தாயின் சேலையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்த மகன், மனம் உடைந்த தாய் !!
சென்னையில் உள்ள வளசரவாக்கம் கைகான் குப்பம் பகுதியை சேர்ந்த மோகனா (வயது 40) என்பவர், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் சமையல் பாத்திரங்களை தூய்மை படுத்தும் பணிகளை செய்து வருகிறார்.
மோகனாவின் மகன் சீனிவாசன் (வயது 17) குன்றத்தூரில் ஒரு விடுதியில் தங்கி, அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொங்கல் விடுமுறை என்பதால் வீட்டிற்கு வந்தார் சீனிவாசன், தனது விருப்பம் போல் அதிகமாக ஸ்டைலாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார். விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்வதால் முடியை வெட்ட சொல்லி மகனை விருப்பத்திற்கு மாறாக அடித்து சலூன் கடைக்கு அழைத்து சென்று முடியை வெட்ட சொல்லி அதன் படி வெட்டியுள்ளார். தாய் அடித்ததால் மனம் உடைந்தார் சீனிவாசன்.
அதன் பிறகு வேளைக்கு சென்ற மோகனா, மகனை அடித்ததால் மகன் சாப்பிட்டானா என்ற ஏக்கத்தில் பக்கத்துக்கு வீட்டாரான அமுதாவை போனில் சீனிவாசன் சாப்பிட்டானா என கேட்க சொன்னார். அப்போது உள்ளே சென்று பார்த்த அமுதா, தன் தாயின் சேலையிலேயே சீனிவாசன் தூக்கிட்டு கொண்டதை பார்த்து அதிச்சியடைத்தார். இதை கேட்ட தாய் மோகனா பதறி அடித்து வீட்டிற்கு வந்து மகனை பார்த்து கதறி அழுதார். தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை பிரிந்து, தற்போது மகனையும் இழந்து நிற்கும் மோகனா நிலையை கண்ட அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.