விளையாட்டு

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி – வைரலாகும் வீடியோ

Quick Share

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தோனியிடம் கையெழுத்து வாங்கிய வீரர்கள்

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் கடைசி லீக் ஆட்டமாகும். இதனால், போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்..

இதனையடுத்து, தோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார். பிறகு டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது வீசினார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் தோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். 

தோனி மைதானத்தில் தன் அணியினருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் தோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

இவரையடுத்து, கொல்கத்தா வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தன் அணி சட்டையை கொண்டு வந்து தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றனர். 

சமீபத்தில் தோனி இந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் விடை பெற்றுவிடுவாரோ என்று சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களுக்கு, திடீரென்று லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் ‘இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை’ என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

பிரபல கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய் பாதிப்பு

Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தோல் புற்றுநோய் இருப்பது ஸ்கிரீனிங் சோதனையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரது மார்பில் இருந்த புற்றுநோய் கட்டியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கின்றனர். சிகிச்சை எடுத்துக்கொண்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாகவும், தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் சாம் பில்லிங்ஸ் தெரிவித்தார். மேலும் வெயிலில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என்று அவர் சக கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக சாம் பில்லிங்ஸ் மூன்று டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார், மெஸ்ஸி!

Quick Share

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை வென்றார் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் மெஸ்ஸி.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை மற்றும் அணிக்கு Laureus விருது வழங்கப்பட்டு வருகிறது. 2000-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணி கால்பந்தாட்ட உலகக் கோப்பையை வென்று அசத்தி இருந்தது. அதனால் ஆண்டின் சிறந்த அணிக்கான விருதை அர்ஜென்டினா வென்றுள்ளது. இதன் மூலம் தனிநபர் மற்றும் அணி என இரண்டு விருதினை மெஸ்ஸி இந்த முறை வென்றுள்ளார். கடந்த 2020-ல் லூயிஸ் ஹாமில்டனுடன் இணைந்து சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை மெஸ்ஸி பெற்றிருந்தார்.

ஜமைக்காவின் தடகள வீராங்கனை ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார். டென்மார்க்கின் கால்பந்தாட்ட வீரர் எரிக்சன் களத்தில் கம்பேக் கொடுத்தமைக்காக ‘கம்பேக் ஆப் தி இயர்’ விருதை வென்றார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் கார்லோஸ் அல்கராஸ் ‘பிரேக் த்ரூ ஆப் தி இயர்’ விருதை வென்றார்.

WWE முன்னாள் வீராங்கனை மரணம்…

Quick Share

அமெரிக்காவின் பிரபல நட்சத்திர மல்யுத்த வீராங்கனையாக திகழ்ந்தவர் சாரா லீ(30). இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மர்மமான நிலையில், தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாரா லீ-இன் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு குத்துச்சண்டையான WWE-ன் “Tough Enough” நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் சாரா லீ வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாரா லீக்கு வெஸ்லி பிளேக் என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தோனி ரசிகர்களுக்கு செம்ம அப்டேட்…!12 ம் தேதி வெளியாகும் தோனி படம்…!

Quick Share

ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி சென்னை அணி விளையாடும் மற்ற மைதானங்களில் கூட சென்னை அணியின் ரசிகர்கள் சூழ்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனியின் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பு என்னவென்றால் எம்.எஸ். தோனி படம் வருகிற 12ஆம் தேதி மீண்டும் ரிலீசாக உள்ளது. 2016ஆம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான M.S. Dhoni: The Untold Story திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில், ஐபிஎல்லில் தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வரும் சூழலில், படத்தை வரும் 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என படக்குழு மகிழ்ந்துள்ளது.

https://twitter.com/ThanthiTV/status/1654335839109873665?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1654335839109873665%7Ctwgr%5E2c77c935c270cbd056dad606eaedb2ac30017bdb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FSports%2FCricket%2Fbig-treat-for-dhoni-fansdhoni-movie-releasing-on-12th-957682

லியோனல் மெஸ்ஸிக்கு தற்காலிக தடை

Quick Share

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி அதிர்ச்சி அளித்துள்ளது. மெஸ்ஸிக்கு இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. சவுதி அரேபியாவுக்கு அனுமதியின்றி சென்றதற்காக மெஸ்சி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த இரண்டு வாரங்களுக்கு அணியுடன் விளையாடவும், பயிற்சியில் பங்கேற்கவும் தடை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது எந்த கட்டணமும் செலுத்தப்பட மாட்டாது என தெரியவந்துள்ளது. சவுதி அரேபியாவின் சுற்றுலாத் தூதராகப் பணிபுரியும் மெஸ்ஸி, ட்ராய்ஸ் மற்றும் அஜாசியோவுக்கு எதிரான லீக் 1 போட்டிகளில் பங்கேற்க முடியாது.

இது என் கடைசி சீசன் இல்லை -சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி…குஷியில் ரசிகர்கள்!

Quick Share

இது என் கடைசி சீசன் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், தோனியின் ரசிகர்களும், இந்திய கிரிக்கெட் முன்னாள், நடப்பு வீரர்களும் தோனி இன்னும் சில வருடங்களில் விளையாடலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டும், அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் என்னை ரசிகர்கள் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் மஞ்சள் படையுடன் பின்தொடர்வார்கள் என்று தோனி தெரிவித்தார். 

சூசகமாக சொன்ன தோனி

இந்நிலையில், ஐபிஎல் 2023 தொடர் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது நேருக்கு நேர் மோதிக் கொண்டு வருகிறது. 

இப்போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தன் ஓய்வை உறுதிப்படுத்த மறுத்துள்ளார். “உங்கள் கடைசி சீசனை எப்படி ரசிக்கிறீர்கள்” என்று டேனி மோரிசன் கேட்டதற்கு, பதிலளித்த தோனி… இது என்னுடைய கடைசி சீசன், நான் அல்ல என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்,” என்று தோனி சிரித்துக்கொண்டே கூறினார்.

இதனையடுத்து, தோனி 2024-ல் மீண்டும் விளையாட வருவார் என்று கூட்டத்தினரிடம் டேனி மேரிசன் உறுதியாக அறிவித்தார். அப்போது, டேனியும், தோனியும் சிரித்து மகிழ்ந்து கொண்டனர். இச்செய்தியைக் கேட்டு மைதானத்தில் இருந்த தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவைலத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/IPL/status/1653705262837161987?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1653705262837161987%7Ctwgr%5Ee1f499398f14a8151488099e84388e2fd4d83780%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fdhoni-chennai-super-kings-ipl-2023-1683112572

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய கோரி மனைவி மீண்டும் மனு தாக்கல்!

Quick Share

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய கோரிக்கை வைத்தும், செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கவும் உச்ச நீதிமன்றத்தில் அவரது மனைவி ஹசின் ஜஹான் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஷமியின் மனைவி மீண்டும் மனு தாக்கல்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிதின் மனைவி ஹசின் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னிடம் வரதட்சணை கேட்பதாகவும், அவர் பல பெண்களிடம் சட்டவிரோத உறவுகளில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் இந்த மனு மீதான விசாரணை, கொல்கத்தா நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஷமி ஜஹானுக்கு மாத ஜீவனாம்சமாக ₹50,000 வழங்க உத்தரவிட்டனர்.

கடந்த 2019-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஷமிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை நிறுத்தி வைத்தது. மேலும் ஷமி மீதான குற்ற விசாரணைக்கு தடை விதித்தது.

இந்நிலையில், செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கவும் உச்ச நீதிமன்றத்தில் ஜஹான் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி, பிசிசிஐ சுற்றுப்பயணங்களின் போது, ​​ஹோட்டல் அறைகளில் பாலியல் விவகாரங்களில் ஈடுபட்டார். விபச்சாரிகளுடன் தொடர்பு கொள்ள ஷமி தனது 2வது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினார்.

இந்த குற்றம் தொடர்பாக கொல்கத்தாவின் லால் பஜார் பொலிசார் அவரது தொலைபேசியைக் கைப்பற்றினர். ஷமி இன்னும் விபச்சாரிகளுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக, வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷமி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவும் இல்லை என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

இதெல்லாம் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல! ஹர்பஜன் சிங் ஆவேசம்

Quick Share

நேற்று ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கும் கவுதம் கம்பீருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடந்தது. இதெல்லாம் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். 

விராட் கோலிக்கும் – கம்பீருக்கு வாக்குவாதம்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டி முடிந்த பிறகு, இரு அணி வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும்போது, விராட் கோலிக்கும், கவுதம் கம்பீருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மைதானத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சண்டை தற்போது உலக அளவில் பேசும் பொருளாக வெடித்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும், விராட் கோலியைப் பற்றியும், கவுதம் கம்பீரைப் பற்றியுமே பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. 

ஹர்பஜன் சிங் ஆவேசம்

விராட் கோலியும், கவுதம் கம்பீரும் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. 2008ல் ஸ்ரீசாந்துடன் நான் செய்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். விராட் கோலி ஒரு ஜாம்பவான், இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. விராட் மற்றும் கம்பீர் இடையே என்ன நடந்ததோ அது கிரிக்கெட்டுக்கு சரியில்லை என்று பதிவிட்டுள்ளார்.  

https://twitter.com/harbhajan_singh/status/1653288404837081088?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1653288404837081088%7Ctwgr%5E039c3831d5a60873af89c03e405cf4f9ce891168%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fvirat-kohli-harbhajan-singh-virat-gautam-gambhir-1683019262

ஆவேச விராட் கோலி…! சண்டை போட்ட கம்பீர்…! அபராதம் விதித்த ஐபிஎல்…!

Quick Share

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் அணியை கடைசி பந்தில் லக்னோ அணி வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு பின் லக்னோ அணி வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினர். லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக மைதானத்திற்கு வந்து ஆர்சிபி ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து “keep Quiet” என்று செய்கை செய்தார். இது விராட் கோலியின் தன்மானத்தை சீண்டி பார்க்கும் வகையில் அமைந்தது.

இதனால் லக்னோ மைதானத்தில் களமிறங்கிய நொடி முதலே விராட் கோலி அதீத ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். நவீன் உல் ஹக் களத்தில் இருந்த போது, அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் விராட் கோலி ஷூ-வை காட்டினார்.

அமித் மிஸ்ரா, விராட் கோலியை பார்த்து “எதற்காக இவ்வளவு ஆக்ரோஷம்.. தேவையில்லையே” என்பது போல் கேட்டார். அதனை ஏற்காத விராட் கோலி, நேரடியாக நடுவர் முன்னிலையில் அமித் மிஸ்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆட்டம் முடிவடைந்த பின் வீரர்கள் அனைவரும் கை குலுக்கி விடைபெற்றனர். அப்போது நவீன் உல் ஹக்கிடம் விராட் கோலி கை குலுக்கும் போது ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். இதற்கு நவீன் உல் ஹக் பதிலடி கொடுக்கும் வகையில் பேச, விராட் கோலி பதிலளித்தார். அங்கே மீண்டும் வாக்குவாதம் எழுந்த நிலையில், மேக்ஸ்வெல் நவீன் உல் ஹக்கை கட்டுப்படுத்தினார். அதேபோல் கவுதம் கம்பீருடனும் விராட் கோலி கை குலுக்கும் போது ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

லக்னோ பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோலி இடையே வார்த்தைகள் பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து கம்பீர் தனது அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸை கோலியுடன் பேச வேண்டாம் என்று தடுத்தார். பெங்களூரு அணியினர் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ள டிரஸ்சிங் அறைக்குள் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், போட்டிக்குப் பிறகு கம்பீரைப் பற்றி கோலி வெளிப்படையாக பேசுவதைக் காணலாம். “உங்களால் கொடுக்க முடிந்தால், அதை வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் கொடுக்கவே வேண்டாம்” என்று அந்த வீடியோவில் விராட் கோலி கூறுகிறார். ஐபிஎல் 2023 சீசனில் ஆர்சிபிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு கம்பீர் பெங்களூரு அணியை நோக்கி காட்டிய செய்கையின் எதிரொலி இன்னும் தொடர்கிறது. ஆட்டம் முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, லக்னோ பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோலி இடையே வார்த்தைகள் பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து கம்பீர் தனது அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸை கோலியுடன் பேச வேண்டாம் என்று தடுத்தார். நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானது என்று கூறும் கோலி, லக்னோவில், லக்னோ அணியை விட எங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்தது என்பது உண்மையில் நம்ப முடியாத உணர்வு. ஒரு அணியாக நாங்கள் எவ்வளவு விரும்பப்படுகிறோம், ரசிகர்கள் நம்மை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது,” என்று வீடியோவில கோலி கூறுகிறார்.

லக்னோவில் கோலிக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெசிஸ் மகிழ்ச்சி அடைந்தார். “இது விராட்டின் சிறந்த பதிப்பு, அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அதில் ஒரு பகுதியாக இருப்பது அருமை, நாங்கள் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன், மைதானத்தில் விஷயங்களை அமைதியாக வைத்திருப்பதே எனது வேலை,” என்று ஆட்டத்திற்குப் பிறகு டு பிளெசிஸ் கூறினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோலி – கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது. மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், லக்னோ – பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சில மீம்கள் வைரலாகி வருகின்றன. கர்நாடகாவில் இன்னும் 8 நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநில அணியான பெங்களூருவையும், கர்நாடக மக்களுக்கு பிடித்தமான விராட் கோலியையும் பாஜக எம்பி கவுதம் கம்பீர் தொடர்ந்து சீண்டி வருவதாக டுவிட்டரில் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.

விராட் கோலி-கவுதம் கம்பீர் மோதல்… அதிர்ச்சி வீடியோ!

Quick Share

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் 

கம்பீரும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவீன் உல்-ஹக்- விராட் கோலி வாக்குவாதம்

ஐபிஎல்-லின் 43வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதின, இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி 20 ஓவர்கள் முடிவில் 126 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

ஆனால் இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் விக்கெட்டுகளும் ஒருபுறம் மலமலவென சரிந்தது, இதனை விராட் கோலி உற்சாகத்துடன் கொண்டாடவே, இதனால் கோபமடைந்த எதிரணி வீரர் நவீன் உல்-ஹக்கிற்கும் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் மிகப்பெரிய சலசலப்பை மைதானத்தில் ஏற்படுத்திய நிலையில், மறுமுனை வீரர் அமித் மிஸ்ரா மற்றும் நடுவர்கள் தலையிட்டு வாக்குவாதத்தை நிறுத்தினர்.

இறுதியில் 19.5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்கள் மட்டுமே குவித்து RCB அணியிடம் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

விராட் கோலி-கவுதம் கம்பீர் மோதல்

இதையடுத்து போட்டியின் நிறைவுக்கு பிறகு, இரு அணி வீரர்களும் கை குழுக்கி கொண்ட நிலையில் அப்போதும் விராட் கோலி மற்றும் நவீன் உல்-ஹக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் மைதானத்தில் இருந்த ரசிகர்களை பார்த்து விராட் கோலி வெற்றி உற்சாகத்துடன் சைகைகளை செய்து கொண்டு நடந்து வந்த போது, லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் விராட் கோலியுடன் உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது கைல் மேயர்ஸின் கையை பிடித்து லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார்.

இதனால் மீண்டும் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் விராட் கோலியும் கவுதம் கம்பீரும் மோதிக் கொள்ளும் அளவிற்கு தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இரு அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் ஆகியோர் தலையீட்டு விராட் கோலியையும், கவுதம் கம்பீரையும் தனித்தனியாக பிரித்து சென்றனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பலி வாங்கிய கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முந்தைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மிகவும் ஆக்ரோஷமாக அந்த வெற்றியை கொண்டாடி இருந்தார்.

அத்துடன் போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்த RCB ரசிகர்களை பார்த்து, உதடுகளில் விரலை வைத்து அவர்களை அமைதிப்படுத்தும் சைகை செய்து இருந்தார்.

https://twitter.com/rsyvknewID/status/1653092118204907520?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1653092118204907520%7Ctwgr%5Ec0f60710216cb0d5b3208eec0331371ef25110bb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fipl-2023-rcb-vs-lsg-virat-kohli-argue-with-gambhir-1682975660
https://twitter.com/rsyvknewID/status/1653092118204907520?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1653092118204907520%7Ctwgr%5Ec0f60710216cb0d5b3208eec0331371ef25110bb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fipl-2023-rcb-vs-lsg-virat-kohli-argue-with-gambhir-1682975660

இந்நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ அணியை RCB வென்ற நிலையில், விராட் கோலி அதே சைகையை மைதானத்தில் திருப்பி செய்து காட்டி, அவ்வாறு செய்ய கூடாது, அன்பு மட்டுமே செலுத்த வேண்டும் சென்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். 

கடைசி பந்தில் டுவிஸ்ட்! சென்னையின் வெற்றியை தட்டிப்பறித்த வீரர்..வாகைசூடிய பஞ்சாப் கிங்ஸ்

Quick Share

ஐபிஎல்லின் 41வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 

தெறிக்கவிட்ட கான்வே 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் CSK மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் குவித்தது.

டெவோன் கான்வே 92 ஓட்டங்களும், கெய்க்வாட் 37 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது. தவான் 28 ஓட்டங்களில் அவுட் ஆனத் தொடர்ந்து, அதர்வா 13 ஓட்டங்களில் வெளியேறினார்.

https://twitter.com/ChennaiIPL/status/1652643629574529025?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1652643629574529025%7Ctwgr%5E0d64a0897c9129fbf753fd34653800d162347407%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fpunjab-kings-chase-201-vs-csk-ipl-2023-1682867207

அதிரடி காட்டிய பஞ்சாப் வீரர்கள்

அதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தனர். இதனால் சென்னை அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. எனினும், தேஷ்பாண்டே மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

அவரது பந்துவீச்சில் லிவிங்ஸ்டன் 40 ஓட்டங்களிலும், ஜித்தேஷ் சர்மா 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். சாம் கரன் 29 ஓட்டங்கள் எடுத்து பதிரனா ஓவரில் அவுட் ஆனார்.

https://twitter.com/ChennaiIPL/status/1652646505873047553?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1652646505873047553%7Ctwgr%5E0d64a0897c9129fbf753fd34653800d162347407%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fpunjab-kings-chase-201-vs-csk-ipl-2023-1682867207

வெற்றி பெற வைத்த ராஸா

பஞ்சாப் அணிக்கு கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பதிரனா வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட ராஸா, வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை எடுத்தார். இதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு உயர்ந்தது. கான்வே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

https://twitter.com/JioCinema/status/1652676886017765376?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1652676886017765376%7Ctwgr%5E0d64a0897c9129fbf753fd34653800d162347407%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fpunjab-kings-chase-201-vs-csk-ipl-2023-1682867207




You cannot copy content of this Website