தமிழகம்

தமிழகத்தில் சோகம்: கட்டுமான பணியின்போது மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் பலி!

Quick Share

கட்டுமான பணியின்போது அருகில் இருந்த கழிப்பிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான நீலகிரியில் உள்ள உதகை லவ்டேல் பகுதி தேயிலை எஸ்டேட்டில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் அருகே பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் ஒன்று இருந்தது.

இந்நிலையில், தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 10 ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, பள்ளம் தோண்டும் போது திடீரென கழிப்பிட கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு மண் சரிந்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் புதைந்தனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உடனடியாக ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், சங்கீதா(35), ஷகீலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா(38) ஆகிய 6 பெண்கள் உயிரிழந்தனர்.

இதில், இறந்தவர்கள் அனைவரும் உதகை காந்திநகரை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!

Quick Share

நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.

நாய்களுக்கு பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடும் பழக்கத்தையும் மக்கள் வைத்துள்ளனர். அவை இறந்தால் நினைவுநாளில் கொண்டாடுவது என்று பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் செல்லப்பிராணிகள் மீது சொத்தை கூட எழுதி வைக்கின்றனர்.

ஆனால், இங்கு ஒரு தம்பதியினர் நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர்.

தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் உள்ள கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நாராயணன் மற்றும் ராதா. இவர்கள் தங்களுடைய வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நாய் கர்ப்பமானதை அறிந்த தம்பதியினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர். பின்னர், வளர்ப்பு நாய்க்கு வளையல், புத்தாடை, பூ, பழங்கள் உள்ளிட்டவை வைத்து கிராம பெண்கள் சூழ பாட்டுப் பாடி வளைகாப்பு நடத்தினர்.

இந்த விழாவிற்கு வந்த கிராம மக்களுக்கு பிரியாணி விருந்தும் அளித்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி !!பூனையை பச்சையாக சாப்பிட்ட இளைஞர்

Quick Share

கேரள மாநிலம், மலப்புரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் 27 வயது இளைஞர் ஒருவர் பசியால் இறந்த பூனையின் பச்சை இறைச்சியை சாப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த இளைஞரிடம் விசாரித்ததில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 5 நாளாக எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். வீட்டுக்கு தெரியாமல் ரயிலில் கேரளா வந்துள்ளார். அந்த இளைஞருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

Quick Share

செல்போனில் நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடிய மாணவரை தாய் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்தால் சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். தொலைபேசி எண் – +91 44 2464 0050, +91 44 2464 0060

5 பைசா பிரியாணி.. அதிர்ந்துபோன கடைக்காரர்

Quick Share

புதிதாக பிரியாணி கடைகளை திறக்கும்போது வித்தியாசமாக ஆஃபர்களை கொடுத்து மக்களை வரவேற்பதாக நினைத்து பை ஒன் கெட் ஒன் ஃபிரீ, 10 ரூபாய்க்கு பிரியாணி என கூட்டத்தை கூடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒருவர் 1 பைசா, 5 பைசா, 10 பைசாவை கொடுத்து பிரியாணி வாங்கி செல்லலாம் என அறிவித்துள்ளார். திண்டுக்கல்லில் அமைந்துள்ள அந்த ஹோட்டல் உரிமையாளர் இந்த காலத்தில் யாரிடம் செல்லாத காசுகள் இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ, கடை திறந்த உடன் செல்லாக் காசுகளுடன் மக்கள் கூட்டம் குவிந்தத்தை கண்டு பதறிய அவர் முதலில் வந்த 50 பேருக்கு மட்டும் பிரியாணியை கொடுத்துவிட்டு கடை ஷட்டரை மூடிவிட்டு சென்றுவிட்டார்.

சாமானிய மக்களுக்கு நற்செய்தி: ரூ.29க்கு ஒரு கிலோ அரிசி!

Quick Share

நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு சாமானிய மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துள்ளது. குறைந்த விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் ‘Bharat Rice’ என்ற பெயரில் அரிசி 1 கிலோ ரூ.29க்கு விற்கப்படும் என உணவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த முடிவு சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,, அரிசி இருப்பு தொகையை அறிவிக்க வியாபாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், விலை நிர்ணயம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உணவு அமைச்சக செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.

இந்த ‘பாரத் அரிசி’ இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (NAFED), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (NCCF) கேந்திரிய பந்தர் ஆகியவற்றின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படும்.

e-commerce தளங்கள் மூலமாகவும் பாரத் அரிசி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ பொதிகளில் கிடைக்கும்.

முதற்கட்டமாக மத்திய அரசு சில்லரை சந்தைக்கு 5 லட்சம் டன் அரிசியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஏற்கனவே ‘Bharat Atta’ என்ற பெயரில் கோதுமை மாவின் விலை ரூ. 27.50, ‘Bharat Dal’ என்ற பெயரில் பருப்பு வகைகள் தள்ளுபடி விலையில் ரூ.60க்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த தேதி அறிவிப்பு!

Quick Share

தமிழக ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்க இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ”பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற பிப்.19 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய இருக்கிறார்.

தொடர்ந்து 29 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், வருகின்ற 21ம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளார்கள்.

ஆளுநர் உரையை தயாரிப்பது அரசின் வேலை. அரசு அந்த பணியை சரியாக செய்யும். போன வருடம் ஆளுநர் உரையின் போது ஏற்பட்ட சர்ச்சை நம்மால் ஏற்பட்டது அல்ல. சட்டமன்ற பேரவை தலைவராலோ அல்லது அரசாலோ எந்த சர்ச்சையும் வரவில்லை. இந்த வருடம் நன்றாக இருக்கும்” என்றார்.

அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ”சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பது தொடர்பான முழு உரிமையும் சட்டப்பேரவை தலைவருக்கு தான் உண்டு என நானும் சொல்கிறேன். இதுக்கு முன்னால் இருந்த சபாநாயகர் தனபாலும் அதை சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்” என்றார்.

கடந்த முறை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தது சலசலப்பை ஏற்படுத்த, பாதி உரையில் இருந்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ‘ஹபக் லாய்டு’ நிறுவனம் ரூ.2500 கோடி முதலீடு!

Quick Share

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜீஸ்பெர் கன்ஸ்ட்ராப் மற்றும் இயக்குநர் அல்பர்ட் லொரேண்ட் ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று (31.01.2024) அன்று சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு வாயிலாக 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிழகச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் (guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே.விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

தலை நிற்காத போதையில் காவலர்: சீருடையில் இப்படி செய்யலாமா?

Quick Share

தலை நிற்காத போதையில் இருசக்கர வாகனத்தில் சீருடையில் வந்த காவலர் விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிக்க முயன்ற நிலையில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஊட்டியில் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் காபி ஹவுஸ் பகுதிக்கு அருகே உள்ள நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மோதினார். முழு போதையில் இருந்த அந்த நபரை பொதுமக்கள் பிடித்தனர். பொதுமக்கள் பிடித்து விசாரித்தபோது அவர் காவலர் என்பது தெரிந்து அதிர்ந்தனர்.

காக்கி உடைக்கு மேலே ஸ்வெட்டர் அணிந்திருந்த அவர் உதகை நகர மத்திய காவல் நிலைய காவலர் ராஜ்குமார் என்பது தெரியவந்தது. அவருடைய பாக்கெட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும் இருந்தது. போதையில் நடக்க முடியாமல் இருந்த அவர் பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பித்து செல்ல முயன்ற நிலையில் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதற்காக சீமான் இப்படி மாறினார்?

Quick Share

திடீரெனெ புதிய லுக்கில் சீமான் மாறியது இதற்கு தான் என்று பல்வேறு காரணங்கள் வெளிவந்துள்ளது. நேற்று தூத்துக்குடியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் தமிழர் என்பது கட்சியின் பெயர் அல்ல, அது ஒரு இனத்தின் அடையாளம். கட்சியை ஆரம்பிக்க நாம் இணையவில்லை. இனத்தின் விடுதலைக்காக ஒரு கட்சியை உருவாக்கியிருக்கிறோம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ஒரு தமிழர் கூட வேண்டாம் என்ற வருத்தம் வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழர்கள் தான்” என்று பேசினார்.

சீமான் பேசிய பேச்சுக்கு இடையில் அவரின் புதிய தோற்றத்தை பலரும் கவனித்துக் கொண்டிருந்தனர். சீமான் எப்போதும், பிட்டாகவே இருப்பார். மொத்தமாக ஷேவ் செய்து, முடியை குறைவாக வைத்திருப்பார்.

ஆனால் அவர் தற்போது, தாடி வைத்து, உடல் எடை கூடி அவரது தோற்றமே முழுவதுமாக மாறியுள்ளது. இவரது மாற்றதிற்கு என்ன காரணம் என்று இணையத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் படம் ஒன்றில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த படத்தில் சீமானும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அந்த படத்திற்காகவே தாடி வளர்த்து, உடல் எடையை கூட்டி தோற்றத்தை மாற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சினிமாவில் சீமான் நடித்தும்,படங்களை இயக்கியும் பல வருடங்கள் ஆன நிலையில் அவர் தனது தோற்றத்தை மாற்றி ரீஎன்ட்ரி கொடுக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

ஸ்பெயின் செல்லும் வழியில் நோவக் ஜோகோவிச்சை சந்தித்த மு.க.ஸ்டாலின்!

Quick Share

ஸ்பெயின் செல்லும் வழியில் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைத்தால் அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் என தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து 8 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 27 -ம் திகதி மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், ஸ்பெயின் செல்லும் வழியில் விமான பயணத்தின் போது உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சை தமிழக முதலமைச்சர் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “வானத்தில் ஆச்சரியம். ஸ்பெயின் செல்லும் வழியில் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை சந்தித்தேன்” என்று பதிவிட்டு அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பிப்ரவரி 1 முதல் மதுபானங்களின் விலை உயர்வு அமுல்!

Quick Share

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை பிப்ரவரி 1 முதல் உயர்த்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ம் திகதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி, 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.




You cannot copy content of this Website