தளபதி விஜயின் குடும்ப உறுப்பினராகவும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ விஜய்யின் மகன் சஞ்சய் வைத்து படம் எடுக்கப் போவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இது குறித்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளார். தளபதி விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார் அவர் படித்து முடித்தபிறகு எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் அவரை வைத்து படம் தயாரிக்க போவதாக வெளிவந்த செய்தி அனைத்தும் உண்மை இல்லை என உறுதிப்படுத்தினார்.
விஜயின் மகன் பார்க்க அழகாகவும் அம்சமாகவும் இருக்கும் விஜயின் மகன் சஞ்சய் திரைத்துறைக்கு வருவாரா என்பதை தளபதி விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர் திரைக்கு நடிக்க வந்தார் எந்த இயக்குனர் அவரே இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமார் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே நடித்துக் கொண்டிருப்பவர். மூத்த நடிகர் சிவருமாரின் 2 வாரிசுகளும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் உள்ளனர். நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா தனது ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி, யோகா பயிற்சி செய்வதாக பல மேடைகளில் பேசி இருக்கிறார். தன்னை மேம்படுத்திக்கொள்ள எனது தந்தையிடம் நிறைய விஷயத்தை கற்றுக்கொண்டேன் எனவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த வயதிலும் நடிகர் சிவகுமார் எப்படி ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கிறார் என்ற கேள்வி பலரிடம் உள்ளது. உடம்பை வைத்துக் கொள்ளும் ரகசியம் தற்போது அவள் செய்து கொண்டிருக்கும் யோகா போஸ் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது. யோகா ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆரோக்கியத்தையும் மனதையும் சீராக வைத்து கொள்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
தற்போது பல நாடுகளில் இளைஞர்கள் யோகாவை பின்பற்ற தொடங்கிவிட்டனர். இதை சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தால் ஆரோக்கியம் சீராக வைத்துக்கொண்டு வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும் என்பது உண்மை.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை-மகன் என இருவர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா, நடிகர் விவேக், பாடகி சுசித்ரா, என பலர் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சாத்தான்குளத்தில் காவல்துறையினர் உங்களின் அத்துமீறல் வன்முறை மூலம் மக்கள் மனதை வெல்ல முடியாது என நடிகர் சூர்யா அதிரடியாக செய்தி வெளியிட்டார்.
காவல்துறையை மையமாக வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய அதிரடி இயக்குனர் ஹரி அவர்கள் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். இது குறித்து செய்தி வெளியிட்ட அவர், “காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்!”
“சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்துவிட கூடாது. இதற்கு ஒரே வழி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே.! காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே களங்கப்படுத்தியுள்ளது என இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.
தமிழில் பயணம், வெடி போன்ற படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நடிகை பூனம் கவுர் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூனம் கவூர் தற்போது இயக்குனர் ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தார் எனபலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை பூனம் கவுரும் தனது வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார்.
அதில் நானும் நடிக்கும்போது எனது வாழ்வில் பல முறை மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும். அதைப் பற்றி பேச பிரபல இயக்குனரிடம் சென்றதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய குறைகளை கூறியபோது அந்த இயக்குனர். நீ செத்தால் ஒருநாள்தான் நியூஸ் என அலட்சியமாக சொன்னாராம். இதில் கடுப்பான நடிகை அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
பிறகு அவர்களது நண்பர்கள் மூலமாக அந்த இயக்குனரை சந்தித்து பூனம் கவுர் மன அழுத்தத்தில் உள்ளார் என சொல்லி அனுப்பி உள்ளனர். ஆனால் அதை அவர் சற்றும் மதிக்கவில்லை. மேலும் அந்த இயக்குனரை குருஜி என குறிப்பிட்டு, அந்த நியக்குனர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு மாபியாக்கள் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என் பெயருக்கு கலங்கவைக்கும் அளவில் அவர் செயல்பட்டுள்ளார் என வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அந்த இயக்குனர் யார் என்பதைப்பற்றி கூடிய சீக்கிரம் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி மன அழுத்தம் காரணமாக பல நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் சாதாரண மனிதர்களும் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களுக்கு தகுந்த நேரத்தில் நின்று யாராவது தட்டிக் கொடுத்தாள் நிதானம் ஆகிவிடுவார்கள் என்பதே உண்மை.
தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தினமும் ஆன்லைனில் வேலைகள் தேடி வருகின்றனர். monster, shine, Naukri போன்ற இணையதளங்களில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் போடுவது வழக்கம்.
தற்போது தமிழக அரசு வேலை வாய்ப்புக்காக புதிய போர்டல் Portal ஒன்றை தொடங்கியுள்ளது. இதில் வேலைவாய்ப்பு விஷயங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த சிறப்பு ஏற்பாடு பல இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் என தமிழக அரசு இந்த ஏற்பாடை செய்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் தங்கள் காலிப் பணியிடங்களை தளத்தில் பதிவேற்றி தகுதியான நபர்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் தொடங்கப்பட்டது.
tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள பல திரையுலக நட்சத்திரங்களையும், அரசியல் பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமூக வலைதளங்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இழந்த நிலையில் இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர வேண்டாம் என மும்பை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரிந்திருந்தால் அழித்து விடுமாறு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மஹாராஷ்டிரா போலீசார் ட்விட்டர் பக்கத்தில், ”அந்த புகைப்படம் பரப்பப்படுவது கவலைக்குரியது மற்றும் மோசமான ரசனை கொண்டது. இதுபோன்ற பதிவுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை. மேலும் உடனடியாக நீக்கப்பட வேண்டியவை” என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
புது வழி போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்த நாளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் கொல்கத்தாவில் உள்ள பேருந்துகளில் இருக்கும் கூட்டம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமூக இடைவெளியை சமூகப் பற்று ஆகியவற்றை அரசு வலியுறுத்தி வரும் நிலையில். கரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் சற்றும் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் ஏறி செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை பதற்றமடைய செய்துள்ளது.
என்னதான் முகக்கவசம் அணிந்தாலும் ஒருவருக்கொருவர் ஒட்டி உரசிக்கொண்டு பேருந்துகளில் பயணம் செய்யும் யாராவது ஒருவருக்காவது குர்ஆனை இருந்துவிட்டால் பல ஆயிரம் பேருக்கு பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த கூட்ட நெரிசலை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகிறது.
பிக் பாஸ் 3 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமான ரேஷ்மா நடித்த புஷ்பா புருஷன் காமெடி சின்ஸ் பிரபலமானது. சின்னத்திரைகளில் சன் சிங்கரில் தொகுப்பாளினியான பணியாற்றினாலும் இவருக்கு வெள்ளித்திரையில் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கமெர்சியல் படமான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து அனைவராலும் பேசப்பட்டார். கல்யாணமாகி விவகாரத்து பெற்றிருந்தாலும் ஒரு தனி பெண்ணாக சமுதாயத்தில் குறிப்பாக திரைத்துறையில் சாதித்து பிரபலமாகியுள்ளார். அடிக்கடி சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே லைக்ஸ் களை அள்ளிக் குவித்துள்ளது.
சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் தொற்றுநோய் முடிவடையும் சரியான காலத்தை முன்னறிவிக்கும் விதமாக ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
அதற்கமைய, நவம்பர் 11ம் திகதிக்குள் அமெரிக்கா கொரோனா வைரஸ் இல்லாத ஒரு நாடாக மாறுவதோடு, அதே நேரத்தில் செப்டம்பர் 30ம் திகதிக்குள் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் இல்லாமல் போகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 25ம் திகதிக்குள் இந்தியா 100 சதவீதம் கொரோனா வைரஸ் இல்லாத நாடாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. அதாவது, செயற்கை நுண்ணறிவு-உந்துதல் தரவு பகுப்பாய்வு முறையால், 97 சதவீத கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் இருந்து மே 22-க்குள், ஜூன் 1-க்குள் 99 சதவீதமும், ஜூலை 25 க்குள் நாடு 100 சதவீதமும் கொரோனா வைரஸிலிருந்து விடுபடும்.
கொரோனா வைரஸ் தோற்றால் பெரும் அழிவை சந்தித்த அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸிலிருந்து எப்போது விடுபடும் என்று அந்த அறிக்கை கணித்துள்ளது.
சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 27-க்குள் அமெரிக்கா கொரோனா வைரஸிலிருந்து விடுபடும், அதே நேரத்தில் 2020 டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் வைரஸ் உலகிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்படும்.
சிங்கப்பூர் பல்கலைக்கழக அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் பாதிப்புகளில் 97 சதவீதம் மே 30-க்குள் முடிவடையும், ஜூன் 17-க்குள் 99 சதவீதமும், 2020 டிசம்பர் 9 க்குள் 100 சதவீதமும் முடிவடையும்.
பிரான்சில், 97 சதவீத கொரோனா வைரஸ் பாதிப்புகள் மே 6-க்குள் முடிவடையும், மே 18-க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 5 க்குள் 100 சதவீதமும் முடிவடையும். இத்தாலியில், மே 8 க்குள் 97 சதவீதமும், மே 21-க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 25 க்குள் 100 சதவீதமும் இருக்கும்.
இதற்கிடையில், மே 4ம் திகதிக்குள் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் வழக்குகளில் 97 சதவீதமும், மே 16 க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 7 க்குள் 100 சதவீதமும் சரிவைக் காணலாம். இங்கிலாந்தில், மே 16-க்குள் 97 சதவீதமும், மே 27 க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 14 க்குள் 100 சதவீதமும் இருக்கும்.
எவ்வாறாயினும், வைரஸின் சிக்கலான தன்மை மற்றும் ஒரு நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை நெறிமுறைகள் உள்ளிட்ட பிற காரணிகளால் இயற்கையின் கணிப்புகள் நிச்சயமற்றதாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பூட்டப்பட்ட சில மாதங்களைத் தொடர்ந்து அனைத்து நாடுகளும் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுவதையும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதையும் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஆனால் விரைவில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா அதிகரிப்புக்கு மீண்டும் வழிவகுக்கும் என்று நிபுணர்களும் சுகாதார அதிகாரிகளும் உலக சுகாதார அமைப்பினரும் எச்சரிக்கை விட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வீடியோ நேற்று வெளியானது. மருத்துவமனை ஊழியர்கள் இந்த வீடியோவை எடுத்திருப்பதாகவே தெரிகிறது. இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் அஜித் எதற்காக மருத்துவமனை சென்றார் என்று விசாரித்த போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பொதுவான உடல் பரிசோதனை செய்து கொள்ளும் அஜித், அதற்காகவே மருத்துவமனை சென்று வந்ததாக பேசப்படுகிறது.
இதனிடையே வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் பணியாற்றிய மூவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் போனி கபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களான குஷி கபூர், ஜான்வி கபூர் ஆகியோர் கொரோனா தொற்று பாதிப்பின்றி நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தல அஜித், போனிகபூர் வீட்டிற்கு வந்து சென்றாரா அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா ? என சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. கூடிய விரைவில் இதைப்பற்றி ஒரு சரியான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் கராச்சி பகுதியில் விமானம் ஒன்று என்ஜின் கோளாறு காரணமாக கட்டுப்பாடு இழந்து குடியிருப்பு பகுதியில் பயங்கரமாக மோதியது.
லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்ற ஏர்பஸ் ஏ320 விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தின் பைலட் கராச்சியில் உள்ள விமானப் போக்குவரத்து கண்ட்ரோல் மையத்திற்கு ஆடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இயந்திர கோளாறு மோசமானதால் குடியிருப்பு பகுதியில் விமானம் பயங்கரமாக மோதியது இந்த விமானத்தில் குழுவுடன் சேர்த்து 100 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய முழு தகவல் இன்னும் வெளியாகவில்லை. குடியிருப்பு பகுதியில் மோதியதால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. சாலையில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் பெரிய புகை மண்டலம் உருவானது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானில் நடந்த இந்த விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தனர். மேலும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கமலஹாசன் பாலிவுட் ஹாலிவுட் உலக மொழிகளில் உள்ள பல தொழில்நுட்ப கலைஞர்களுடன் தொடர்பில் இருப்பவர். இவருடைய உலகளாவிய வளர்ச்சி கமலை சினிமா துறையில் பெரிய இடத்தில் அவரை நிறுத்தியுள்ளது. தற்போது கமல்ஹாசனைப் பற்றி ஹாலிவுட் நடிகை மெக்கன்சி மோர் தனது கமல் உடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் பிடரியில் இதைப்பற்றி ஒரு போட்டோவை பகிர்ந்துள்ள மெக்கன்சி. கமல்ஹாசன் நான் சிறுவயதில் இருக்கும்போது இந்தியாவிலிருந்து எனக்கு பல பரிசு பொருட்களை வாங்கி வருவார்.
அப்போது அவர் எங்களுக்கு வாங்கி கொடுத்த உடையை நானும் என் தந்தை அணிந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என அதை பகிர்ந்துள்ளார்.
மெக்கென்சி வெஸ்ட்மோர் உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதை வென்ற மைக்கேல் வெஸ்ட் மோர் என்னும் மேக்கப் ஆர்டிஸ்டின் மகள் ஆவார். மெக்கன்சி வெஸ்ட் மோர் தற்போது அமெரிக்காவில் நடிகையாகவும் பாடகியாகவும் மிகப்பெரிய பிரபலமாக வலம் வருகிறார். கமலுடன் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.