பொங்கல் 2021

கருப்புப்பட்டையுடன் கோசம்.., ஜல்லிக்கட்டில் பரபரப்பு

Quick Share

தமிழகத்தின் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி. காலை 8 மணிக்குத் துவங்கிய இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 420 வீரர்கள் அவற்றை அடக்கப் பாய்ந்தனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டின்போது திடீரென இரண்டு மாடுபிடி வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் போலீசார் உடனடியாக அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டில் எழுந்த குரல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் டார்கெட் !! 750 கோடிக்கு மது விற்க இலக்கு

Quick Share

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 80 முதல் 90 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் இந்த வருவாய் இரட்டிப்பாகும்.

தமிழகத்தில் வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5
நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளில் எதிர்பார்த்ததை விட மதுவிற்பனை அதிகரிக்கும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க
கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக அந்தந்த மாவட்ட மேலாளர்கள் மேற்பார்வையில் கடை ஊழியர்கள் மதுபானங்களை குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டுசெல்லும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 5 நாள் தொடர் விடுமுறையில் 750
கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 புத்தாண்டு பண்டிகைக்கு 297 கோடி வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு

Quick Share

பொங்கல் என்பது தென்னிந்தியாவில் வாழும் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நம் சங்க காலமான கி.மு 200-கி.மு 300 பார்த்து போகவேண்டும்.
வராலாற்று அறிஞர்கள் சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட “தை நீராடல்”என்றே நம்புகின்றனர்.அப்போதைய கொண்டாட்டம் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது. தை நீராடலின் ஒரு பகுதியாக அக்கால பெண்கள் “பாவைநோன்பு” என்ற விரதத்தைக் கடைப்பிடித்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது மழையும் வளமும் பெருக வேண்டி இளம்பெண்கள் வேண்டுவார்கள்.

பெண்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து குளித்து விடுவார்கள்.ஈர மண்ணில் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலையை வணங்கி வந்தார்கள்.இந்த விரதத்தை தை முதல் நாள் முடித்துக் கொள்வார்கள். பழமை பெற்ற இந்த சம்பிரதாயங்கள்,சடங்குகளும் பொஙஞ திருவிழாவிற்கு அடித்தளமாக அமைந்தது.

போகித் திருநாள்:
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்னும் நன்மொழிக்கு ஏற்ப போக்கிதிருநாள் விளங்ககிறது. பழையவற்றையும், பயன்படாததையும் வெளியில் விடும் நாளாக எண்ணப்படுகிறது. போகியன்று வீட்டின் கூரையில் காப்புக்கட்டுவார்கள். அந்த நாளன்று தேவையற்றவை அகற்றப்பட்டு வீடு தூய்மையாக்கப்படும்.

இந்திர தேவன் மற்றும் கிருஷ்ண பகவான்:

போகி பற்றிய புராணக்கதை இது.தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் கும்பிட்டு வந்தனர்.இப்படி வணங்கி வருவது இந்திரனுக்கு தலைகணத்தை உண்டாக்கியது. கிருஷ்ணருக்கு இது தெரிய வந்ததும், இந்திரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினார்.

கிருஷ்ணரும் ஆடு மேய்க்கும் நண்பர்களும் இன் இந்திர தேவனை வணங்க கூடாது என்று கூறினார்கள்.இந்திர தேவனுக்கு கோபம் வந்துவிட்டது.ஆகையால்,புயல் மழையை உண்டாக்கினார்.தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க கோவர்த்தன மலையை தன் சுண்டு விரலால் தூக்கி நின்றார் கிருஷ்ணர்.

3 நாட்கள் பெய்ததுமழை. தன் தவறை உணர்ந்தார் இந்திரன். கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார்.
அன்றுமுதல் இந்திரனை போற்றும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட கிருஷ்ணர் இசைவு அளித்தார். இது இந்திரனின் இன்னொரு பெயரைக் கொண்டுள்ளது இந்த பண்டிகை.

பொங்கல் சிறப்பு அப்டேட்: 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள்

Quick Share

இன்னும் சில நாட்களில் பொங்கல் விடுமுறை தொடங்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 24 மணி நேரமும்
கூடுதல் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள்புறப்படும் பின்வரும் 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் ஜனவரி 11 முதல் 13-ம் தேதி வரை 3 நாள்களுக்கும் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.

வரும் பொங்கல் திருநாளினை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச்
சென்றிட ஏதுவாக,

சென்னையிலிருந்து

11.01.2021, 12.01.2021 மற்றும் 13.01.2021
ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 10,228 பேருந்துகளில்,

11ஆம் தேதி 2,226 பேருந்துகளும்,

12ஆம் தேதி 4,000 பேருந்துகளும்,

13ஆம் தேதி 4,002 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,993 பேருந்துகள் என ஆக மொத்தம் 16,221 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன.”

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், ஜனவரி 11 முதல் 13-ம் தேதி வரை 3 நாள்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள்
பின்வரும் ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரயில் நிலைய பேருந்து
நிலையம்

பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் (கோயம்பேடு) 5. கே.கே. நகர் பேருந்து நிலையம்”

பொதுமக்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்
இயக்கப்படும் இணைப்புப் பேருந்து நிலையம்.




You cannot copy content of this Website