தமிழகம்

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

Quick Share

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 சப்பாத்திகள் வயநாட்டிற்கு அனுப்பி வைப்பு..குவியும் பாராட்டு

Quick Share

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து 5000 சப்பாத்திகள் செய்து அனுப்பிய தன்னார்வலர்கள் 

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் தொடர்ந்து பலர்தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்பினர் அவர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார்கள் அந்த வகையில் அவர்களின் பசியாட்டுவதற்காக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து செங்குந்த முதலியார் அறக்கட்டளை மற்றும் தன்னார்வர்கள் இணைந்து 
மாலையில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்டசப்பாத்திகளை 100க்கும் மேற்பட்டவர்கள் தயார் செய்து தனித்தனி பெட்டிகள் மூலம் பேக் செய்து அத்துடன் அங்கு உள்ளவர்களுக்கு போர்வை, பற்பசை, பிஸ்கட் , சோப்பு உள்ளிட்ட பொருட்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்கள் இந்த நிகழ்வில் திருப்பூர் கோவை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள்.

இது என்னடா புதுசா இருக்கு!!ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபடும் பக்தர்கள்

Quick Share

குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார்.

ஏலியன் கோயில்

தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.

இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கடந்த 2021 -ம் ஆண்டு முதல் இந்த ஏலியன் கோயில் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த கோயிலானது சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமமாதி அருகே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஏலியன் சித்தர் மற்றும் அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக லோகநாதன் கூறுகையில், “இதுவரை எந்த இடத்திலும் ஏலியன் சித்தர் இல்லை. தற்போது, கோயிலில் திருப்பணி பூஜை நடந்து வருகிறது. 

இதனால், குறைந்த அளவு பூஜை செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து விதமான பூஜைகளும் செய்யப்படும்” என்றார்.  

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உயர்வு

Quick Share

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.90 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கவும், சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளகு. மேலும், ஆடிப்பெருக்கின் போது அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்!! அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Quick Share

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக. தமிழநாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருவாரூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த குடும்பமும் மண்ணில் புதைந்த கொடுமை!!நிர்கதியாய் கதறும் இளம்பெண்

Quick Share

வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மொத்த குடும்பத்தையும் இழந்து திருமணப்பெண் ஒருவர் தனியாளாக நிற்கிறார். 

கோர சம்பவம்

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மண்ணில் புதைந்தவர்களை கண்டறியும் பணியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். தனது குடும்பத்தினர் உயிரோடு வரமாட்டார்களா என்று அங்குள்ள மக்கள் கண்ணீருடன் கதறுகின்றனர்.

குடும்பத்தை இழந்த திருமண பெண்

இந்நிலையில், வெள்ளார்மல அரசு பள்ளி மண்ணுக்குள் புதைந்தது. இந்த பள்ளிக்கு அருகே சிவண்ணன் என்பவரின் குடும்பம் வசித்து வந்துள்ளது. இவரின் குடும்பத்தில் மொத்தம் 9 பேர் உள்ளனர். 

இதில், மூத்த மகள் சுருதியை தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். சிவண்ணன், மனைவி சபிதா, தந்தை போமலப்பன், தாய் சாவித்திரி, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா ஆகியோர் ஒரு வீட்டிலும், பக்கத்துக்கு வீட்டில் சிவண்ணனின் சகோதரர் மற்றும் அவரது மனைவி மகள் என வசித்து வந்துள்ளனர்.

இதில், மகள் ஸ்ருதி கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். மற்றொரு மகள் ஸ்ரேயா கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்நிலையில், தங்கை ஸ்ரேயாவின் உடல் மேப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்த ஸ்ருதி கதறி அழுதுள்ளார். அதனை பார்த்தவர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வரும் டிசம்பர் மாதம் ஸ்ருதிக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்த நிலையில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. 

இவரது வீடு வெள்ளத்தில் அடித்துச் சென்ற நிலையில் குடும்பத்தில் உள்ள மற்ற 7 பேர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்திற்கு நற்செய்தி!!12 இடங்களில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு உத்தரவு…

Quick Share

புதுடில்லி : உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழகத்தின் வேலுார், நெய்வேலி உட்பட எட்டு மாநிலங்களில், 12 புதிய விமான நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது.

சாமானிய மக்கள் விமான போக்குவரத்து சேவையை பயன்படுத்தவும், உள்நாட்டு விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், ‘உதான்’ திட்டம் 2016ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சிறு நகரங்களில் ஏர்போர்ட் அமைத்தல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஏர்போர்ட்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, உதான் திட்டத்தின் கீழ் 13 ஹெலிபோர்ட், இரண்டு நீர்வழி ஏரோடிரோம்கள் உட்பட, 85 விமான நிலையங்கள், 579 வழித்தடத்தை இணைக்கின்றன. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் நேற்று (ஜூலை 29) ராஜ்யசபாவில் கூறியதாவது:

உதான் திட்டத்தின் கீழ், 12 விமான நிலையங்கள் இந்த ஆண்டு திறக்கப்பட உள்ளன. அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் கார் நிக்கோபாரில் உள்ள ஷிப்புர், சத்தீஸ்கரின் அம்பிகாபுர், மத்திய பிரதேசத்தின் ரேவா மற்றும் டாடியா, மஹாராஷ்டிராவின் அமராவதி, சோலாபூர், டாமன் – டையூவின் டாமன், ஹரியானாவின் அம்பாலா, உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மற்றும் சஹாரன்புர்,தமிழகத்தின் வேலுார் மற்றும் நெய்வேலி உள்ளிட்ட 12 இடங்களில் இந்த விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
நாடு முழுதும் உள்ள செயல்படாத மற்றும் குறைந்த சேவை அளிக்கும் விமான நிலையங்களுக்கு புத்துயிர் அளித்து மேம்படுத்த, முதல்கட்டமாக 4,500 கோடியும், இரண்டாம் கட்டமாக 1,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். 

 

பெரும் சோகம்!! பலி எண்ணிக்கை 122 என உயர்வு: 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Quick Share

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்று நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் மாயமாகியுள்ள நிலையில், இதுவரையான பலி எண்ணிக்கை 122 என தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பாராத நிலச்சரிவு

சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த பேய் மழையை அடுது மூன்று பகுதிகளில் எதிர்பாராத நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவமும் களமிறங்கியுள்ளனர்.

தொடர்ந்து 20 மணி நேர மீட்பு நடவடிக்கைகளை தற்போது முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். ஆனால் நாளை அதிகாலை மீண்டும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 122 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 116 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மரணமடைந்தவர்களுக்கு தலா ரூ 2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 உதவித்தொகையும் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் வயநாடு மக்களை சந்திக்கும் பொருட்டு புறப்பட்ட தயாரான நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை முன்னறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில நிர்வாகம் அவர்கள் பயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை

இருப்பினும், நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, கேரள பேரிடருக்கு உரிய நிதியுதவி அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை மற்றும் நூல்புழா ஆகிய பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாகவும், 

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பல கிராமங்கள் மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் வசதியும் பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்றும் இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ள அபாய எச்சரிக்கை!! அசூர வேகத்தில் அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்!!

Quick Share

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகள் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. நேற்று பிற்பகலில் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.20 அடியாக உயர்ந்தது.இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 10 மணிக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடிகளாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூலை – 29) காலை 8 மணியளவில் 116.360 அடியை எட்டியது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்கு 120 அடியை எட்டும் என்றும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது’

இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிறுவனின் அசத்தல் சாதனை!200 ரூபாயை வைத்து 10 கோடி சம்பாத்தியம்!!

Quick Share

மதுரையை சேர்ந்த பாடசாலை மாணவன், பெற்றோர் அளித்த 200 ரூபாயில் தொடங்கிய தொழில் இன்று ரூ 10 கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது.

எவரும் மதிப்பளிக்கவில்லை

மதுரையை சேர்ந்த 22 வயது சூர்ய வர்ஷன் என்பவரது Naked Nature என்ற நிறுவனம் உருவான கதை பலருக்கும் ஊக்கமளிப்பதாகும். 12ம் வகுப்பு படிக்கும் போது தங்களின் வீட்டு சமையலறையில் மிக எளிமையான முறையில் உருவாக்கியது தான் செம்பருத்தி குளியல் உப்பு.

அதுவும் அவரது பெற்றோர் அளித்த பணத்தில் சேமித்த 200 ரூபாயில் தொடங்கியுள்ளார் சூர்ய வர்ஷன். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால், அங்கிருந்து தனது தயாரிப்புக்கு தேவையான உப்பை வரவழைத்துள்ளார். 

ஆனால் தொடக்கத்தில் சூர்யாவின் தயாரிப்புக்கு எவரும் மதிப்பளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அவரது வயதை குறிப்பிட்டு, விளையாட்டுப் பொருள் என்றே நிராகரித்துள்ளனர்.

ஆனால் ஆயுர்வேத மருத்துவர் ஒருவர், சூர்யா தயாரித்துள்ள பொருளில் ஈர்க்கப்பட்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு வாங்கவே, அதுவே இதுவரையான அவரது வளர்ச்சிக்கு முதற்படியாக அமைந்துள்ளது.

நம்பி களமிறங்கிய சூர்யா

எதிர்பாராத இந்த திருப்புமுனை சூர்யாவின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. இதனையடுத்து மதுரையில் ஒரு கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்தார். அத்துடன், தமது தொழிலுக்கு முதலீடு திரட்டும் பொருட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த ஒன்லைன் வகுப்புகள் மூலம் சுமார் ரூ 2.20 லட்சம் சம்பாதித்தார்.

தாம் சம்பாதித்ததை அப்படியே தமது கனவு நிறுவனமான Naked Nature-ல் முதலீடு செய்தார். தற்போது Naked Nature நிறுவனம் பல வகையில் 70 தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. 

2021 மற்றும் 2022ல் மட்டும் Naked Nature நிறுவனம் ரூ 56 லட்சம் அளவுக்கு விற்பனை முன்னெடுத்துள்ளது. மதுரையை சேர்ந்த இந்த நிறுவனம் தற்போது இணையமூடாக தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலும் பிரபலமடைந்து வருகிறது.

வெறும் 200 ரூபாய் முதலீட்டில், உப்பை நம்பி களமிறங்கிய சூர்யா, இன்று ரூ 10 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக வளர்த்துள்ளார்.

TNPL -ல் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்

Quick Share

TNPL தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் சோக முடிவு

சென்னை கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நேற்று காலை 10.15 மணியளவில் வந்துள்ளார்.

அப்போது அவர் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பின்னர், அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு பொலிஸார் விரைந்து வந்து இளைஞரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த இளைஞர், விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6-வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில், உயிரிழந்த இளைஞர் சாமுவேல் ராஜ் ஒரு கிரிக்கெட் வீரர் எனவும், டி.என்.பி.எல் (TNPL) தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.   

மக்களே உஷார்!! பெங்களூருவுக்கு வந்திறங்கிய 3000 கிலோ நாய் இறைச்சி..

Quick Share

பெங்களூரு ரயில் நிலையத்தில் 150 பெட்டிகளில் சுமார் 3000 கிலோ நாய் இறைச்சி வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலயத்தில் நேற்று இரவு 150 பெட்டிகளில் சுமார் 3000 கிலோ (3 டன்) பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. அவை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இறைச்சியானது வித்தியாசமான முறையில் இருந்ததால் ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் அதனை பார்க்க கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது அந்த இறைச்சியானது நாய் இறைச்சி என்று புனீத் கேரஹல்லி என்ற பசுப் பாதுகாவலரும் அவரது சாகாக்களும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், பெங்களூரு ஹொட்டலுக்கு இந்த இறைச்சி சப்ளை செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் அவர்களை காவலில் எடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இறைச்சியை விற்பதற்காக அப்துல் ரசாக் என்ற டீலர் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், தான் வரவழைத்தது ஆட்டிறைச்சி என்றும், அதற்குரிய ஆதாரம் இருப்பதாகவும் ரசாக் கூறியுள்ளார். மேலும், தன்னை பொய் வழக்கில் சிக்கவே சதி நிகழ்த்தியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அது உண்மையில் என்ன இறைச்சி என்று தெரிந்துகொள்ள போலீசார் பரிசோதனைக்கு அனுப்பியுன்னர்.




You cannot copy content of this Website