்ளது. ஆனால் பூலாஞ்சி எந்த விதமான குழிப்புண்ணாக இருந்தாலும் ஆறு வாரங்களில் ஆற்றிவிடும். இத்துடன் ஆயுர்வேத உள்மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டும்..
ஆவாரம் இலை
ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும். ஆரம்பகட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு நிச்சயம் பலனளிக்கும். ஆனால் சில நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும்.
உமத்தை இலை
அதில் சரியாகாத பட்சத்தில் ஊமத்தை இலையில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலத்தைப் பூசலாம். இதுவும் பலனளிக்கவில்லை என்றால், மேகவிரணக் களிம்பு (Mercury, Calomel, Mercuric Chloride, Cinnabar) என்ற ஒரு களிம்பு உள்ளது. அதைப் பூசுவதன்மூலம் ஆறாத புண்களும் ஆறிவிடும்.
பப்பாளி மரம் முழுவதும் மென்மையானது எளிதாக உடையக் கூடியது.பப்பாளி இலைகள் மரத்தின் உச்சியில் மட்டும் தான் தொகுப்பாக இருக்கும். அதனால் தான் நம் ஆரோக்கியத்தையும் உயரத்தில் வைக்க உதவியாய் இருக்கிறது.
டெங்கு காய்ச்சலுக்கு இப்போது வரை தனி மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆன்டிவைரஸ் மருந்துகள் கூட இல்லை. பிளேட்டுலெட்டுகள் வெகுவாக குறைவதாலேயே பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க செய்வது மிக அவசியம் அதற்கு சிறந்த தீர்வு பப்பாளி இலைச்சாறு என்று ஆய்வில் கூறப்படுகிறது
பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளதால் இதன் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் அந்த நோய் பாதிப்பை குறைக்கலாம்.
பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
பப்பாளி இலையை நன்கு சுத்தமான நீரில் அலசி, பின் அதனை கைகளால் கசக்கி, சாற்றை எடுக்க வேண்டும். ஒரு பப்பாளி இலையில் இருந்து ஒரு டேபிள் ஸ்பூன் சாறு கிடைக்கும். இந்த முறையின் மூலம் பப்பாளி இலை சாறு எடுக்கவேண்டும்.
காய்ச்சல் போன்ற நோய் ஏற்பட்ட காலங்களில் இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் சாப்பிடவேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருகவேண்டும். இது பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுடன் வெள்ளை அணுக்களையும் அதிகரிக்கும்.
தினமும் நாம் பப்பாளி இலைச் சாற்றினை சிறிய அளவில் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.
வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை , அலர்ஜி போன்ற சரும பிரச்சனை, ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.
பப்பாளி இலையை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து தைலம் போல் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். இந்த எண்ணையை
கட்டி மேல் தடவினால் கட்டி உடையும். வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். காயம் பட்ட இடத்தில் பூசினால் காயங்களுக்கு விரைந்து குணம் கிடைக்கும்
படர் தாமரை என்று உடல் இடுக்குகளில் ஏற்படும் தோல் பிரச்னைக்கும் பப்பாளி இலையை அரைத்து பூசினால் நல்ல குணம் கிடைக்கும்.
சங்காரா மீன் செந்நிறமுடையது. இந்த மீன் குழம்பின் சுவை நாவில் நீர் ஊறச் செய்யும். எளிதில் செய்யலாம். (சங்கரா மீன் – ௫. கனிந்த தக்காளி சிறியது – 3 . புளி – சிறிய எலுமிச்சை அளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் .சின்ன வெங்காயம் – 100 .கிராம் மிளகாய்த்தூள் – 3 டீ ஸ்பூன் .மல்லித்தூள் – ௨. டீ ஸ்பூன். மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன். நல்லெண்எண்ணெய் – 4 டீ ஸ்பூன். கடுகு – 1/2 டீ ஸ்பூன். சீரகம் – 1/2 டீ ஸ்பூன். வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன் .பெருங்காயம் – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து உப்பு – தேவையான அளவு ) சங்கரா மீனில் உள்ள செதில்களை உப்பு, கோதுமை மாவு போட்டு நன்கு உரசி கழுவிக்கொள்ளவும். தலை, வால், என தனித் தனியாக மூன்று துண்டுகளாக்கவும். மீன் துண்டுகளை மஞ்சள் உப்பு போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டி வைக்கவும். அடுப்பில் அகலமான வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் சின்னவெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய உடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அத்துடன் தக்காளி சேர்த்து குழைய வேக விடவும். இதனுடன் மிளகாய், மல்லி, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்து மசாலா வாசனை போனபின்பு மீன் போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் கழித்து குழம்பை இறக்கி விடலாம் மீன் வெந்து விடும். தாளிக்கும் கரண்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த உடன், கறிவேப்பிலை, கடுகு, சீரகம், வெந்தையம், சிறிதளவு சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். அதில் பெருங்காயத்தூள் சிறிதளவு வாசனைக்கு சேர்த்து குழம்பில் கொட்டவும். சுவையான சங்கரா மீன் குழம்பு தயார். சூடான சாதத்திற்கு ஏற்ற குழம்பு இது.
”தாம்பத்தியம்” ஒரு சிறு குறிப்பு :
தற்காலத்தில் மிகவும் பேசப்படவேண்டிய தலைப்புகளில் ஒன்று எனினும், விண்ணை முட்டும் விஞ்ஞானம் தொட்டுவிட்ட நாம் இன்னும் பேச தயங்கும் தலைப்பு தாம்பத்யம். இதோ விரிவாய் தெளிவாய் காண்போம் தாம்பத்யத்தை.மணம் முடித்த தம்பதியரை அறைக்குள் தள்ளி, அந்த பூட்டிய அறைக்குள் கேட்கும் முனகல் சத்தமும், கட்டிலின் ஓசையுமே தாம்பத்யம் என்ற எண்ணமே இங்கு பரவலாக உள்ளது. நம் மக்களுக்கு கலவிக்கு தாம்பத்யத்திற்குமான வித்தியாசம் புலப்படவில்லை. இந்த இரண்டிற்குமான வித்தியாசம் ஒரு மெல்லிய கோடு மட்டுமே. அந்த மெல்லிய கோட்டை பற்றிய விரிவான கட்டுரையே இது.நான் மேற்கூறியது போல கலவிக்கு தாம்பத்யத்திற்கு இடையிலான மெல்லிய கோட்டின் பெயரே புரிதல். ஆம், சரியான புரிதலோடு கொண்ட கலவியே முழுமையான தாம்பத்யம். புரிதல் என்னும் மந்திர சொல்லோ நம் வாழ்வில் அன்றாடம் ஏற்படும் சிக்கல்களை களைய வல்லது. புரிதலின்றி அரங்கேறும் எதுவும் முழுமையாய் முடிவதில்லை. இது மனிதனால் அனுபவிக்கப்படும் எல்லா உச்சக்கட்ட இன்பத்திற்கும் பொருந்தும், அதுவே தாம்பத்யத்திற்கும் பொருந்தும்.
இக்கால வாழ்கை முறையில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும், பணத்தை நோக்கி ஓடும் வேகத்தில் பல இன்பங்களை தொலைக்கிறோம். குடும்பத்தோடு பேசி பழக மறக்கிறோம், இங்கே புரிதலுக்கான நேரமும் பொய்யாகிறது என்பதே மெய்யாகிறது. இப்படி புரிதல் பொய்யாக துளிர்விடுகிறது சகிப்புத்தன்மையை. சரி சகிப்புத்தன்மை துளிர்விட்டால் நன்மைதானே, என்று நீங்கள் வினைவது சரியே.தன் கருத்துக்கு மதிப்பு இல்லை என்றபோதும், ஒருவேளை நாம் தவறான கருத்தை தந்துவிடுவோமோ என்ற அச்சமும் நம்மை சகித்துக்கொள்ள சொல்கிறது. அதிலும் குறிப்பாக கணவன், மனைவி இடையிலான சகிப்பு அவர்களை நாளடைவில் மிருகமாக மாற்றுகிறது. தன் ஆசைக்கு இணங்க மறுக்கும் மனைவி, அடிக்கடி தொல்லைச்செய்யும் கணவன் என்று ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உமிழ்ந்து தவறான பாதையில் செல்ல ஆட்படுத்தப்படுகிறாள்கள்.இதற்கு மாறாக சகிப்புத்தன்மையை விடுத்து தங்கள் மனதில் பட்டத்தை பகிர்ந்து, அந்த பகிர்தலின் மூலம் புரிதலை உண்டாகி தங்கள் தாம்பத்திய தேடலை அழகாய் பரிமாறி, இல்லறம் பூண்டு வெற்றி பெற வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து புதிதாய் தங்கள் இல்லறம் தொடங்கினர். இல்லறம் பூண்ட முதல்நாளிலே தன்னால் முழுமையான இல்லறத்தில் ஈடுபடமுடியாத ஆவணத்தை அவள் அறிகிறாள், அவ்வண்ணமே அவனும் அறிகிறான். ஆனால், அந்த ஆண் அவளை ஒதுக்கவில்லை. மாறாக தன துணைவியின் குறைதீர்க்க பல மருத்துவரிடம் செல்கிறான். எதிலும் பயனற்று போகவே, தன் இன்னுயிர் மாய்துகொள்கிறாள் அந்த இளம் மனைவி.
அவள் இறப்புக்கு பின் அவள் இறுதியாய் எழுதிய கடிதம் கிடைக்கிறது, அதில் தன்னிடம் தான் குறையுள்ளது என்பதை அறிந்தும் நித்தமும் என்னை குழந்தை போல் பாதுகாத்த தன் கணவனுக்கு மறுமணம் செய்துவைக்க வேண்டுமென எழுதியிருந்தால் அந்த உத்தமி. இதை நான் சொல்ல காரணம், அந்த பெண் மாண்ட போதும், இறுதி வரை தன் மனைவியிடமே குறைத்திருந்தாலும் அவளை பிள்ளை போல் பாவித்த அந்த கணவனும் நல்ல புரில்தளோடு வாழ்ந்ததே ஆகும்.
இப்படி உள்ள உணர்வுகளை பகிர்ந்து, ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு தாம்பத்தியம் கொண்டு, வரும்கால சந்ததிக்கும் இதை எடுத்துச்சொல்லி நலமோடு வாழவேண்டுமென கட்டுரையை முடிக்கிறேன்.
காலையில ஒரு டீ போட்டாதான் பா! அந்த நாலே சிறப்ப ஓடுது!! என்று தினமும் காலையில் டீ குடிப்பவரா நீங்கள். இதை படியுங்கள். தினமும் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இதை ஒரு சடங்கு, சாங்கியம் போல செய்கிறார்கள். பலருக்கு காலை கடனே டீ குடித்த பிறகு தான். இது ஒரு பிரம்மை தான். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதற்கும், உணவுக்கு பின் குடிக்கும் டீ க்கும் என்ன வித்தியாசம். எது நல்லது?
வெறும் வயிற்றினில் தேநீர் குடிப்பதில் நமது உடலில் பாதகமான விளைவுகளை தேநீர் ஏற்படுத்தும். இந்த விளைவு கவலை மற்றும் தூக்கமின்மை மற்றும் பிற பிரச்சினைகளை உண்டாக்கும். நீங்கள் காலையில் தேநீர் குடிக்க நினைத்தால், உங்கள் காலை டிபனிற்கு பிறகு குடியுங்கள் அது உங்களுக்கு, உங்கள் உடம்புக்கு நல்லது.
கறுப்பு தேநீரில் இருக்கின்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அல்லது கேட்சின்கள் இன்னும் ஆரோக்கிய நன்மைகளை தேயிலை கொண்டிருக்கிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேலும் அதிகரிக்க செய்யும். இருந்தாலும், அனைத்து ஆரோக்கியமான நன்மைகளை தாண்டி, தேநீரை காலையில் வெறும் வயிற்றினில் குடித்தால், சில அபாயங்களையும் ஏற்படுத்துகிறது.
இடுப்பு என்றாலே கவர்ச்சியான உறுப்பாகத்தான் நம்மால் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பழங்காலத்திலிருந்தே மெல்லிடை, கொடியிடை என இடுப்பை இலக்கிய நுால்களில் கவிஞர்கள் வர்ணித்துள்ளனர். ஆணின் இடுப்பை விட, பெண்ணின் இடுப்பு மெலிந்து இருப்பதே கவர்ச்சியாக கருதப்படுகிறது. இடுப்பானது எடுப்பான பாகம் மட்டுமின்றி, நமது ஆரோக்கியத்தை எடுத்துக் காட்டும் உறுப்பாகவும் இருக்கிறது. இடுப்புச் சுற்றளவு அதிகரிக்கும் போதெல்லாம் நமது ஆரோக்கியம் குறைந்து போகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல தொடர் நோய்களுக்கு ஆளாக வேண்டிவரும். நமது உடலின் மையப் பகுதியே இடுப்பாகும். வயிற்றுப் பாகமும், புட்டப் பாகமும் சந்திக்கும் இடமே இடுப்பு, புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் கட்டும் புடவையோ, ஆண்கள் போடும் பேன்ட்டோ சரியாக நிற்கும் இடமே இடுப்பாகும்.சுற்றளவு எவ்வளவு? ஒவ்வொருவரும் தங்கள் இடுப்புச் சுற்றளவை அளந்து பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தொப்புளுக்கு மேல் மற்றும் கீழ் பகுதியிலுள்ள ஆடைகளை சற்று விலக்கிக் கொள்ளுங்கள். கடைசி விலா எலும்புக்கு கீழே மற்றும் புட்ட எலும்புக்கு மேலே தொப்புளைச் சுற்றி உள்ள சதைப் பகுதியின் அளவை, அளந்து பாருங்கள். மூச்சை இயல்பாக வெளியிட்டவாறு அளக்க வேண்டும். அதே போல் மீண்டும் ஒரு முறை அளக்க வேண்டும். இது இடுப்புச் சுற்றளவாகும்.இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 40 அங்குலத்திற்கு மேலும், பெண்களுக்கு 35 அங்குலத்திற்கு மேலும் இருந்தால், இதய மற்றும் சர்க்கரை நோய், ரத்தக் குழாய் அடைப்பு, அல்சிமர் என்ற மறதி நோய் ஏற்படும் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. இடுப்புச் சுற்றளவானது புட்டப் பகுதியின் சுற்றளவு மற்றும் விலா எலும்பின் சுற்றளவை விட குறைவாக இருக்க வேண்டும்.
சமமாக இருந்தால் தொப்பை அதிகரிக்க ஆரம்பிக்கிறது என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.பானை, ஆப்பிள் வயிறு ஆண்கள் ஒவ்வொரு முறை பேன்ட் தைப்பதற்கு அளவு கொடுக்கும் போதும், டெய்லர் இடுப்பை மட்டும் அளந்து அரை அங்குலம் சேர்த்து தைப்பது வழக்கம். ஏனெனில் ஆண்கள் 40 வயதை கடந்த பின், அவர்கள் இடுப்புச் சுற்றளவு ஆண்டு தோறும் கொஞ்சம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் இடுப்பு தொப்பையாகிவிடும். இடுப்புச் சுற்றளவானது அதிகரிக்க ஆரம்பித்தவுடன் வயிறானது வெளிப்புறமாக விரிந்து, தொங்க ஆரம்பிக்கும். அதன் பின்னர் வயிற்றின் அமைப்பின்படி பானை வயிறு, ஆப்பிள் வயிறு, பீர் பாட்டில் வயிறு என பிறர் கேலியாக அடையாளம் சொல்லும் அளவு மாறிவிடும். ஆண்கள் மது அருந்துவதால் வெகு சீக்கிரம் பெரிய தொப்பைக்கு சொந்தக்காரர் ஆகிறார்கள். அமர்ந்த இடத்திலேயே பணிபுரிபவர்கள் தொப்பைக்கு ஆளாகிறார்கள்.ஆண்களுக்கு இடுப்புச் சுற்றளவானது 40 அங்குலத்திற்கு மேல் அதிகரிக்கத் தொடங்கியவுடன் ரெசிஸ்டின் என்ற பொருள் ரத்தத்தில் உற்பத்தியாகி, இன்சுலின் சுரப்பை தடுக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையளவு அதிகரித்து, விரைவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தொப்பை அதிகரிக்கும் போது நடந்தால், மாடிப்படி ஏறினால், பேசிக் கொண்டே நடந்தால், உட்கார்ந்து எழுந்தால், கோபப்பட்டால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.தொங்கும் தொப்பை பெண்களுக்கு பி.சி.ஓ., என்று சொல்லப்படும் சினைப்பை நீர்ப்பைகளால் பாதிக்கப்படும் போது இடுப்பு பெருக்கிறது.
அதே போல் கல்லீரலில் கொழுப்பு படியும் போது இடுப்புச் சுற்றளவு அதிகமாக ஆரம்பிக்கும். மாதவிலக்கு முற்றிலும் நிற்கக்கூடிய நிலையில் இருக்கும் பெண்களுக்கு ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறையும் போது மார்பு பகுதி, புட்டம் மற்றும் தொடைப் பகுதிகளிலிருந்த கொழுப்பு இடுப்பு நோக்கி நகர்ந்து, இடுப்புப் பகுதிகளில் சுற்றிலும் சேர்ந்து, முன்புறமாக அதிகம் படிந்து, தளர்ந்து தொங்கும் தொப்பையாக மாறிவிடும். இதனால் இடுப்புத் தசைகள் தளர்ந்து இறுக ஆரம்பிக்கும். உணவில் ஓமம். சோம்பு, லவங்கப்பட்டை, வெங்காயம், பச்சைப் பட்டாணி சேர்ப்பது நல்லது. தொப்பையை குறைப்போம், ஆரோக்கிய வாழ்வை நோக்கி அடி வைப்போம்.
பெண்கள் அனைவருமே கச்சிதமான வடிவமைப்புடன் உள்ள மார்பகங்களையே அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் இது சில சமயங்களில் கடினமானதாக உள்ளது. மார்பக தோய்வு என்பது இயற்கையாகவே வயது அதிகரிக்கும் போது நடந்துவிடுகிறது. மார்பக தோய்வு என்பது பெண்களின் 40 வயதில் நடக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் இது தற்போது எல்லாம் மிகவும் முன்னராகவே நடந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சரியான பிராவை பெண்கள் உபயோகிக்காமல் இருப்பது தான்.
உடற்பயிற்சி : மார்பகங்களின் அழகிற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமாகும். இதனை தினசரி செய்ய வேண்டும். மார்பங்களுக்கான புஷ் அப் பயிற்சிகள் ஆண்களுக்கானது மட்டுமல்ல. இதனை பெண்களும் செய்யலாம். டம்பெல் தூக்கும் உடற்பயிற்சி, கைகளை உயர்த்தி உடற்பயிற்சி செய்வது போன்றவை மார்பங்களின் அளவை பெரிதாக்கவும், தொங்காமல் பார்த்துக் கொள்ளவும் உதவும்.
ஐஸ் மசாஜ்: ஐஸ் மசாஜ் தொங்கும் நிலையில் உள்ள மார்பகங்களுக்கு மிகச்சிறந்த தீர்வாகும். இரண்டு ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை ஒரு நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். அதன் பின் மார்பகங்களை சுத்தமான டவளில் துடைத்து விட்டு, பொருத்தமான பிராவை அணிந்து கொள்ளுங்கள். இதனை 3 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம்.
ஆலிவ் ஆயில்: மார்பகங்களை ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்தால் மார்பகங்கள் எழுச்சியடையும். ஆலிவ் எண்ணெய்யில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் ஃபேட்டி ஆசிட்டுகள் உள்ளன. இது மார்பகத்தில் உண்டாகும் செல் பாதிப்புகளை தடுக்கின்றன. அதுமட்டுமின்றி இவை சரும நிறத்தையும், மார்பகத்தின் வடிவமைப்பையும் மாற்றுகிறது. சிறிதளவு ஆலிவ் ஆயிலை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு, இதனை இரண்டு கைகளிலும் சூடு வரும் படி நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் இந்த எண்ணெய்யை கொண்டு மார்பகங்களில் சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்ய வேண்டும்.
வெள்ளரி மற்றும் முட்டை: முகத்திற்கு மாஸ்க் போடுவது போல மார்பகங்களுக்கும் மாஸ்க் போட வேண்டியது அவசியம். வெள்ளரியில் இயற்கையாகவே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகளவு புரோட்டின் மற்றும் விட்டமின்கள் உள்ளன. இவை மார்பகத்தின் அளவு மற்றும் தோய்வை சரியாக்க உதவுகிறது. ஒரு சிறிய வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவையும், 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்யையும் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை மார்பகத்தில் இட்டு முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரம் ஒருமுறை டிரை செய்யலாம்.
முட்டையின் வெள்ளைக்கரு: முட்டையின் வெள்ளைக்கரு பெண்களின் மார்பக சுருக்கத்திற்கு மிகச்சிறந்த தீர்வாகும். ஒரு முட்டையை எடுத்துக் கொண்டு அதன் வெள்ளைக்கருவை நன்றாக கலக்க வேண்டும். இதனை மார்பகத்தில் அப்ளை செய்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளை : மாதுளை முதுமையை தள்ளிப்போடுவதில் மிகவும் சிறந்த ஒன்றாகும். இது மார்பகங்கள் தொங்கிப் போவதில் இருந்து விடுதலை தருகிறது. மாதுளையின் தோலை அரைத்து அதில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து, மார்பகப்பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை 5 முதல் 10 நிமிடங்கள் தூங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டும்.
கற்றாளை: கற்றாளை சருமத்தை இறுக செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இதனை மார்பகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து பிறகு கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் பல பயனுள்ள தகவலை பெற (Tamil express news ) பாருங்க ..
என்ன பாஸ் நைட் ஷிப்ட் ஆ .?? hair fall ஆ .? டோன்ட் ஒர்ரி…. அதற்கு ஒரே வழி இயற்கைகை முறையை கடைபிடிப்பது தான். இயற்கைப் பொருட்கள் தான் எப்போதும் சிறந்தது என்று அனைவருக்குமே தெரியும். அதுமட்டுமின்றி, அத்தகைய பொருட்களில் தான் அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. ஆகவே முடி உதிராமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், செயற்கை முறையை கடைபிடிப்பதை தவிர்த்து, இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும். இப்போது அந்த இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!
எண்ணெய் குளியல் :
ஏதாவது ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு கூந்தலை நன்கு அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் நன்கு வளர்வதோடு, உதிராமலும் இருக்கும்.
இயற்கையான சாறுகள் :
அதென்ன இயற்கையான சாறுகள் என்று பார்க்ககிறீர்களா? அது வேறொன்றும் இல்லை, பூண்டு, இஞ்சி அல்லது வெங்காயத்தின் சாற்றை எடுத்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, காலையில் எழுந்து குளித்து வர வேண்டும். இதனால் முடி உதிர்வதை தடுக்க முடியும்.
தலை மசாஜ் :
தினமும் தலைக்கு எண்ணெய் தடவும் போது, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் நன்கு வலுவடையும். அதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் லாவண்டர் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சிறிது சேர்த்து மசாஜ் செய்வது நல்லது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் :
வெதுவெதுப்பான கிரீன் டீயை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். ஏனெனில் கிரீம் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், கூந்தல் உதிர்தலை தடுத்து, கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும்.