சிரஞ்சீவி வீட்டில் கூடிய 80’ஸ் கிட்ஸின் ரீயூனியன்!! வைரலாகும் நடிகர் ,நடிகைகளில் போட்டோஸ்..
ஹைராபாத்: 80’ஸ் நடிகர், நடிகைகளில் ரீயூனியன் நிழச்சி ஹைதராபாதில் இன்று நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் கோலாகலமாக நடைபெற்றது.இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
1980களில் தென்னிந்திய திரைத்துறையில் கொடிகட்டி பறந்த நடிகர் நடிகைகளின் ரீயூனியன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள மெகா ஸ்டார் சீரஞ்சீவி வீட்டில் கோலாகலமாக தொடங்கி நிறைவுபெற்றது.இந்த பிரமாண்டமான நிகழ்வில் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழியை சேர்ந்த 80’ஸ் ஹீரோ ஹீரோயின்கள் பங்கேற்றனர்.
இதில் சிரஞ்சீவி, மோஹன்லால், நாகர்ஜுனா, பாக்யராஜ், வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், ரமேஷ் அரவிந்த், ரகுமான்,குஷ்பூ, சுஹாசினி, ஜெயராம், ராதா, ராதிகா, பூர்ணிமா, அமலா, சரிதா, சரத்குமார், ஷோபனா, நதியா உள்ளிட்டோர் கருப்பு மற்றும் தங்க நிற உடையில் பங்கேற்றனர். எவர்க்ரீன் நாயகன், நாயகிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் எடுக்க பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.