லைப்ஸ்டைல்

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை..

Quick Share

பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன.

இவற்றைச் சரிசெய்ய, மூலிகைகளிலேயே மிக முக்கியமானதாக இருக்கிறது சோற்றுக் கற்றாழை. இது உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு என்ற சிறப்புகளைக்கொண்டது. பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும். இது இயற்கையின் நியதி. இந்த சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்சனைகள் எதுவும் இல்லை.

ஒருவேளை சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்சனை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். இதற்காக, ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து சமநிலை செய்ய முயற்சி செய்தாலும், பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதற்கு எல்லாம் விளைவுகள் இல்லாத எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை சாப்பிட்டுவர, இயற்கையாகவே ஹார்மோன்களின் செயல்பாடுகள் சமநிலையாகும்.

மேலும், மூளை தொடர்பான ஹார்மோன்களும் சிறப்பாகச் செயல்படும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். கற்றாழையில் உள்ள சபோனின் (Saponin) என்ற கசப்புத்தன்மை, செல்கள் அதிகம் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியைக்கூட கட்டுக்குள் வைத்திருக்கும். கர்ப்பப்பையில் கட்டியிருப்பவர்கள், 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்துவர, கட்டிகள் கரைந்திருப்பதை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.

மாரடைப்பைத் தடுக்கும் திராட்சை!

Quick Share

இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற வேதிப்பொருள் உதவுகிறது. ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான் போல்ட்ஸ் தெரிவிக்கிறார். இதய நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.

பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம். காதல் ரசத்தால் பலவீனப்பட்ட இதயத்தை, இனி திராட்சை ரசத்தால் பலப்படுத்தலாம்!

சர்க்கரை நோயைத் தடுக்கும் அத்திப்பழம் .

Quick Share

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து ..

Quick Share

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

ஆரோக்கிய இதயம் தரும் செம்பருத்தி ..

Quick Share

செம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது.. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது மேலும் முடி அதிகமாக வேண்டும் என விரும்புபவர்கள் செம்பருத்தியின் எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர் போன்று உபயோகப்படுத்தலாம்.

ஆரோக்கியமான உடலுக்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது-. இப்பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் கொண்டுள்ளது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்துக்கு தேவையான சுகாதார நலன்களை வழங்குகிறது. எடை கட்டுபடுத்தும் செயல்களை மேற்கொள்கிறது-. நினைவாற்றலை மேம்படுத்தும், செரிமான பிரச்சனைக்கு தீர்வாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒரு கப் செம்பருத்தி பூவின் தேநீர் கொழுப்பை குறைக்கிறது. செம்பருத்திப் பூ இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.) கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.

பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பித்த பிரச்சனைகளைத் தீர்க்கும் ரோஜா .

Quick Share

ரோஜா ஒரு மணமலர் மட்டுமல்ல. மிகச்சிறந்த மருத்துவ மூலப்பொருளும் ஆகும். ரோஜா இதழ்களைக்கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்.. நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும்.

உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சிரியாகிவிடும்.

எந்த பிரச்சனையால் சீழ் வந்தாலும் நின்றுவிடும். காதில் என்ன காரணத்தால் வலி குத்தல் இருந்தாலும் அபினியைச்சுட்டு சாம்பலாகச் செய்து அந்தச்சாம்பலை இரண்டு அரிசி அளவில் எடுத்து ரோஜா பூவினால் தயாரிக்கப்பட்ட தைலத்துடன் கலந்து இலேசாகச் சூடு செய்து இரண்டிரண்டு சொட்டுகள் வீதம் காதில் விட்டு வர வேண்டும்.

பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும். ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக்கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.

ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும். சிலருக்கு காரணமின்றி அடிக்கடி தும்மல் தோன்றும். இதற்கு மேற்கண்ட முறையில் நல்ல குணம் பெறலாம். வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம் பெறலாம்.

நரம்பு தளர்ச்சியைப் போக்கும் சௌ சௌ ..

Quick Share

நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.. சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே என கவலை படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீக்கி விடும்.

புற்றுநோயை தடுக்க: சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்..

தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.

கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும். சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம்.

புகைப் பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை நீக்கும் உணவுகள் ..

Quick Share

புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு போன்றவற்றால் சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

அதனால், நுரையீரலை சுத்தப்படுத்தும் பழங்கள், சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் உணவுகள் மற்றும் சுவாசத்தை சீராக்கும் உணவுகள் ஆகியவற்றை புகைப்பிடிப்போர் கட்டாயம் உண்ண வேண்டும்.

மாதுளை

மாதுளைப் பழங்கள் . நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது. இதன் சாறு பல்வேறு உடல் நலம் தொடர்பான பயன்பாடுகளுக்கு உதவுகிறது.

கேரட்

கேரட்டுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், நுரையீரல் நலனைப் பேணுவதில் மிகவும் உதவுகின்றன. வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகள் உடற்கூறுக் கேட்டைத் தடுப்பதுடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன

ஆப்பிள்:

ஆப்பிள்களில் ’ஃப்ளேவோனாய்டுகள்’ ,வைட்டமின் ஈ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை.

பீன்ஸ்

பீன்ஸ் கேன்சரைத் தடுக்கும் குணாதிசயங்களை கொண்டுள்ளதுடன், மக்னீசியத்தை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ளன. இது நுரையீரல் ஆரோக்கியமாகச் செயல்பட முக்கிய செயலாற்றுகின்றன.

தலைமுடி நீண்டு வளர…

Quick Share

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்

Quick Share

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு..

Quick Share

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நாட்டு வைத்தியம்!
Solution at a cost of Rs 10 for Kidney stone (Nephrolithiasis)
சிறுநீரகக்கல்லை குணமாக்குவது குறித்து ஒரு நண்பர் இணையத்தில் எழுதியிருந்த தகவல் அப்படியே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன். அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி ரூ.10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

நான்கு வருடங்களுக்கு முன், எனக்கு இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக ரூ.30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒரு

Kidney stone சிறுநீரகக்கல்
வனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதளத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிறுநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):

French Beans ஃபிரஞ்சு பீன்ஸ்
French Beans ஃபிரஞ்சு பீன்ஸ்
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ.10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

French Beans ஃபிரஞ்சு பீன்ஸ்
French Beans ஃபிரஞ்சு பீன்ஸ்
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதளத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நாட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்க எளிய வழிகள்:

Quick Share

கொலஸ்ட்ரால் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன.தயிர் அதிக அளவில் சேர்ப்பது, ஆடு, கோழி முதலியவற்றின் மாமிசம் கலந்த உணவு அளவில் அதிகமாதல், பகல் தூக்கம், சோம்பல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.அறுவடையாகி நாளாகாத புதுத் தானியங்களாலான உணவு, சர்க்கரை, கற்கண்டு, வெல்லப்பாகு இவை அதிகம் சேர்ந்த உணவுகளும் கொழுப்படைப்பிற்குக் காரணமாகலாம்.

பாகலிலை, பாகற்காய், வேப்பிலை, வேப்பம்பூ, வெந்தயக்கீரை, நாவலிலை, கோவைக்காய் முதலிய கசப்பும் துவர்ப்பும் மிக்க இலைகளும் காய்களும் தொடர்ந்து உபயோகித்தவை. இலைகளைத் துவையலாகவும் கசக்கிப் பிழிந்தெடுத்த சாறாகவும் பயன்படுத்தலாம். காய்களை வதக்கிச் சாப்பிடலாம்.பச்சைப் பயறு, கொள்ளு ஆகியவற்றைத் தண்ணீரில் கொதிக்கவிட்டுக் கஞ்சியாக்கி, ஆறிய பிறகு சிறிது தேன் கலந்து காலை உணவாகக் கொள்ளலாம்.

நடைப்பயிற்சி மிக அவசியமானது. காலையில் மலம், சிறுநீர் கழித்த பிறகு வெறும் வயிற்றில் 1 மணி நேரம் வரை வேகநடை நடப்பது நலம் தரும். மருந்துகளில் வரணாதி கஷாயம்,புனர்நவாதி கஷாயம் , காஞ்சனாரகுக்குலு நல்ல பலனைத் தரும். ஒன்றரை ஸ்பூன் வீதம் கஷாயம் , 12 ஸ்பூன் வெந்நீர் , ஒரு மாத்திரை காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

லோத்ராஸவம் 6 ஸ்பூன் அளவு காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடவும். அல்சர் நோயாளிகள் இம்மருந்துகளைச் சாப்பிட வேண்டாம். மேற்கூறிய உணவு வகைகள் மற்றும் நடைப்பயிற்சி மட்டும் கடைப்பிடிக்கவும்.அதிக வெயில் காரணமாக ஏற்படும் தலைசுற்றல், தொண்டை வறட்சி ஆகியவற்றைத் தவிர்ப்பது எப்படி?

கோடையில் ஏற்படும் இயற்கையான உடல் மாறுதல்களில் உடலில் நீர் வற்றுவதும் ஒன்று. இவ்வறட்சியைப் போக்க இயற்கை அளிக்கம் அருமருந்து இளநீர், பனை நுங்கு, முலாம்பழம், வெள்ளரிப் பழம், வெள்ளரிப் பிஞ்சு, கக்கரி முதலியவை. நாமே செயற்கையாகச் செய்துகொள்ளும் உபாயங்கள், குளிர்பதனம், விளாமிச்சை, வெட்டிவேர் போட்ட பானை நீர், நனைந்த விளாமிச்சைத் தட்டியாலான மறைப்பு முதலியவை.

இளநீர், பனை நுங்கு, முலாம்பழம் போனற்வற்றைப் பகல் உணவுக்குப் பின் ஓரிரு மணி நேரம் கழித்துச் சாப்பிடுவது நல்லது. காலை வேளையிலும் நல்ல பசி வேளையிலும் இரைப்பை உணவை எதிர்பார்த்துக் கதகதப்புடன் இருக்கும். அப்போது குளிர்ச்சி நிறைந்த இள நீர் முதலியவை நேரிடையாகச் சேரும்போது பித்தமும் குளிர்ச்சியும் கலப்பதன் காரணமாகப் பசி மந்தம், புளித்த ஏப்பம்,வயிற்றில் வேக்காளம், பேதி, தலைச்சுற்றல் முதலியவை ஏற்படக் கூடும்.

பழுக்கச் காய்ச்சிய இரும்புச் சட்டியில் தெளித்த குளிர்ந்த நீர் சட்டி உடையைக் காரணமாவது போல, வயிற்றிலுள்ள அழற்சி நீங்க உதவக் கூடியவைகூட கதகதப்பாயுள்ள குடலில் சேரும் போது வேக்காளத்தைத் தருகின்றன. வெயிலில் அலைந்து திரும்பியவுடன் வியர்வையும் தாகமும் அடங்கச் சிறிது நேரம் ஓய்வெடுத்து, கைகால்கள் அலம்பி, வாய் கொப்பளித்துப் பின் இவற்றை அளவு மீறாமல் சாப்பிடுவதே சரியான முறை.

தலைச்சுற்றல், தொண்டை வறட்சி நீங்க இளநீரை எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். தாமதிக்கக்கூடாது. இளம் பனை நுங்குதான் நல்லது. முற்றியது ஜீரணமாகாது. வயிற்று வலி, தலைச்சுற்றல், வாந்தி ஏற்படுத்தும். இந்நிலையில் இஞ்சியும், உப்பும் சேர்த்துச் சுவைத்து மேல் மோர் சாப்பிட, பித்த வேதனை குறையும்.

வெள்ளரிப் பிஞ்சுடன் மிளகும் உப்பும் சேர்த்தால் அதன் குளிர்ச்சி குடலைப் பாதிக்காது. வெயிலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் வியர்வை அடங்காமல் குளிர்ந்த நீரில் குளித்தால் சளி பிடிக்கும். உடல் கனக்கும். உடல் சூடு குறைந்து குளிக்கும் போது இளம் பனைநுங்கை மேல் தோல் நீக்கி உடலின் மேல் தேய்த்துக் குளிக்க, தோல் எரிச்சல், கடைக்கட்டி, அரிப்பு, வியர்க்குரு முதலியவை மறையும். தோல் வழவழப்பும் மென்மையும் பெறும்.

கோடைக்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விடியற்காலை வேளையில் நீராகாரத்தை உப்பும் சீரகத் தூளும் சேர்த்துச் சாப்பிடுவதால் மலச் சிக்கல் இல்லாதிருக்கும். கோடைக்காலத்தில் நாவறட்சிக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் போதாது. வயிறு உப்புமே தவிர நாவறட்சி அடங்காது.

விளாமிச்சை வேர் போட்டு ஊறியபானைத் தண்ணீரைச் சிறிது சிறிதாக ருசித்துப் பருகுவதும், அடிக்கடி வாயில் தண்ணீர் விட்டுக் கொப்பளிப்பதும், கை, கால், முகம் தண்ணீர் விட்டு அலம்பிக் கொள்வதும் நல்லது.நாவறட்சியை ஏற்படுத்தும் மாப்பண்டம், எண்ணெயில் பொரித்தவை, காரம், புளிப்பு, உப்புச்சுவை, மசாலா, கேழ்வரகு, கொள்ளு, தயிர், காரசாரமான மாமிசம் போன்றவை தவிர்த்து இனிப்புச்சுவை, உளுந்து, பயறு, கோதுமை, அரிசி, கிழங்குகள், காய்கள், கீரைகள், பழங்களில் மா, பலா, திராட்சை, வாழைப்பழம் நல்லது. கரும்பு, தயிரில் வெல்லமும் நெல்லிக்காயும் சேர்த்தல், எருமைப்பால், பாலாடை, திரட்டிப்பால் ஆகியவை நல்லது. ஐஸ் கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.




You cannot copy content of this Website