“காயத்தில் இந்தியாவின் முக்கிய வேகப்பந்து பந்து வீச்சாளர் ” வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் !!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்திய அணியின் முக்கிய கிரிக்கெட் வீரரான புவனேஸ்வர் குமார் கடந்த 2 ஆண்டுகளாகவே அடிக்கடி காயத்தினால் பாதிக்கப்பட்டுவருகிறார். 2018ம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது. 2019 ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல்-இல் ஆடிய அவர் உலகக்கோப்பை ஆட்டத்தின் நடுவே காயத்தின் காரணமாக பாகிஸ்தான் போட்டியில் இருந்து வெளியேறினார். அதற்கு பின் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் மீண்டும் ஆடினார். மீண்டும் காயம் படவே தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச தொடரில் பங்கேற்கவில்லை. புவனேஸ்வருக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவதால் பலரும் அவரது காயத்தை இந்திய அணி நிர்வாகம் சரிசெய்யவில்லை என புகார் கூறினார். புவனேஸ்வருக்கு எப்படி பட்ட காயம் என்பது பற்றியும் பிசிசிஐ எந்த தகவலையும் வெளியிடாமல் மர்மமாகவே நீடிக்கிறது.

இந்நிலையில் மீண்டும் அவர் குணமானார், என தற்போது டி-20 தொடரில் விளையாடினார்.மூன்றாவது டி20 தொடரின் ஆட்டத்தின் போது புவனேஸ்வருக்கு மீண்டும் காலில் காயம் பட்டது. சாதாரணமான காயமாக இருந்தாலும் ஓய்வு எடுக்கவேண்டுமென அறிவுரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் புவனேஸ்வர் குமார் நிச்சயமாக ஒரு நாள் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. அவரை அணியில் இருந்து நீக்குவதற்கும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஷர்துல் தாக்குர், கலீல் அஹ்மது ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.