இந்த உலகில் அனைவருக்குமே எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு இருப்பது தான் மிகவும் கடினமானது. இருப்பினும் நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் நன்கு இளமையுடனேயே காட்சியளித்தனர். இதற்கு அன்றைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் காரணம்.
சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும். மேலும் சரும நிபுணர்கள், முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களைத் தடுக்க போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும் என்கின்றனர்.
தண்ணீர் குடிப்பதுடன், நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் உட்கொண்டு வந்தால், உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.
எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்து வருகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு முதுமையைத் தள்ளிப் போடலாம்.
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தாலோ அல்லது ஜூஸ் போட்டு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலோ, சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
கீரைகள் அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பசலைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்களால் சருமம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நட்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் சத்துக்கள் குவிந்துள்ளன. அதிலும் வைட்டமின்கள் மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளன. ஆகவே இவற்றை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள பழுதடைந்த செல்கள் புதுபிக்கப்படும். மேலும் இது உடலில் உள்ள சருமத்தில் வறட்சியை உண்டாக்காமல், எப்போதும் ஈரப்பதத்துடனேயே வைத்து, சருமத்தை இளமையோடு வெளிப்படுத்தும். அதிலும் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
பெர்ரிப் பழங்களில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடும் போது சருமம் நன்கு அழகாக பொலிவோடு காணப்படுகின்றன.
மேலும் இதனை போதுமான அளவில் சாப்பிடுவதால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, சருமத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தங்க வைக்கின்றன. ஆகவே இளமையை தக்க வைக்க ஆப்பிள், ஆப்ரிக்காட், ப்ளூபெர்ரிஸ், ஸ்ட்ராபெர்ரி, பச்சை மற்றும் கருப்பு திராட்சை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
பெர்ரிப் பழங்களில், அதுவும் ஸ்ட்ராபெர்ரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக உள்ளதால், இவற்றை கிடைக்கும் போது உட்கொண்டு வந்தால், சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ளலாம்.
இந்த சிட்ரஸ் பழம் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தை வழங்கி, முதுமையைத் தள்ளிப் போடும்.
ப்ராக்கோலியை முடிந்தால் பச்சையாக அல்லது ஜூஸ் போட்டு அதிகாலையில் குடியுங்கள். இதனால் இது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. தர்பூசணிப் பழத்தை முடிந்தால், தினமும் ஒரு பௌல் வாங்கி சாப்பிடுங்கள்.
முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும், முதுமையைத் தள்ளிப் போடலாம்.
பொதுவாக கிரீன் டீ சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நன்கு தெரியும். ஆனால் அதே கிரீன் டீயை குடித்தால், அதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களால், சருமத்தில் விரைவில் ஏற்படும் சுருக்கங்கள் தடுக்கப்படும். ஆகவே இந்த கிரீன் டீயை தினமும் 2 கப் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டமும் சீராகவும், சருமம் பொலிவோடும் காணப்படும்.
தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால், சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும். மேலும் இது உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும்.