லைப்ஸ்டைல்

இந்த டிப்ஸ் ஆண்களுக்கு மட்டுமே!! சீப்பாய் கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் மேஜிக்!!

Quick Share

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் பேரீச்சம்பழமும், தேனும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும். எலும்புகளை பலப்படுத்தும். இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
முதியோருக்கு உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும். பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வராது.

வெட்கத்தை மெல்ல விலக்கு..! ”அந்த உணர்வுகளை அடக்கினால்” தகுந்த ஆசிரியர்கள்,...

Quick Share

தொடரும் பாலியல் வன்முறை . எங்குதான் இதன் பிரச்னை ஆரம்பம் .? இதன் முற்றுப்புள்ளி என்ன .? பாலியல் உறவு ஓர் அழகான உறவு. அது நம்மிடமிருந்து மறைத்து வைக்க வேண்டிய விசயமில்லை. “நமக்கான பாலியல் துணை வரும்போதுதான் நாம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அது நம் துணைக்கு செய்யும் ஒரு மரியாதை. நம் காதலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு.” என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். இதற்கு பாலியல் கல்வி அவசியமானதாக உணரப்படுகிறது.பத்தாம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாலியல் உறவைப் பற்றி முழுதாக சொல்லித் தருவதில்லை. ஆனால், “அது ஒரு நல்ல உறவு. அதனால்தான், நாம் எல்லோரும் இங்கு இருக்கிறோம்” என்று சொன்னாலே போதுமானது. இதை சொல்லாமல் விட்டால் சரியான வழிகாட்டுதல் இன்றி தவறாக அதைப்பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அவர்கள் கற்றுக்கொள்ளும் ஊடகங்களில் காட்டும் பாலியல் உறவில் ஆண்-பெண் சமத்துவம் இல்லை.


இவை எல்லாம் ஏன் வீட்டில் சொல்லித் தர முடியாதா? கண்டிப்பாக, சரியாக அனைத்தையும் சொல்லித்தரும் அளவுக்கு இந்திய பெற்றோர்கள் இல்லை. அவர்கள் பலவற்றை மறைத்து வைக்கத்தான் நினைக்கிறார்கள். வீட்டில், டிவி பார்க்கும்போது ஒரு முத்தக்காட்சி வந்த உடனேயே சேனலை மாத்திடுவாங்க. அப்பதான் அது என்னன்னு தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் ஏற்படும்.
ஆசிரியர்களும் கூட, இனப்பெருக்க முறை பற்றி பாடம் வந்தால், “இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு? நீங்களே படிச்சாலே புரியும்.” என்று சொல்லிவிடுவார்கள். தகுந்த ஆசிரியர்கள், முறையான பாடத்திட்டம், வழிகாட்டுதல் இருந்தால் பாலியல் கல்வி சாத்தியமே.

ஓ..ஓ ..அதான் பொண்ணுங்க புரூட்ஸ் அதிகமா சாப்படறாங்களா.??? பழங்களா.?? அசைவ உணவா.?

Quick Share

அசைவ உணவு உண்பவரா நீங்கள்? உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தது கடலில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்கள். ரெட் ஸ்னைப்பர் என்ற மீனில் சிறப்பான சத்துகள் இருந்தாலும், அதில் அபாயகரமான நச்சுத்தன்மையும் உள்ளது. இதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் சத்துக்கு பதிலாக நச்சை உட்கொள்ள நேரிடும். விஞ்ஞானிகள் இதற்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 69.
சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தங்காய், கீனூ மற்றும் சாத்துக்குடி என புளிப்பு சுவை கொண்ட பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. சருமத்திற்குக் பொலிவூட்டும் இந்தப் பழங்கள் நமது செரிமாணத்தையும் சீராக்குகின்றன.

அசிடிடி (தேவைக்கு அதிகமான அமிலச் சுரப்பு) பிரச்சனை உள்ளவர்களுக்கு, சிட்ரஸ் பழங்கள் ஒரு சஞ்சீவினி என்றே சொல்லலாம். உலகின் எல்லா நாடுகளிலும் விளையும், ஆரஞ்சு பழத்திற்கு விஞ்ஞானிகள் கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.
பொலிவான, அழகான தோற்றம் வேண்டுமா? ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுங்கள். ஆரஞ்சுக்கு சளைத்ததா மாதுளை? மிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருள் (Antioxidant) கொண்ட மாதுளையில் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களில் ஒருபோதும் குறைபாடு வராது.

பருவநிலை மாறும் இந்த நேரத்தில் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவை. எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். வெள்ளரி, தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். இளநீரை மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவில் பூசணி வகைகள் அதிகமாக கிடைக்கிறது. நார்ச்சத்து மிகுந்த இவை உடலுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றவை. குடலுக்கு நன்மை பயக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் திறன் கொண்ட பூசணியை பலவிதமாக சமைத்து சாப்பிடலாம். 100 கிராம் முலாம்பழத்தில் 34 கிலோ கலோரி சத்து உள்ளது. இதன் ஊட்டச்சத்து மதிப்பெண் 50

அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் ..ஆரோக்கியமான உணவு எது.???

Quick Share

ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கியமான உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன?
அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. தலைமுடி, நகம் சருமத்தின் தன்மையை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை மதிப்பிடலாம் என்றும் சொல்வதுண்டு. இவை வெறும் வாய்மொழிகள் அல்ல, ஆழமான அர்த்தங்களைக் கொண்டவை.
நமது ஆரோக்கியமும் ஒரு விதமான முதலீடு என்றே சொல்லலாம். எதை, எங்கே, எப்படி முதலீடு செய்கிறோம் என்பதை பொருத்துதான் அதற்கான பிரதிபலன் கிடைக்கும். அதாவது என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம், எந்த அளவு சாப்பிடுகிறோம் என்பதை பொருத்தே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சமச்சீரான முதலீடே நல்ல வருவாயை ஈட்டித்தரும். அதேபோல், சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவே ஆரோக்கியத்திற்கு அடிப்படை. இது கூடுதலாக மன ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வேலை திறனையும் கொடுக்கும்.உண்ணக்கூட நேரம் இல்லாமல் வேலைக்காக ஓடுகிறோம். ஆனால், வேலைக்காக நேர்த்தியாக உடுப்பதில் நேரம் செலவழிக்காமல் இருக்கிறோமா? வயிற்று பசிக்கு மட்டுமே உண்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பொறித்த, வறுத்த உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையோ அதைவிட அதிகம்.

இதுபோன்ற பல காரணங்களால் ஆரோக்கியம் சீர்கெடுகிறது. அதற்கு காரணம் அவசர யுகம் என்று சொன்னாலும், என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற அறியாமையும் முக்கியமான காரணம்.நமது ஆரோக்கியத்தை எப்படி பேணுவது? ஆரோக்கியம் தொடர்பாக பல ஆய்வுகள் தொடர்கின்றன. நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சீராக வைத்துக்கொள்ளவும் தேவையான உணவுகள் கொண்ட பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட 100 உணவு பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் சுலபமாக கிடைக்கும் உணவுப் பொருட்கள் சிலவற்றை பார்க்கலாம்.புரதச்சத்து அதிகம் உள்ளது பாதாம்பருப்பு. இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடியது இது. தினசரி ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 100 கிராம் பாதாம் பருப்பில் 597 கலோரிகள் உள்ளது. விஞ்ஞானிகள் பாதாமுக்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 97.பாதாமைப் போலவே ஆரோக்கியத்திற்கு கட்டியம் கூறுவது உலர் திராட்சை. சிவப்பு, லேசான மஞ்சள், கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் இதற்கு கிடைத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.

ஓ.. அப்படியா தெரிஞ்சிக்கோங்க பாஸ் ..மனைவியோடு படுக்கையறையில் இணைவதை பற்றி நறுக்குன்னு ந...

Quick Share

இல்லற வாழ்வில் தேனிலவு என்பது மிக முக்கியமான ஒன்று. இதை பற்றி கொஞ்சம் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் புது தம்பதியருக்கு, ஒரு குட்டி இன்போர்மஷன். இது புதிதாக திருமணமான ஜோடிக்கு மட்டுமே.தேனிலவுக்கு செல்லும் பொது நீங்கள் இந்த விஷியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அலை பேசியை ,விளக்கை அணைப்பதற்க்கு முன் அணைத்து விட வேண்டும். இல்லையென்றால் , தேவை இல்லாத சிக்கல் .உடல்நலனில் மிக மிக கவனம் தேவை இந்த வகையில் முத்தம் கொடுக்கும் பொது சளி , சீ ..அவ்ளோதா அருவருப்பு ஆகிவிடும். டபுள் மீனிங் ஜோக் :இது ஒரு கலை வந்தா ட்ரை பண்ணுங்க இல்ல பிளீஸ் வேண்டா மூடு ஆகுற டைம் மொக்க ஜோக் போட்ட கடுப்பாகுமோ இல்லையோ ஆக இதை கவனத்தில் கொள்ளவும். மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் நீங்க எவ்ளோ பெரிய பிலே பாய் ஆஹ் இருந்தாலும் உடலுறவின் உச்சத்தில் மனைவி பெயரை மாற்றி கூப்பிடுவது எல்லாம் கொஞ்ச ஓவர் , உஷார் பாஸ் ..அப்புறம் கடைசி வரை பெட் ரூம்க்கு பெர்மனெண்ட் சீல் தா ..

பெண் தோழி (Girl Bestie ) நட்பா .?? காதலா.?? இதை படியுங்கள் குழப்பம் தீரும் .

Quick Share

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..
இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி !
சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!!
எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!


எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!
வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !
சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி !
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்…
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

”கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” (புது தம்பதியர்) ஸ்கிப் பண்ணாமல் ...

Quick Share

கணவன் மனைவிக்கு இடையில் உள்ள முடிச்சு அவிழ்ந்து, ஒரே வீட்டில் பெயருக்கு வாழ்வதில் என்ன இருக்கிறது? கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.

இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள். அது, ரசம் நன்றாக இருந்தது என்றோ, காய்கறிகளைச் சரியாக நறுக்கினீர்கள் என்றோ இருக்கலாம்.எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள்.
ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும்.

ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும்.தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.

Indian wedding hands with gold

ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்..உணவு, உடை உட்பட. வாழ்வதன் சுவாரஸ்யம் கூடும்.சோஷியல் மீடியாக்கள் இரண்டாவது துணை அல்லது இணை என்பது போல ஆகிவிட்டது. குடும்பத்தைப் பொறுத்தவரை தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். இருக்கும் உறவுகளுக்குள் நட்பின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும்போது புதிய துணையோ, இணையோ தேவையிருக்காது.

ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டியே பழகினாலும் அது உரிமையற்ற உறவு. எப்போதும் மனதுக்குள் ஒரு பயத்தையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதுபோன்ற உறவுகள் கணவன் மனைவிக்குள் விரிசலை ஏற்படுத்தும். எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே வாழ்வு முழுமைக்குமான பாதுகாப்பு.

காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனசு எப்போதும் குழந்தைதான். கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர் நுழைய முடியாது. வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள்.
கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள். ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உயர உயர அன்பின் நெருக்கம் அதிகரிக்கும்.

பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். ‘நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்’ என்பதைப் புரியவையுங்கள். காதல் என்றென்றும் தித்திக்கும். ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிக்க இனிக்க வாழுங்கள். வாழ்த்துக்கள்

பீரியட் டென்ஷனா…??? ( Period pain ) இனி கவலை வேண்டாம் ,மாதவிடாய் வலி நீங்க பாட்டி...

Quick Share

தாய்மை என்பது பெண்களுக்கே உரிய ஒரு வரப்பிரசாதமாகும். இந்த தாய்மை பேற்றை ஒரு பெண் அடைய ஒவ்வொரு மாதமும் அப்பெண்ணின் கருப்பையில் கருமுட்டைகள் உருவாகி, அது கருவடையாத பட்சத்தில் மாதமொரு முறை வெளியேறுவதை மாதவிடாய் என்கின்றனர். இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி தோன்றும். இதற்கான காரணம் மற்றும் இதை போக்குவதற்கான வீட்டு மருத்துவ முறைகளை தெரிந்து கொள்வோம்.

மாத விடாய் வலி காரணங்கள் :
இந்த பிரச்சனைக்கு இது தான் காரணம் என எந்த மருத்துவராலும் கூற முடியவில்லை என்றாலும் ஹார்மோன்களின் அதீத உற்பத்தி, 20 வயதிற்கு கீழாக இருக்கும் பெண்களின் உடல் தன்மை, கர்ப்பப்பையில் இருக்கும் திசுக்களின் அதீத வளர்ச்சி போன்றவை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மாதவிடாய் வலி நீங்க பாட்டி வைத்தியம் :

வெந்தயம் :
நாம் உண்ணும் அன்றாட உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள் வெந்தயம் ஆகும். இந்த வெந்தயத்திற்கு பல்வேறு உடற்குறைகளை போக்கும் ஆற்றல் இருக்கிறது. குறிப்பாக வயிறு சம்பந்தமான குறைபாடுகளை நீக்க வல்லது. மாதவிடாய் கால வலியால் அவதிப்படும் பெண்கள் தினசரி உணவில் வெந்தயம் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரவில் வெந்தயத்தை சிறிது முழுங்கி இதமான வெந்நீரை குடிக்க வலி கட்டுப்படும்.

புதினாகீரை :
கீரை வகைகளில் உடலுக்கு தேவையான பல அவசிய சத்துக்களை கொண்டது புதினா கீரை. உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. இந்த புதினா இலைகள் சிலவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். புதினாவை சாறாக பிழிந்து அருந்தினாலும் மாதவிடாய் வலி குறையும்.

ஏலக்காய் :
பலவகையான உடல் பாதிப்புகளுக்கு பாரம்பரிய மருத்துவத்தில் ஏலக்காய் பயன்படுத்தபடுகிறது. இந்த ஏலக்காய்கள் சிலவற்றை நன்கு பொடி செய்து கொண்டு பசும்பாலில் கலந்து அருந்தி வர மாதவிடாய் கால வலி குறையும். இந்த ஏலக்காய்களை அவ்வப்போது பச்சையாக வாயில் போட்டு மெல்லுவதும் சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்.

இஞ்சி:
இஞ்சி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் அமிலத்தன்மை மிக்க ஒரு உணவு பொருளாகும். மாதவிடாய் வலி தீர இந்த இஞ்சியை சிறிது எடுத்து நீரில் போட்டு காய்ச்சி, அதை வலி மிகுந்த நேரங்களில் அவ்வப்போது சிறிது பருகி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதை அதிகம் பருக கூடாது.

விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணெய் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியை தர வல்லது. இந்த விளக்கெண்ணையை சிறிது எடுத்து கொண்டு தொப்புள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேய்த்து வர சூதக வலி எனப்படும் மாதவிடாய் வலி குறையும்.

வாய் நாற்றம் ஏற்படுவது ஏன்?

Quick Share

நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் வாயிலிருந்து வரும் நாற்றம்கூடக் காரணமாக இருக்கலாம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவு முறைகளாலும் அவசரகதி வாழ்க்கை முறையாலும் ‘வாய் நாற்றம்’ (Halitosis) என்பது பலரையும் வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது.

என்ன காரணம்?

பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மைக் காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், உணவுக் குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள்.

சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. உணவைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும். அப்போது, வாயில் இயற்கையாகவே வசித்துக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், இந்த உணவுப் பொருள்களுடன் வினை புரியும். இதனால், உணவுத் துகள்கள் அழுகும். அப்போது கந்தகம் எனும் வேதிப்பொருள் உருவாகும். இது கெட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய் நாற்றத்துக்கு அடிப்படைக் காரணம்.

பற்களில் காரை படிவது, பல் ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் அல்லது ரத்தஒழுக்கு உண்டாவது, சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது, வாய் உலர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நாற்றத்தை வரவேற்கும் காரணிகள். வாய்ப் புண், வாய்ப் புற்றுநோய், ‘சிபிலிஸ்’ எனும் பால்வினை நோய், வின்சென்ட் நோய், எய்ட்ஸ் நோய் போன்றவையும் வாய் நாற்றத்துக்கு அழைப்பிதழ் அனுப்பும்.

மேலும், மூக்கில் சதை வளர்வது (Nasal polyp), அந்நியப் பொருள்கள் மாட்டிக்கொள்வது, சைனஸ் அழற்சி (Sinusitis), தொண்டைப் புண், தொண்டைச் சதைகளில் சீழ், நுரையீரல்களில் சீழ் (Lung abscess), நுரையீரல் காசநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றாலும் வாய் நாற்றம் ஏற்படலாம். இவை தவிர, உணவுக் குழாய் அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், உணவு அஜீரணம், கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகக் கோளாறுகள் ஆகிய நோய்களின்போதும் வாய் நாற்றம் உண்டாவது உண்டு.

என்ன சிகிச்சை?

வாய் நாற்றம் உள்ளவர்கள் முதலில் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தம் செய்துகொண்டாலே வாய் நாற்றம் சரியாகிவிடும். இது தவிர, பற்களில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது-மூக்கு-தொண்டை சிறப்பு மருத்துவர் உதவியுடன் சைனஸ் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்-ரே, எண்டாஸ்கோபி (Endoscopy) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவற்றால் மற்றக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றையும் களைந்துவிட்டால் வாய் நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

தடுப்பது எப்படி?

வாய் நாற்றத்தைத் தடுக்க விரும்புவோர் வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு ஒருமுறை பற்களைத் துலக்க வேண்டும். கடினமான பல்துலக்கிகளைப் பயன்படுத்தினால் பல் ஈறுகளுக்குக் கெடுதல் உண்டாகிவிடும். மிருதுவான பல்துலக்கிகளைப் பயன்படுத்துவது நல்லது.

அடுத்து, சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக, நாக்கின் பின்புறத்தை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவீதம் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. பெரும்பாலோருக்கு வாய் நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.

இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவு வகைகளைச் சாப்பிட்ட பின்பு, பற்களின் இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்றுவதற்குப் பலரும் பல்குச்சியைப் பயன்படுத்துவார்கள். அப்படி அடிக்கடி பற்களைக் குத்தும்போது, குச்சி பல் ஈறுகளில் பட்டு புண்ணை ஏற்படுத்திவிடும், இது வாய் நாற்றத்தை அதிகரித்துவிடும். எனவே, பல்குச்சிகளைக் கவனமாகக் கையாள வேண்டும் அல்லது இதற்கென்றே உள்ள பல்துலக்கி வயர்களைப் பயன்படுத்த வேண்டும்.

செயற்கைப் பல்லைப் பயன்படுத்துபவர்கள் இரவில் அதைக் கழற்றி வைத்துவிடுவது நல்லது. ஒவ்வொரு முறை உணவு உண்டதும் செயற்கைப் பல்லைக் கழற்றி, அதற்கென உள்ள பல்துலக்கியால் சுத்தப்படுத்த வேண்டும்.பல் மற்றும் ஈறுகளின் நலனைக் கெடுக்கிற புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மதஅருந்தக் கூடாது.

செயற்கை மணமூட்டிகள் தேவையா?

நேர்காணலுக்குச் செல்லும்போதும் சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடும்போதும் செயற்கை மணமூட்டிகளைப் பயன்படுத்தலாம். அதேவேளையில் அடிக்கடி அவற்றைப் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள சில வேதிப்பொருள்கள் பற்களைக் கெடுத்துவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதனால் இவற்றுக்குப் பதிலாக லவங்கம், ஏலக்காய், சோம்பு போன்ற இயற்கை மணமூட்டிகளை வாயில் சிறிது நேரம் அடக்கிக்கொண்டால் வாய் மணக்கும்.

வாய் உலரும் பிரச்சினை

வயது ஆக ஆகப் பலருக்கு உமிழ்நீர் சுரப்பது குறைந்து, வாய் உலர்வது அதிகரிக்கும். இது வாய் நாற்றத்துக்கு வழிவகுக்கும். இந்த நிலைமையைத் தடுக்க அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். காரட், வெள்ளரிக்காய், சாத்துக்குடி, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய் கனிகளைச் சாப்பிட்டு வந்தால் வாய் உலராது. மேலும், வாயை உலர வைக்கும் மாத்திரைகளைச் சாப்பிடும்போது, மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுக்கொள்வதும் முக்கியம்.

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க!

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதிக தாகம் எடுக்கும். அப்போது வாய் அடிக்கடி உலர்ந்துவிடும். இதன் விளைவால், பல் ஈறுகள் கெட்டு வாய் நாற்றம் ஏற்பட வழி உண்டாகும்.

மவுத் வாஷ் பயன் தருமா?

வாய் நாற்றத்தைப் போக்கி, புத்துணர்வை உண்டாக்க என்று பல்வேறு ‘மவுத் வாஷ்’ திரவங்கள் கிடைக்கின்றன. இவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பல் மருத்துவரின் ஆலோசனையுடன் தேவைப்படும்போது பயன்படுத்துவதே நல்லது. ஏனென்றால், மவுத் வாஷைப் பயன்படுத்தும்போது தீமை தரும் பாக்டீரியாக்களுடன், வாய்க்குள் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்களும் அழிந்துவிடுகின்றன. இது வாயின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். எனவே, மவுத் வாஷ் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

‘ஃபிளாஸ்ஸிங்’ உதவும்!

பல்துலக்கியால் பல் துலக்கும்போது பல்லின் முன்புறம், மேல்புறம், உட்புறம் மட்டுமே சுத்தப்படுத்த முடியும். இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள பகுதிக்குப் பல்துலக்கியின் இழைகள் நுழையாது. ஆனால், இங்குள்ள உணவுத் துகள்தான் நமக்கு எதிரி! இதை முதலில் வெளியேற்ற வேண்டும். பற்களை ஃபிளாஸ்ஸிங் (Flossing) செய்வதன் மூலம், இந்தப் பிரச்சினையைச் சரிசெய்துவிடலாம்.

பல் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் பொருத்தமான ‘டென்டல் ஃபிளாஸ்ஸிங் நூலை’வாங்கி, இரண்டு பற்களுக்கு இடையில் அதைச் செலுத்தி, மேலும் கீழும் மெதுவாக இழுக்கும்போது, அங்குள்ள உணவுத் துகள், கரை, அழுக்கு எல்லாமே வெளியேறிவிடும். அதன் பிறகு, வாய் நாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகும்.

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!

Quick Share

இயற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தால் நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்லல் வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும்.

*உதாரணத்துக்கு எத்தனையோ விஷயங்கள பட்டியல் போட முடியும். இந்தக் கோதுமை இருக்கே கோதுமைல் அதுல உள்ள சக்தி, நிறைய நோய்களுக்கு தீர்வா இருக்குங்கறது தெரியுமோ?

*கோதுமையை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.

*இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு.

*இதைச் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தால் குடிக்கறத நிறுத்திடணும். வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பு ஏத்துக்கும்.

*பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பல் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

*மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

*தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

இளநரையை தடுக்க வழிகள்!!!

Quick Share

வயதானது முதிவடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, உண்ணமை, முறையான கூந்தல் பராமரிப்பின்மை மற்றும் மனக்கவலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இளநரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அனீமியா, மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டாலும் இளநரையானது ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய இளநரையை வீட்டிலிருந்தே போக்க எளிதான வழிகள் இருக்கின்றன.

1. நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் “சி” முடியை கருமையடையச் செய்யும்.

2. மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.

3. கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.

4. நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.

5. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.

6. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.

7. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும். ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.

முக அழகிற்கு சில டிப்ஸ் ..

Quick Share

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாறுடன் கடலை மாவு சேர்த்து தடவலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகத்தில் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கலாம்.

முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

தினமும் இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கொண்டு ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும் தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.




You cannot copy content of this Website