விளையாட்டு

இந்த மனிதருக்கு கைகுலுக்கி ஒன்றை கூற காத்திருக்கிறேன்! கோலி குறித்து நெகிழ்ச்சியுடன் பத...

Quick Share

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சாதனை சதம் விளாசிய கோலியை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக நெதர்லாந்து வீரர் வெஸ்லி பர்ரேசி கூறியுள்ளார். 

கோலி சாதனை 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கொல்கத்தாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49வது சதம் விளாசினார்.

இதன்மூலம் சாதனை படைத்த அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அதேபோல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அனைத்திலும் வென்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நெதர்லாந்து வீரர்

இதற்கிடையில் தனது கடைசி போட்டியில் இந்திய அணி 12ஆம் திகதி நெதர்லாந்தை சந்திக்கிறது. இந்த நிலையில் நெதர்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் வெஸ்லி பர்ரேசி சாதனை படைத்த விராட் கோலியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். 

அவரது பதிவில், ‘அடுத்த வாரம் இந்த மனிதருக்கு கைகுலுக்கி, உங்கள் பெயரை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என கூற ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். 

https://twitter.com/Pepe_Barezi/status/1721156939995074772?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1721156939995074772%7Ctwgr%5E3e2a1cc4ed510c8ff1ee4692005358f8b55a3d61%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fnetherlands-player-waiting-to-handshake-kohli-1699210456

5 விக்கெட் வீழ்த்திய என் அன்பார்ந்த கணவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஜடேஜாவின் மனைவி ...

Quick Share

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஜடேஜாவுக்கு, அவரது மனைவி வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளது வைரலாகியுள்ளது. 

மிரட்டிய ஜடேஜா 

கொல்கத்தாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

தென் ஆப்பிரிக்க அணி 83 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக முக்கிய காரணமாக அமைந்தது ரவீந்திர ஜடேஜா. அவர் கிளாசென், மில்லர் என மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

அத்துடன் துடுப்பாடியபோது 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்களும் விளாசினார்.

கணவருக்கு வாழ்த்து

இந்த நிலையில் ஜடேஜாவின் மனைவி ரிவபா தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவரது பதிவில், 

‘தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை அபாரமாக வீழ்த்தியதற்காக எனது அன்பான கணவர் ரவீந்திர ஜடேஜாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பிரகாசிக்கின்றன. இந்தியாவுக்கு மற்றொரு த்ரில் வெற்றி!’ என தெரிவித்துள்ளார். 

https://twitter.com/Rivaba4BJP/status/1721182598976999581?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1721182598976999581%7Ctwgr%5E545610a3f7c1da50a7ca356c3b7b37da3e4bc67f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fjadeja-wife-wish-him-in-tweet-for-5-wkts-1699224555

 

   

முதல் முறையாக டக்அவுட் ஆகிய விராட் கோலி..ரசிகர்கள் பேரதிர்ச்சி!!

Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் கோலி டக்அவுட் ஆனது ரசிகர்ளை ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்தியா பேட்டிங் 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி இன்று லக்னோவில் தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதனால் இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் முதல் முறையாக முதலில் துடுப்பாடுகிறது. ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (49 சதங்கள்) விராட் கோலி இன்றைய போட்டியில் எட்டிப்பிடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் 

கோலி ஏமாற்றம் 

தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ஓட்டங்களில் அவுட் ஆக, விராட் கோலி களத்திற்கு வந்தார். ரசிகர்கள் இதனால் உற்சாகமடைந்தனர். அதன் பின்னர் பந்துகளை எதிர்கொண்ட கோலி ரன் எடுக்க தடுமாறினார்.

அணியின் ஸ்கோர் 27 ஆக இருந்தபோது வில்லி ஓவரிலில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து கோலி அவுட் ஆனார். மொத்தம் 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் ரன் கணக்கை தொடங்காமலேயே டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. விராட் கோலி தனது உலககோப்பை வரலாற்றில் முதல் முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.

இதற்கிடையில் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து 12,445 கிலோ மீற்றர் பயணம் செய்து வந்ததாக ஏந்திய பதாகை தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுவரை விராட் கோலி 287 போட்டிகளில் 48 சதங்கள் மற்றும் 69 அரைசதங்கள் அடித்துள்ளார்.

 

மூளையில் ரத்தக்கசிவு… கோமாவில் 221 நாட்கள்: பிரபல குத்துச்சண்டை வீரரின் தற்போதைய ...

Quick Share

தோல்வியே கண்டிராத பிரபல குத்துச்சண்டை வீரர் ஒருவர் மூளையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் 221 நாட்கள் கோமாவில் படுத்த நிலையில், தற்போது மீண்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

தலையின் பின்புறத்தில்

அமெரிக்காவின் இளம் குத்துச்சண்டை வீரரான பிரிச்சார்ட் கோலன் கடந்த 2015ல் டெரல் வில்லியம்ஸ் என்பவருக்கு எதிரான போட்டியின் போது வாழ்க்கையையே புரட்டிப்போடும் காயங்களுக்கு உள்ளானார்.

போட்டி முழுவதுமே வில்லியம்ஸ் கோலனின் தலையின் பின்புறத்தில் பலமுறை குத்து விட்டார். இந்த நிலையில் மயக்கம் ஏற்படுவதாக கூறிய கோலன், திடீரென்று சுயநினைவின்றி சரிந்தார். 

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சுமார் 221 நாட்கள் கோமா நிலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

அனைத்திலும் வெற்றி

அத்துடன் அவரது மூளை வீக்கத்தைக் குறைக்கவும், ரத்தக்கசிவை அகற்றவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது 31 வயதான கோலன் தொடர்ந்து தாயாரின் கவனிப்பில் உள்ளார்.

8 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வரும் கோலன் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் என்றே கூறப்படுகிறது. பிரிச்சார்ட் கோலன் இதுவரை 16 போட்டிகளில் பங்கேற்று, அனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். 

கடந்த 2017 இல் ரிங்சைடு மருத்துவர் மற்றும் போட்டி முன்னெடுத்தவர்களிடமிருந்து நஷ்டஈடு கோரி கோலனின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும், 41 மில்லியன் பவுண்டுகள் வழக்கு இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது.

மீண்டும் தனுஷ்க குணதிலக்கவிற்கு வாய்ப்பா..! இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு.

Quick Share

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இருந்து தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.


காவிரி போராட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஆதரவு!

Quick Share

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடக்க உள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர், நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கர்நாடகத்தை சேர்ந்த கே.எல்.ராகுலும் காவிரி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கே.எல்.ராகுல் தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘காவிரி எப்போதும் நமதே (கர்நாடகம்), காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகி அதிகளவு தண்ணீர் இங்கு குவிகிறது. ஆனால் அந்த தண்ணீரை பயன்படுத்த ஒவ்வொரு ஆண்டும் கன்னடர்கள் சட்ட போராட்டத்துடன் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது. இதுதான் எங்களின் சோகம். காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து’ என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு கன்னடர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

3 ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு 4.40 லட்சம் பீஸ் காட்டுகிறார் M .S தோணி..!வைரலாகும் ஸ்...

Quick Share

 3ஆம் வகுப்பில் படிக்கும் தோனியின் மகளுக்கு தோனி இவ்வளவு பீஸ் கட்டுகிறாரா என்று ஒரு விடயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கேப்டன் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரும் தூணாய் இருப்பவர் தான் மகேந்திரசிங் தோனி. மகேந்திர சிங் தோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.

உலக கிரிக்கெட் அரங்கில் நிலைநாட்டியவர் இவர், கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுத்து பெருமைப்படுத்தியவர்.

இப்படி கிரிக்கெட் உலகில் ஜாம்பவாக இருக்கும் தோனி ஆரம்பத்தில் டிக்கெட் கலெக்டராக வேலைப்பார்த்தவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது. தோனி 2010ஆம் ஆண்டு ஜுலை 4ஆம் திகதி சாக்‌ஷி என்றப் பெண்ணை திருமணம் செய்தார். இநத தம்பதிகளுக்கு ஷிவா என்ற பெண் குழந்தையும் உள்ளார்.

மகளின் ஸ்கூல் பீஸ் 

இந்நிலையில் தோனி பற்றிய ஒரு செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது தோனி தனது மகளுக்கு ஸ்கூல் பீஸ் எவ்வளவு கட்டுகிறார் என்ற தகவல் தான் அது.

அதாவது தோனியின் மகள் தற்போது தான் 3ஆவது படித்து வருகிறார்.  அவர் படிக்கும் பள்ளியில் ஆண்டு கட்டணமாக 2.75 இலட்சம் ரூபா பீஸாக கட்டுகிறாராம். இது ஒரு மாதத்திற்கு 23 ஆயிரம் ரூபாவாம். 

மேலும், அந்தப் பள்ளியில் போர்டிங் வசதியும் இருக்கிறதாம் அதில் தோனியின் மகள் சேர்த்திருந்தால் மொத்தமாக 4.40 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்நிலையில் தற்போது தோனி மகளின் ஸ்கூல் பீஸ் விபரம் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

விராட் கோலியின் அண்ணன் யார் தெரியுமா? பெரிய தொழிலதிபர்.. கோடிகளில் கொட்டும் வருமானம்

Quick Share

விராட் கோலியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து பெரும் சம்பளம், விளம்பரத்தில் நடிக்கும் தொகை, ஆன்லைன் போஸ்ட்களுக்கு பெரும் தொகை போக அவர் தனியாக ஒன்8 (One8) என்ற பிராண்ட் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார். 

இந்த பிராண்டில் துணிகள், காலணிகள், உணவகங்கள் மற்றும் பார் போன்றனவும் அடங்கும். இதில் ஒன்8 கம்யூன் என்று பிரத்யேகமாக டெல்லியில் இயங்கும் உணவகமும் அடங்கும்.

இந்த லாபகரமான தொழிலில் விராட் கோலியும் அவரது சகோதரரான விகாஸ் கோலியும் பல வருடங்களாக பார்ட்னர்களாக உள்ளனர். 

இவர்தான் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். விராட் கோலியின் ஜெர்சி எண்ணான 18ஐ பிரதிபலிக்கும் விதமாகவே இந்த நிறுவனத்திற்கு ஒன்8 என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனம் நடத்தும் உணவகங்கள் மற்றும் பார்களில் மட்டும் இந்த ஆண்டு 112 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக சொல்லப்படுகிறது.

தொழில் கூட்டாளியாக மட்டும் இல்லாமல் விகாஸ் கோலி தொடர்ந்து விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்துள்ளார். 

இளம்வயதில் பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, மோசமாக விளையாடும் நேரத்தில் வழிகாட்டுவது மற்றும் அவரை உற்சாகப்படுத்துவது என விராட் கோலியுடனே பயணித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் குறுகிராமில் வசிக்கும் இவருக்கும் சேத்னா என்ற துணைவியாரும், ஆரவ் கோலி என்ற மகனும் உள்ளனர்.

விலையுயர்ந்த கடிகாரங்களை சேகரிப்பது இவரது பொழுதுபோக்காக உள்ளது. இதுபோக கிரிக்கெட்டிலும் மிகுந்த ஆர்வமுள்ள இவரை அடிக்கடி ஆர்.சி.பி வீரர்களுடன் பார்ட்டியிழும் சிலசமயம் தோனியுடனும் காணமுடியும். 

எம்எஸ் தோனிக்கு சாக்லேட் கொடுத்த விமான பணிப்பெண் – வைரலாகும் வீடியோ!

Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.பி.எல். போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகும்.

அதுபோன்ற ஒன்று தற்போதும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் தோனி ஒரு விமானத்தில் பயணம் செய்கிறார். பயண நேரத்தை கழிப்பதற்காக அவர் தனது டேப்பில் கேண்டி கிரஸ் கேமை விளையாடி கொண்டு இருக்கிறார். 

அப்போது பணிப்பெண் ஒருவர் ஒரு தட்டு முழுவதும் சாக்லெட்டுகளை எடுத்து வந்து தோனியிடம் வழங்குகிறார். இதைப்பார்த்து மகிழ்ந்த தோனி அன்புக்காக ஒரு சாக்லேட்டை மட்டும் எடுத்துக்கொண்டார். 

அப்போது அந்த பணிப்பெண் ஒரு பேப்பரை கொடுத்தார். அதில் ஏதோ எழுதியிருந்தது. அதைப்படித்துப் பார்த்த தோனி பணிப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்து விட்டு மீதமுள்ள சாக்லேட்டுகளை திருப்பி கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

தந்தை இறப்பு… 17 வயது விராட் கோலி ஆடிய ஆட்டம் குறித்து ஆச்சர்யப்பட்ட சக வீரர்!

Quick Share

இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவரும் விராட் கோலி, இந்திய அணிக்காகப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். ஆனால் 17 வயதில் போட்டிக்கு முன்பு தந்தையின் இறப்பு செய்தி கேட்டுவிட்டு விராட் கோலி களம் இறங்கியது குறித்து அவருடைய நண்பரும் சக வீரருமான இஷாந்த் சர்மா தற்போது பகிர்ந்து கொண்டுள்ள ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் அண்டர் 17 கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே விராட் கோலியுடன் ஒன்றாக விளையாடியும் நண்பராகவும் இருந்துவரும் இஷாந்த் சர்மா பகிர்ந்து கொண்டுள்ள கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளராக இருந்துவந்த இஷாந்த் சர்மா கடந்த 2022 இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதுவரை 105 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பக்க பலமாக இருந்துள்ளார். மேலும் கபில்தேவ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் அதேபோல தோனி தலைமை, விராட் கோலி தலைமை என்று மூத்த வீரர்களுக்கு பக்க பலமாக இருந்து வந்தவர்.

தற்போது 34 வயதில் மீண்டும் கம்பேக் கொடுத்து ஐபிஎல் போட்டிகளுக்காக டெல்லி அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பர் விராட் கோலியைப் பற்றி யூடியூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அவர், நாங்கள் 17 அண்டர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தோம். அப்போது ஒருநாள் கோலி சோகமாக தனித்து இருந்தார். ஏனென்று கேட்டேன். அருகில் இருந்தவர் அவரது தந்தை இறந்த தகவலைக் கூறினார். இதைக் கேட்டவுடன் எப்படி அந்த நேரத்தை எதிர்கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

ஆனால் தந்தை இறப்பின்போதும் விராட் கோலி களத்தில் இறங்கி டெல்லி அணிக்காக, கர்நாடக அணியை எதிர்த்து அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடினார். 80 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்றே தெரியவில்லை. நானாக இருந்தால் களத்திற்கே சென்றிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஃபிட்னஸ் விஷயத்தில் விராட் கோலி அதிக அக்கறை கொண்டவர். கிரிக்கெட் வீரர்களும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். அவருடைய தலைமையில் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஃபிட்னஸ் விஷயத்தில் அக்கறை காட்டினர் என்றும் தற்போது ஆன்மிக விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். இதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என்றும் விராட் கோலி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் 17 வயதில் தந்தையின் இறப்பு செய்தி கேட்ட பிறகும் போட்டிக் களத்தில் இறங்கி விளையாடிய விராட் கோலியை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்

சிஎஸ்கே வெற்றி; இன்ஸ்டாகிராம் முகப்பு புகைப்படத்தை மாற்றிய ஜடேஜா…!

Quick Share

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. மழை குக்றுக்கீடு காரணமாக சென்னை அணியின் வெற்றிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில் சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 எடுத்து திரில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது அப்போது ஸ்டிரைக்கில் இருந்த ஜடேஜா சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் முகப்பு புகைப்பத்தை மாற்றியுள்ளார். அதில் ஜடேஜாவை டோனி தூக்கியது போல உள்ள புகைப்படத்தை தனது முகப்பு புகைப்படத்தில் வைத்துள்ளார்.

ஐபிஎல் இறுதி போட்டியில் வென்ற சென்னை அணி! ஓய்வு குறித்து உருக்கமாக பேசிய தோனி

Quick Share

அகமதாபாத் மைதானத்தில் இறுதி போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றிய சென்னை அணியின் கேப்டன், தோனி ஓய்வு குறித்து பேசியுள்ளார். 

சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி 

ஐபிஎல் இறுதி போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணிக்கும் சென்னை அணிக்கும் இடையே நடைபெற்றது. 

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 214 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

https://twitter.com/ChennaiIPL/status/1663300604469596160?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1663300604469596160%7Ctwgr%5Ee31859725b483990ca3126369af656115e3d3984%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fms-dhoni-says-about-his-retirement-in-ipl-video-1685417779

மழையின் காரணமாக சிறிது தாமதமாக பேட்டிங்கை துவங்கிய சென்னை அணி, 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை எதிர்கொண்டு ஆடி, சாம்பியன் பட்டம் வென்றது. 

ஓய்வு குறித்து தோனி உருக்கம் 

இதனை தொடர்ந்து ஓய்வு குறித்து தோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இது குறித்து பேசிய தோனி 

‘மிகவும் உணர்வுப்பூர்வமான இறுதி போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். என் கண்களில் கண்ணீர் மிதந்தது, என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம், ஆனால் எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.

https://twitter.com/IPL/status/1663298116328759296?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1663298116328759296%7Ctwgr%5Ee31859725b483990ca3126369af656115e3d3984%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fms-dhoni-says-about-his-retirement-in-ipl-video-1685417779

இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது, ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், அடுத்த 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. அது என்னிடம் இருந்து கிடைக்கும் பரிசாக இருக்கும், அதற்காக நான் உடலை தயார் செய்ய வேண்டும்.

ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதங்கள் இருக்கிறது. சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய விதத்திற்காக, இது அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று’ என தோனி கூறியுள்ளார்.  




You cannot copy content of this Website