தமிழகம்

புனேயில் சட்டவிரோத மதுக்கடைகள் இடிப்பு

Quick Share

மகாராஷ்டிர மாநிலம் புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) புனேவில் உள்ள சட்டவிரோத பப்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 33 சட்டவிரோத மதுக்கடைகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளன. ஆனால் புனே கார் விபத்துக்குப் பிறகு, மகாராஷ்டிரா அரசு சட்டவிரோத பப்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போது சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் உணவகங்கள் உள்ளிட்டவை இடிக்கப்பட்டு வருகின்றன.

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Quick Share

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் கேரளாவில் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய மரணம்: மேலும் 6 பேர் கைது!

Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாபுரம் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பென்சிலால், சடையின், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதம் லால் ஜெயின் ஆகிய ஆறு பேரை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு அதிகரிப்பு: கள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர்கள்!

Quick Share

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மறுபுறம் கள்ளச்சாராயம் குடித்ததாலேயே நான்கு பேர் இறந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை மேற்கொண்டு வந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்று கோவிந்தராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிகண்டன்(35), மற்றும் மேலும் இருவர் என உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

‘கள்ளச்சாராய உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது’ – தமிழக ஆளுநர் இரங்கல்!

Quick Share

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அவ்வப்போது கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்த செய்திகள் வெளிவருகின்றன. சட்டவிரோத மதுபான தயாரிப்பு, நுகர்வை தடுப்பதில் உள்ள குறைபாட்டை இது பிரதிபலிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் விவரம்: சுரேஷ், பிரவீன், மற்றொரு சுரேஷ், தனக்கொடி, வடிவு, சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி, டேவிட்.

பெரும் அதிர்ச்சி! கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 33 பேர் பலி..!கொந்தளித்த விஜய்...

Quick Share

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 33 பேர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

33 பேர் 

தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிப்பிக்கப்பட்டனர். 

அவர்களில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டதுடன், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விவகாரம் குறித்து அமைச்சர்களுடன் அவசர கூட்டம் நடத்த உள்ளார். 

விஜய் வேதனை 

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் பலியானது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” ” என தெரிவித்துள்ளார். 

 

கட்டட தொழிலாளியின் உயிரை பறித்த பரோட்டா!

Quick Share

கட்டட தொழிலாளி ஒருவர் சாப்பிடும் போது பரோட்டோ தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான கன்னியாகுமரி, பண்டாரவிளையை சேர்ந்தவர் சனந்தனன் (40). இவர், கட்டட தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மகள் இருக்கும் நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணாமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதில், மனைவியும் மகளும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். தனது அம்மா மேரிபாயுடன் சனந்தனன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு உணவாக கடையில் இருந்து பரோட்டோ வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே பரோட்டோ தொண்டையில் சிக்கி விக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர், தனது அம்மாவிடம் தண்ணீர் வாங்கி குடித்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அம்மா, உறவினர்களை அழைத்து வந்துள்ளனர். பின்னர், சனந்தனனை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மேரிபாய் அளித்த புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரும் அதிர்ச்சி!!குலை நடுங்க வைத்த சம்பவம் – 49 பெண்களை கொலை செய்து பன்றிகளுக்...

Quick Share

ஒட்டுமொத்த கனேடிய மக்களையும் நடுங்கவைத்த கொலைகாரன், சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் பாகங்கள் பன்றிகளுக்கு உணவு

கடந்த 1990 முதல் 2000 ஆண்டு தொடக்கம் வரையில் கனடாவின் வான்கூவர் அருகே பல எண்ணிக்கையிலான பெண்களை தமது பன்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளதுடன், உடல் பாகங்களை பன்றிகளுக்கு உணவாக்கியுள்ளார்.

இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த Robert Pickton மே 19ம் திகதி சக கைதிகளால் தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 

ஒட்டுமொத்த கனடாவையே நடுங்கவைத்த சில குற்றவாளிகளில் இவரும் ஒருவர். இவரது வழக்கு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. தற்போது 74 வயதான ராபர்ட் பிக்டனை சக கைதி ஒருவர் தாக்கியதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

ராபர்ட் பிக்டன் 6 கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபணமான நிலையில் கடந்த 2007ல் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். 26 பெண்களை கொலை செய்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், 6 கொலைகளில் மட்டும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது. 

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வான்கூவர் புறநகர் பகுதியில் டசின் கணக்கான பெண்கள் திடீரென்று மாயமான சம்பவம் தொடர்பில் ராபர்ட் பிக்டனின் பண்ணையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

6 வழக்குகள் மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது

குறித்த பன்றி பண்ணையில் இருந்து 33 பெண்களின் உடல் பாகங்கள் அல்லது டிஎன்ஏ மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டது. ஒருமுறை பொலிஸ் அதிகாரி என தெரியாமல் 49 பெண்களை கொன்றுள்ளதாக ராபர்ட் பிக்டன் உளறியுள்ளார்.

மட்டுமின்றி, பண்ணையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நபர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். ராபர்ட் பிக்டன் விவகாரத்தில் வான்கூவர் பொலிசார் உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. 

மாயமான பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்கள் என்பதால் இந்த மெத்தனம் என்றும் கூறப்பட்டது. 

ராபர்ட் பிக்டன் இதுவரை 49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கியதாக கூறியிருந்தாலும், 6 வழக்குகள் மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 25 ஆண்டுகளுக்கு பிணையும் மறுக்கப்பட்டது. 

தீவிர புயலாக வலுப்பெறும் ரீமால் புயல்.., தமிழ்நாட்டிற்கு வந்த புதிய சிக்கல் என்ன?

Quick Share

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயலானது இன்று மாலை தீவிரப் புயலாக வலுபெறக்கூடும். 

ரீமால் புயல்

நேற்று முன்தினம், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருந்தது. 

அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ரீமால் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது.

தற்போது, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தீவிரப் புயலாக வலுபெறக்கூடும். 

பின்னர், நாளை நள்ளிரவு வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காள கடற்கரையை கடக்கக்கூடும்.

தமிழ்நாட்டிற்கு என்ன தாக்கம்?

இந்த ரீமால் புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டிற்கு மழை வாய்ப்பு என்பது குறைவாக தான் காணப்படும்.

அதற்கு மாறாக, தமிழ்நாட்டின் நிலவும் வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று இந்திய வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

வெறும் கையால் மனிதக்கழிவை அகற்றும் பணியாளர்: சர்ச்சையில் சிக்கிய மதுரை மாநகராட்சி!

Quick Share

மதுரையில் மனிதக் கழிவுகளை ஒப்பந்த பணியாளர் வெறும் கைகளாலே சுத்தம் செய்யும் காட்சிகள் இணையத்தில்வைரலாகி வருகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றது. பாதாள சாக்கடைக்கு உள்ளே இறங்கி மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள வைகை ஆற்றின் கரையில் ஓபுளாபடித்துறை பகுதியில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனைச் சரி செய்வதற்காக மதுரை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி எந்த விதமான பாதுகாப்பு உபகரணமும், கைகளுக்குக் கையுறைகளும் இல்லாமல் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது அதிருப்தியைப் பதிவுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Quick Share

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று (21.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை (22.05.2024) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் இது வடக்கிழக்கு திசையில் நகர்ந்து மே 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 

அதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக்கூடும். எனவே கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (21.05.2024) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் நீலகிரி, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

உயிருக்கு போராடியவரை சாலையோரம் வீசிச்சென்ற ஓட்டுநர்!

Quick Share

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய நுழைவாயில் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர் மீது பேருந்து ஒன்று மோதிவிட்டுச் சென்றுள்ளது. இதனால் படுகாயம் அடைந்து கீழே கிடந்த அந்த நபரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே, தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிப்பட்டது யார்?, எந்த பேருந்து மோதியது? என்று விசாரணை நடத்தினர். மேலும், பேருந்து நிலையம் அருகே உள்ள சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெங்களூரிலிருந்து ஊட்டிக்குச் சுற்றுலா வந்த தனியார் பேருந்து ஒன்று அந்த நபர் மீது மோதியது தெரியவந்தது. 

மேலும் அந்த சிசிடிவி காட்சியில் அந்த நபரை மோதி விபத்து ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர், மட்டும் அவருடன் இருந்த இருவரும் படுகாயமடைந்த நபரைச் சாலையோரம் தூக்கி வீசியெறிந்துவிட்டுச் செல்வது பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் சிவராஜ் மற்றும் அவருடன் இருந்த பேருந்தின் க்ளீனர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பேருந்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.




You cannot copy content of this Website