“கமல்,ரஜினி,விஜய் போன்றோர் கனல் நீர் போல காணாமல் போவார்கள் ” நடிகர் அஜித் க...
சென்னை சாந்தோமில் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் அரசியலில் கமல், ரஜினி,விஜய் போன்றவர்கள் மாயபிம்பங்கள் அவர்களை நம்புபவர்கள் ஏமாற்றப்படுவார்கள்,என விமர்சித்துள்ளார் .
கமல்
60 எனும் விழாவில் ரஜினி பேசும்போது ,தான் அரசியலுக்கு வருவார் என
ஒருபோதும் எடப்பாடி நினைத்திருக்க மாட்டார் என விமர்சித்தார். இதற்கு
கமலின் ஆதரவு தெரிவித்து பேசினார் . மேலும் இயக்குனர் எஸ் வி சந்திரசேகர்
பேசுகையில் அரசியலில் கமலும் ,ரஜினியும் தனது தம்பிக்கு வழிவிடவேண்டுமென
மறைமுகமாக நடிகர் விஜயை குறிப்பிட்டார் .இதனால் அதிமுகவினர் கமல் ,
ரஜினி,விஜய் ஆகிய மூவரையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில்
அரசியல் பிரச்சனை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருது தெரிவித்தார்
.அதில் அ தி மு க கூட்டணி முன்பு ரஜினி கமல் இணைப்பு எல்லாம்
தூள்தூளாகும், கமல்,ரஜினி ,விஜய் போன்றோர் மாயபிம்பங்கள் ,கானல் நீர் போல
காணாமல் போவார்கள் ,அவர்களை நம்பி பின்னால் செல்லும் இளைஞர்கள் ஏமார்ந்து
போவார்கள் என அதிரடியாக விமர்ச்சித்துள்ளார் .
மேலும் ,நடிகர் அஜித் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தும் கண்ணியமானவர் ,நேர்மையான நடிகர் என புகழாரம் சூட்டியுள்ளார் .