சென்னையில் “ஜெர்மன் முறையில்” மழை நீர் சேகரிப்பு. 2000 இடங்களில் அமைக்கும் பணிகள் தீவிரம்!!!
தமிழகத்தில் கோடை காலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை பூர்த்திசெய்ய ஜெர்மன் , அமேரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சியில் தமிழக அரசு நடைமுறைப்படுத்திவருகிறது.
சென்னை வீடுகளில் மழை நேர் சேகரிப்பு ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சியும் பொதுக்கட்டிடங்கள், சாலைகள், பூங்காக்கள் ,தெருக்கள் ,விளையாட்டு திடல்கள் போன்ற பல்வேறு இடங்களில் ஜெர்மனி போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நவீன முறையை தனியார் நிறுவனத்தின் உதவியோடு கைதேர்ந்த முறையில் செயல் படுத்துகிறது. சில இயந்திரங்கள் சென்னையில் இல்லாததால் ஜெர்மனியில் இருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .இந்த நவீன முறை மின்கலனை குறித்து இத்தொகுப்பில் காண்போம் .
பாலிஸ்டெரையன் எனும் மக்காத தடிமனான இந்த கலன் நான்கு பக்கமும் சிறு துளைகளை கொண்டிருக்கும். நான்கு அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட இந்த காலனை மக்காத துணி கொண்டு மூடி பின்னர் பூமிக்கு 10 அடி ஆழத்தில் பள்ளம் தூண்டி வைக்கப்படுகிறது. அதற்கு மேல் கூழாங்கற்கள், ஜல்லிக்கற்கள், மணல் போன்றவை நிரப்பப்படும். பெய்கின்ற மழை இதுபோன்ற இயற்க்கை வடிகட்டி மூலம் நேரடியாக நிலத்தடிக்குள் சென்று சுத்தமான நீராக சேமிக்கப்படும்.அறுபது டன் எடையுள்ள நீரை கூட சாதாரணமாக தன்மை கொண்ட இந்த கலன்களை கொண்டு பிரதான சாலைகளின் அடியில் கூட மழை நேர் சேகரிப்பு தொட்டி அமைக்க முடியும் என இத்திட்டத்தை சென்னையில் அறிமுக படுத்தியுள்ள சிவராமன் கூறியுள்ளார் .
தற்போது நடைமுறையில் உள்ள உறைகிணறு முறையை காட்டிலும் இது அதிக அளவு மழை நீரை சேகரிக்கும் திறன் கொண்டது. 60,000 ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த கலனின் ஆயுட்காலம் சுமார் 50 ஆண்டுகளாகும் . சென்னையில் தொடங்கியுள்ள இத்திட்டத்தைஅடுத்த ஆண்டில் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது .
நீண்டகாலம் பயன்படும் இதுபோன்ற நவீன தொழில்நுட்ப முறையை மழை நீர் சேகரிப்பிற்கு பயன்படுத்தினால் கடும் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து நமது எதிர்கால சந்ததியினர் காக்கப்படுவார்கள், மழைநீர் வீணாவத்தையும் தடுத்து நிலத்தடி நீரை சேமிக்கலாம்.