சென்னை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 65 வது பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் திராவிட கழகத்தினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது .
சென்னை ராயப்பேட்டையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் கேக் வெட்டி, பட்டாசுவெடித்து கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற்றது. ராயப்பேட்டையை சேர்ந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பிரபாகரனின் பிறந்தநாளை பல கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குனர் கோபி நாயனார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் .நள்ளிரவில் தொடங்கிய கொண்டாட்டத்தில் சிலம்பம், புலியாட்டம் போன்ற பாரம்பரிய ஆட்டமும் மற்றும் வான வேடிக்கைகளும் நடைபெற்றன. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன். மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பு குறித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சிலைகடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் ,சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசு மீதும் ,தனது பதவி காலத்தை நீடிக்க கோரியும் யார்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதே கோரிக்கையை வலியுறுத்தி ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.
பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பு வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருப்பதால் தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை மறுத்த போன்.மாணிக்கவேலும் ட்ராபிக் ராமசாமியும் எதிர்த்து வாதாடினார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது, பொன். மாணிக்கவேலின் பதவிக்கு ஏற்கனவே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி பதவி நீட்டிப்பு குறித்த வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கடந்த வாரம் செவிலிய பெண்மணி தன்னுடைய மகனின் பிறந்தநாளுக்காக சிதம்பர நடராஜ கோவிலுக்கு அர்ச்சனை செய்வதற்காக சென்றனர். செவிலிய பெண்மணியான குடும்ப தலைவி அர்ச்சனைக்காக தேங்காவுடன் இருந்த தாம்பள தட்டை கோவில் தீட்சதர் இடம் கொடுத்தார். ஆனால் அவர் தேங்கவை மட்டும் உடைத்து சாமியின் அருகில் உடைத்து அர்ச்சனை செய்யாமல் திருப்பிக்கொடுத்தார். பிறகு அவரின் செயலை கண்டு எரிச்சலடைந்த பெண்மணி தீட்சதர்ரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வாக்குவாதம் முற்றி தீட்சதர் அந்த பெண்மணியை அடிக்கும் அளவிற்கு சென்றது. இதனால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீட்சதர் தர்ஷன் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவை சமர்ப்பித்தார். மனுவில் தான் தற்காப்பிற்காக தான் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறினார். மனுவை விசாரித்த உயர் நீதி மன்றம் நீதிமன்றம் தீட்சதர் தர்ஷன் மனுவை தள்ளுபடி செய்தது.
இராமேஸ்வரத்தில் மொத்தம் 11 டாஷ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன . பெண்கள் மற்றும் பொதுமக்களின் போராட்ட காரத்திணால் அங்குள்ள 8 மது கடைகள் அடைக்கப்பட்டன .ஆனால் பாம்பேனில் உள்ள 3 கடைகள் மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீதம் உள்ள 3 கடைகளை மூட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த 3 கடைகளால் பெண்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் .தினந்தோறும் அக்கடைக்கு ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் வந்துள்ளமையால் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் சாலை விபத்துகளும் பல ஏற்படுகின்றன.
இப்போராட்டம் இராமேஸ்வர மகளிர் மீனவ சங்க அமைப்பு மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் முன்னிலையில் நடத்தப்பட்டது.இதில் ஏரளாமான பெண்கள் பங்கேற்று தம் ஆதரவை அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 2.44 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வடிக்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய இயக்குனர் ஹரிஹரன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய ஆணையர் கூறியதாவது, ”சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை புனரமைத்து புத்துயிர் அளிக்கவும், அணைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கவும் சென்னை மாநகராட்சி, பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 39,385 மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. 385 கிணறுகள் சரிசெய்யப்பட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் ஜூலை மாதம் 7.28 மீ ஆக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 2.44மீ அளவிற்க்கு உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன”. இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.மேலும் பல நிறுவனங்கள் மருத்துவமனைகள், போன்ற இடங்களில் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த திட்டமிட்டுள்ளார்.
திருநெல்வேலி: தமிழக அரசு புதிய மாவட்டங்கள் மற்றும் வருவாய் கோடுகளை பிரித்து புதிய மாவட்டங்களை நிறுவும் செயல்பாடுகளை செய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு 32வது புதிய மாவட்டம் அமையவுள்ளது, 8 தாலுக்கா கொண்ட இந்த மாவட்டம் உருவாகிறது. தென்காசி, சங்கரன்கோவில் என 2 வருவாய் கோடுகள் பிரிக்கப்படுகிறது.
இன்று காலை 9.30 தென்காசியில் அசாத் நகரில் உள்ள இசக்கி மஹால் வளாகத்தில் நடக்கிறது. வரவேற்புரையை செயலாளர் சண்முகம் வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பண்ணீர்செல்வம் தலைமை தாங்கினார்.
முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அரசு நலத்திட்டங்கள் உதவிகளை அறிவித்து அடிக்கல் நாடினார். அமைச்சர்கள் உதயகுமார், ராஜலக்ஷ்மி திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி எஸ் பி சுகுணா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
ஈரோடு ; கனவில் தோன்றிய மகான் கூறியதை கேட்டு 10 அடி ஆழ குழிக்குள்
பிராத்தனை செய்து வரும் விஸ்வநாத சாமியாரை காண பல்வேறு மக்கள் பல மயில்
தூரத்தை கடந்து வருகிறார்கள் .
ஈரோட்டில் அந்நியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன் .இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தை உள்ளது . ஆனால் இவர் 25 ஆண்டுகளாக தம் குடும்பத்தை பிரிந்து துறவத்தை மேற்கொண்டுள்ளார் .
இந்நிலையில்
அவர் ஒரு நாள் அமர்நாத் யாத்திரை சென்றுள்ளார் .அங்கு ஒருநாள்
தூங்கிய பொழுது கனவில் ஒரு மகான் தோன்றி இவ்வாறு கூறியுள்ளார் ”
நல்லிக்கவுண்டன்புதூரில் பாதாள லிங்கத்தை 10 அடி ஆழ குழியில் வைத்து
பிரதிஷ்டை செய்து வந்தால் ,உலக நன்மை கிடைக்கும்”. கனவில் தோன்றிய மகான்
கூறிய வார்த்தையை கேட்டு அதன் படி நடந்த விசுவநாதன் தன்னையே
மாற்றிக்கொண்டு நீண்ட தாடியை வளர்த்து தனது பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத
சாமி என மாற்றிக்கொண்டார் .
தாம் 10 அடி ஆழ குழிதோண்டி பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 48 நாள் மவுன விரதத்தை மேற்கொள்ள போவதாக கூறினார். ஆனால் கிராமத்தில் உள்ள பலர் அவரை நம்பவில்லை .அவர் கூறியபடி கடந்த 17 ஆம் தேதி குழிக்குள் பாதாள லிங்கத்தை வைத்து பிரதிஷ்ட செய்து 48 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் மவுனமாக இருந்து பிராத்தனை செய்து வருகிறார் .
எதாவுது கூற வேண்டுமென்றால் காகித்தை எடுத்து எழுதி காட்டுகிறார் .குழிக்குள் இருந்தே மக்களை ஆசிர்வதித்து வருகிறார் .இச்சம்பவத்தை காண பல திசைகளிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் . இதனால் நல்லிக்கவுண்டன்புதூர் கிராமம் பரபரப்பாக காணப்படுகிறது .
சென்னை: சென்னையில் வானிலை ஆராய்ச்சி மையம், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் புதுவையில் வெப்பம் சலனம் லேசான காற்றழுத்த தாழ்வு காரணமாக லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது. மேலும் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தமிழகத்தில் OCT 28 முதல் இன்று வரை 28 சசெ.மீ மழை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கை வெளியிட்டது.
தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமன மோசடிசெய்தவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புபிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது .
தஞ்சை தமிழ் பல்கலைக்கழத்தில் 2017 ம் ஆண்டு புதிதாக பேராசிரியர்கள் மற்றும் துணை பேராசிரியர்கள் நியமனத்திற்காக தேர்வு நடைபெற்று 10 பேராசிரியர்கள் ,11 துணை பேராசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர் . இந்த நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் பேராசிரியர் முருகேசன், சமூக ஆர்வலர் நெடுஞ்செழியன் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது .
இதுகுறித்த விசாரணையில் தேர்ந்தெடுக்க பட்ட 21 பேரில் பலருக்கு போதிய முதுகலை ஆசிரியர் அனுபவம் இல்லாததும், பல்கலைக்கழக குழு விதிகள் கடைபிடிக்க படாததும், மேலும் 10 பேரிடம் ரூ 15 லட்சம் முதல் ரூ 40 லட்சம் வரை பணம் பெற முயற்சித்தும் தெரியவந்துள்ளது .
இதையடுத்து முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் முத்துக்குமார், நேர்முக உதவியாளர் சக்தி சரவணன், தொலைநிலை கல்வி முன்னாள் இயக்குனர் என் .பாஸ்கரன் ஆகிய 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் ,குற்றச்சதி ,நம்பிக்கை மோசடி, ஏமாற்றி நேர்மையின்றி பொருளை பெறுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் பொய்யாகப் புனையப்பட்டு உண்மையானதாக உபயோகம் செய்தல், அரசு ஊழியர் சட்டவிரோதமாக பணம் பெறுதல் ஆகிய பல்வேறு பிரிவின் கீழ் தஞ்சை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை கும்பகோணம் சிறப்புநீதிமன்றத்தில் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அரசாங்க அமைப்புகளில் அனைவருக்குமே பயன்படும் வகையில் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு இது போய் சேரவே இந்த பதிவு. முடிந்தவரை இதைப் பகிருங்கள். அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம். சமீபத்தில் சென்னையில் நெருங்கிய நண்பர் ஒருவரது தந்தையார் புற்றுநோயால் காலமானார். உடலை சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் இறுதிச் சடங்குகள் செய்ய திட்டமிட்டிருந்தனர்.அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அதிகாலை சுமார் 2.30 அளவில் காலமானார். அவரது உடலை அன்றே சொந்த ஊரில் தகனம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
அதிகாலை 3.00 மணிக்கு நண்பர் மருத்துவமனையை அடைகிறார். அங்குள்ள மருத்துவர்கள் அவரின் தகனம் செய்யும் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். மறுபுறம் எப்படி எடுத்து அன்றே தகனம் செய்வது என்ற நெருக்கடி.
மருத்துவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று அரசாங்க வாகனம். மற்றொன்று தனியார் வாகனம் . நீங்கள் அரசாங்க வாகனத்தை உபயோகித்தால், உங்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. நீங்கள் தனியார் வாகனம் உபயோகித்தால் சுமார் ரூ.8000 முதல் ரூ.15000 வரை கேட்பார்கள் என்று கூறினார்கள். நண்பரோ, தனியார்தான் சிறந்தது என்றெண்ணி, அவர்களை தொடர்புக்கொண்டார். அவர்கள் சுமார் 8000 ரூபாய் செலவு ஆகும் என்றனர். மீண்டும் மருத்துவர்களைப் பார்த்து பேசிய நண்பர், அவர்களின் அறிவுரைப்படி, அரசாங்க ஊர்தியின் விலையில்லா கட்டண தொலைபேசியை 155377ஐ அழைத்து விசாரித்திருக்கிறார். “நீங்கள் எங்கே உடலை எடுத்துச் செல்லவேண்டும்?” என்று அவர்கள் கேட்டுள்ளார்கள். நண்பர் விவரம் சொல்லவே, “நிச்சயம் நாங்கள் சிறந்த முறையில் உங்களின் பயணத்தை அமைத்து தருகிறோம் நீங்கள் ஆக வேண்டியதை முடிக்க சுமார் 3 மணி நேரமாகும், முதலில் அதை கவனியுங்கள் மற்றவை என்ன என்பதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!” என்றனர்.
அவர்கள் சொன்னபடி, நண்பரும் சுமார் 7.30 மணிக்கு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு, நண்பர் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் நண்பரிடம், “சார் எங்களால் 100 கி.மீ வரைதான் இலவசமாக செல்ல இயலும். நாங்கள் உங்களுக்காக ஒரு மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி, காலையில் குருவாயூர் விரைவு இரயிலில் உங்களுக்கு போதிய வசதிகள் செய்துள்ளோம். உடலோடு ஒருவர் இலவசமாக செல்லலாம்” என்று கூறி ரயிலில் இஞ்சின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் உடலை ஏற்றி விட்டார்கள்.
கவனிக்கவும் – இதுவரை அப்படி ஒரு வசதி ரயிலில் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அனைத்து ரயிலிலும் இந்த வசதி உள்ளது.
திருச்சியை நெருங்கும் வேளையில், நண்பருக்கு ஒரு அழைப்பு அலைபேசியில். அவர்கள் அரசாங்க ஊர்தியின் பணியாட்கள். “நீங்கள் திருச்சி சந்திப்புக்கு வந்ததும், தொடர்புகொள்ளுங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!” என்றனர். நண்பர் அவர்கள் சொன்னபடி, தொடர்வண்டி திருச்சி வந்ததும்,
அந்த எண்ணை அழைத்துள்ளார். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்கள் நடைமேடையிலேயே அவர்களின்
வருகைக்காக காத்திருந்தனர். வந்தவர்கள் இரண்டே நிமிடங்களில் உடலைத் தூக்கிகொண்டு ஊர்தியில் வைத்து, சொன்ன நேரத்திற்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி, ஊருக்கு உரிய நேரத்தில் எடுத்துச் சேர்த்துள்ளனர். நண்பரும் அவர் குடும்பத்தாரும், திட்டமிட்டபடி இறுதிச் சடங்குகளை குறித்த நேரத்திற்கெல்லாம் முடித்துள்ளார்கள்.
சென்னை: வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வட்டார அளவில் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு 30.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. வட்டார அளவில் ஒரு வாடகை மையம் அமைக்க 40% மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .
தமிழகத்தில் 1510 வட்டார அளவிலான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ,நடப்பு நிதியாண்டில் 304 மையங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது . வாடகை மையம் அமைக்க விரும்புவோர் தங்களது பகுதியில் உள்ள வேளாண் பொறியாளர் அலுவலகத்தை அல்லது மாவட்ட அளவிலான செயற் பொறியாளர் அலுவலகத்தையோ அணுகி பயன் பெறுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது .
தமிழகத்தில் கோடை காலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை பூர்த்திசெய்ய ஜெர்மன் , அமேரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சியில் தமிழக அரசு நடைமுறைப்படுத்திவருகிறது.
சென்னை வீடுகளில் மழை நேர் சேகரிப்பு ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சியும் பொதுக்கட்டிடங்கள், சாலைகள், பூங்காக்கள் ,தெருக்கள் ,விளையாட்டு திடல்கள் போன்ற பல்வேறு இடங்களில் ஜெர்மனி போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நவீன முறையை தனியார் நிறுவனத்தின் உதவியோடு கைதேர்ந்த முறையில் செயல் படுத்துகிறது. சில இயந்திரங்கள் சென்னையில் இல்லாததால் ஜெர்மனியில் இருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .இந்த நவீன முறை மின்கலனை குறித்து இத்தொகுப்பில் காண்போம் .
பாலிஸ்டெரையன் எனும் மக்காத தடிமனான இந்த கலன் நான்கு பக்கமும் சிறு துளைகளை கொண்டிருக்கும். நான்கு அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட இந்த காலனை மக்காத துணி கொண்டு மூடி பின்னர் பூமிக்கு 10 அடி ஆழத்தில் பள்ளம் தூண்டி வைக்கப்படுகிறது. அதற்கு மேல் கூழாங்கற்கள், ஜல்லிக்கற்கள், மணல் போன்றவை நிரப்பப்படும். பெய்கின்ற மழை இதுபோன்ற இயற்க்கை வடிகட்டி மூலம் நேரடியாக நிலத்தடிக்குள் சென்று சுத்தமான நீராக சேமிக்கப்படும்.அறுபது டன் எடையுள்ள நீரை கூட சாதாரணமாக தன்மை கொண்ட இந்த கலன்களை கொண்டு பிரதான சாலைகளின் அடியில் கூட மழை நேர் சேகரிப்பு தொட்டி அமைக்க முடியும் என இத்திட்டத்தை சென்னையில் அறிமுக படுத்தியுள்ள சிவராமன் கூறியுள்ளார் .
தற்போது நடைமுறையில் உள்ள உறைகிணறு முறையை காட்டிலும் இது அதிக அளவு மழை நீரை சேகரிக்கும் திறன் கொண்டது. 60,000 ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த கலனின் ஆயுட்காலம் சுமார் 50 ஆண்டுகளாகும் . சென்னையில் தொடங்கியுள்ள இத்திட்டத்தைஅடுத்த ஆண்டில் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது .
நீண்டகாலம் பயன்படும் இதுபோன்ற நவீன தொழில்நுட்ப முறையை மழை நீர் சேகரிப்பிற்கு பயன்படுத்தினால் கடும் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து நமது எதிர்கால சந்ததியினர் காக்கப்படுவார்கள், மழைநீர் வீணாவத்தையும் தடுத்து நிலத்தடி நீரை சேமிக்கலாம்.