“தர்பார்” ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் தானா !! புதுசாக எதுவும் இல்லையா ??
தர்பார் படம் இன்று கோலாகலமாக கொண்டாட்டத்துடன் வெளியானது. பட்டாசு வெடித்தும் மேளதாளங்களோடு கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர். பாலபிஷேகம், கேக் வெட்டியும் கொண்டாடினர். படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பல திரை துறை பிரபலங்கள் தியேட்டர் முன்பு குவிந்தனர். ரஜினியின் குடும்பத்தினர் அனைவரும் முதல் காட்சியை பார்க்க வருகைதந்தனர்.
முதல் பாதி ஸ்டைல் ஆக ரஜினியின் பஞ்ச் டயலொக் மாஸாக உள்ளது. முபையில் இருக்கும் போதை மாஃபியா கூட்டத்தை எதிர்க்கும் போலீசாக நடித்திருக்கிறார். வயசு வெறும் நம்பர் தான் என பல இடத்தில் நிரூபித்திருக்கிறார் ரஜினிகாந்த். நிவேதா தாமஸ் தன்னுடைய மகள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். நயன்தாராவுக்கும் பெரியதாக ரோல் எதுவும் இல்லை, படத்தின் பாடல்கள் சம்பந்தம் இல்லாமல் குறுக்கிடுகின்றன. கதை களத்தில் புதுசாக எ.ஆர் முருகதாஸ் செய்யவில்லை என சிலர் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். படத்தின் சினிமாட்டோக்ராபர் சந்தோஷ் சிவன் சிறப்பாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார். மேலும் இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் என படத்தை பார்த்து வெளியே வந்தவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.