அரசியல்

த.வெ.க மாநாடு: விக்கிரவாண்டிக்கு சென்ற விஜய்!

Quick Share

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே த.வெ.க. மாநாட்டிற்கு வருவதற்குத் தமிழக முழுவதும் உள்ள தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கவுள்ள நிலையில் அங்கு வைக்கப்படவுள்ள 600 அடி கொடி கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுகிறார். அதன்பின் 6 மணிக்கு மேல் தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசவுள்ளார். அதில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளையும் அறிவிக்கவுள்ளார்.

நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வி.சாலையில் வருகை தந்துள்ளார். மேலும், கட்சியின் முதல் மாநில மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

தளபதினு சொல்றதா!அடுத்த முதல்வர்னு சொல்றதா!!தவெக மாநாட்டில் 2 பெண் தலைவர்களின் கட்-அவுட்...

Quick Share

தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மாநாட்டு திடலில் ஏற்கனவே பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு பெண் தலைவர்களின் கட்டவுட்கள், அதாவது வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அப்துல் கலாம் உள்ளிட்ட சில தலைவர்களின் கட்டவுட்கள் இன்னும் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுவதால், இதுகுறித்த செய்திகளை பார்க்கும் அரசியல் விமர்சகர்கள் “ஆரம்பமே அட்டகாசம்” என்றும், தமிழகத்தில் இந்த கட்சி ஒரு வித்தியாசமான கட்சியாக தெரிகிறது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

முதல் மாநாட்டிலேயே தமிழக மக்களின் கவனத்தை பெரும் வகையில் தமிழக வெற்றி கழகத்தினர் நடத்திய நடவடிக்கையால், அடுத்தடுத்து என்னென்ன திருப்புமுனைகளை தமிழக அரசியலில் இந்த கட்சி ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.. விஜய் அறிக்கை..!

Quick Share

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த தளபதி விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை நாளை நடத்த இருக்கின்ற நிலையில் சற்றுமுன் விஜய் தனது தொண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்து இருப்பதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,

வணக்கம்.

பெயரைப் போல சில விசயங்களை திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்த போகிறேன்.

காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதை சொல்கிறேன். அதேபோல், வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.

நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.

“எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன், அதை மனதில் வைத்தே வாருங்கள்” – தவெ...

Quick Share

மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் விஜய் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்புடன் வர வேண்டும் என எதிர்பார்ப்பதாக விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவில், “எல்லா வகைகயிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே, மாநாட்டுக்குப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று.

உங்கள் பாதுகாப்புக் கருதியே இதை சொல்கிறேன். காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.

நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என கூறியுள்ளார்.

யமுனை ஆற்றில் குளித்த பாஜக தலைவருக்கு நேர்ந்த நிலை!

Quick Share

அசுத்தமான யமுனை ஆற்றில் குளித்த பாஜக தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று டெல்லி பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் கூறினார். இதனால் அவர், யமுனை நதிக்கரையில் நீராடினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “யமுனை நதியை சுத்தம் செய்ய இந்திய அரசு 8,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அதற்கு ஆம் ஆத்மி அரசு கணக்கு காட்ட வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், “யமுனை நதிக்கரைக்கு அருகில் எந்தவொரு தொழிற்சாலையும் இல்லை. அரியானாவில் உள்ள பானிபட் மற்றும் சோனிபட் வடிகால்களில் இருந்து தான் தொழிற்சாலை கழிவுகள் யமுனை நதியில் கலக்கிறது.

இதனால் பாஜக தலைவர் அரியானா அரசுடன் பேசி கழிவுகள் கலப்பதை நிறுத்த வேண்டும்” என்றார்.

இந்நிலையில், அசுத்தமான யமுனை நதியில் குளித்த பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சுவாச கோளாறு, உடல் அரிப்பு, தோல் பிரச்சனை ஆகியவை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

‘வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி’ – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Quick Share

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் (15.10.2024) அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி மற்றும் நவம்பர் 20ஆம் தேதி என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி ஜார்கண்டில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதோடு நாடு முழுவதும் உள்ள 47 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

உத்தரகாண்டில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேட் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் உத்தரவின் படி, வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார். மேலும், பாலக்காடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ராகுல் மாம்கூடத்திலும், செலக்கரா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ரம்யா ஹரிதாஸும் போட்டியிடுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“மின்சாரம் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” – துணை முதல்வர்!

Quick Share

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாகச் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து கனமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஏரிகளில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. மழையின் போது விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. 10 மின்மாற்றிகளில் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. பிற இடங்களில் மின்சாரம் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. 100 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8 குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளச் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

மழைநீர் தேங்கிய இடங்களில் மின் மோட்டார்கள் மூலம் நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். 300 இடங்களில் நிவாரண மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 14 மையங்களில் 600 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மழைக்காலங்களில் உயிர்ச்சேதம் வரக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார். அதே சமயம் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி (ஐடி விங்) நிர்வாகிகளைச் சந்தித்து விழிப்போடு செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

த.வெ.க. மாநாடு: 234 தொகுதிகளுக்கு தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்!

Quick Share

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கட்சிக்கான கொடியைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி சமீபத்தில் மாநாட்டிற்கான பந்தக் கால் பூஜை விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள விமர்சியாக நடைபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், பல்வேறு ஊர்களில் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக த.வெ.க. மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய 27 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழகம் நேற்று (12.10.2024) உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி மாநாடு ஒருங்கிணைப்புக் குழு, பொருளாதார குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதார குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகனம் நிறுத்த குழு, உள்ளரங்க மேலாண்மை குழு, மேடை வடிவமைப்பு குழு, இருக்கை மேலாண்மை குழு, தீர்மான குழு, உபசரிப்பு குழு, திடல் மற்றும் பந்தல் அமைப்புக் குழு, பாதுகாப்பு மேற்பார்வை குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டன.

மேலும், மகளிர் பாதுகாப்புக் குழு, அவசரக் கால உதவிக் குழு, கொடிக் கம்பம் அமைப்புக்குழு, வழிகாட்டும் குழு, வானிலை தகவல் பகிர்வு குழு, கட்டுப்பாட்டு அறை கண்காணிப்புக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, சமூக ஊடக குழு, பேச்சாளர்கள் மற்றும் பயிற்சி குழு, விளம்பர குழு, துப்புரவு குழு மற்றும் நிலம் ஒப்படைப்பு குழு என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் த.வெ.க. மாநாடு நடைபெறுவதையொட்டி தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தபடி, கட்சியின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா, வருகிற 27ஆம் தேதி (27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் ஆணைப்படி, சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் மழை தகவல்களை பெற Tamilnadu Alert: தமிழக அரசின் மொபைல் செயலி.. உதயநிதி ஸ்டால...

Quick Share

நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய அவர், சென்னையில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடிக்கிவிட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் நிவாரண உதவிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தால் அதை சுற்றி வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

“உதயசூரியனின் கதிராக ஒளிவீசி வெளிச்சம் தருவார்” – முதல்வர் உருக்கம்!

Quick Share

முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம் (வயது 82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (10.10.2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “முரசொலி செல்வம் எனும் திமுகவின் கொள்கைச் செல்வத்தை, திராவிட இயக்கத்தின் படைக்கலனை இழந்துவிட்டோம். உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகளான நீங்களும், உடன்பிறப்புகளான உங்களுக்கு உங்களில் ஒருவனான நானும் ஆறுதல் தெரிவித்து நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டிய வேதனை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இயக்கப் பணிகளிலும் இயக்கத்தின் கொள்கை முரசமான முரசொலி பணியிலும் நான் காட்டிய ஆர்வத்தை உணர்ந்து என் விரல்பிடித்து வழிகாட்டியவர் முரசொலி செல்வம்தான். எனக்கு நேரம் வாய்க்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்து அரசியல் செய்திகளை அறிந்துகொள்வேன். அவருக்குப் பேரறிஞர் அண்ணாவிடம் நிறைய பற்று உண்டு.

அண்ணாவை அவர் அடிக்கடி சந்தித்துப் பேசுவதும் உண்டு. அண்ணா சொன்ன செய்திகளை – வரலாற்றுத் தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார். அதுபோல கலைஞரிடம் பேசியதையும் பகிர்ந்துகொண்டு இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குவார். திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், கடிதங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, ‘தினபலன்’ என்ற தலைப்பில் தொகுத்து வந்தேன். அது முரசொலியில் தொடர்ந்து வெளிவந்தது. நான் எழுதித் தருவதை முரசொலி ஆசிரியர் குழுவினர் வடிவமைப்பதை ஆர்வத்துடன் கவனித்து, அதனையும் கற்றுக்கொள்ள விரும்பியபோது, வடிவமைப்பு பற்றி எனக்கு சொல்லிக் கொடுத்த ஆசான் முரசொலி செல்வம்தான்.

நெருக்கடிநிலைக் காலத்தில் திமுகவும், கலைஞரும் கடும் சோதனைகளை எதிர்கொண்டபோது தனிமைச்சிறை போன்ற சூழலில் இருந்த கலைஞருக்குத் துணையாக இருந்து தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவர் செல்வம். அ.தி.மு.க. ஆட்சியில் இயக்கமும் முரசொலியும் எதிர்கொண்ட சவால்களின்போதும் கலைஞரின் கட்டளைகளை நிறைவேற்றும் செயல்வீரராக இருந்தவர் செல்வம். திருச்செந்தூர் திருக்கோயிலின் அறநிலையத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட உண்மை வெளிப்பட்ட ஆத்திரத்தில் அன்றைய ஆட்சியாளர்கள் காவல்துறையை ஏவி முரசொலி செல்வத்தை, சட்டமுறைகளுக்குப் புறம்பாகக் கைது செய்து, அலைக்கழித்தனர். அந்த நிலையிலும், எந்த நிலையிலும் அவர் நெஞ்சுரத்துடனேயே நெருக்கடிகளை எதிர்கொண்டார்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமரானபோது முரசொலி மாறன் ஒன்றிய அரசில் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதனால், அவர் வகித்த முரசொலியின் ஆசிரியர் பொறுப்பை யார் ஏற்பது என்றபோது, தன் மூத்த பிள்ளையாகிய முரசொலி எனும் திராவிடச் செல்வத்தை செல்வத்திடம் ஒப்படைத்தார் கலைஞர். அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் முரசொலியை மேலும் மேலும் கூர்தீட்டிய படைக்கலனாக மாற்றியவர் முரசொலி செல்வம். தன்னுடைய பணியை முடித்துவிட்டு, வடிவமைப்பு செய்து, அச்சுக்கு அனுப்பச்சொல்லிவிட்டு அவர் வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடும். அமைதியாகத் தோற்றமளித்தாலும் ஆழத்திலிருந்து பீறிட்டு அடிக்கும் நெருப்புக் குழம்பைக் கக்கும் எரிமலை அவருடைய எழுத்துகள். அவருடைய கைவண்ணத்தில் உருவான சின்ன பெட்டிச் செய்திகூட ‘அக்கினிக் குஞ்சு’ போல அதிகாரக் காடுகளைப் பற்றவைத்து – பதற வைத்திருக்கிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளில், அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்வுடன் முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், அடுத்தநாளே முரசொலி தடையின்றி வெளிவருவதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, கலைஞரின் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர். அ.தி.மு.க ஆட்சியில் முரசொலியில் வெளியான செய்திக்காகக் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் வகையில், சட்டப்பேரவைக்குள் கூண்டு கொண்டுவரப்பட்டு, அதில் ஏற்றப்பட்டார் முரசொலி ஆசிரியரான அண்ணன் செல்வம். கலைஞரின் ஆலோசனைப்படி கருப்புச் சட்டை அணிந்து கூண்டிலேறிய கொள்கைச் சிங்கம் அவர். மன்னிப்பு கேட்க மறுத்த அசல் மனோகரனாக, பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்த கருத்துரிமைப் போராளி. அதனால்தான், ‘கூண்டு கண்டேன் – குதூகலம் கொண்டேன்’ என்று கொள்கைத் தங்கமான அண்ணன் செல்வத்தைப் பெருமிதத்துடன் பாராட்டினார் கலைஞர்.

சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் பின்னிய எழுத்துவலையில் சிக்காத அரசியல் எதிரிகள் இல்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலியின் ஆசிரியராக முரசொலி செல்வம் பணியாற்றிய நிலையில்தான், 2017ஆம் ஆண்டு முரசொலியின் பவளவிழாவைக் கொண்டாடினோம். அதன்பிறகு, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் அரங்கேறிய ‘முரசொலி: சில நினைவலைகள்’ நூல் வெளியீட்டில் என்னுடன் மீண்டும் மேடையைப் பகிர்ந்து கொண்டார். அரசியல் கடந்து அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவர். அதிகாரப் பதவிகள் மீது எந்தவித நாட்டமும் இல்லாமல், அரசியல் விளம்பரங்களுக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அத்தனை பணிகளையும் பொறுப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றிய பேராற்றலுக்குச் சொந்தக்காரர். இளைஞரணி தொடங்கி இன்றைய நிலை வரை என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் முரசொலி செல்வம் இருக்கிறார். என்னைப் பெற்றெடுத்த கலைஞர் – தயாளு அம்மையாரைப் போல நான் மதித்து, என் பிறந்தநாளில் வாழ்த்து பெறுவது செல்வத்திடம்தான். ‘ஒரு சிலநாட்கள் பெங்களூரு வந்து ஓய்வெடுக்கலாமே’ என்று என்னைச் சில நாட்கள் தன் வீட்டில் ஓய்வெடுக்க அழைத்தவர், நம்மை விட்டுவிட்டு நிரந்தர ஓய்வெடுக்கச் சென்றுவிட்டாரே.

என் பொதுவாழ்வுப் பயணத்தில் துணையாய் நிழலாய் இருந்த பெருஞ்செல்வத்தை இழந்து நிற்கையில் எப்படி என்னை நானே தேற்றிக் கொள்வேன். தன் வாழ்வின் செல்வமாகக் கருதி ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த என் அன்புத் தங்கைக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்?. குடும்பத்தினரை எப்படித் தேற்றுவேன்? முரசொலி குழுமத்தினருக்கு என்ன வார்த்தைகள் சொல்வேன்?. குலுங்கி அழுதிட மிச்சமிருந்த தோளை நான் இழந்தேன். திமுக கொள்கைத் தூண் ஒன்றை நாம் இழந்தோம். ‘போய்விட்டீர்களே.. போர்முரசே.. திராவிட முரசொலித்த செல்வமே’ என்று எனக்குள் கதறி, என் வேதனையிலிருந்து மெல்ல மீண்டிட முயற்சி செய்கிறேன். முரசொலி செல்வம் மறையவில்லை! உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 27இல் த.வெ.க. மாநாடு!

Quick Share

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கட்சிக்கான கொடியைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி சமீபத்தில் மாநாட்டிற்கான பந்தக் கால் பூஜை விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள விமர்சியாக நடைபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், பல்வேறு ஊர்களில் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார். இந்நிலையில் த.வெ.க. மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய 27 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழகம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி மாநாடு ஒருங்கிணைப்புக் குழு, பொருளாதார குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதார குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகனம் நிறுத்த குழு, உள்ளரங்க மேலாண்மை குழு, மேடை வடிவமைப்பு குழு, இருக்கை மேலாண்மை குழு, தீர்மான குழு, உபசரிப்பு குழு, திடல் மற்றும் பந்தல் அமைப்புக் குழு, பாதுகாப்பு மேற்பார்வை குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மகளிர் பாதுகாப்புக் குழு, அவசரக் கால உதவிக் குழு, கொடிக் கம்பம் அமைப்புக்குழு, வழிகாட்டும் குழு, வானிலை தகவல் பகிர்வு குழு, கட்டுப்பாட்டு அறை கண்காணிப்புக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, சமூக ஊடக குழு, பேச்சாளர்கள் மற்றும் பயிற்சி குழு, விளம்பர குழு துப்புரவு குழு மற்றும் நிலம் ஒப்படைப்பு குழு என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தபடி, கட்சியின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா, வருகிற 27ஆம் தேதி (27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், தலைவர் விஜய்யின் ஒப்புதலுடன் மாநாட்டுப் பணிகளுக்கென ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என் புகைப்படத்தை நன்கு மிதிக்கட்டும், அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்”...

Quick Share

ஆந்திர கோவிலில் உதயநிதியின் புகைப்படத்தை கால் மிதியடியாக பயன்படுத்திய நிலையில் அவர் பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் தமிழக துணை முதலமைச்சர் பேசிய சனாதன விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவிலில் உதயநிதியின் புகைப்படத்தை கால் மிதியடியாக பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்த விவகாரத்திற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!

கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன். தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர்.

அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது ஏச்சுக்களையும் – பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் – மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி. என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும்.

அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம்.

இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத்தலைவர் வழியில் பகுத்தறிவு – சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!” என்று கூறியுள்ளார்.




You cannot copy content of this Website