அரசியல்

“முதல்வர் பட்னாவிஸ் திடீர் ராஜினாமா ” மஹாராஷ்டிரா தேர்தலில் மாபெரும் திருப்...

Quick Share

பெரும்பான்மையியை நிரூபிக்காமலே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தலில் தெடர்ந்து அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்துவருகிறது. மஹாராஷ்டிராவில் குறைவான பெரும்பான்மை இருந்தும் அங்கு பா.ஜ.கவின் பட்னாவிஸ் தேசியவாத காங்கிரஸ் காட்சியின் அஜித்பவார் உதவியுடன் முதல்வராக பதவியேற்றார். இதனை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , என்.சி.பி காட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் மஹாராஷ்டிராவில் நாளை மலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பம்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டது.

ஆனால் பா.ஜ.கவிற்கு பெரும்பன்மை எம்.எல்.ஏக்கள் இல்லை.இதனால் பட்னாவிஸ் ஆட்சி தொடருமா என சந்தேகம் நிலவியது . இதில் திடீர் திருப்பமாக துணை முதல்வர் பதவியை அஜித்பவார் ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை பட்னாவிஸிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பட்னாவிஸ் ,அதில் பேசிய பட்னாவிஸ் , சிவசேனவை விட அதிக இடங்களில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்று , ஆளும் தகுதி பெற்றிருந்தது, பா.ஜ.க -சிவசேனா கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தனர்.தேர்தலுக்கு பின் பா.ஜ.காவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லை என்பதால் சிவசேனா மனம் மாறிவிட்டது. முதல்வர் பதவிக்காக சிவசேனா எங்களிடம் பேரம் பேசிக்கொண்டே மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது என்று கூறினார் .

இந்த பேட்டியை தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக பட்னாவிஸ் அறிவித்தார். தற்போது ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் பட்னாவிஸ். இந்த சூழ்நிலையில் நாளை நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகத்துடன் விபரீத விளையாட்டை விளையாடும் பாஜக இனியாவது திருந்த வேண்டும்!!! -மு.க.ஸ்டா...

Quick Share

மகாராஷ்டிரா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற மு.க.ஸ்டாலின் ,”பாஜக அரசு இனியாவது திருந்தவேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தலில் சூழ்ச்சி செய்து அஜித்பவார் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.கவின் பட்னாவிஸ் முதல்வரானதை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடரப்பட்ட வழக்கு பெரும் வாதத்திற்கு பின்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் உச்சநீதிமன்றம் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நம்பிக்கைவாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. மேலும் ரகசிய வாக்கெடுப்பை நடத்த கூடாது எனவும், வீடியோ பதிவில் வாக்கெடுப்பை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் விதிமுறைகளை விதித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்கமலேயே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க ஸ்டாலின் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். அப்பதிவில், “மஹாராஷ்டிரா சட்டமன்றதில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினமான இன்று சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது” எனவும் , மேலும் “ஜனநாயகத்துடனும் , அரசியலமைப்பு சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1199233112804184067

ரஜினியின் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலமாகும்- என விமர்ச்சித்த தமிழருவி மணியன்

Quick Share

தமிழகத்தின் பொற்காலம் திராவிட காட்சிகள் இருக்கும் வரை வரவே வராது என தமிழருவி மணியன் மேடையில் மக்களிடையே பேசினார்.  

திருச்சி : திருச்சியில் ” துக்ளக்  ” என்னும் வார இதழின் பொன்விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் திரு. தமிழருவி மணியன் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருபது உண்மைதான் அந்த வெற்றிடத்தை நடிகர் ரஜினி நிரப்புவார் என கூறினார்.ஏனெனில் அவர் தாம் குடும்பத்திற்க்காக பாடுபடுபவர் அல்ல மாறாக நாட்டிற்க்காக தன்னை அர்பணிப்பவர் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்  எப்பொழுது திராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேபோகுதோ அப்பொழுது தான் தமிழகத்திற்கு பொற்காலம் என விமர்சித்து  பேசினார். தான் கடைசி மூச்சி விடுவதற்குள் திராவிட கட்சிகளை தமிழகத்தை விட்டு வெளியே போக வைப்பதுதான் தான் எண்ணம் என ஆவேசமாக  பேசினார். அதிமுக ஆட்சியை களைத்து விட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தால் பாஜக எளிதாக ஆட்சியை பிடிக்கும் என  தெரிவித்தார் . பிறகு பேசிய அவர் திமுக கட்சி தான் தமிழக  வளர்ச்சிக்கு  தடையாக இருக்கிறது என  குறை கூறினார்.

“அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்” தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சி...

Quick Share

“அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஜார்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வரும் 30 ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இங்கு கட்சி கூட்டணிகள் பிரிந்து பலமுனை போட்டிகள் நிலவுவதால் ஆளும் கட்சியான பாஜக மீண்டும் தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று பிஸ்ராம்பூர் பகுதியில் நடந்த பாஜக கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது,” தற்போது பாதுகாப்புத்துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. நமது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில், விரைவில் ரஃபேல் போர் விமானங்கள் வரவுள்ளது. இதன்மூலம் நம் எல்லைக்குள் இருந்து கொண்டே, தீவிரவாத முகாம்களை அழிக்க முடியும். உச்சநீதிமன்றம் தடையை விலக்கியுள்ளதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி” என்று கூறினார்.

மஹாராஷ்டிராவில் மகா யுத்தம் !!! ஆட்சியை கைப்பற்றுவது யார் ? உச்ச நீதிமன்றத்தில் காரசார...

Quick Share

மஹாராஷ்டிரா தேர்தலில் பட்நாவிஸ் பதவியேற்றத்தை எதிர்த்து காங்கிரஸ் ,சிவசேனா மற்றும் என்சிபி தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் தொடங்கியுள்ளது.

மஹாராஷ்டிராவில் நேற்று முன்தினம் என்சிபி தலைவர்களுள் ஒருவரான அஜித்பவார் ஆளுநர் கோஷ்யாரிடம் தந்திரமாக ஆதரவு கடிதத்தை பெற்று பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக கூறி, துணை முதல்வராக அஜித்பவாரும் முதல்வராக பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ்சும் எளிமையாக, அவசர அவசரமாக பதவியேற்றனர். ஒரே நாளில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பங்கள் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் அதன் கட்சி தலைவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவசர அவசரமாக பதவி பிரமாணம் செய்து வைத்ததாக ஆளுநருக்கு எதிராக சிவசேனா-காங்கிரஸ்-என்சிபி ஆகிய காட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதன் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் தொடங்கியது, அதில் பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் விடுத்த கடிதத்தையும், பட்நாவிஸ் அரசுக்கான எம் எல் ஏ- க்கள் ஆதரவு கடிதம் ஆகியவற்றை இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும் விசாரணையில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. பாஜக பிடியில் 4 என்சிபி எம்எல்ஏக்கள் நேற்று இருந்தனர் இவர்கள் 4 பேரையும் தற்போது மீட்டு விட்டோம்,மற்றொரு எம்எல்ஏவான பன்சோடும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போதிய வெற்றி பெற்ற 53 எம்எல்ஏக்களில் அஜித் பவர் மட்டுமே பாஜகவுடன் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று விசாரணை தொடங்கிய நிலையில் தங்களிடம் 53 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் உள்ளதாக என்சிபியின் சார்பில் ஆஜரான கபில் சிபில் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கூறியுள்ளார். பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹதிடம் முதலமைச்சர் பட்நாவிஸ்க்கு ஆதரவு இருக்கிறதா என நீதிமாற்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் உள்ளது என்றார், உள்ளது என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூபிக்கலாமே என கூறினார் நீதிபதி. பாஜக சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கால அவகாசம் கேட்கப்பட்டது.

ஜெயலலிதா பாணியில் பன்னீர்செல்வம் !!! ” தொண்டர்களால் நாங்கள்… தொண்டர்களுக்கா...

Quick Share

சென்னை: “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என மறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நேற்று “தொண்டர்களால் நாங்கள் தொண்டர்களுக்காகவே நாங்கள்” என பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர் செல்வம் பேசினார். அவர் பேசுகையில் தமிழகத்தில் வலுவான ஆட்சி நடைபெற்று வருகிறது. நல்ல பல திட்டங்கள் மக்களை சென்று அடைகின்றன.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு சரிவை கண்டாலும், இடைத்தேர்தலின் வெற்றி மூலம் அதிமுகவின் வலிமையை மக்கள் காண்பித்துவிட்டார்கள். மேலும் காவிரி பிரச்சனையில் வெற்றி கண்டோம் எய்ம்ஸ் மருத்துவமனை, 6 மருத்துவக் கல்லூரியையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒன்றாக செயல்படுவோம்.

ஜெயலலிதா அவர்கள் எந்த பொதுக்கூட்டத்திலோ அல்லது பிரச்சாரத்திலோ பேசும் பொது “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என கர்ஜிப்பார் அப்போது மக்களிடையே ஆரவாரம் அதிகரிக்கும். அதேபாணியில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சை முடிக்கும் போது தொண்டர்கள் நமது இதயம் போன்றவர்கள் ” தொண்டர்களால் நாங்கள், தொண்டர்களுக்காகவே நாங்கள்” என ஆர்ப்பரித்தது உற்சாகம் ஆனார்கள் அதிமுக தொண்டர்கள்.

இலங்கை ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு மு க ஸ்டாலின் கண்டனம்!!

Quick Share

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவ குவிப்பும், தமிழ் பெயர்கள் அழிப்பும் தலைவிரித்தாடுகிறது என கண்டனம் தெரிவித்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின். அவர் தாம் வெளியிட்ட அறிக்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ஸ்ரீலங்கையின் இராணுவ குவிப்பு அதிகமாக உள்ளதாகவும் மேலும் தமிழ் பெயர்களை கொண்ட தெருக்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்தா ராஜபக்சே பதவி ஏற்ற ஈரம் இன்னும் காயவில்லை இந்நிலையில் தமிழர்களை காயப்படுத்தி விட்டார்கள் என வருந்தி முக ஸ்டாலின் தெரிவித்தார்.தொடர்ந்து தமிழக மீனவரை பிடித்து துன்புறுத்துவது உலக தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சி தரும் ஸ்ரீலங்கையின் இராணுவ செயல்கள் அமைகிறது என குறிப்பிட்டள்ளார்.

தனக்கு வாக்களித்தவர் வாக்களிக்கத்தார் ஆகிய அனைவரிடமும் நான் சமமாக இருப்பேன் என கூறிய கோத்தபாய ராஜபக்சே தன் வாக்கை நினைவுபடுத்திக்கொள்ளுமாறு முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.மேலும் இந்திய பிரதமர் மோடி ஈழத்தமிழர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய பிரதமரை முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் !!! “உட்கட்சி தேர்தலில் போட்டியிட தொடர்ந்து 5 ஆண்...

Quick Share

அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவவோர் 5 ஆண்டுகள் தொடந்து அக்கட்சி உறுப்பினராக இருக்க வேண்டுமென சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு பொதுக்கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமணமண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.சாலைகளில் பேனர் வைக்க கூடாது என்ற நீதிமன்றத்தின் தடைஇருப்பதால்,எந்த இடங்களிலும் பேனர் வைக்கப்படாமல் காணப்படுகிறது. அதிமுக மதுசூதன் தலைமையில் இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேறியுள்ளது.மேலும் அதிமுகவில் 56 மாவட்டங்களாக பிரித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.இதன்படி ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டுமெனவும், அதேபோல் உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோரும் 5 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியில் உறுப்பினராக இருக்கவேண்டுமென திருத்தங்கள் நிறைவேற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து ,அதிமுகவின் வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.இதில் அதிமுக நிதி ரூ.226.0 கோடி நிரந்தர வைய்ப்பு நிதியாக உள்ளதாகவும், தேர்தல் நிதியாக ரூ.46.70 கோடியும், புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் ரூ.1.9 கோடி பெறப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்.மேலும் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

“அதிகாரபலத்தை கொண்டு மராட்டியத்தில் ஆட்சியை பிடித்த பாஜக”- ட்விட்டரில் கண்...

Quick Share

மஹாராஷ்ராவின் நிகழ்வு குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்த சீமான் மேலும் பாஜகவிற்கு எதிராக மாநில காட்சிகளை அணிதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இன்று பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்யக்கோரி காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்.கூட்டாக மனு அளித்துள்ளது.அதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியவதாவது: “அதிகாரபலத்தை கொண்டு தனது எதேச்சதிகாரப்போக்கின் மூலம் மராட்டியத்தில் பாஜக ஆட்சியமைத்தது மாபெரும் ஜனநாயக படுகொலை” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து மாநிலக் காட்சிகள் அணிதிரள வேண்டும, என நாம் தமிழர் கட்சி சார்பாக விருதுவதாகவும் சீமான் கூறியுள்ளார்.

“அவங்க சினிமா டயலாக் எனக்கு அலுத்துப்போச்சு” ! சுப்ரமணிய ஸ்வாமி சென்னை விமா...

Quick Share

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இன்று சுப்ரமணிய ஸ்வாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினி மற்றும் கமல் அரசியலில் இணைந்துள்ளதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் “சினிமா கேலிக்கூத்தாடிகள் ஒருபோதும் அரசியலில் எடுபடமாட்டார்கள், மேலும் ரஜினி அரசியலில் வரார் என பலவருடமாக கூறியிருக்கிறார், ரஜினி – கமல் பேசும் டயலாக் கேட்டு அலுத்துவிட்டதாக கூறினார். சினிமாவில் இருந்து அரசியலில் ஒன்றும் பண்ண முடியாது எனவும் கூறினார்.

மஹாராஷ்டிராவில் அரசியல் பிரச்னை பற்றி கேட்கும்போது அவர் தனக்கு மகாராஷ்டிரா அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

“சூடுபிடிக்கும் ஜார்க்கண்ட் தேர்தல் ” பிரச்சாரத்தை தொடங்கிய அமித்ஷா !!! ஜார...

Quick Share

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தொடங்கவிருப்பதால் பிரச்சாரத்தை தொடங்கிய அமித்ஷா, ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கியது பாஜக எனவும், பிரதமர் மோடியால் மாநிலம் வளர்ச்சிப்பாதையை அடைந்துள்ளதாகவும் பேசினார்.

ஜார்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30, டிசம்பர் 6, 12, 16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிற நிலையில், மீண்டும் தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா.

பிரச்சாரத்தில் பேசிய அவர் “அயோத்தி, காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார், அயோத்தி வழக்கை தொடர்ந்து விசாரிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. தற்போது அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரிம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓட்டுவாங்கி அரசியலுக்காக காஷ்மீர் பிரச்னையை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. பிரதமர் மோடி, சிறப்பு சட்டத்தை நீக்கி காஷ்மீர் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரகுபரதாஸ் ஆட்சிக்காலத்தில் மாநிலம் வேகமாக முன்னேறிவருகிறது”. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் வரும் டிசம்பர் 25 ஆம் தேதிநடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dec 1 முன்பாக மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமையும் – சிவசேனா சார்பில் சஞ்சய் ரா...

Quick Share

மகாராஷ்டிரா: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பல்வேறு குழப்பங்கள் இருந்த நிலையில் தற்போது யார் ஆட்சி அமைக்கப்போவது என்பது குறித்த ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லியில் சோனியா காந்தி மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மும்பையில் முன்று கட்சி முத்த தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

தற்போது சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் முதல்வர் பதவி காலமான 5 வருடத்தை சரிசமமாக தலா 2.5 ஆண்டுகளாக பிரித்துக்கொள்ள உள்ளனர். மேலும் முக்கிய அமைச்சரவை பங்கீடு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது




You cannot copy content of this Website