சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 2.44மீ உயர்வு !!! ஆணையர் பிரகாஷ் தகவல்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 2.44 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வடிக்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய இயக்குனர் ஹரிஹரன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய ஆணையர் கூறியதாவது, ”சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை புனரமைத்து புத்துயிர் அளிக்கவும், அணைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கவும் சென்னை மாநகராட்சி, பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 39,385 மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. 385 கிணறுகள் சரிசெய்யப்பட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் ஜூலை மாதம் 7.28 மீ ஆக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 2.44மீ அளவிற்க்கு உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன”. இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.மேலும் பல நிறுவனங்கள் மருத்துவமனைகள், போன்ற இடங்களில் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த திட்டமிட்டுள்ளார்.