சென்னையில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் இது வரை 27 கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும் 21 நாள் தடை விதத்திலிருந்து அணைத்து மாநிலங்களில் அவசர கால நடவடிக்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் நாட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கு பனி நடைபெற்று வருகிறது.
சென்னையில் போது இடங்களில் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதுவரை சென்னையில் 24,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், இந்த 24,000 பேர் தங்கியிருக்கும் வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,