அரசியல்

கலைஞர் பெயரை சூட்டுவதில் காட்டிய அக்கறை மருத்துவர்களை பாதுகாப்பதில் காட்டாதது ஏன்? சீமா...

Quick Share

அரசு மருத்துவமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் என்பவர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில், மருத்துவரின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளது. பின்னர், மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவரை தாக்கிய விக்னேஷை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பதிவில், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை மருத்துவர் பாலாஜி மீது, மருத்துவமனைக்குள்ளேயே கத்தியால் குத்தி கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

திமுக ஆட்சியில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே புகுந்து மருத்துவர் மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது திமுக அரசுக்கு தெரியாதா?

அல்லது அந்நிகழ்வினால் மருத்துவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்று நாடு தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியாதா?

இறுதியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுதான் தெரியாதா?

அவற்றிலிருந்து திமுக அரசு எவ்விதப் பாடமும் கற்காதது ஏன்? கொல்கத்தா கொடும்நிகழ்விற்கு பிறகாவது மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பில் திமுக அரசு கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தால் தற்போது மருத்துவர் பாலாஜி மீதான கொலைவெறித்தாக்குதல் நிகழ்ந்தே இருக்காது.

மருத்துவமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுயதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்? திமுக அரசின் சிறிதும் பொறுப்பற்ற அலட்சியமே அரசு மருத்துவர் பாலாஜி மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு முழுமுதற் காரணமாகும்.

ஆகவே, திமுக அரசு இனியாவது மெத்தனமாக இல்லாமல், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில், அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கும் மருத்துவர் பாலாஜி விரைந்து நலம்பெற விழைகிறேன்” என்று கூறியுள்ளார்.

யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி: விஜய் கண்டனம்!

Quick Share

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் கூறியதாவது.., இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் “தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.., மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உதய...

Quick Share

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

மருத்துவர் தாக்குதல் 

தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் என்பவர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில், மருத்துவரின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளது. பின்னர், மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர் ஒரு இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மருத்துவரை தாக்கிய விக்னேஷை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்த்ரவிட்டுள்ளார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசுகையில், “மருத்துவர் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருகிறது. அவரது தலையில் 4 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெறும் தாயாருடன் இருப்பவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. இது தவிர்க்க முடியாத சம்பவம். இதுபோல் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்” என்றார்.  

செய்தியாளரின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலகல பதில்!

Quick Share

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவினையொட்டி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (09.11.2024) 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் பெருமழை வந்தால் அரசு சந்திக்கத் தயாராக உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், “ இன்னும் புயல் ஏதும் உருவாகவில்லை. நீங்கள் உருவாக்காமல் இருந்தால் சரி. எச்சரிக்கை விட்டிருக்கின்றார்கள்.

தென் தமிழகத்தில் நேற்று தஞ்சாவூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. சென்ற முறை தமிழ்நாடு அரசு எப்படிச் சமாளித்ததோ அதேபோன்று எல்லா விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. 

ஒரு வாரத்திற்கு முன்னதாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சில பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்திருந்தோம். சில இடங்களில் தூர்வாரத் தெரிவித்திருந்தோம். கண்டிப்பாக, எவ்வளவு பெரிய மழை வந்தாலும், நம்முடைய அரசு சமாளிக்கும். மக்கள் அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கின்றேன்.

விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம். இரண்டு நாட்களில் தூத்துக்குடி செல்ல உள்ளேன். தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் சென்றுள்ளார். நானும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜய்யால் தமிழக அரசியலில் சாதிக்க முடியாது: ரஜினி அண்ணன் பேட்டியால் பரபரப்பு..!

Quick Share

விஜய்யால் தமிழக அரசியலில் சாதிக்க முடியாது என்று ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் சமீபத்தில் தனது கட்சியின் மாநாட்டை பிரமாதமாக நடத்தி அனைத்து கட்சிகளையும் அசர வைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு பிரம்மாண்டமான கூட்டணியை அமைத்து தேர்தலிலும் அவர் சாதனை செய்வார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி உள்பட பல திரையுலக பிரபலங்கள் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா அளித்த பேட்டியில், ’கமல் போல் விஜய்யும் முயற்சி செய்கிறார், முயற்சி செய்து பார்க்கட்டும், ஆனால் தமிழக அரசியலில் விஜய்யால் சாதிக்க முடியாது. தமிழகத்தில் கண்டிப்பாக விஜய்யால் ஜெயிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

விஜய்க்கு ரஜினியே வாழ்த்து கூறியுள்ள நிலையில் ரஜினியின் அண்ணன் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 -ல் குடும்ப ஆட்சியை அகற்றி விஜய் ஆட்சி அமைப்பார்: தமிழக வெற்றி கழகம்

Quick Share

2026-ல் குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார் என்று தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்தவகையில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதியதாக கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

தவெக பதில் 

முதலமைச்சரின் கருத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக தவெக கட்சியின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் கூறுகையில், “தமிழக முதலமைச்சர் எங்களுடைய தலைவரை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகிறார். 

இவ்வாறு பேசுவது சரியான போக்கு அல்ல. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் எதிரிகளை தரக்குறைவாகப் பேசுவது திமுகவின் மரபணுவிலே இருக்கிறது.முதலமைச்சரின் பேச்சிலும் அது தான் தெரிகிறது.

1970-களில் ஆண்டு குடும்ப ஆட்சிக்கு எதிராகவே எம்ஜிஆர் கலகம் செய்து அகற்றியும் காட்டினார். அதேபோல, 2026 -ம் ஆண்டிலும் மீண்டும் வரலாறு திரும்பும். குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார்” என்றார்.    

டெல்லியோ, லோக்கலோ எங்கிருந்து வந்தாலும் சரி.., விஜயை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி

Quick Share

டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி திமுகவுக்கே வெற்றி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்திவிட்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்தவகையில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உதயநிதி பேச்சு 

இந்நிலையில், விஜயின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய்நல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். 

பின்னர் பேசிய அவர், “எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி திமுகவுக்கு தான் வெற்றி.

2026 -ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி அமைத்தாலும் நமக்கு தான வெற்றி” என்று மறைமுகமாக விஜயை விமர்சித்து பேசியுள்ளார்.       

சீமான் ஏன் தம்பின்னு சொன்னார்? விஜய்க்கு ஆதரவாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

Quick Share

சீமான் திடீரென அந்நியனாகவும் மாறுவார், அம்பியாகவும் மாறுவார் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென அந்நியனாகவும் மாறுவார், அம்பியாகவும் மாறுவார்.

முதலில் ஏன் தம்பி என்று சொன்னார், பிறகு ஏன் லொறியில் அடிப்பட்டு சாகணும் சொல்கிறார். அனைத்திற்கும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். எல்லா நேரத்திலும் ஒரே நிலைப்பாடாக தான் இருக்க வேண்டும்.

எல்லோருக்கு பேசுகின்ற சக்தியை கடவுள் கொடுத்திருக்கிறார். அதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேச கூடாது.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன்னுடைய எதிரி யார் என்று நினைத்து வருவார்கள். அதேபோல தான் விஜயும் தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். அவர் நடந்து வரவேண்டிய பாதை ஏராளம். இதனால், அவருடைய செயல்பாடுகளை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சீமானுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்- தவெக நிர்வாகி

Quick Share

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்த சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக நிர்வாகி சம்பத்குமார் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது.., 

“சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன் வைத்த விமர்சனங்களால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதி விலகிச் செல்வார்கள்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுகளுக்கும், மாநாட்டின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டஉயர்நிலை நிர்வாகிகளுக்கு பல பணிகள் உள்ள நிலையில் சீமானைப் போன்று பேசுபவர்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்.

அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகம் களமாடி வருகிறது. யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரைக் கடந்து போக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தி உள்ளார். 

சீமான் தனது கருத்தை தனது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டு போக விரும்பவில்லை. அவரவர் கருத்து அவரவர் உரிமை என்றும், முடிவை தமிழக மக்கள் கரங்களில் கொடுத்து விட்டுப் பணியைக் கவனிப்பதே அனைவருக்கும் நல்லது” என்று கூறியுள்ளார்.

தளபதி விஜய் ஆரம்பிக்க இருக்கும் 24 மணி நேர செய்தி சேனல்..

Quick Share

தளபதி விஜய்யின் கட்சி சார்பில் ஒரு டிவி சேனல் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பெயரும் தயாராகி விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் இந்த கட்சியின் மாபெரும் மாநாடு நடைபெற்றது என்பது தெரிந்தது.

இந்த மாநாட்டில் அவர் பாஜக, திமுக உள்ளிட்ட சில கட்சிகளை விமர்சனம் செய்ய, அதற்கு பதிலடிகளும் விமர்சனங்களும் கிடைத்தது என்பதும், இதனால் தமிழக அரசியலில் தேர்தல் இல்லாத இந்த நேரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய ஆலோசனை நடந்து வரும் நிலையில், கட்சிக்காக ஒரு புதிய டிவி சேனல் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சேனலில், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள், செய்திகள், விஜய்யின் சுற்றுப்பயணம் விவரங்கள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டிவி சேனலுக்கு ‘தமிழ் ஒளி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த டிவி சேனல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

லாரியில் அடிபடுவாய், கூமுட்டை! சீமான் விமர்சனத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி..

Quick Share

சீமான் விமர்சனம்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த கோட் படம் 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.

விஜய் இந்த உச்சத்தில் இருக்கும் போதே தன் சினிமா வாழ்க்கையை விட்டு, அரசியலில் களம் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவே அசரும் மாநாட்டை நடத்தி காட்டினார், அதில் அவருடைய கொள்கையையும் அறிவித்தார். 

இதற்கு சீமான், சமீபத்தில் ஒரு பேட்டியில் இது கொள்கையல்ல, கூமுட்டை, ரோட்டில் ஏதாவது ஒரு பக்கம் நில்லு, நடுவில் நின்றால் லாரி அடித்துவிடும், நீ வேலு நாச்சியார் படம் தான் வைப்பாய், நாங்கள் பாண்டியர்களின் பேர பிள்ளைகள் என கடுமையாக தாக்கி பேசியது சர்ச்சையானது.

ப்ளூ சட்டை மாறன்

இந்நிலையில் சீமான் பேச்சுக்கு தவெக தொண்டர் ஒருவர் பகிர்ந்து கருத்தினை எக்ஸ்தளத்தில் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதற்கு விஜய் ரசிகர்களும் சீமான் பேச்சை கடுமையாக தாக்கியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா!

Quick Share

தமிழக அரசியல் களத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த களமிறங்கி இருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அரசியலில் என்ட்ரி கொடுக்கப்போகிறேன் என்று கூறியதில் இருந்து ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார். முதலில் கட்சி பெயர், அடுத்து கொடி, கடைசியாக தனது கொள்கைகளை கூறியிருக்கிறார். கடந்த அக்டோபர் 27ம் தேதி அனைவரும் பிரம்மிக்கும் அளவிற்கு மாநாட்டையும் நடத்தி முடித்தார்.

தற்போது வரை அவரது கட்சி சார்பில் நடந்த முதல் மாநாடு பற்றிய பேச்சு தான் இப்போது தமிழகத்தில் அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் 6 – ஆம் தேதி தனியார் வார இதழ் புத்தக வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இருவரும் ஒன்றாக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அம்பேத்கர் நினைவு நாள் அன்று நடைபெறும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் புத்தகத்தை பெற்றுக் கொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website