கோவையில் போலி நிருபர் என 50,000 ருபாய் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது !!
கோவையில் பணம் கேட்டு மிரட்டியதாக போலி நிருபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணாகுமார் என்பவர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இவர் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் தயாரிப்பதாக கூறி மாரியப்பன் என்பவர் அது தொடர்பாக செய்தி வெளியிடுவேன் என்றும், அவ்வாறு செய்யாமல் இருக்க 50,000 ரூபாய் தரவேண்டும் எனவும் மிரட்டியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகுமர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார் ரூ 50 ஆயிரம் கேட்டு மிரட்டியதாக போலி பத்திரிகை நிருபர் மாரியப்பனை கைது செய்துள்ளனர்.
நிருபர்கள் என்ற பெயரில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஏராளமானோரை மிரட்டும் குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகமாக நடக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சந்தேகிக்கப்படும் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் விற்பனை அளவு என்ன, அதன் உரிமையாளரின் சொத்து மதிப்பு என்ன, அவர்கள் நேர்மையாகத் தான் அந்த சொத்தை சம்பாதித்துள்ளார்களா என்பது தொடர்பாக தேவைப்பட்டால் சிறப்பு குழு அமைத்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.