முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் கடந்தாண்டு, விமானத்தில் சென்றபோது, விமானத்தில் சென்ற பயணி ஒருவரை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில், தாக்கப்பட்ட அந்த நபர், டைசன் தனக்கு 350000 பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3.6 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் மன அழுத்தம், வெர்டிகோ. ஞாபக மறதி போன்ற பல பிரச்னைகளால் அவதிப்பட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கு ஏலம் விடப்படவுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது.
அதில், பிரான்சுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும். இந்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.36 வயதான லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்ததுடன் அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஒரு தொகை சாண்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையால் நடத்தப்படும் யுனிகாஸ் திட்டத்தின் மூலம் அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.ஏலம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நியூயோர்க் கிளையில் நடைடைபெறும்.அதேவேளை 2022 ஆம் ஆண்டு டியாகோ மரடோனா 1986 இல் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றபோது அவர் அந்தப் போட்டியில் அணிந்திருந்த ஜேர்சி 9.3 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது.இது குறிப்பாக கால்பந்து விளையாட்டு நினைவுப் பொருட்களின் ஏல விற்பனையில் அதிக விலைக்கு ஏலம் போன விளையாட்டு பொருளாக சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் “உலகக்கிண்ண கால்பந்தாட்ட விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது, இது மெஸ்ஸியின் வீரம் நிறைந்த பயணத்துடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளதுமற்றும் சிறந்த வீரர் என்ற அந்தஸ்தை உறுதியாக நிலைநிறுத்துகிறது. இந்த ஆறு ஜேர்சிகளின் விற்பனை ஏல வரலாற்றில் ஒரு சிறந்த நிகழ்வாக இருக்கும். ரசிகர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு மெஸ்ஸியின் முடிசூட்டு சாதனைக்கான தொடர்பை வழங்குகிறோம்” என்று சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நவீன சேகரிப்புகளின் தலைவர் பிராம் வாச்சர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில், இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.இதனை தொடர்ந்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் திறமையும், உறுதியும் சிறப்பானதாக இருந்தது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி, இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சு பதவியில், ஜனவரி மாதம் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததை அடுத்து அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.விளையாட்டுத்துறை அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் ரொஷான் ரணசிங்க, அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டு எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட வேண்டும் என பல முன்மொழிவுகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் சபையினால் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இம்மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள 3 கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தவறானவையாகும்.
தவறான காரணிகளைக் குறிப்பிட்டு இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமையை நீக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 220 இலட்சம் மக்களினதும் விளையாட்டு உரிமையை மீறும் செயலாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கட் சபையினால் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 3 கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட காணொளியூடான அறிவிப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் தினத்தில் கிரிக்கெட்டை நேசிக்கும் இந்நாட்டு மக்களுக்கு புதிய விடயங்களை தெரியப்படுத்தியிருக்கின்றேன்.இலங்கை கிரிக்கட் நிறுவனம் கடந்த 6,7 மற்றும் 9ஆம் திகதிகளில் 3 கடிதங்களை சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளது. இக்கடிதங்களை வாசிக்கும் போது இலங்கையில் கிரிக்கட் எவ்வாறு தடை செய்யப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.நவம்பர் 6 ஆம் திகதி எழுதிய கடிதத்தில் இடைக்காலக் குழுவை விமர்சித்துள்ளதுடன், அரசியல் ரீதியான தலையீடுகள் இடம்பெறுவதாகவும்,அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இரண்டாவது கடிதத்தின் மூலம் இடைக்காலக் குழு விளையாட்டுச் சட்டத்தை மீறியுள்ளதாகவும், இது சர்வதேச கிரிக்கட் பேரவையின் சட்டத்திற்கு முரணானது என்றும் இடைக்கால குழுவொன்றை நியமித்தால் கிரிக்கட்டை தடை செய்ய நேரிடும் என்று கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் 2024, ஐ.சி.சி சர்வதேச மாநாடு, டி20 போட்டி போன்றவற்றை பிற நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. 3 ஆவது கடிதத்தின் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சரின் முயற்சியாலையே பாராளுமன்ற விவாதம் நடந்ததாகவும், கிரிக்கட் உறுப்பினர்கள் நீக்கப்பட்டு அதன் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கிரிக்கட் சட்டத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ,இது ஐ.சி.சி. சட்டத்துக்கு முரணானது குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் 20 வீதத்தை விளையாட்டுத்துறை அமைச்சு கேட்பதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.இக்கடிதங்களில் உள்ள உள்ளடக்க தகவல்கள் தவறானவையாகும். இதில் அரசியல் ரீதியான தலையீடுகள் எதுவும் இடம்பெறவில்லை. அதே நேரம் இது நட்புவட்டார விளையாட்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது 220 இலட்சம் மக்களதும் விளையாட்டு உரிமையை மீறும் செயலாகும் என்றார்.
2023 உலகக் கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தான் சில கிரிக்கெட் வீரர்களுக்கு கடைசி என தெரிகிறது. அதன்படி, ரோஹித், முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா, கோலி (ஃபிட் இல்லை என்றால்) 2027 உலகக்கோப்பையில் விளையாட முடியாது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் வில்லியம்சன், சவுத்தி மற்றும் சிலர் அடுத்த உலகக்கோப்பையின் போது 40 வயதை எட்டுவார்கள்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், செய்த தவறு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் அணித்தலைவர் ரோகித் சர்மா.
சாக்கு சொல்ல விரும்பவில்லை
அவுஸ்திரேலியா அணியின் வெற்றி ரகசியத்தை குறிப்பிட்ட ரோகித் சர்மா, இந்திய அணியின் தோல்விக்கு சாக்கு சொல்ல விரும்பவில்லை எனவும் வெளிப்படையாக கூறி அதிர வைத்தார்.
சேஸிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வென்றது. இரண்டாம் பாதியில் துடுப்பாட்டத்தில் இறங்கும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என கூறப்பட்ட நிலையில், அது அப்படியே நடந்தது.
இந்தியா முதலில் துடுப்பெடுத்து ஆடிய போது பவுண்டரிக்கு பந்துகளை விரட்டவே கடினமாக இருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி சேஸிங் செய்த போது நிதான ஆட்டம் ஆடினாலும் அவ்வப்போது பவுண்டரி அடித்தது.
மேலும், ஆடுகளத்தின் தன்மை மாறியதால் இந்திய பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனது. அதுவே போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
20 – 30 ஓட்டங்கள் கூடுதலாக
போட்டிக்கு பின்னர் ரோகித் சர்மா பேசுகையில், போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக வரவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். ஆனால், எதுவும் சரியாக நடக்கவில்லை.
இன்னும் 20 – 30 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கோஹ்லி, ராகுல் கூட்டணி ஆடிய போது 270 – 280 ஓட்டங்கள் வரை எடுப்போம் என நினைத்தேன்.
ஆனால், விக்கெட்டை வரிசையாக இழந்தோம். 240 ஓட்டங்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பந்து வீசும் போது நாங்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தி இருக்க வேண்டும். ஆனால், ஹெட் – லாபுஷேன் சிறப்பாக கூட்டணி அமைத்து ஆடினார்கள். எங்களை இந்தப் போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டார்கள்.
மின் வெளிச்சத்தில் ஆடுகளம் சற்று மாறி விட்டதாக கருதுகிறேன். ஆனால், அதை ஒரு சாக்காக சொல்ல விரும்பவில்லை. நாங்கள் போதுமான ஓட்டங்கள் குவிக்கவில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் அணித்தலைவர் ரோகித் சர்மார்.
உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான விஐபி டிக்கெட் விலையை கேட்டால் தலை சுற்றி கீழே விழுந்துவிடுவோம். ஏனென்றால், ஆன்லைனில் ஒரு விஐபி டிக்கெட் விலை ரூ.8 லட்சம். ஏற்கெனவே போட்டி நடக்கும் அகமதாபாத்தில் ஓட்டல்களின் நாள் வாடகை லட்சக்கணக்கில் எகிறிய நிலையில், விஐபி டிக்கெட்டின் விலையும் மிக அதிகமாக உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் இந்திய அணிக்கு ரோகித்சர்மா அபாரமான தொடக்கம் அளித்தார்.
சதத்தை நோக்கி ஆடிய சுப்மன்கில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வெளியேற ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அபாரமாக ஆடினார், நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாசிய விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 50வது சதத்தை விளாசினார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலே அதிக சதம் விளாசிய வீரர் என்ற கிரிக்கெட் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். யாராலும் வீழ்த்த முடியாது என்று கருதப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி முறியடித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி பும்ரா, சிராஜ், முகமது சமி, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்ட்யா காயத்தால் வெளியேறியதால் 6-வது பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடி வருகிறது. ஒருவேளை இந்த ஐந்து பேர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று பந்து வீச்சாளருக்கு என்ன செய்யும்? என்ற கேள்வியை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் அடிக்கடி முன்வைப்பது உண்டு.
பெரும்பாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுக்கு மேல் பயன்படுத்தும் அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டது இல்லை. ஆனால், நெதர்லாந்துக்கு எதிராக விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் பந்து வீசினர். இதில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விக்கெட் வீழ்த்தினர்.
எல்லோரையும் பந்து வீச வைத்தது ஏன்? என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இதுதொடர்பாக கூறுகையில் ”இது போன்ற சில விசயங்களை செய்து பார்க்க வேண்டும் என எங்கள் மனதில் இருந்தது. இதுபோன்ற வாய்ப்புகளை அணியில் உருவாக்க விரும்பினோம். தற்போது எங்கள் அணி 9 பேர் பந்து வீசும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் நாங்கள் சில விசயங்களை முயற்சி செய்து பார்த்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் வைடு யார்க்கர்கள் வீசினார்கள். இது தேவையில்லை. என்றாலும் அவர்கள் செய்து பார்த்தார்கள்” என்றார்.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ரோகித் சர்மா சுமார் ஏழு வருடங்கள் கழித்து பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் மோசடி நிறைந்த இலங்கை கிரிக்கெட் சபையை கலைப்பதற்கு முழு பாராளுமன்றமும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரேரணை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் சபையில் விவாதம் நடத்தி வாக்கெடுப்பதற்கும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகள் தொடர்பில் சபையில் நீண்ட விளக்கம் ஒன்றை முன்வைத்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை இல்லாமலாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையை உடனடியாக கலைக்க வேண்டும் என தெரிவித்து முழு பாராளுமன்றமும் இணைந்து பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாச பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.குறித்த பிரேரணைக்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்தும் ஆளும் கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளவோம் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கையை சுமார் ஒரு மணி நேரம் வரை தற்காலிகமாக ஒத்திவைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.அதன் பிரகாரம் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, நாளை இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாக விவாதித்து, இலங்கை கிரிகெட் சபையை உடனடியாக கலைத்துவிடவும் இடைக்கால குழு கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லவும் பிரேரணை நிறைவேற்றி வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.