தர்பார் படத்தின் “சும்மா கிழி” முதல் பாடல் NOV 27 தேதி வெளியாகிறது!
எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் டப்பிங் சமீபத்தில் முடிந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் இன்று படத்தின் முதல் பாடலை NOV 27 வெளியிடுவதாக அறிவித்தது. இந்த பாடல் வெளியிடும் அறிவிப்பை லைகா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ பதிவில் கூறினார். பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியுள்ளார். SPB இந்த பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடல் அப்டேட் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் சமூகவலைத்தளங்களில் “சும்மா கிழி” என்னும் ஹாஷ் டேக் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்குகிறது.