முன்னாள் காதலனால் கொடூரமாக கொல்லப்பட்ட தாயார்..

February 12, 2021 at 1:18 pm
pc

பெல்ஜியத்தில் ரத்தவெள்ளத்தில் கிடந்த தாயாரின் உடலைப் பார்த்து, ஏன் அம்மாவின் உடலில் கெட்சப் கொட்டிக்கிடக்கிறது என பிஞ்சு குழந்தை பொலிசாரிடம் விசாரித்த சம்பவம் நொறுங்க வைத்துள்ளது. பெல்ஜியத்தில் 27 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் முன்னாள் காதலனால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

இளைய மகளுக்கு சம்பவம் நடக்கும்போது வெறும் நான்கு வயது. அவரே, பொலிசாரிடம், தாயாரின் உடலில் ஏன் கெட்சப் கொட்டிக்கிடக்கிறது என விசாரித்தவர்.

மட்டுமின்றி, 6 வயதான இன்னொரு மகள், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விலாவாரியாக பொலிசாரிடம் ஒப்புவித்துள்ளது.

தாயார் எலினோரின் அலறல் சத்தம் கேட்டே கண் விழித்ததாக கூறும் சிறுமி, பின்னர் அம்மா வந்து கூப்பிடும் வரையில் அறையில் காத்திருக்க Yoldash கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் Yoldash அங்கிருந்து வெளியேறிய பின்னர், தாயார் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை தாம் கண்டுள்ளதாக குறித்த வயது சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்கு முன்னர் Yoldash தமது மொபைலில் 4 காணொளிகளை பதிவு செய்து, அதில் இன்னும் சில மணி நேரத்தில் மூவர் கொல்லப்பட இருக்கிறார்கள்,

அது எனது தவறல்ல எனவும் Yoldash பதிவு செய்துள்ளார். மட்டுமின்றி, எலினோர் தம்மை விட்டு பிரிந்து செல்ல காரணம் எது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

பின்னர், தமது தந்தை உள்ளிட்டவர்கள் தம்மை மன்னிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

எலினோர் 60 வயதான ஒரு நபருடன் தொடர்பு வைத்துக் கொண்டதே கொலைக்கான முதல் காரணம் என Yoldash குறிப்பிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website