COVID-19 தீவிர பரவலை எட்டியுள்ளது.., கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும் !!

உலகம் முழுவதும் கொரோனவால் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி 1.5 கோடிக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும். அமெரிக்கா பிரேசில் போன்ற நாடுகளில் பல மடங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா சமூக பரவலாக மாறும் எச்சரிக்கையாக மாறுவதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார மையம் வரையறுத்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளதாவது: பாதிப்பை ஒப்பிட்டு பார்த்த போது கொரோனா பரவல் சில நாடுகளில் கடுமையாக அதிகரித்துள்ளது. உலக அளவிலான மொத்த கொரோனா பரவலில் மூன்றில் இரண்டு பங்கு, 10 நாடுகளில் சேர்ந்தவையாக உள்ளது. அந்த நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை வழங்காமல் கொரோனவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு மக்களை காக்க மேலும் போராட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறினார்.
அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவிலான பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் உள்ளன. இந்தியா 3வது, ரஷ்யா 4வது இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.