விளையாட்டு

IND vs WI 2வது T20 போட்டி: 171 இலக்கை நிர்ணயித்த இந்தியா ! ஷிவம் துபே அபாரம் !!

Quick Share

இந்திய – வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது T20 போட்டி இன்று திருவந்தபுரத்தில் கிரீன் பீல்ட் மைதானத்தில் நடந்துகொண்டிருக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 என்னும் இலக்கை நிர்ணயித்தது. இந்தியாவின் ஷிவம் துபே 30 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸர் அடித்து 54 ரன் குவித்தார், அவருக்கு ஈடாக ரிஷப பண்ட் நிதானமாக விளையாடி 22 பந்துகளில் 33 ரன் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேஷ்ரிக் வில்லியம்ஸ் 4 ஒவேரில் 30 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

2647 கோடி மோசடி !! நெருக்கடியில் தோனி !! அமரபாலி விவகாரத்தில் தோணிக்கு சம்பந்தம் ?

Quick Share

அமரபாலி நிறுவனம் ரியல் எஸ்டேட் விவகாரத்தில் மோசடி செய்ததாக கூறி குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அணில் குமார் சர்மா, குழு அதிகாரிகள் சிவ் பிர்யா, மோஹித் குப்தா போன்ற முக்கிய பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நொய்டா மட்டும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடு கட்டித்தருவதாக கூறி 42,000 பேர் கொடுத்த 2647 கோடி ரூபாய் மோசடி செய்தது.

கடந்த 27-ஆம் தேதி ரூபேஷ்குமார் என்பவர் இந்த நிறுவனத்தின் இயக்குனர் மட்டுமின்றி இதில் தோனியும் விளம்பர தூதரக சம்பந்தப்பட்டவர். எனவே அவரையும் இந்த மோசடி வழக்கில் முக்கிய நபராக பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்தார். அமரபாலி தோனியை பயன்படுத்தி பணத்தை அவர்கள் பறித்து விட்டார்கள் இதில் தொனிக்கும் பங்கு உள்ளது என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் நீதிமன்றம் இதை பற்றி விசாரிக்க உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களே !!! 2020 மார்ச்… இந்தியாவிற்கு வருகிறது உலகிலேயே மிகப்பெரிய ...

Quick Share

குஜராத் மாநிலத்தில் கட்டப்படும் கிரிக்கெட் ஸ்டேடியம் உலகின் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக உருவெடுக்கவுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் பட்டேல் என்ற மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுவருகிறது. இந்த ஸ்டேடியம் 2020 மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளது. தற்போது உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் என்ற பெயர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் ஸ்டேடியதிற்கு உள்ளது. இந்த ஸ்டேடியம் மொத்தம் 1 லட்சம் மக்கள் உட்கார்ந்து கிரிக்கெட் பார்க்கக்கூடிய அளவிற்கு பெரியது. ஆனால் குஜராத்தில் கட்டப்பட்டுவரும் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் உட்கார்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு பெரியதாக கட்டப்பட்டுள்ளது. இதனால் உலகிலேயே மிகப்பெரிய ஸ்டேடியம் என்ற பெயரை மெல்போர்ன் ஸ்டேடியத்திடமிருந்து குஜராத் ஸ்டேடியம் கைப்பற்றியுள்ளது.

சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் மொத்தம் 3 விதமான பிட்சுக்கள் வைத்து அமைக்கப்பட்டுள்ளது. இதில் சில பிட்சுக்கள் சிவப்பு நிற மண்ணிலும் , சில பிட்சுக்கள் கருப்பு நிற மண்ணிலும், இன்னும் சில பிட்சுக்கள் வேறு சில மண்ணிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவை பவுன்ஸ், வேகப்பந்து என இரண்டிற்கும் பொருந்தும். மேலும் இங்கு தரமான, மேம்பட்ட முறையில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளதால், மழை காலங்களில் மழை நீர் தேங்காமல் 30 நிமிடங்களிலேயே மீண்டும் போட்டியை தொடங்கமுடியும். இதனால் மழையால் போட்டி தடைபடுவது தடுக்கப்படும்.

ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கிடையே அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கண்காட்சி போட்டி இந்த ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதான் இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டியாகும்.

அடிச்சு நொறுக்கிய இந்தியா ! சுக்குநூறாக சிதறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் !!

Quick Share

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி, 50 பந்துகளில் 94 ரன் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார் !

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று ஹைதெராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 207 ரன் குவித்தது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. அதிகபட்சமாக ஷிமரோன் ஹெட்மேயேர் அதிகபட்சமாக 56 ரன் எடுத்தார், கிரோன் பொல்லார்ட் 19 பந்துகளில் 1 பௌண்டரி 4 சிக்ஸர் அடித்து 37 ரன் அதிரடியாக குவித்தார்.

208 என்னும் கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 8 ரன் எடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார் மறுமுனையில் KL ராகுல் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 62 ரன் குவித்தார். பின்னர் வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 50 பந்துகளில் 6 பௌண்டரி 6 சிக்ஸர் அடித்து 94 ரன் குவித்தார் கடைசிவரை ஆடினார். 18.4 ஒவேரில் 209 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதல் T20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி ! விராட் கோலி அபாரம் !

Quick Share

208 இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 18.4 ஒவேரில் 209 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று ஹைதெராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 207 ரன் குவித்தது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. அதிகபட்சமாக ஷிமரோன் ஹெட்மேயேர் அதிகபட்சமாக 56 ரன் எடுத்தார், கிரோன் பொல்லார்ட் 19 பந்துகளில் 1 பௌண்டரி 4 சிக்ஸர் அடித்து 37 ரன் அதிரடியாக குவித்தார்.

Virat kholi
Virat kholi

208 என்னும் கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 8 ரன் எடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார் மறுமுனையில் KL ராகுல் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 62 ரன் குவித்தார். பின்னர் வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 50 பந்துகளில் 6 பௌண்டரி 6 சிக்ஸர் அடித்து 94 ரன் குவித்தார் கடைசிவரை ஆடினார். 18.4 ஒவேரில் 209 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

“சின்ன குழந்தை டா நீ” இந்திய பவுலரை கடுமையாக விமர்சித்த பாக்கிஸ்தான் ஆல்-ரவ...

Quick Share

பாகிஸ்தான் முன்னணி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் 40 வயதாகும் அப்துல் ரசாக் 46 டெஸ்ட், 265 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 32 T20 போட்டிகள் விளையாடியுள்ளார். சமீபத்தில் லாகூரில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், இந்திய வேக பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பூமராவை பற்றி சர்ச்சையான கருத்தை பதிவிட்டார். அதில் தான் மிகப்பெரிய பந்துவீச்சாளர்களான கெல்லேன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களை சந்தித்துள்ளதாக கூறினார். இவர்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது பும்ரா எனக்கு குழந்தை மாதிரி என நக்கலடித்தார். பும்ராவின் பலம் அவருடைய வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பும்ரா தற்போது 50 ஓவர் சர்வதேச பந்துவீச்சாளர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் ரசாக், பும்ராவை பற்றி பேசியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரிந்த ஆஸ்திரேலியாவின் ஸ்மித் ! டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி முதல் இடத்தை மீண்டும் பி...

Quick Share

பாகிஸ்தான்னுக்கு எதிராக நடத்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் சரியாக விளையாடாததால் ICC டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்டீவன் ஸ்மித் 4 டெஸ்ட் போட்டியில் 774 குவித்து சிறப்பாக செயல்பட்டிருந்த ஸ்மித் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளார்.

தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பங்களாதேஷ்க்கு எதிராக ஈடன் கர்டெனில் நடந்த இரவு பகல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சதம் அடித்தார். இதன் மூலம் ஸ்டீவன் ஸ்மித்தை இரண்டாவது இடத்துக்கு தள்ளி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.

https://twitter.com/ICC/status/1202135709798273025

நித்தியின் தீவுக்கு தாவும் கிரிக்கெட் பிரபலம் , என்னது ..? விசா ரெடி ஆ.?? ப்ளீஸ் டெல் ம...

Quick Share

சர்ச்சைகளுக்கு எல்லாம் சளைத்துபோனவர் அல்ல இவர், இதுவரை எங்கே இருக்கிறார் என்று யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை . ஆனால், யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களுடன் உரையாடி வருகிறார் நித்யானந்தா. எப்போதெல்லாம் இவர் காட்சி தருகிறாரோ, அப்போதெல்லாம் எதாவது ஒரு பகீர் குண்டை தூக்கி போட்டுவிட்டு போவார். அந்த பகீர், சர்ச்சையாக வெடித்து சிதறி, சின்னாபின்னமாக தொடங்கிவிடும். இது ஒருபுறம் இருக்க
எரிகின்ற தீயில் என்னை ஊற்றி ஒரு மிகப்பெரிய குண்டை தூக்கி வீசியுள்ளார் .

அதுதான் ”கைலாஷ்” ஈகுவடார் நாட்டில் தான் தனித்தீவு ஒன்றை வாங்கி இருப்பதாகவும், அதை தனி நாடாக அறிவிக்கக்கோரி தான் ஐநாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த தீவுக்கு கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதுமட்டுமின்றி அந்த தீவை நித்தியானந்தா இந்துக்களின் நாடாக உருவாக்கவுள்ளதாகவும். மேலும் அந்த தீவிற்கு செல்வதற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்ற புதிய தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த தீவிற்கு செல்வதற்கு எப்படி விசா வாங்குவது என கேட்டு ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்துவருகின்றனர்.

“பாணிப்பூரி விற்று உலகக்கோப்பையில் விளையாட இந்திய அணியில் தேர்வு” உ.பி கிர...

Quick Share

17 வயது கிரிக்கெட் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் .

உத்திரபிரதேசம் மாநிலத்தில்  மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தால் தனது 11 வயதிலேயே மும்பைவந்து தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியுள்ளார் .  ஏழ்மையான குடும்பம் என்பதால், அந்த சிறுவயதிலேயே  கிரிக்கெட் பயிற்சிக்கு தேவையான பணத்தை மும்பை தெருக்களில் பாணிப்பூரி விற்று அதில் வரும் பணத்தை கொண்டு கிரிக்கெட் பயிற்சி பெற்றுவந்துள்ளார் . உள்ளூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் ஜெய்ஸ்வால்  சிறப்பாக விளையாடியதால் , 17 வயதான இவர் உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார் . உலகக்கோப்பை தொடர் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் ஆப்ரிக்காவில் நடைபெறுகிறது .

ஐபிஎல் 2020 ஏலத்தில் 971 வீரர்கள் பதிவு. ஏலம் டிசம்பர் 19 கொல்கத்தாவில் நடக்கிறது.

Quick Share

இந்தியாவின் முக்கிய விளையாட்டு போட்டி என கருதப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு சுமார் 971 வீரர்கள் பதிந்துள்ளனர். இந்த ஏலம் முதன் முறையாக கொல்கத்தாவில் டிசம்பர் 19 தேதி நடக்க இருக்கிறது. ஏலத்தில் 19 டாப் இந்தியாவிற்காக விளையாடிய வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய 634 வீரர்கள் மற்றும் 11 வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஏலத்தில் வீரர்களின் அடிப்படை தொகை குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிகப்படியாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. டிசம்பர் 9 மாலை 5 மணிக்குள் வீரர்கள் பட்டியலை உறுதி செய்து ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும் என செய்தி வெளியிட்டுள்ளது.

https://twitter.com/IPL/status/1201516810463408129

இன்னும் அழியா மனிதநேயம் .! கண்கலங்க வைக்கும் பதிவு.. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்க...

Quick Share

அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.

தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார்.

அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.

ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார்

இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.

அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.

சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச்சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத்துடைக்க, முதலில் ஒரு துண்டைக்கொடுத்தார். “சாப்பிட என்ன வேண்டும் எனக்கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச்சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண். சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.

அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்.

“அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!” ன்னு நினைத்துக்கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒருதுண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப்பணம் உனக்குத்தான். இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்” என்று எழுதி வைத்திருந்தார்கள்..

அடுத்த மாதம் பிரசவச்செலவுக்கு என்ன செய்யவதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப்பணம் அவர்களுக்குப்பெரிய உதவி! இரவு வீட்டுக்குப்போனதும், அந்தப்பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம்.

ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள்.

தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.

இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால்தான்

எனவே, அன்பர்களே, தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்.

மகிழ்வித்து மகிழ்வோம்

226 ரன்கள் அடித்து நியூஸிலாந்தில் புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் !

Quick Share

மீண்டும் பார்முக்கு வந்த ஜோ ரூட், நியூஸிலாந்தில் மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் எனும் சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாடு மண்ணில் இரட்டை சதம் அடித்த 4 வது இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

நியூசிலாந்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2-போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 2-வது டெஸ்ட் போட்டி நியூஸிலாந்து எதிராக இங்கிலாந்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸ்ல் 375 ரன் குவித்து நியூஸிலாந்து ஆல் அவுட் ஆனது. பிறகு ஆடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து தனது அணிக்கு பக்கபலமாக இருந்தார். ஜோ ரூட் 441 பந்துகளில் 22 பௌண்டரி 1 சிக்ஸ் அடித்து 226 ரன்கள் குவித்தார். தனது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 476 ரன்கள் குவித்து 101 முன்னிலை பெற்றது.




You cannot copy content of this Website