“போலீஸ்காரங்களே திருட சொல்ராங்க என் சாவுக்கு அவங்கதான் காரணம்” திடுக்கிடும் வீடியோவின் பின்னணி !!!

செங்கல்பட்டுவை சேர்ந்த பிரபு எனும் பிரபல ரவுடி தான் சாக போவதாக கூறி அரளிவிதையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு என் சாவுக்கு காரணம் போலிஸ் தான் என சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
செங்கல்பட்டுவை சேர்ந்த பிரபல ரவுடி வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ, அதில் பேசியுள்ள அவர், என் மீது பல வழக்குகள் உள்ளது. நான் தவறாமல் நீதிமன்றம் சென்றுகொண்டு இருக்கிறேன். எனக்கும் எனது தம்பிக்கும் பிரச்சனை வந்ததால் அவனை அடிச்சு துரத்திட்டேன். என்னுடைய பெரிய பொண்ணு எந்த பிரச்சனைக்கும் போகவேணான்னு சொன்னதால, நான் இப்போ திருந்திட்டேன். திடீர்னு போலீஸ்காரங்க வீட்டுக்கு வந்து குமார் எஸ்.ஐ கூப்பிடுறாருனு சொன்னதும், என்பொண்டாட்டி சண்டைபோடுரா சாகப்போறன்னு சொன்னா. இப்படி திடீர்னு வந்து கூப்பிட்டா நான் என்ன பண்ணுவேன்.என்ன போலீஸ் மணல் கடத்த சொல்ராங்க என்ன மிரட்டுறாங்க, முடியாதுன்னு சொன்ன காசு கேக்குறாங்க. நான் இப்போ இந்த அரளிவிதையை சாப்டுட்டு செத்துப்போக போறேன் என் சாவுக்கு அந்த 4 போலீஸ்தான் காரணம் என வீடியோவில் பரபரப்பாக பேசியுள்ளார் .
இது குறித்து காவல் துறையிடம் விசாரிக்கும் போது, செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பகுதியை சேர்ந்த பிரபு-பிரேம்குமார் இருவரும் பிரபல ரவுடிகள் இருவர் மீதும் கொலை, கடத்தல் போன்ற பல வழக்குகள் உள்ளன. இவர்கள் பாலாற்றில் மணல் கடத்துவதாக வந்த புகாரின் பெயரில் இவர்களை அவர்கள் வீட்டில் வைத்து கைது செய்து இருசக்கர வாகனத்தில் அழைத்து வரும் போது காவலரை தள்ளி விட்டுவிட்டு, இருவரும் தப்பி ஓடினர். காயமடைந்த எஸ்.ஐ குமாருக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் பிரபு அரளிவிதையை சாப்பிட்டு சாவதாக பாவனை செய்து வருகிறான். இவன் ஏற்கனவே ஒரு தடவை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக குறி சிகிச்சையளிக்க வேண்டுமென ஒரு மருத்துவமனையில் கட்டாயப் படுத்தியுள்ளான். ஆனால் இது போலீஸ் கேஸ், என மருத்துவர்கள் மறுக்கவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் போய் பிரச்சனை செய்தான் அங்கேயும் மறுத்ததால் அவன் தப்பி சென்று விட்டான். ஆனால் இப்போது போலீஸ் மீது குற்றம் சாட்டிக்கொண்டு சுற்றிவருகின்றான் என கூறினார்.
