இப்படி தான் செய்யவேண்டும்…, வேறு வழி இல்லை, ஊருக்கு திரும்பியவர்கள் மீது கிருமிநா...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் ஏற்பட்டாலும் அரசு மிக குறைவான பேருந்துகளை இயக்கியது. லக்னோவில் இருந்து 270 கி.மீ தொலைவில் இருக்கும் உத்தரபிரதேசத்தின் பாரேலி மாவட்டத்தில் தங்கள் சொந்த ஊர் திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கிருமிநாசினிகள் தெளித்தார்.
பலர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக நடந்து சென்று சொந்த ஊரை அடைந்தனர். ஊர் எல்லையில் இருந்த பாதுகாப்பு பணியாளர்கள். பாதுகாப்பு உடை அணிந்த சிலர் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒரு குழுவாக சாலையில் அமர வைத்து அவர்கள் மீது கிருமிநாசினிகள் தெளித்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.பிரியங்கா காந்தி இந்த வீடியோவை பார்த்து கண்டனம் தெரிவித்தார். இதைப் பற்றி பேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விரட்டுவதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்தால்தான் வைரஸ் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கிருமி நாசினி தெளித்து இதற்கு முன்பு அனைவரையும் கண்ணை மூடிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் குழந்தைகளின் கண்களையும் மூடுமாறு பெற்றோர்களிடம் வேண்டிக்கொண்டனர்.