நான் இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில்தான் விளையாடுகிறேன் வீரர் கே.எல்.ராகுல் பேட்டியில் தெரிவித்தார்.
நேற்று மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிபெற்றது. நேற்றயப்போட்டிகளில் தொடக்க ஆட்டநாயகனாக களமிறங்கிய ரோஹித், கே.எல்.ராகுல் மாற்றம் விராட் கோலி ஆகிய வீரர்களில் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிபெற்றது. விராட் தொடர் ஆட்டநாயகனுக்காக விருதும், கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருதும் பெற்றனர். இப்போட்டியில் கே.எல்.ராகுல் வெறும் 56 பந்துகளிலேயே 91 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.
அதற்கு பின் பேட்டியளித்த கே.ல்.ராகுல். “இந்திய அணியில் எனக்கு நெருக்கடி இல்லை என நான் சொல்ல மாட்டேன். எந்தவொரு வீரனும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவே விரும்புவான். ஒவ்வொரு தொடரின் போது வருவதும், போவதுமாக இருந்தால் அது எந்த ஒரு வீரனுக்கும் எளிதானதாக இருக்காது. இதில் பிசிசிஐ மற்றும் கேப்டன் எடுக்கும் முடிவுதான் இறுதி. அதே நேரம் இருதோண்ற நெருக்கடியான சூழல் வருவது அனைத்து வீரனுக்கும் சகஜம். இவற்றை எல்லாம் எதிர்கொண்டால் தான் நன்றாக விளையாட முடியும். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நான் பயன்படுத்தி என்னை நிரூபிப்பேன். மேலும் டி-20 தொடரை பொறுத்தவரை வீரர்களின் நம்பிக்கை மற்றும் மனநிலையை பொறுத்ததுதான் என்றார்.
கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் இவருக்கு இதுவரை டி-20மற்றும் ஒரு நாள் தொடரில் நிரந்தரமாக இடமில்லை. இந்த தொடரில்கூட கே.எல்.ராகுல் வீரர் தவான் என்பவருக்கு காயம் ஏற்பட்டதால் தான் காலமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டி-20 தொடரின் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால் தரவரிசை பட்டியலில் 9ம் இடத்திலிருந்து 6ம் இடத்திற்கு கே.எல்.ராகுல் தற்போது முன்னேறியுள்ளார்.